பிரபல ஆங்கில கவிஞரும் நாடக ஆசிரியருமான ஷேக்ஸ்பியர் தத்துவங்கள்
1. உங்கள் குறைகளை
நீங்களே அடையாளம்
கண்டு கொள்வது தான்
வளர்ச்சியின் அடையாளம்.
2. எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்..
ஆனால் சிலரிடம் மட்டும்
பேச்சு கொடு. எவர் கஷ்டத்தையும்
தெரிந்து கொள்.. ஆனால்
உன் கருத்தைக் கூறிவிடாதே.
3. உங்களை தவிர வேறு எந்த
மனிதரையும் கண்டு
நீங்கள் எச்சரிக்கையாக
இருக்க தேவையில்லை.
4. தண்ணீரில் ஏற்படும் அலைகள்
பெரிதாகி கடைசியில்
மறைந்து விடும். அதுபோல
புகழ் பெருகி கடைசியில்
ஒன்றுமில்லாமல்
மறைந்து விடும்.
5. கொள்ளைக்காரன் பணக்காரனை
கொள்ளையடித்து வாழ்கின்றான்.
முதலாளி ஏழையை
கொள்ளையடித்து வாழ்கின்றான்.
6. நீ போக வேண்டிய இடத்திற்கு
மூன்று மணிநேரம் முன் கூட்டியே
சென்று விடலாம். ஆனால்
ஒரு நிமிடம் கூட பின்தங்கி
விட கூடாது.
7. சமாதானமும் செல்வமும்
அதிகமானால் கோழைகளே
பெருகுவார்கள்.
கஷ்ட காலம் தான் வீரர்களை
பெற்றெடுக்கும் அன்னை.
சிரிக்காத நாட்கள் எல்லாம் வீணான நாட்கள் என்று உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் பொன்மொழிகள்.
1. புன்னகைத்து பாருங்கள்
வாழ்க்கையும் அர்த்தம்
உள்ளதாக மாறும்.
2. உங்களை தனியாக
விட்டாலே போதும்
வாழ்க்கை அழகானதாக
இருக்கும்.
3.உங்கள் மனதில் இருக்கும்
குதூகலமும் மகிழ்ச்சியும்
பிரச்சனைகளுடன் போராட
மட்டும் அல்ல..
அதிலிருந்து மீளவும் உதவும்.
4. சில பெற்றோர்களின் அன்பு தான்
பல குழந்தைகளின் ஒளி
பொருந்திய எதிர்காலத்தை
இருளடைய செய்து விடுகிறது.
5. என் துன்பங்களை என் உதடுகள்
அறிவதில்லை..
அவை என்றுமே
சிரித்துக்கொண்டே இருக்கின்றன.
6. நகைச்சுவை என்பது
தனக்காக மட்டுமல்லாமல்
பிறருக்காகவும்
இருக்க வேண்டும்.
7. நீங்கள் வாழ்க்கையை பார்த்து
பயப்படவில்லை என்றால்
வாழ்க்கை அற்புதமானதாக
இருக்கும்.
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியலராக பார்க்கப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்.
1. அறிவை விட கற்பனை
முக்கியமானது. அது நம்மை
உறுதியாக நம்ப வைத்து
இருபது மடங்கு ஆற்றலுடன்
இலட்சியத்தை அடையச்
செயல் வீரராக உருவாக்கிவிடும்
சக்தி படைத்தது.
2. இந்த உலகம் அபாயகரமான
இடம். தீங்கு, தீமை
செய்பவர்களால் அல்ல. ஆனால்
இவர்களைப் பார்த்து கொண்டு
ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களே
அவர்களால் தான்.
3.தேடலும் உண்மையை
கண்டுபிடிக்க வேண்டும் என்ற
விடாமுயற்சியும் தெளிந்த
அறிவும் உங்களை
உயர்ந்தோனாக்கி காட்டும்.
4. பாடசாலையில் தான் கற்ற
அனைத்தையும் மறந்துவிட்ட
பின்பும் ஒருவனிடம் நினைவில்
இருப்பது எதுவோ. அதுவே
அவன் உண்மையில்
கற்ற கல்வி.
5. சிறு செயல்களிலும் உண்மையைத்
தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்
பெரிய விடயங்களில்
நம்ப தகுதியில்லாதவர்.
6. அறிவை ஆனந்தமாக போதிக்க
கற்றவனே அற்புதமான
ஆசிரியன்.
7. மனிதனாக பிறந்தவன்
கட்டாயம் சிந்திக்க வேண்டும்.
சிந்திக்க சிந்திக்க மனிதனின்
எண்ணங்கள் உருப்பெற்று
சிறப்படையும். சிந்திப்பது
மனிதனுடைய தனி உரிமை
சிந்திக்க தெரிந்த மனிதனே
அறிவாளி.