245263390 587823495745031 1886184889221354317 n-சர்மா பூரணி-

இரண்டாயிரத்து பதினெட்டில் புகைப்படக் கண்காட்சி புன்னகையுடன் நின்றார் ஒருவர் புறப்படும் வரை புதிராகவே இருந்தார் புகைப்படக் கண்காட்சியினை நடத்தியவரே அவர்தான் என்று எனக்கு புலப்படும் வரை ஒவ்வொரு  படங்களும் உயிரோட்டத்துடன் மிளிர்ந்தது குறுகிய இடைவெளி குறைவான புகைப்படங்கள் இருந்தும் இதமான ரசனையின் நிரல்வடிவம் வந்தோரை வரவேற்பதிலும் சிறப்புடன் காட்சிக்கு வந்தோரை கனம் பண்ணவே அவர் பு கைப்படக் கருவியில் யாவரையும் உள்ளடக்கினார். 

நானும் ஒருத்தி அதில் கையேட்டு புத்தகத்தில் கருத்திட்டு விடை பெறுகையில் அவர் பெயர் அரைகுறை செவி உள்வாங்கலில் மலர்ச்சி கரன் என பதித்தேன் மனதில் உங்கள் புகைப்படங்களும் நீங்களும் மலர்ச்சி கரமாக இருக்கவேண்டும் என் வாழ்த்தின் முடிவுக்கிடையில் நன்றி கூறலுடன் நண்பன் மகிழ்ச்சிகரன் எனக் கையெழுத்திட்டு என் கைகளுக்குள் ஓர் காகிதம் மனதில் மலர்ச்சியும் மகிழ்ச்சியுமாக நிஜங்களின் நிழல்களைக் கடந்தேன் நினைவுகள் நிஜங்களாக. இன்றும் திறமையுள்ள கற்றுக் கொள்வதில் ஆர்வமுள்ள ஆசிரியருக்கு பல்திறமைப் படைப்பாளனுக்கு சிறந்த நாடகத் துறைக் கலைஞனுக்கு அதி ஆற்றல் புகைப்படக் கலைஞனுக்கு இனிய இயக்குநருக்கு இரக்கமுள்ள மனதுடையோனுக்கு குழந்தை மனமும் நகைச்சுவையுணர்வும் உடையோனுக்கு நலிவுற்றோர்க்கு நாளும் உதவுபவனுக்கு தன்னலம் கருதா தலை சிறந்தவனுக்கு முதியோர் காப்பாளனுக்கு பொறுப்புள்ள தந்தைக்கு இனிய அகவை வாழ்த்துகள் இன்று மட்டுமல்ல அநுதினமும் அகவை தினமே அறிவுள்ள கலைஞர்களுக்கு நித்தமும் செயலும் சிந்தனைகளும் புதிது புதிதாய் பிறப்பதால் மலர்ச்சியாக மகிழ்ச்சியாக அறிமுகமான என் இனிய நண்பனுக்கு இனிய வாழ்த்துகள்

X

Right Click

No right click