13சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர் வ.ஸ்ரீகாந்தன் அவரது நோர்காணல்வடிவம் 

- எஸ்.ரி.அருள்குமரன் -


மாணவர்கள் தடம் புரண்டால் சமூகத்தில் பலவாறான தாக்கங்கள் ஏற்படும். எனவே எமது கல்வி பற்றிய சிந்தனைகள் எதிர்கால உயர்வாழ்வுக்கு மாணவனை வழிப்படுத்தி சிறந்த தேர்ச்சியும், தொழிற்பயிற்சியும், மனித நேயமும் பெறத்தக்கதாக உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். என சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர் வ.ஸ்ரீகாந்தன் குறிப்பிட்டார்.
அவரது நோர்காணல்வடிவம் இங்கு தரப்படுகின்றது.

 கேள்வி- வணக்கம் சேர். உங்களை பற்றி அறிமுகத்தினை குறிப்பிடுங்கள்?

பதில்-சுழிபுரம் எனது பிறப்பிடம். அப்பா ஒரு மதகுரு. இவர் சமஸ்கிருத பண்டிதர். குடும்பத்தில் நான் இரண்டாவது பிள்ளை.விக்ரோறியாக்கல்லூரியில் க.பொ.த சாதாரணதரம் வரை கல்வி கற்றேன். உயர்தரக் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பெற்றேன். பல்கலைக்கழக அனுமதியும் ஆசிரியப்பணியும் ஒருங்கே கிடைத்த போது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு தந்தையார் ஆசிரியப்பணிக்குச் செல்லுமாறு கூறினார். ஆசிரியப்பணியை காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் ஏற்ற நான் இருவாரங்களில் கல்வி கற்ற விக்ரோறியாக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். மிகவும் உற்சாகத்துடன் அங்கு கடமை செய்த போது ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக வணிகமாணிப் பட்டப்படிப்பை மேற்கொண்டேன். நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக பட்டப்படிப்பினை இறுதியாண்டில் கைவிட நேரிட்டது.பலாலி ஆசிரியர் கலாசாலையில் வணிகத்துறையில் விசேட பயிற்சி பெற்றதுடன் தொடர்ந்து சில மாதங்கள் உடப்பு தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் கடமையாற்றி பின்பு மீண்டும் எனது விக்ரோறியாக்கல்லூரியில் இணைந்து கொண்டேன்.

எனக்கு கற்பித்த ஆசிரியர்களுடன் சேர்ந்து பணிசெய்தது மிகவும் மகிழ்வானது. 1988ல் எனது மற்றொரு பாடசாலையாகிய மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் கிடைத்தது.உயர்தர வகுப்புக்களில் கணக்கீடு பாடத்தைவிருப்பத்துடன் கற்பித்ததால் மிக விசுவாசமான மாணவர் கூட்டத்தை இன்றும் கொண்டுள்ளேன். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இருந்த போது இலங்கை அதிபர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்தேன். அதிபர் சேவைக்குள் உள் வாங்கப்பட்டேன். எனினும் தொடர்ந்து ஆசிரியப்பணியிலேயே ஈடுபாடு கொண்டிருந்தேன்.நாட்டின் யுத்த நிலையால் இருப்பிடம் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியாவிற்கு இடம்பெயர்ந்து 1996 முதல் 2003 வரை அங்கு கடமையாற்றினேன். வவுனியாவில் விபுலானந்தாக் கல்லூரியில் பணி செய்தகாலம் மறக்கமுடியாதது. அந்நேரத்தில் மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா நெறியினை பூர்த்தி செய்து சிறப்பு சித்தி பெற்றேன். எனது மகளின் பல்கலைக்கழகக் கல்விக்காக மீண்டும்யாழ்ப்பாணம் வந்து மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இணைந்து கொண்டேன். 2005ம் ஆண்டு அதிபர் சேவையில் உள்ளவர்கள் அதிபராகக் கடமையாற்ற வேண்டுமென்ற நிலைமையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபராக பொறுப்பேற்று அக்கல்லூரியில் கல்வி மற்றும் ஏனைய செயற்பாடுகளில் அதிபர் திரு.ச.சிவநேஸ்வரன் விட்டுச்சென்ற பணியை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றேன். 2010ம் ஆண்டு பலரது விருப்பம் காரணமாக விக்ரோறியாக் கல்லூரியில் அதிபர் பொறுப்பை ஏற்று ஆசிரியர்கள், பெற்றோர்,பழைய மாணவர்கள், கல்வித்திணைக்களம் போன்ற அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்புடன் அக்கல்லூரியை சகலதுறைகளிலும் முன்னெடுக்க முடிந்தது. தரம்ஐ அதிபர் சேவையில் சென்ற 10.03.2014 ல் இருந்து 37 வருடகால அரச பணியின் பின் ஓய்வு பெற்றுள்ளேன்.

 

கேள்வி- நான்கு ஆண்டுகளாக விக்ரோறியாக்கல்லூரியில் அதிபராக கடமையாற்றியுள்ளீர்கள் அக்காலப்பகுதியில் மேற்;கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக குறிப்பிடுங்கள்?
பதில்- கடந்த நான்கு வருடங்களாக விக்ரோறியாக் கல்லூரியில் கடமையாற்றிய போது இக்கல்லூரியின் சகல துறை வளர்ச்சிக்காகவும் சகல தரப்பினரதும் பூரண ஒத்துழைப்புடன் நிறைவாகச் செயற்பட முடிந்தது. கல்வி அடைவு மட்டத்தில் பொதுப் பரீட்சைகளில் தொடர்ச்சியான அதிகரிப்புக்கள், பல்கலைக்கழக அனுமதிகளில் முன்னேற்றம், தமிழ்த்தினப்போட்டிகளில் தேசிய மட்ட வெற்றிகள், ஆங்கிலதினப் போட்டிகளில் மாகாணமட்ட வெற்றிகளும் தேசியமட்டப் பங்குபற்றுதல்களும், விளையாட்டுத்துறையில் தேசிய மட்ட வெற்றிகள், பௌதிக வளங்கள் முழுமைப்படுத்தப்பட்டமை போன்ற பல மாற்றங்களைக் குறிப்பிடலாம்.

கேள்வி-விளையாட்டு துறைச்சாதனைகள் தொடர்பாக குறிப்பிடுங்கள்?
பதில்-விக்ரோறியாக்கல்லூரி விளையாட்டுத்துறை தற்போது பலராலும் பேசப்படும் ஒன்றாகும். பெண்களுக்கான மென்பந்து துடுப்பாட்டம் 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின் தொடர்ச்சியாக இக்கல்லூரி அணி மாகாணமட்டத்தில் முதலாம் இடத்தை பெறுகின்றது. 2012ம் ஆண்டு தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. தேசியமட்ட முதலாமிடம் மயிரிழையில் தவறிய போதும் இது ஒரு வரலாற்றுப் பதிவாகும். 2012ம் ஆண்டு கல்லூரியின் 15வயது கைப்பந்து அணி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றது. 2013ம் ஆண்டு ஈட்டி எறிதலில் 19வயதுப் பிரிவில் இரண்டாம் இடம் வெல்லப்பட்டது. இது தவிர ஆண்களின் கரப்பந்தாட்ட அணிகள், பெண்களின் எல்லே அணி மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள் தொடர்ச்சியாக மாகாணமட்ட வெற்றிகளைப் பெற்று தேசியத்தில் பங்குபற்றுகிறார்கள். விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்கள், அணிகளின் பொறுப்பாசிரியர்கள்,பயிற்றுநர்களான பழைய மாணவர்கள் இவ்வெற்றிகளுக்காகத் தம்மை அர்ப்பணித்து உழைக்கின்றனர்.

கேள்வி;- விளையாட்டு துறையில் மாணவர்களினை ஈடுபடுத்துகின்ற போது எதிர்நோக்குகின்ற சவால்கள் தொடர்பாக குறிப்பிடுங்கள்?

பதில்-விளையாட்டுத்துறையில் மாணவர்களை ஈடுபடுத்தும் போது ஏனைய அதிபர்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்குவது போன்று பெரும் சவால்கள் இங்கு எழுவதில்லை. பழைய மாணவர்கள் பயிற்றுநர்களாக உள்ளனர். சத்துணவுகளை வழங்குகின்றனர். வெளிநாட்டிலுள்ள பழைய மாணவர் சங்கங்கள் சத்துணவு மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்கு உதவுகின்றனர். வீரர்களை மாவட்டம், மாகாணம், தேசியம் என பங்குபற்றுதலுக்காக ஆசிரியர்கள் விருப்பத்துடன் அழைத்துச் செல்கின்றனர். பெற்றோர் பூரண ஒத்துழைப்புத் தருகின்றனர். நாம் செல்லுமிடங்களிலுள்ள பழைய மாணவர்களான'விக்ரோறியன்ஸ்' நல்ல உபசரிப்புக்களை வழங்குகின்றனர். எனவே சவால்களுக்கு இடம் இல்லை.

கேள்வி- முன்பு சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியில் அதிபராக கடமையாற்றி போது மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக குறிப்பிடுங்கள்?

பதில்-சண்டிலிப்பாய்இந்துக் கல்லூரி கடந்த இரண்டு தசாப்த காலங்களில் அபரிமித வளர்ச்சியடைந்த பாடசாலை. வலைப்பந்தாட்டத்தில் நீண்டகாலமாக மாகாணமட்ட வெற்றிகளை தனதாக்கிக் கொண்டு வரும் இங்கு ஒரு பாடசாலையை குறுகிய காலத்தில் முன்னிலைக்கு கொண்டுவர விளையாட்டுத்துறை உதவும் என்ற நிலையில் முன்னாள் அதிபர் திரு.ச.சிவநேஸ்வரன் வலைப்பந்தாட்ட அணிகளை உருவாக்கினார். இதனூடாக திணைக்கள ஆதரவுடன் பௌதிக வளங்களை பெற்று பாடசாலையின் தரத்தினை உயர்த்தி உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்தார். நான் அதிபராகக் கடமையேற்ற பின் அவரது வழியில் விளையாட்டிலும் கல்வியிலும் ஆசிரியர்களின் உதவியுடன் சாதனைகளைப் படைக்க முடிந்தது. அதிக மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை, யாழ்மாவட்டத்தில் உயர்வான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு பெற்றமை, கூடுதலான மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றமை என்பன அங்கு காணப்படும் தொடர் வளர்ச்சிகளாகும்.

கேள்வி-கலைத்துறை மீதான ஈடுபாடு உங்களிற்கு எவ்வாறு ஏற்பட்டது அது தொடர்பாக குறிப்பிடுங்கள்?

பதில்-விக்ரோறியாக்கல்லூரியில் தரம் 7ல் கல்வி கற்கும் போது விஜயதசமி நாளின் என் தமிழ் ஆசான் திரு.கந்தையா அவர்களின் நெறிப்படுத்தலில் 'மணிவாசகர்' நாடகம் மூலம் மேடையேறிய பசுமை நினைவு மறக்கமுடியாதது. தொடர்ந்து அங்கு பல நாடகங்கள், வில்லுப்பாட்டு, விவாதம் எனக் கலைத்துறை ஈடுபாடு வளர்ந்தது. பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் வருடாந்த நாடக விழாக்களில் நாடகங்களில் பங்குகொண்டமை, மாணவ மன்றங்களில் மேடைப்பேச்சு, விவாதம் போன்றவையும் என்னுடன் சகஆசிரியர்களாக இருந்த பலரது கலைத்துவங்களும் எனக்கு இயல் இசை நாடகங்களில் விருப்பத்தை ஏற்படுத்தின.

கேள்வி- நீங்கள் ஈடுபட்ட நாடகங்கள் மற்றும் கலைச்செயற்பாடு தொடர்பாக குறிப்பிடுங்கள்?

பதில்-மாணவனாக இருந்த போதும் ஆசிரியரான பின்னரும் பல நாடகங்களில் நடித்துள்ளேன். ஆயினும் அதிபராகிய பின் வேலைச்சுமை, பதவிநிலை மேடையேற வாய்ப்பை தராமையும் கவலை தந்தாலும் மாணவர்களுடன் இணைந்து செயற்பட்டு திருப்தியடைய முடிந்தது. ஆசிரியராக இருந்த போது ஆசிரியர் தினங்களிலும் சமய விழாக்களிலும் நாடகங்கள், பட்டிமன்றங்கள், கவியரங்குகள் என பல கலைத்துறை நிகழ்வுகளில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது.

கேள்வி- கலைத்துறைச்செயற்பாடு மாணவர்களிடையே ஏற்படுத்தும் மாற்றம் தொடர்பாக உங்களது அநுபவங்களில் இருந்து குறிப்பிடுக?

பதில்-நல்ல வினா. ஒரு மாணவன் முழுமைத்துவம் பெற கலைத்துறைச் செயற்பாடு அவனுக்கு உதவும். தமிழ்த்தினம், ஆங்கிலத்தினம் தொடர்பான போட்டிகளின் போதும் பாடசாலை விழாக்களின் போதும் இச்செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களின் ஆளுமையும் திறமையும் ஏனைய மாணவர்களிடமிருந்து இவர்களை வேறுபட வைக்கிறது. இசை, நடனம், நாடகம், கூத்து, நாட்டியநாடகம்,விவாதம்,தமிழறிவு வினாவிடை போன்ற குழுவான நிகழ்வுகளிலும் ஏனைய தனிநிகழ்வுகளிலும் ஈடுபடும் மாணவர்கள் முன்மாதிரியானவர்களாக பார்க்கப்படுகின்றார்கள். இவற்றின் மூலம் இவர்கள் பெறும் 'அந்தஸ்து' இவர்களை உயர்ந்தவர்களாக்குகின்றது என்பது எனது அனுபவபூர்வமான கருத்தாகும்.

கேள்வி- மாணவர்கள் கலைச்செயற்பாட்டில் ஈடுபடுத்துகின்ற போது எதிர் நோக்குகின்ற சவால்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

பதில்-மாணவர்கள் கலைத்துறைச் செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அவர்களின் திறமைகளைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றார்கள். இது ஒருபுறம் இருக்க எனது பல வருட அனுபவங்கள் மூலம் நாம் எதிர்நோக்கும் சவால்களை குறிப்பிட்டேயாக வேண்டும். குறிப்பாக தமிழ்த்தினப்போட்டிகளின் போது ஏற்பாட்டாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் மத்தியஸ்தர்களின் தவறான முடிவுகளால் பல தடவைகள் பாதிப்படைந்த அதிபர்களில் நானும் ஒருவன். அவை பற்றிக் குறிப்பிடுவதென்றால் அதிகம் சொல்லலாம்.நீண்ட நாட்கள் கடுமையான பயிற்சியை வழங்கிய ஆசிரியர்களும் பயிற்சி பெற்ற மாணவர்களும் ஒரு சில நிமிடத்தில் ஒரு சிலரின் முடிவால் விரக்தியடைந்து கலைத்துறையிலிருந்து ஒதுங்கியதைக் கூட மறக்க முடியாது. கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவனாக நான் பணி செய்த பாடசாலைகளில் மாணவர்களை இத்துறையில் அதிகம் ஈடுபடுத்தியவன் என்பதால் இதனை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இது தான் நான் எதிர் கொண்ட முக்கிய சவால்.

 

கேள்வி- கல்விப்புலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களினை ஏற்படுத்திவர்கள் என்கின்ற வகையில் நீங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றீர்கள் உங்களுடைய அநுபவத்தில் கல்வி பற்றிய சிந்தனைகள் எவ்வாறு உள்ளது என்பது பற்றி குறிப்பிடுங்கள்?

பதில்-தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களின் கல்வி பற்றியும் பாடசாலைகள் பற்றியும் எல்லோரும் பேசுகிறார்கள். எந்த ஒரு மனிதனும் வாழ்வில் ஆசிரியனைச் சந்தித்தேயாக வேண்டும். அவ்வாசிரியன் தன் மாணவனை நேசிக்க வேண்டும். அவனது கல்வித் தேவையறிந்து உதவ வேண்டும். 'மாணவப் பருவம் புத்தகமல்ல. திருத்திய மறு பதிப்பை வெளியிடுவதற்கு.' இது ஒரு கட்டுரையில் வாசித்த மிகப் பொருள் பதிந்த வாசகம். ஆகவே இப்பருவத்தை சிறப்பாக பயன்படுத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவனை வழிப்படுத்த வேண்டும். அடுத்து வரும் பருவங்களை வளமாக்க மாணவப் பருவத்தை வளமுள்ளதாக்கும் படி அவனை வழிப்படுத்த வேண்டும். மாணவர்கள் தடம் புரண்டால் சமூகத்தில் பலவாறான தாக்கங்கள் ஏற்படும். எனவே எமது கல்வி பற்றிய சிந்தனைகள் எதிர்கால உயர்வாழ்வுக்கு மாணவனை வழிப்படுத்தி சிறந்த தேர்ச்சியும், தொழிற்பயிற்சியும், மனித நேயமும் பெறத்தக்கதாக உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

கேள்வி-பாடசாலையின் பழைய மாணவன் என்;கின்ற வகையில் இக்கல்லூரி கடமையாற்றியதில் எவ்வகையில் பெருமை அடைகின்றீர்கள்?

பதில்-இக்கல்லூரியின் பழையமாணவன் என்ற வகையிலும் முன்னாள் ஆசிரியர் என்ற நிலையிலும் இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டதனாலும் கல்லூரிச் சமூகத்தை நான் நன்கு அறிந்திருந்தேன். அதே போல் கல்லூரிச் சமூகமும் என்னை நன்கு தெரிந்திருந்தது. இதனால் கல்லூரியை ஒரு இலக்கினைநோக்கிச் செலுத்துவது இலகுவாயிருந்தது.பெற்றோர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் (மொத்த ஆசிரியர்கள் 55. இவர்களில் சுமார் 20பேர் எனது கல்லூரியின் பழைய மாணவர்கள்), மாணவர்கள் அனைவரும் முழுமையாக ஒத்துழைத்தார்கள். கல்வியில் சிறந்த பெறுபேறுகள், விளையாட்டுத்துறைச் சாதனைகள், தரமான மெய்வன்மைப்போட்டிகள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட பரிசளிப்பு விழாக்கள், பாராளுமன்றத்தில் விஜயதசமி விழாவில் நாட்டிய நாடகங்கள், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆளுநர் விழாவில் சிறந்த கலை நிகழ்வுகள், இல்ல விளையாட்டுப் போட்டிகளில் அதிகளவு மாணவர்கள் பங்குகொள்ளும் இடைவேளை நிகழ்வுகள், கல்லூரியின் மிக நீண்ட காலத்தேவைகளை நிறைவு செய்தமை,முக்கியமாக 400மீற்றர் ஓடுபாதைகொண்ட மைதானம் என பல மனிதவளப்பயன்பாடும் பௌதிகவளச் சேர்ப்புக்களும்................ நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

கேள்வி- பாடசாலை செயற்பாட்டில் ஆசிரியர்களது வகிபங்கு தொடர்பாக குறிப்பிடுங்கள்?

பதில்-பாடசாலை ஒன்றின் உயர்வில் ஆசிரியர்களின் பங்கு மிக உச்சமாயிருக்கும். எனது கல்லூரியின் ஆசிரியர்கள் பகல் இரவு பாராது, கண்துஞ்சாது மாணவர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடுபட்டார்கள் என்பதைச் சொல்லியேயாக வேண்டும். 'அடி மத்தளத்துக்கு பேர் வித்துவானுக்கு' என்று சொல்லுவார்கள். கஷ்டப்படுவது ஆசிரியர்களும் மாணவர்களும் தான். அக்கஷ்டத்தால் கிடைக்கும் பெறுபேறுகளும் வெற்றிகளும் அதிபரின் ஆளுமையால் கிடைத்தது என்று சொல்லுவார்கள். உண்மையில் உயர்வில் ஆசிரியர்களின் வகிபங்கு மிக உன்னதமானதாகும்.

கேள்வி- ஓய்வு காலத்தில் எத்தகைய திட்டமிடல்களினை கொண்டுள்ளீர்கள்?


பதில்-பெரிய கல்லூரிகளில் ஆசிரியனாகவும் அதிபராகவும் பணி செய்யும் சந்தர்ப்பத்தால் எனது வாழ்வின் மிகப் பெரும் பகுதியை அங்கேயே செலவு செய்து விட்டேன். இனி இருக்கும் காலத்தில் கூடிய பங்கு குடும்பத்திற்காகவும் மிகுதிப்பங்கு பொதுநலன்களுக்காகவும் பயன்படுத்த எண்ணியுள்ளேன்.

கேள்வி- உங்களது செயற்பாட்டில் பக்கபலமாக இருந்தவர்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

பதில்-ஆசிரியராகக் கடமை செய்த போது எனக்கு வாய்த்த அதிபர்கள் என்னை சரியாக வழிப்படுத்தி நிறைவான சேவை செய்ய உதவினார்கள்.விக்ரோறியாக்கல்லூரியில் அதிபராக இருந்த திரு.க.அருணாசலம் அவர்கள், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் அதிபராக இருந்த திரு.சி.கேசவராஜன் அவர்கள், வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் அதிபராக இருந்த திரு.சீ.வீ.பேரம்பலம் அவர்கள் எனக்கு ஆசிரியத்துவத்தின் மகத்துவத்தையும் நிர்வாக நுட்பங்களையும் உணர்த்தியவர்கள். இவர்களுடன் பல ஆசிரியர்களும் எனக்கு பக்க பலமாக இருந்துள்ளார்கள். அதிபராகப் பணியாற்றிய போது அப்பாடசாலைகளின் சமூகமே பக்கபலமாக இருந்து உதவியது. ஆசிரியர்கள், மாணவர்கள் யாவரும் கல்வி, இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி வேலைகளில் முழமையாகப் பங்களித்தனர். பெற்றோர், பழைய மாணவர்கள், வெளிநாட்டிலுள்ள பழைய மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.

கேள்வி- உங்களது செயற்பாட்டிற்கு உங்களது குடும்பத்தவர்களது ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடுங்கள்?

பதில்-ஒரு அரச பணியாளன் சிறப்பாகச் செயற்பட குடும்பத்தின் அனுசரணை அவசியமாகும். அந்த வகையில் எனது மனைவி, பிள்ளைகள் எனக்கு தமது பூரணமான ஆதரவை வழங்கினார்கள்.

எனது அனுபவங்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புத்தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click