Skærmbillede 997ச. தேவமுகுந்தன்

ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும் பிறவியிலே அவரை தொற்றிக் கொண்டன. அவரைப்பற்றி எழுதுவது என்பது மிக கடினமான பணி.

இரத்தின சுருக்கமாக சொல்ல எத்தனிக்கிறேன். என்னை பொறுத்த வரையில் அவர் ஒரு ஆன்மிக போராளி. எம்மினம் பட்ட துயரங்கள் வார்த்தைகளால் விவரிக்க படமுடியாதவை. எனக்கு நல்ல ஞாபகமிருக்கின்றது இவருடைய  சொற்பொழிவுக்களை பரராஜா சேகரப்பிள்ளையார் கோவிலிலே கேட்டுருக்கிறேன். அவர்
சொற்பொழிவின் முடிவில் எல்லோரும் இன்புற்று இருக்கவேண்டும், இந்த நாட்டில் அமைதி கிடைக்க வேண்டும் எனவேண்டுவதில் இருந்து அவரின் ஆத்மாத்த  உணர்வினை உணர்ந்து கொண்டேன். துயரங்களுக்கு கண்ணீர்வடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல. அதற்கு அறிவியல் ரீதியாக பதில் கொடுத்தவர், தனி மரமாக நின்று இந்த இனத்துக்கு நிழல் கொடுத்தவர்.

அவரின் குரலே மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும். அவருடைய கனீர் என்ற குரல் அவருடைய பேச்சை கேட்கத்துண்டும் தேசவிடுதலை போராட்டத்தினால் எமது மக்களில் குடும்ப அமைப்பு சீரழிவினால் பல வயோதிபர்கள் அல்லல் பட்டனர் அதைக்கண்டு தனது தாய் போல தனது தந்தை போல எண்ணி அவர்களுக்கு சுழிபுரத்திலே சிவபூமி இல்லம் அமைத்து ஆறுதல் அளித்தார். உளவியல் ரீதியாக சவால்களை எதிர்நோக்கும் பிள்ளைகளுக்கு சிவ பூமி மனவிருத்திப்பாடசாலை அவர்கள் சந்தோசமாக வழ்வத்தற்குரிய சூழலை உருவாக்கி கொடுத்தார். இதனை உருவாக்க எத்தகைய உளவியல் அறிவைக் கொண்டு இந்தார் என்பதை கண்டு கொண்டேன். ஈழ சைவத்தமிழருக்கு அடையாளம் திருவாசக அரண்மனை என அடையாளம் கொடுத்தார். புற்று நோயினால் அல்லல் படுவோருக்கு சகல வழிகளிலும் அவர்களுக்கு தேவையான உதவிகள். குழந்தைகளை பராமரிக்க குழந்தைகள் காப்பகம். இலவச அபயம் மருத்துவ சேவை, நானில கொடுமைகண்டு இரங்கி நலமுடன் வாழ வழிகொடுத்தார். யாழ்ப்பாண கலாச்சாரம் கந்தபுராண கலாசாரம் மீள நிறுவினார். எமது இனத்தின் அடையாளங்கள் பல அழிந்து செல்வதனைக்கண்டு மனம் வருந்தினார். எச்சத்தையும் மிச்சத்தையும் தக்கவைக்க ஒரு வழிதேடி யாழ் வரும் வழியில் நவற்குழியில் ஒரு அரும்பொருட் காட்சியகம் . சிலவேளை பலர் கேட்பர் எப்படி உங்களால் இப்படி முடிகிறது என கேட்டால் சொல்வர் எல்லாம் தெய்வ சித்தம் என்பார். கடந்த முப்பது ஆண்டுகளில் சைவ தமிழ்
உலகில் உலக முழுமையும் செல்வாக்கு செலுத்திய ஓர் அரிய ஆளுமை இவர்.

X

Right Click

No right click