Skærmbillede 827அரச குடும்பத்து மரணங்களுக்கு பாலங்களின் குறியீட்டுப் பெயர், முன்னரே திட்டமிட்ட ஏற்பாடுகள் கோமகன் பிலிப்பின் மறைவுச் செய்தியை நாட்டுக்கு அறிவித்த பிரதமர்
பொறிஸ் ஜோன்சன்"Forth Bridge is down" என்று குறிப்பிட்டார். "இளவரசரின் மரணம் Forth Bridge is down" எனக் குறிக்கப்படுவது ஏன்?

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களது மரணங்களை அறி விப்பதும் மரணச் சடங்குகளை எவ்வாறு நடத்துவது என்பதும் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே முன்கூட்டியே திட்டமிடப்பட்டு விடுகின்றன.அவற்றுக்குச் சில முக்கிய பாலங்களின் குறியீட் டுப் பெயர்களும் சூட்டப்படுகின்றன. பிலிப்பின் மரணச்சடங்கு நடைமுறைகள் "Operation Forth Bridge" என்ற குறியீட்டுப்
பெயரால் அழைக்கப்படுகின்றன.தேசிய துக்கமும் இறுதி நிகழ்வுகளும் Operation Forth Bridge என்ற தலைப்பின் கீழேயே நடைபெறும்.மகாராணி எலிஸபெத், இளவரசர் பிலிப் இருவரது சம்மதத்துடன் இந்தக் குறியீட்டுப் பெயர்த் தெரிவும் அதன் கீழான மரணச் சடங்கு ஏற்பாடு களும் பல வருடங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டன. Forth Bridge என்பது ஸ்கொட்லாந்தில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற ரயில் பாலத்தின் பெயர். யுனெஸ்கோவினால் அது பாரம்பரிய இடங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இளவரசர் பிலிப் Duke of Edinburgh என்ற அரச பட்டப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

அந்தப் பெயர் எடின்பேர்க்கைக் குறிப்பதால் அங்குள்ள Forth Bridge பாலத்தின் பெயரால் அவர் நினைவு கூரப்படுகிறார். அதனாலேயே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிலிப்பின் மரணச் செய்தி அறிவிப்பில்"Forth Bridge is down" என்று குறிப்பிட்டார். அரண்மனை மரணங்களை இவ்வாறு பாலங்களின் பெயரால் அறிவிக்கும் நடைமுறை, 1990 களின் முற்பகுதியில் தீர்மானிக்கப்பட்டது. அரச குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் இவ்வாறு மறைவுக்குப் பிந்திய ஏற்பாடுகள் முன் கூட்டியே திட்டமிடப்படுவதில்லை. மகாராணி எலிஸபெத் மறைந்தால் அது "London Bridge" என்ற குறியீட்டுத் தலைப் பில் அறிவிக்கப்படும். அதுபோன்று முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் உயிரிழ ந்தால் அவரது அரச மரியாதைகள் "Menai Bridge" என்னும் பாலத்தின் பெயரில் நடக்கும்.

பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் பெரும் தொற்று நோய்க் காலத்தில் நிகழ்ந்துள்ள மரணம் என்ற ரீதியில் பிலிப்பின் இறுதி மரியாதை ஏற்பாடுகள் முன்னரே திட்டமிட்டதற்கு மாறாகக் கட்டுப்பாடுகளுடன் மிக அடக்கமான முறையிலேயே நடைபெறக்கூடும். அஞசலி செலுத்துவதற்காகத் திரள வேண்டாம் என்று நாட்டுமக்கள் ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டு ள்ளனர். எட்டு நாள் தேசிய துக்கத்தை தொடர்ந்து பெரும்பாலும் எதிர்வரும் சனிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அரச மரியாதை அன்றி முன்னாள் படை வீரர் என்ற முறையில் தனியே இராணுவ மரியாதைகளுடன் மட்டுமே அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
(படம் :ஸ்கொட்லாந்தின் Forth Bridge பாலம்)

குமாரதாஸன். பாரிஸ்.

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click