Skærmbillede 485-தமனி பிரதாபன்-

"எங்கள் வீட்டில் இருவர் தடுப்பூசி பெற்று விட்டோம் .மற்றவர்கள் போடத் தயாராக இருக்கிறார்கள்.எனது அனுபவத்தில் நான் கடந்த ஒரு வருடமாக மிக இலகுவாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகக் கூடிய நோயாளி என்ற பகுதியின் கீழ் NHS கண்காணிப்பின் கீழ் இருந்தேன்.குறிப்பாக ஒரு வருடமாக மருத்துவத் தேவை தவிர்த்து வேறு தேவைகளுக்காக வெளியில் செல்லாது வீட்டினுள்ளே தனிமைப்பட்டுக் கொண்டேன்.முன்னுரிமை அடிப்படையில் எனக்கு தடுப்பூசி ஊசி மருந்து ஏற்றிய பின்னர் சாதாரண உடல் வலியினை மட்டும் உணர்ந்தேன்.இரண்டு தடவைகள் பரசிற்றமோல் எடுத்துக் கொண்டேன்.
என்னைப் போன்று பலர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்."

உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸினால் இதுவரை பலகோடி மக்கள் பாதிக்கப்பட்டும் பல லட்சம் மக்கள் உயிரிழந்தும் இருக்கிறார்கள்.ஒருவர்க்கு தொற்று ஏற்படும் பட்சத்தில் அவர் சாதாரண காய்ச்சல் போன்று கடந்து செல்லவும் முடியும்.சிலவேளைகளில் உயிரிழக்கவோ அல்லது நீண்ட காலப் பாதிப்புக்களைச் சந்திக்கவோ கூடும்.சமூக ஊடகங்கள் ஊடாகவும் அரசாங்கம் வெளியிடும் தகவல்கள் ஊடாகவும் பல விடயங்களை நாளுக்கு நாள் அறிகின்றோம்.
அவை ஒரு பக்கம் இருக்க நாம் தடுப்பூசி தொடர்பாக பல தெளிவின்மைகளைக் கொண்டுள்ளோம்.உண்மையில் தற்போது பாவனையில் கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகள் பல சுற்றுப் பரிசோதனைகளுக்கு பின்னால் உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்தே மக்களுக்கு வழங்கப்படுகின்றது.எனவே இது தொடர்பாக அச்சம் கொள்வதற்கு ஒன்றுமில்லை.இங்கு பலருடைய கேள்வி என்னவென்றால் தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும்.உயிரிழக்க நேரிடும் என்பதாக உள்ளது.இவ்வாறான மிகப் பாரதூரமான பக்கவிளைவுகள் ஏற்படுமானால் எதற்க்காக இவ்வளவு பணத்தை செலவு செய்து ஊசி மருந்தை கண்டுபிடிக்க வேண்டும்?பக்க விளைவு என்பது எல்லா மருந்துகளுக்கும் உண்டு.அவை சாதாரண பக்க விளைவுகளே.உதாரணமாக ஒரு குழந்தைக்கு பிறந்த பின்னால் ஏற்றப்படும் ஊசிகளுக்கு வரும் பக்க விளைவுகள் போன்றதே இந்த மருந்துக்குமான பக்க விளைவு.எங்காவது நூறில் ஒருவர் அல்லது ஆயிரத்தில் ஒருவர் பாரதூரமாக பாதிக்கப்படலாம்.அது அவர்களது உடல் நிலை, வயது மற்றும் வேறு நோய்க்காக எடுக்கப்படும் மருந்துகளால் கூட இருக்கலாம்.
இந்த தடுப்பூசி போட்டவுடன் எமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது.முதல் முதலாக பாவனைக்கு வந்த மருந்து ஆகையால் யார் யாரை எவ்வளவு தூரம் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என்று கூற முடியாது.நாங்கள் முதல் தடவை ஏற்றி மூன்றில் இருந்து பன்னிரெண்டு கிழமைகளில் அடுத்த மருந்தினையும் ஏற்ற வேண்டும்.அது மட்டுமன்றி நாம் பாதுகாப்புக்காக கடைப்பிடிக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுதல் அவசியமாகும்.
தடுப்பூசி தொடர்பான எனது அனுபவத்தில்...
எங்கள் வீட்டில் இருவர் தடுப்பூசி பெற்று விட்டோம் .மற்றவர்கள் போடத் தயாராக இருக்கிறார்கள்.எனது அனுபவத்தில் நான் கடந்த ஒரு வருடமாக மிக இலகுவாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகக் கூடிய நோயாளி என்ற பகுதியின் கீழ் NHS கண்காணிப்பின் கீழ் இருந்தேன்.குறிப்பாக ஒரு வருடமாக மருத்துவத் தேவை தவிர்த்து வேறு தேவைகளுக்காக வெளியில் செல்லாது வீட்டினுள்ளே தனிமைப்பட்டுக் கொண்டேன்.இது ஒருவிதமான மனஅழுத்தத்தை எல்லோரையும் போன்று எனக்கும் உண்டுபண்ணியது.தடுப்பூசிக்கான நாளினை எதிர்பார்த்திருந்தேன்.முன்னுரிமை அடிப்படையில் எனக்கு தடுப்பூசி பெறும் சந்தர்ப்பம் மூன்று கிழமைகளுக்கு முன்னால் கிட்டியது.பிரித்தானிய தயாரிப்பான Oxford பல்கலைக்கழக கண்டுபிடிப்பில் உருவான AstraZeneca எனும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டேன்.தடுப்பூசி பெற செல்லும் போது என்னிடம் ஏதாவது ஒவ்வாமை பிரச்சினை உண்டா?எவ்வாறான மருந்துகளை நாளாந்தம் பயன் படுத்துகின்றேன்?அந்த கிழமையில் வேறு ஏதாவது ஊசி மருந்து வேறு தேவைக்காக ஏற்றப்பட்டதா?முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரா?போன்ற கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டது.மருந்து ஏற்றிய பின்னால் சாதாரண காய்ச்சல்,உடல் வலி,ஊசி ஏற்றிய கையில் வலி,சிலவேளை தலையிடி போன்ற அறிகுறிகள் இருக்கலாம் என்று அறிவுறுத்தப் பட்டது.அவ்வாறு ஏற்பட்டால் சாதாரண பரசிற்றமோல் எடுத்துக் கொள்ளலாம் என்றும் வேறு ஏதாவது பிரச்சினை ஏற்படின் உடனடியாக குடும்ப வைத்தியரை (GP)அல்லது அவசர தேவை இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.அத்துடன் மருந்து தொடர்பான leaflet வழங்கப்பட்டது.அதில் மருந்து தொடர்பான சகல விடயங்களும் உள்ளடக்கப் பட்டுள்ளது.
எண்னைப் பொறுத்த வரை ஊசி மருந்து ஏற்றிய பின்னர் சாதாரண உடல் வலியினை மட்டும் உணர்ந்தேன்.இரண்டு தடவைகள் பரசிற்றமோல் எடுத்துக் கொண்டேன்.
என்னைப் போன்று பலர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.அவர்களும் இவ்வாறான சிறிய பக்க விளைவுகளையே சந்தித்துள்ளனர்.தேவையற்ற விதத்தில் பரப்பப்படும் வதந்திகளை நம்பாது எமக்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் போது தடுப்பூசியை பெற்றுக்கொண்டு எம்மையும் எமது குடும்பத்தையும் எமது சமூகத்தையும் பாதுகாப்போம்.ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது.எமக்குத் தெரிய பல உறவுகளை இழந்துள்ளோம்.எனவே எம்மையும் பாதுகாத்து சமூகக் கடமையாக எண்ணிச் செயற்படுவோம்.

நன்றி

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click