Skærmbillede 403"கூரியவாளால் குறைபட்ட கூன்பலா
ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய்ச் - சீரிய
வண்டுபோல் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப்
பண்டு போல் நிற்கப் பணி"
- இப்படி ஔவை பாடப்பாட, வெட்டப்பட்டு வீழ்ந்த மரம் மீண்டும் உயர எழுந்து நின்றது. புதிய பூக்களைப் பூத்தது. காய்த்தது. உடனே பழுத்த பழங்களையும் தந்தது. கண்முன்னே இப்படி ஓர் அதிசயத்தைத் தன் தமிழால் நிகழ்த்திய ஔவையின் புலமை.

இது ஔவை பாடிய (பலா) பாடல் ஒன்றின் பின்னணியில் நடந்ததாகச் சொல்லப்படும் கதை. சங்க காலப் புலவராகக் கருதப்படும் ஔவையார் வாழ்ந்த காலத்துக்கு முன்பிருந்தே பலா, தமிழுடன் தமிழர்களின் வாழ்வுடன் இணைந்த பழமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆக, பலா நம் தமிழ் மண்ணைப் பூர்வீகமாகக்கொண்ட மரம் என்று சொல்லலாமா?
அப்படியும் சொல்லலாம். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது என்றும் சொல்லலாம். கொஞ்சம் பரந்த மனப்பான்மையுடன் தெற்காசியாவைப் பூர்வீகமாகக்கொண்ட மரம் என்றும் சொல்லலாம். மேற்குத் தொடர்ச்சி மலைகள்தாம் ஆதியில் பலா விளைந்த பூர்வீகப் பகுதி என்பது சில தாவரவியலாளர்களின் கருத்து.
ஏறக்குறைய 6,000 ஆண்டுகளாக எமது மண்ணில் பலா விளைந்து கொண்டிருக்கிறது. பொதுவாக ஈரப்பதம் அதிகமிருக்கும் பூமத்திய ரேகைப் பகுதிகளில் பலாவின் விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பலா மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆனால், நம் தமிழ் இலக்கியத்தில் உள்ள பலாவுக்கான பழைமையான குறிப்புகள் போன்று வேறு எதிலும் இல்லை என்பது உறுதி.
"மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்..."
- இவை புறநானூற்று வரிகள். ஊர்ப் பொதுவிடத்தில் இருந்த பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் குரங்கு, அந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த மத்தளத்தை, பலாப்பழம் என்று நினைத்துத் தட்டியது என்பது இதன் சுருக்கமான பொருள்.
பலா குறித்து சங்க இலக்கிய உதாரணங்கள் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம். நிலத்தின் அமைப்பு, செழிப்பு, வளமை இதையெல்லாம் விவரிக்க சங்க இலக்கியப் புலவர்கள் எல்லோரும் தம் சொற்களில் பலாவைத்தான் சுமந்து கொண்டு திரிந்திருக்கிறார்கள். பலா குறித்த அதிக பாடல்களைக் கொண்டிருப்பது சிற்றிலக்கியமான குற்றாலக் குறவஞ்சி. குற்றாலத்தில் வீற்றிருக்கும் குற்றாலநாதர் கோயிலின் தல விருட்சமே பலா மரம்தான். அந்தப் பழைமையான பலா மரத்தில் காய்க்கும் பலாச்சுளைகள் ‘லிங்க’ வடிவத்தில் இருக்குமென்பதை, ‘சுளையெலாஞ் சிவலிங்கம்’ என குற்றாலக் குறவஞ்சிக் குறிப்பிடுகிறது. இந்த மரத்தில் வருடம் முழுவதும் பலா காய்க்கிறது. அதை யாரும் பறிப்பதில்லை.
"கீட்பலவும் கீண்டு கிளைகிளையின்
மந்திபாய்ந்து உண்டு விண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவன்
உண்டுகளும் குறும்பலாவே".
- இது தேவாரத்தில் இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தர் எழுதிய திருக்குறும்பலாப்பதிகத்தில் இடம் பெற்றுள்ள அடிகள். பெண் குரங்குகள் பலா மரத்தின் மீது ஏறிப் பழங்களை உண்கின்றன. உண்ணும்போது பழங்களும் சுளைகளும் தவறிக் கீழே விழுந்துவிடுகின்றன. ஆண் குரங்குகள் அவற்றை மகிழ்வோடு எடுத்து உண்டு இன்புறுகின்றன என்பதே இந்தப் பாடலின் பொருள் சுருக்கம். சம்பந்தர் மட்டுமே இறைவனைப் பற்றி மட்டும் பாடாமல், பலா மரத்துக்கென ஒரு பதிகமும் பாடியிருக்கிறார்.
சரி, இலக்கியத்திலிருந்து வரலாற்றுக்கு வருவோம். பலா, கி.பி முதலாம் நூற்றாண்டில் நம் மண்ணிலிருந்து ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வியாபாரத் தொடர்புகள் மூலமாகப் பரவியதாக நம்பப்படுகிறது. 16-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த போர்ச்சுக்கீசியர், இதை ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். கி.பி 1782-ம் ஆண்டில் இது கரீபியன் தீவு நாடான ஜமைக்காவுக்குப் பரவியது.
உலகமெங்கும் பார்த்தால் பலாவுக் கென தனியாகத் தோட்டம் வைத்து விவசாயம் செய்பவர்கள் குறைவே. காபி, மிளகு, ஏலக்காய் போன்ற பணப்பயிர்த் தோட்டங்களின் துணைப்பயிராகவே வளர்க்கப் படுகிறது. தவிர, வீட்டுத் தோட்டங்களில் பலா விரும்பி வளர்க்கப்படுகிறது.
உலகத்தில் அதிக அளவில் பலா பயிரிடப்படும் நாடுகள் தாய்லாந்து மற்றும் வியட்நாம். இந்த நாடுகள் பலாப்பழங்களைப் பதப்படுத்தி, கேன்களில் அடைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும், வடஅமெரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன. இலங்கை மற்றும் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை வாழை, மாம்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் விளைவிக்கப்படுவது பலாதான்.
பலாவின் உணவுக் கலாசாரத்துக்கு வரலாம். நம்மவர்களுக்குப் பெரும்பாலும் பலாவைப் பழமாக உண்பதில்தான் ஆர்வம். ஆனால், இலங்கை மக்கள், பலாக்காயையும் விருப்பத்துடன் சமைத்து உண்கிறார்கள். பலாப் பிஞ்சை சிங்களத்தில் ‘பொலஸ்’ என்று சொல்கிறார்கள். அதாவது உள்ளே சுளைகள் எதுவும் உருவாகாத பலாப் பிஞ்சை, கறி சமைத்து உண்கிறார்கள். இலங்கையில் சாதாரண உணவகங்களில் இருந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை இந்த பொலஸ் கறி மிகவும் பிரபலம்.
சுளைகள் உருவாகும் பருவத்தில் இருக்கும் பலாக்காயையும் இலங்கை மக்கள் சமைக்கிறார்கள். சுளைகள் நன்கு முற்றி, பழுப்பதற்கு முந்தைய நிலையில் சமைக்கப்படுவது ‘பலாக்காய் கறி’ என்று சொல்லப்படுகிறது.
இலங்கையில் வீட்டுக்கு வீடு பலா மரங்களைப் பார்க்கலாம். ஒரு வீட்டில் நான்கைந்து பலா மரங்கள் இருந்தால் அவர்களது வீட்டைப் பஞ்சமே அண்டாது என்று அங்கே சொல்வார்கள். காரணம், கி.பி 1977-ம் ஆண்டு இலங்கையில் கடும் பஞ்சம் உண்டானது. அப்போது இலங்கை மக்களுக்குக் கிடைத்த, அந்த மக்களின் உயிரைக் காப்பாற்றிய ஒரே உணவு, வீட்டுக்கு வீடு விளைந்து கிடந்த பலாக்காய்களும் பழங்களுமே.
உலகில் பலாவை அதிகமாகச் சமைக்கும் நாடு பிலிப்பைன்ஸ். அந்த நாட்டு மக்கள் சைவம், அசைவம், இனிப்பு என பலாவை வைத்து அதிகமான பதார்த்தங்களைச் செய்கிறார்கள். அதில் முக்கியமானது, Ginataang Langka. இதில் Langka என்றால் பலா. பலாக்காயும் தேங்காய்ப்பாலும் சேர்த்து சமைக்கப்படும் கறி இது. மீனோ, இறாலோ சேர்த்து இந்தக் கறியின் சுவையைக் கூட்டுகிறார்கள். பிலிப்பைன்ஸின் எல்லா உணவகங்களிலும் இந்தக் கறி கிடைக்கும்.Skærmbillede 401
`Halo-Halo’ - இதுவும் பிலிப்பைன்ஸ் பதார்த்தம் தான். பலாப்பழம் கொண்டு செய்யப்படும் டெசர்ட். சிறு துண்டுகளாக்கப்பட்ட பலாப்பழம், ஐஸ்கட்டி, வேகவைக்கப்பட்ட பீன்ஸ் விதைகள், இனிப்பூட்டப்பட்ட கொப்பரைத் தேங்காய், சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட வாழைப்பழத் துண்டுகள், மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சீஸ், ஐஸ்கிரீம் இன்னும் சில பல விஷயங்கள் சேர்த்துத் தயாரிக்கப்படுவது.
கேரளாவில் சக்கை (பலா) சமையல் பதார்த்தங்கள் அதிகம். சக்கை எரிசேரி, சக்க புளுக்கு, சக்கை உலர்த்தியது, சக்கை தோரன், சக்கை வெவிச்சது, சக்கை பாயசம், சக்கை நெய் அப்பம், சக்கை அல்வா என்று பலவிதங்களில் பலாவைக் கொண்டாடு கிறார்கள். தெற்காசிய நாடுகளில் மட்டும் தான் பலா விதவிதமாகச் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. தவிர, உலகமெங்கும் இது ஐஸ்க்ரீம், ஜெல்லி, மில்க் ஷேக், டெசர்ட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
பலாவுக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. நம் முன்னோர், உடல் அசதியைப் போக்கி, புத்துணர்ச்சி பெற பலாப்பழத்துடன் கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டிருக்கிறார்கள். உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற, பலாப்பழத்துடன் கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து உண்டிருக்கிறார்கள்.
பலா இலையையும் சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பலாப்பழத்தைவிட காய்க்கு அதிக மருத்துவ குணம் உண்டென்று சித்த மருத்துவம் சொல்கிறது. ஆனால், பலாக்காயைப் பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும். நன்றாக வேகவைத்து, காரம், புளி எல்லாம் சேர்த்து முறையாகச் சமைத்த பின்பே சாப்பிட வேண்டும். இது குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.
பலாக்கொட்டையில் புரதச்சத்து அதிகம். தெற்காசிய மக்கள் அதை விரும்பி உண்கிறார்கள். குறிப்பாக, ஜாவா தீவு மக்கள், பலாக்கொட்டையைச் சீவி, உப்பு, காரம் சேர்த்து வறுத்து ‘சிப்ஸ்’ போல சாப்பிடுகிறார்கள். இலங்கை யாழ்ப்பாணத்தில் பலாகொட்டையை அவித்து துவைத்து சீனி அல்லது சக்கரை சேர்த்து உண்பார்கள் அதன் சுவை அபாரம்.
பற்கள் உறுதி பெற, ஈறுகள் வலிமை பெற, தேகம் பலம் பெற, வைட்டமின் சத்துகள் உடலில் சேர, சருமம் பொலிவு பெற, தொற்றுநோய்க் கிருமிகள் அண்டாமல் இருக்க என்று பலாவின் பலன் பட்டியல் பெரியது.
ஆகாத விஷயங்களையும் சொல்ல வேண்டுமல்லவா... அருமையாக இருக்கிறதென்று அள்ளி அள்ளித் தின்றால் பலா, வயிற்றைப் பதம் பார்த்துவிடும். தவிர, நீரிழிவு, ஆஸ்துமா தொல்லை உடையவர்கள் எல்லாம் பலாவைத் தள்ளிவைப்பது அவர்களுக்கு நல்லது.
உலகிலேயே இரவு பகலாக பிராணவாயுவை தருவது; ஆலமரம், அரசமரம், வேப்பம் மரம் என்பார்கள்.
ஆனால் அறிவியலாளர்கள் இப்போது கண்டுபிடித்ததில் பலா மரமே முதலிடம் பிடித்துள்ளது
முதலிடத்துக்கான காரணம்; சுத்தமான பிராணவாயு(O²) வெளிவுடுகிறது மற்றும் நீரை சேமித்தல், குளிர்ச்சியான நிழல்,சுவையான பசி தீர்க்கும் காய் கனி கொட்டை.
முதலியவையே ஆகும்.
பாத்தீர்களா?? எவ்வளவு விஷயம் இருக்கு பாலாவில் ..
இறுதியாக ஒரு விஷயம். பலாவுக்கு ஆங்கிலத்தில் Jack Fruit என்று எப்படி பெயர் வந்தது... யார் அந்த ஜேக்... அவருக்கும் பலாவுக்கும் என்ன சம்பந்தம்... இப்படி கேள்விகள் எழலாம்.
போர்ச்சுக்கீசியர்கள் 16-ம் நூற்றாண்டில் கேரளாவுக்கு வணிகம் செய்ய வந்தபோது, அந்த மண்ணில் விளைந்த பலாப்பழங்களை ருசித்திருக்கிறார்கள். மயங்கிக் கிறங்கியிருக் கிறார்கள். என்ன பழம் இது என்று கேட்டிருக்கிறார்கள். மலையாள மக்கள் ‘சக்கைப் பழம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘சக்கை’ என்ற சொல்லை போர்ச்சுக்கீசியர்கள் Jaca என்ற வார்த்தையாகப் புரிந்துகொண்டு, அப்படியே குறிப்பிட ஆரம்பித்தார்கள். அதுவே பின்பு ஆங்கிலத்துக்கு மாறியபோது, Jack Fruit என்றானது.
கார்சியா டி ஓர்டா என்ற போர்ச்சுக்கீசிய இயற்கை ஆர்வலர், கி.பி. 1563-ம் ஆண்டு எழுதிய Coloquios dos simples e drogas da India என்ற புத்தகத்தில் Jack Fruit என்னும் ஆங்கில வார்த்தையை உபயோகித்திருக் கிறார்.
மற்றபடி, பலாவுக்கும் உலகில் பிறந்த எந்த ‘ஜேக்’குக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்பதே உண்மை!
பலா கணக்கு!
ஒரு பலாப்பழத்தை வெட்டிப் பார்க்காமலேயே அதனுள் எத்தனைச் சுளைகள் இருக்கும் என்று கண்டறிய ஒரு சூத்திரத்தை நம் முன்னோர் பாட்டாகவே பாடியிருக்கிறார்கள். பழந்தமிழ் நூலான கணக்கதிகாரத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது.
"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை".
அதாவது, பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் இருக்கும் சிறிய முள்களைத் துல்லியமாக எண்ணிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்கி, வரும் விடையை ஐந்தால் வகுக்கக் கிடைக்கும் விடை பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கை. எண்ணிப் பார்க்கவே வேண்டாம் என்பதே இந்தப் பாடல் சொல்லும் செய்தி.
உதாரணமாக, பலாப்பழ காம்புக்கு அருகிலிருக்கும் சிறிய முள்களின் எண்ணிக்கை 120 என்று வைத்துக் கொள்வோம்.
120 X 6 = 720
720-ஐ 5-ல் வகுக்க, விடை 144.
இதுவே சுளைகளின் எண்ணிக்கை என்பது நம் முன்னோர் நிரூபித்துக்காட்டிய வெற்றிச் சூத்திரம். எனக்கு நம் எள்ளு கொள்ளுத் தாத்தாக்கள் மீது சந்தேகமில்லை. உங்களுக்குச் சந்தேகமிருந்தால், உடனே ஒரு முழுப்பலாவை வாங்கிச் சோதித்து விடுங்கள்!
முக்கனிகளில் இரண்டாவது கனியான பலாவுக்கு சக்கை, பலவு, பலாசம், வருக்கை, ஏகாரவல்லி எனப் பல பெயர்கள் உண்டு.
பலா மரம், அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது. விதை மூலமாக வளர்க்கப்படும் ஒரு பலாமரம், சுமார் மூன்றிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் பூத்து, காய்க்கத் தொடங்குகிறது. நன்கு வளர்ந்த ஒரு பலா மரத்திலிருந்து ஆண்டுக்கு 100 முதல் 150 பழங்கள் வரை கிடைக்கும்.
இந்தியாவில் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் வீணை செய்ய பலா மரம் பயன்படுத்தப் படுகிறது. வியட்நாமில் புத்தர் சிலைகள் செய்ய பலாக்கட்டைகளையே பயன்படுத்துகிறார்கள்.
எமது இலங்கையில் தவில் மிருதங்கம் உடுக்கு போன்ற வாத்தியங்களின் கொட்டு களுக்கும் தளபாடங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது
பங்களாதேஷின் தேசியப் பழம் பலா. கேரள மாநில அரசின் பழமும் பலாதான்.
உலகம் விரைவாக வெப்பமயமாகிறது. நச்சு வாயு அதகமாகி ஓசோன் படையை தாக்குகிறது.
பலாமரம் வளர்ப்போம்!! இயற்கையை பாதுகாப்போம்!!
இக்கால இறுக்கமான பொருளாதார நிலமையில் உணவு மற்றும் வருமானத்தை பலாவிடமிருந்தே பெற்றுக்கொள்வோம்.
நன்றி

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click