Skærmbillede 875நிஷா

காலை 08.30 மணி எனது கல்லூரியின் வகுப்பறைகள் அத்தனையும் உயிர் பெற்றுக் கொள்கின்றன. எனக்குப்பிடித்ததே இந்த நேரம் தான். ஆசையும் ஆர்வமுமாய் தங்கள் வகுப்பாசிரியர்களே இவ்வுலகின் ஒட்டு மொத்த 'ஹீரோக்கள்' என்ற நம்பிக்கையில் தம் அன்றைய பளுவான நாளினை மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் மாணவர்களையும் நாளின் ஆரம்பம்

என்பதினாலும் தமது வகுப்பறை என்ற பந்தத்தினால் உந்தப்பட்டும் கரும்பலகையில் வெண்கட்டி பதிக்கும் ஆசிரியர்களையும் தவிர வேறு எந்த உயிரினமும் பாடசாலை வகுப்பறை தவிர்ந்த இடத் திற்கு அந்நியமாக்கப்படும் நேரம் அது மாத்திரம் நான், ஓவ்வொரு வகுப்பறையாக சுற்றி வந்த என் பார்வை ஒன்பதாம் வகுப்பு டீ யிற்கு வெளியில் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய வலது காலின் பெருவிர லால் நிலத்தைக் கீறியவாறு நிற்கும் ஒரு மாணவியில் நிலை குத்துகிறது. மெதுவாக குரலை சற்று கடுமையாக்கி கொண்டு "ஏய்! ஏன் வெளியில் நிற்கிறாய்?" என்ன நடந்தது என்று கேட்கிறேன். அதிபர் என்றால் அதட்டுவார் என்றாலும் அன்பானவர் என்ற பொதுவான பார்வை எனக்குச் சொந்தமாயிருந்தது நான் நெருங்கியதும் மெல்ல அம்மாணவியின் உடலில் ஒரு நடுக்கம் பரவியதை அவதானித்த நான் என் குரலைத் தழைத்துக் கொண்டு "உன் பெயர் என்னம்மா என விசாரிக்கிறேன். சாந்தி! என்று கூறிய அவள் தலையை நிமிர்த்தவேயில்லை. மெதுவாக வகுப்பறையின் வாயிலில் நின்று எட்டிப்பார்த்து “மன்னிக்கவும் சேர்” சாந்தி ஏன் வெளியில் நிற்கிறாள் என விசாரித்தேன். கேட்டதும் பொங்கி எழுகிறார் ஆசிரியர். "மேடம் இவ ஒரு வருடமாக கிழமையில் இரண்டு நாள் பாடசாலைக்கு வருவதில்லை மேடம். நானும் எப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்திட்டேன்.

பகுதித்தலைவரிடமும் அனுப்பி அடிக்கடி அடியும் வாங்கிக் கொடுக்கிறேன். இவ லீவு எடுப்பது குறைய வில்லை மேடம் அப்பாவை அல்லது அம்மாவை கூட்டிவா என்று சொன்னாலும் வருவதில்லை சேர். காரணத்தையாவது சொன்னால் பராவாயில்லை. வாய்திறப்பதேயில்லை பொரிந்து தள்ளும் அவரை கையமர்த்தி விட்டு, சாந்தியை என் அலுவலக அறையினுள் அழைத்து வருகிறேன். “பயப்படாமல் வா சாந்தி” என்று கூறி அவளை என் முன்னால் அமரும்படி கையசைக்கிறேன். சாந்தி அமர்ந்த பாடில்லை . பயமும், அவமானமும், கண்களில் மிரட்சியுமாய், நிற்கும் அவளை

பார்த்தால் பேசவைக்க முடியும் என்று தோன்ற வில்லை .

"வகுப்பில் அனுமதிக்கவும்” என்று எழுதி கையொப்பம்மிட்ட துண்டை. அவளின் கையில் கொடுத்து அவளை போய் வகுப்பில் இருக்கும்படி கூறி அவளை அனுப்பிய நான் எனது அன்றைய வேலையில் ஈடுபட்டேன். உயிர்ப்பு மீண்டும் கல்லூரி வகுப்பறையில் இருந்து வளவுக்குள் வருகிறது. ஒரு பெண்கள் கல்லுாரி என்பதால் எப்போதும் சிரிப்புக்கும் குறைவில்லை. இடைவேளையின் போது எப்போதுமே இரண்டு மூன்று ஆசிரியர்கள் காரியாலத்தை நோக்கி வருவார்கள். "மன்னிக்கவும் மேடம் உள்ளே வரலாமா. என்று அனுமதி கேட்டவாறே வருகிறார் 09ஆம் வகுப்பிற்கு பொறுப்பான வகுப்பாசிரியர் ரவி.

"மேடம்! சாந்தி விடயத்தில் நீங்கள் கருணை காட்டக்கூடாது போடம். பெட்டை என்ன சொன்னாலும் வாய் திறப்பதில்லை மேடம். இண்டைக்கு நீங்க சொன்னதாலேதான் வகுப்பிற்குள்ள அனுமதித்தேன், என்ன காரணம் சொன்னா” என்று ஏளனமாய் கேட்கும் அவரைப் பார்த்து இலேசாக சிரிக்கிறேன். "ரவி அந்தப்பிள்ளை எங்கே இருந்து வாரவ என்று தெரியுமா உமக்கு” என்று கேட்கிறேன் அகதி முகாமில் இருந்து தான் மேடம். "அவவின்ர வீட்ட போய் விசாரிச்ச நீரோ” என் கேள்விக்கு ரவி சொன்ன பதில் தாக்கி வாரிப்போடுகிறது.

அங்கெல்லாம் மனிசன் போவானா மேடம்? இந்த அகதி முகாம் வளிய இருந்து வார பிள்ளைகளுக்கு கொஞ்சம் திமிர் அதிகம் தான் மேடம் (தனி மனித ஆதங்கம்). என்ன செய்வது அவரின் அபிப்பிராயம் அது. அன்று மாலையே ஆலோசனை வழிகாட்டலுக்குப் பொறுப்பான நவரட்னத்தை அழைத்துக் கொண்டு சேர்ச் வளவிற்குள் செல்கின்றேன்.

என் கண்கள் சாந்தியைத் தேடுகின்றன. ஒரே மாதிரியான கொட்டில்களின் அடர்த்தியில் எது சாந்தியின் கொட்டில்? திகைத்து நின்ற எம்மிருவரையும் நோக்கி பாதர் வருகிறார். "வாருங்கள் மேடம்” என்ன இந்தப்பக்கம். என்றவாரே தம் காரியாலய அறையினுள் எம்மை அழைத்துப்போகிறார் பாதர். "சேர்” இங்கே சாந்தி என்று சென் மேரிஸ்ஸில் படிக்கும் மாணவி ஒருத்தி.... நான் ஆரம்பிக்கும் போதே புரிந்து கொள்கிறார் பாதர். "ஓ சாந்தி பாவம் தாயற்ற பிள்ளை . பள்ளிக் கூடம்போக மாட்டேன் என்று அடம்பிடித்தாள். நான் தான் அனுப்பி வைக்கிறேன். வாருங்கள் போய் பார்க்கலாம்” என்று எங்களை சாந்தியின் கொட்டிலுக்கு அழைத்துப் போகிறார் பாதர்.

“ஐயோ கடவுளே” பாவம் சாந்தி என மனதிற்குள் நினைத்த வாறே செல்கிறேன் நான், சாந்தியின் கொட்டில் கதவு திறந்தேயிருந்தது. துாரத்தில் பார்க்கும் போதே சாந்தி தெரிந்தாள். அவளின் கரங்கள் மடியில் குழந்தை போல படுத்திருக்கும் அவளின் வயதை' யொத்த இன்னும் மொரு சிறுமியின் தலையைக் கோதியபடியிருந்தன, அந்தப்பிஞ்சு விரல்கள். எங்களைக் கண்டதும் திடுக்கிட்டு எழ முயன்ற அவளைக்கையமர்த்தி விட்டு உள்ளே சென்று நாங்களே பாயை விரித்துக் கொண்டு அமர்கிறோம். மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்ட சாந்தி "மேடம் இது என் அக்கா. போன வருடக் கலவரத்தில் வெடிச்சத்தத்தில் பயந்து ஒன்றுமே பேசுவதுமில்லை. டொக்டர் "மனநேய்” என்று சொல்கிறார். தொடர்ச்சியாக குளிசை கொடுத்தால், விரைவில் குணமாகிடுமென்று சொல்கிறார். நான் பாடசாலைக்கு வந்தா அப்பா பார்த்துக் கொள்வார் மேடம். கிழமையில் ரெண்டு நாள் காலையில் அப்பா நிறுவனத்திற்கு வேலைக்குப் போவார். மற்ற நாட்களில் பின்னேரம் எல்லா நாளையிலும் பின்னேரம் போகத்தான் கேட்டுப் பார்த்தார். ஆனா எப்படியும் கட்டாயம் ரெண்டு நாள் காலைலேதான் வேலைக்குப் போகனுமாம் அது தான் மேடம் பாடசாலைக்கு நான் வரவில்லை. அம்மாவும் கலவரத்தில் செத்துப்போய்ட்டா மேடம்"

“ஏன்மா, இதை உங்கட வகுப்பாசிரியர்கிட்ட சொல்லியிருக்கலாமே” என்று கனிவான குரலில் கேட்கிறார் நவாட்னம். அவர் எல்லாப்பிள்ளைகளுக்கும் நடுவில் வெச்சு கேட்கிறவர் சேர் எப்படி என்... அக்காக்கு "மனநோய்” என்று சொல்லுவது? சொல்லிய சாந்தியின் குரல் தழதழத்து கண்களில் வெள்ளிக் கோடாய் நீர் பளபளத்தது சாந்தியை ஆசுவாசப்படுத்தி விட்டு எழுந்த என் உள்ளத்தில் ஓ! இந்தக் கலவரத்தில் எத்தனை பேர் மனநோயாளர்களாய் ஆக்கப்பட்டுள்ளார்கள்? அவர்களுக்கு இந்த சமூகம் கொடுத்துள்ள அங்கிகாரம் என்ன? படிக்க வேண்டிய வயதில் எத்தனை சாந்திக்கள் அம்மாவாய்” எத்தனை ரவிக்கள் பிள்ளைகளின் உண்மையான கரிசனையற்ற வகுப்பாசிரியர்கள்” என்ற கேள்விகளின் அலை ஒன்றன் பின் ஒன்றாய்.

*அகவிழி சஞ்சிகையில் பிரசுரமான இக்கட்டுரை தேவை கருதி அனுமதியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது

 

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click