-நிலாதரன்-

விடிஞ்சு இப்போ எத்தனையோ மணித்தியாலங்கள் கடந்து விட்டது. ரீவீ என்றும் பேஸ்ப்புக்கென்றும் பொழுது போகாமல், அந்த வேலை இந்த வேலையென்று ஓடியாடிச் திரிஞ்சாலும் நேரம் ஏதோ மெதுவாகவே போவதாகவே ராதிகா உணர்ந்து கொண்டாள்.

இந்த மனுசன் எத்தனை மணிக்குப் போகுதோ எத்தனை மணிக்குத் வருகுதோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

கண்டறியாத இந்த வெளிநாடென்று இங்கு வந்து.... இரவென்றும் பகலென்றும் தெரியாத நாளைப் போலே இருண்டு போன மனங்களுடன்.. ஊரின் நினைவுகளோடு மனம் ஏங்கி ஏங்கித் தவித்தது.

 

என்ன தான் மனம் எதை எதையோ நினைத்தாலும், அனேற்றா நேற்றுக் கதைத்தவகைளே மனதில் வந்து முட்டி மோதிக் கொண்டது. பறவை பறந்த பின்னும் ஆடும் கிளைகள் போல் அவள் மனம் ஆடிக் கொண்டிருந்தது.

மனம் சோர்ந்து உடல் தளர்ந்து சோபாவில் வந்து வீழ்ந்தாள்.

நேற்று நடந்த சம்பவம் மனத்திரையில் படமாய் ஓடியது.

ராதி.... நான் எப்படியும் உன்னுடன் இன்று கதைத்தாகியே வேண்டும், என்று சொல்லி பக்கத்திலிருந்து வந்து கதைத்தவைகள் எல்லாம் முளுமையாகவே அவளை நிலை குலையச் செய்து விட்டது.

நான் பல நாளா கவனித்து வருகிறேன். என்ன நீ இப்போ எல்லாம் முன்பு மாதிரியே இல்லை. உன்னிலே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு... இப்ப எதுக்கெடுத்தாலும் கோபப்படுறாய் எரிச்சல்படுறாய்..... நீ முன்பு போல் சந்தோசமாகவும் இல்லை. இதை நான் மட்டும் சொல்லவில்லை. இங்கே வேலை செய்யும் மற்றாக்களும் இதைத் தான் சொல்லுறார்கள். என்ன பிரச்சினையாக இருந்தாலும் கட்டாயம் இன்று நீ சொல்லித் தான் ஆக வேண்டும், என்று அனேற்றா கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

எனக்கு அப்படியென்ன பிரச்சினை...? நான் முன்பு போலத் தானே இருக்கிறேன்.... என்றபடி தோளையும் ஆட்டி தலையையையும் அசைத்து... உதட்டளவில் சொன்னாலும் மனதளவில் ஏதோ இருக்கு என்பதை அவள் முகபாவனை காட்டிக் கொண்டது.

ராதி இன்றோ நேற்றோ பழகிய சினேகிதர்களல்ல நாம். எனக்கு உன்னை நன்றாகவே தெரியும், நீ எதையும் மறைக்க முயலாதே... நான் ஏதும் உனக்கு உதவலாமா என நினைத்துத் தான் கேட்கிறேன். மறைக்காமல் சொல் என்ற போது எதிர்பாராத விதமாக சீறி விழுந்தாள் ராதிகா.

அனேற்றா மிகவும் அருகில் நெருங்கி அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டபடியே...... ராதி கொஞ்சம் அமைதியாய், சாந்தமாய் இரு. நான் உனக்கு உதவ விரும்புகிறேன, மனம் விட்டுக்கதை ராதி....

ஒன்றும் போசாமல் ஒருவரையொருவர் பார்த்தபடியே சிறிது நேரம் மௌனமாய் இருந்தார்கள்.

அனேற்றா.... எனக்கு எப்படிச் சொல்வது எதைச் சொல்வது என்று தெரியவில்லை என்றபடியே அவள் கைகளை மேலும் இறுகப்பற்றிக் கொண்டாள்.

ராதிகா நிறையவே சம்பந்தம் சம்பந்தமில்லாத மாதிரி கதைத்தாள். இடையில் ஒன்றுமே பேசாமல் மௌனமானாள்... பின்னர் தொடர்ந்து ஏதேதோ சொன்னாள்... அவளை இடைநிறுத்துவது போல் ராதி.... சுற்றி வளைத்து எனக்குப் பேசத் தெரியாது, பேசவும் முடியாது.... நேரடியாகவே கேட்கிறன் உனது குடும்ப வாழ்வில்.... நீ எப்படி... சந்தோசமாய் இருக்கிறாயா........?

திகைத்துப் போய் மெல்லென நிமிர்ந்து பார்த்தாள்.... எனக்கா, எனக்கா... என்ன பிரச்சினை... அவர் மிகவும் நல்லவர். மிகவும் அன்பானவர். ஏன் உனக்கும் அவரைப்பற்றித் தெரியும் தானே.... அவர் என்னை நன்றாகத் தானே வைத்துத் பார்க்கிறார்.

போன சனிக்கிழமை கூட அம்மாவுடன் கதைக்கும் போது. அவ ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதா... தங்கள் குடும்பம் இப்ப ஊரிலே தலை நிமிர்ந்து நிக்கிறதுக்கு இவர் தான் காரணம் என்றும், இவர் என்ரை மருமகன் இல்லை இவர்தான்... என் மகன் என்று சொல்லிச் சொல்லி அழுதா....

இங்கே கலியாண வீடு, சாமத்திய வீடு என்று ஏதாவது கொண்டாட்டம் என்று போனா வாற பொம்பிளையெல்லாம் நீ நல்லாக் கொடுத்து வைச்சவள் என்று.... வாற புது டிசைன் சாறி எண்டாலென்ன நகையென்டாலென்ன, உன்ரை மனிசன் உனக்கு உடனே வாங்கித் தந்திடுவார் என்று மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அவர் என்னை வைச்சிருக்கிறார், என்று சொல்லி பெருமைப்பட்டாள்.

ம்ம்ம்.... என்று தனக்குள் சிரித்தபடி, ஒரு தமிழ்பெண்ணாக தன்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற நினைப்பில் இவள் அப்படிக் கதைக்கின்றாள் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அனேற்றா.

ராதி சரி... அன்று உன் அம்மா கதைத்த போது உன் கணவன் எங்கே நின்றார்.

வேலை..

நீ கலியாணவீடு, சாமத்தியவீடு என்று போகும் போது எப்போ உன்னுடன் வந்தார்...

அவருக்கு சனிக்கிழமையும் வேலை.... ஞாற்றுக்கிமையும் வேலை...

இப்போ அனேற்றாவுக்கு மூளையின் மூலையில் ஏதோவொன்று இடித்தது..... தலையை அக்கம் பக்கம் திருப்பியவளாய்... நான் தெரியாமல் தான் கேட்கிறன்.... நீ இப்படி எப்பவும் எந்த நேரமும் தனித்தே இருப்பதால் சந்தோசமாய் இருக்கிறாயா... எனக்கு மறைக்காமல் உண்மை சொல்... நீ கடைசியாய் கணவனுடன் எப்போ ஒன்றாய் இருந்தாய்...

புதுப்புது டிசையின் நகைகளும் உந்த உடுப்புக்களும் மட்டும் ஒரு பெண்ணுக்கு சந்தோசத்தை கொடுத்து விடுமா.....?

நாடியில் கை வைத்திருந்தபடி இருந்த ராதிகா, ஆடாமல் அசையாமல் அப்படியே சிலை போல் மௌனமாய் இருந்தாள்.

ராதி ராதி.... நான் கேட்பது உன் குடும்ப உறவு பற்றி... உன் செக்ஸ் வாழ்வு பற்றி.

அவளுடைய மௌனமும், அந்த முகமும் ஆயிரம் கதைகள் சொல்ல வேண்டும் போல் இருந்தாலும் வார்த்தைகள் இல்லாது தடுமாறினாள்.

நானும் ஒரு பெண். ஒரு பெண்ணின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், உண்மை நிலமைகளையும் அறியாதவள் அல்ல. வெள்ளைக்காரப் பெண்களுக்கு இருக்கும் உணர்வுகள், உணர்ச்சிகள் போலத் தான் தமிழ்ப் பெண்களுக்கும் இருக்கும். முஸ்லீம் பெண்களுக்குமிருக்கும். உலகத்திலுள்ள அனைத்துப் பெண்ணினத்துக்குமிருக்கும். இது இயற்கையானது.

மனம் திறந்து என்னுடன் உரையாடு... உன் அந்தரங்களை மனசுக்குள்ளேயே பூட்டி பூட்டி சேமித்து வைத்து ஒரு முளுமையான மனநோயாளியாக மாறப் போறாய். ஒண்டும் இல்லையெண்டு சொல்லி உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே...

ராதிகாவுக்கு ஓவென்று கத்திக் குளற வேண்டும் போலிருந்தது. இடம் பொருள் பார்த்து தன்னை அடக்கிக் கொண்டாள். இருந்தாலும் உள்ளத்திலிருந்த குமுறல்களை கண்ணீராய் வடித்தாள்.

அனேற்றா ஒன்றுமே பேசாது இறுக அவளைக் கட்டியணைத்தாள். இந்தப் பாசப்பிணைப்பு இருவரையும் கொஞ்ச நேரம் கட்டிப் போட்டது. ராதிகா கொஞ்ச நேரம் அழுது தீர்த்தாள்.

ராதிகா கொஞ்சம் தலையை நிமிர்த்த அனேற்றா பிடியிலிருந்து தன்னை விலக்கி கொண்டாள்.

அவளது மௌனமும், அந்த முகபாவனைகளும் ஏதோ சொல்ல முடியாத ஒன்றை நினைத்து குளம்புகிறாள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

திடிரென ஏதோ நினைத்து உறுதி கொண்டவளாய்.... நான் என்ன சொல்ல... குரல் தளதளத்தது.. நீண்ட காலமாய் நான் ஒரு விதவை போலத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்... நீ விளங்கிக் கொண்டால் சரி இதற்கு மேல் என்னை ஒன்றும் கேட்காதே... திரும்பவும் அழுபவள் போல் தளதளத்தாள்.

எனக்கு எல்லாம் விளங்குது ராதி.

ராதி இந்த உலகத்தை வியாபாரமாகவும், விளம்பரங்களாகவும் மாற்றி அளவில்லாத ஆசைகளையும், தேவைகளையும் கூட்டி காசு காசு என்றும், வேலை வேலையென்றும் ஆண் பெண்ணென்று வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் ஓடவைத்துக் கொண்டிருக்கிறது இந்த பாழாப் போன உலகம்.

இதை விளங்காத பல பேர் குடும்பத்துக்கெனவும், மனைவிக்கெனவும் நேரத்தை ஒதுக்காது அலைந்து திரிந்து அன்பைக் கூட பகிர்ந்து கொள்ள முடியாமல் தங்கள் இளமைக் காலத்தை தொலைத்து விடுகின்றார்கள்.

இவற்றை விட இந்த புலம்பெயர்ந்த முதலாம் தமிழ்தலைமுறையினரில் பலர் அடித்தட்டு உழைக்கும் வர்க்கமாக இருப்பதால், எப்படியாவது உழைச்சு சேர்த்து விட வேண்டும் என்று நினைத்து அல்லும் பகலும் ஓடித்திரிந்து தங்கள் வாழ்கையை அழித்துக் கொண்டு கடைசியிலே தாங்களே ஒன்றும் அனுபவிக்க முடியாத நோயாளிகளாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் ஒரு கசப்பான பெரிய உண்மை.

இந்த நிலையில் எத்தனையோ தமிழ்பெண்கள் தனிமையாலும் விரக்தியாலும் தற்கொலை செய்திருக்கின்றார்கள்.

ராதி... இந்தக் கணவன் மனைவி உறவிருக்கே இது தான் இந்த உலகத்திலேயே ஓர் அற்புதமான உறவு. எத்தனை சொந்தங்கள் பந்தங்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கு மனைவியும், ஒரு பெண்ணுக்கு கணவனும் தான் இந்த உலகமே.

இதை பல இடங்களிலே கணவன்மாரும், மனைவிமாரும் சரி இந்த உறவை விளங்கிக் கொள்வதுமில்லை. சரியாக புரிந்து கொள்வதும் இல்லை. இதனால் இந்த உறவுகளில் தெரிந்தோ தெரியாமலோ பல இடைவெளிகளை ஏற்படுத்தி விடுகின்றார்கள்.Skærmbillede 159

மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ அதே போல ஒரு மனித வாழ்வின் வளர்ச்சிக்கு தெளிந்த முறையான இயற்கையோடு ஒத்த மனநிறைவடையக் கூடிய செக்ஸ் வாழ்க்கை இருவருக்கும் அவசியம் என்று உளவியல் சொல்லுது.

ராதி பேசித் தீர்க்க முடியாதவை என்று ஒன்றுமில்லை.. அவருடன் இது பற்றி கதை. இது எங்கள் கலாச்சாரம் என்று கட்டுப்பாடுகள் என்று இரும்பு வலைகளைப் போட்டு நீயே மாட்டுப்பட்டு இவையெல்லாம் பேசாப் பொருட்கள் என்று நினைத்து சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே.... என்ன... ராதி... நான் சொல்வது சரிதானே...?

நீ வலு இலகுவாகவே சொல்லிப் போட்டாய்.... சாதாரண உடுப்பு கூட ஒரு கணவனுக்கு முன்னால் மாற்றிக் கொள்ள வெட்க்கப்படும் எம் தமிழ்பெண்ணினம் இந்த பாலியல் பற்றிக் கதைத்துக் கொள்வதா.... அது தான் முடியுமா...

அப்படி ஒரு பெண் கதைத்தால் அதற்கென தமிழிலே எத்தனை வார்த்தைகள்... அப்பப்பா... ஒருத்தி அப்படிக் கேட்டுவிட்டால்... வாழ்க்கை பூராவும் அதையே சுட்டிக் காடடிக் காட்டி சண்டை நடக்கும்.... என்று சொல்ல நினைத்தாலும், ராதிகா ஒன்றுமே பேசாது மௌனமாய் தலைகவிழ்ந்து நின்றாள்.

ராதி பேசித் தீர்க்க முடியாதவை என்று ஒன்றுமில்லை.. அவருடன் இது பற்றி கதை என்பது மட்டும் அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

திடீரென மணிக்கூட்டை நிமிர்ந்து பார்த்த ராதிகாவுக்கு நேரம் இரவு ஒன்பதை தாண்டியிருந்ததை நம்ப முடியாமல் இருந்தது. ஒரு ரீ போட்டுக் குடிப்பம் என நினைத்து குசினிக்குள் நுளைய, வெளிக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.

இஞ்யைப்பா... எனக்குச் சரியான பசி, கெதியா சாப்பாட்டைப் போடு கை கால் கழுவிப் போட்டு வாறன் என்ற படி உள்ளே நுழைந்தான் கணவன்.

இவளும் எல்லாவற்றையும் எடுத்துச் சூடாக்கி மேசையில் வைக்க அவனும் வந்து அமரச் சரியாக இருந்தது.

ஏதோ ஜந்தாறு நாட்கள் சாப்பிடாதவனைப் போல அள்ளி அள்ளி எறிந்தான். வைத்த கண் வைக்காமல் பரிமாறிக் கொண்டிருந்தாலும் மனம் ஏதோ அனேற்றா சொன்னவைகளே நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.
ராதி... சொன்னாப் போலே மறந்து போட்டேன், வாற ஞாயிற்றுக் கிழமையிலிருந்து இன்னும் இரண்டு மணித்தியாலம் பிந்தித் தான் வருவன். அங்கே வேலை செய்யும் ஒரு போலந்துக்காரன் வேலையால் நிக்கிறானாம். அந்த வேலையையும் என்னைச் செய்வாயா என்று கேட்டினம், நானும் ஓமெண்டிட்டன். அதையும் கொஞ்சம் செய்தனெண்டால் சிவாண்ணை சொன்ன அந்தக் கொழும்பு வீட்டை வாங்கிப்போடலாம்... என்று சொன்ன படியே எழுந்து போய் கை கழுவிவிட்டு உள்ளே நுழைந்தான்

இடிவிழுந்தவள் ஒரு கணம் அதிந்து போனாள். இல்லை இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் வேண்டும் என நினைத்தபடி குசினியை ஒழுங்குபடுத்தி விட்டு படுக்கையறையினுள் உள்ளே நுழைந்தாள்.

பலத்த குறைட்டைச் சத்தத்துடன் அவன் ஒன்றுமே தெரியாதவனாய் தூங்கிக் கொண்டிருந்தான்.

விரக்தியை வெளிப்படுத்தாமல் அப்படியே விறைத்து போய் நின்றாள் ராதிகா.

முற்றும்

நன்றி:- ndpfront.com

கட்டுரைகள்

 சபா. ஜெயராசா அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்....

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click