Skærmbillede 118“கணக்குப் பாடத்தின் காரணமாக நீ 'பெயில்' பண்ணி விட்டாய்"

"என்ன ........? பகிடி விடுகிறாயா நீ?"

“இல்லை .... ‘மார்க்ஸ் சீற்றைப் பாரன்"

“இருக்கேலாது. நான் சோதினையில் நன்றாகவே எழுதினேன்."

எனது விடைகளை எனது சினேகிதிக்குக் காட்டினேன்.

 

“ஆசிரியர் சிலவேளை பிழைவிட்டிருக்கலாம்..... இவ்வளவு பேரின் விடைத்தாள்களையும் திருத்துவதென்றால் ......'

ஆனால், அவரால் இப்படிப் பிழைகளை விட முடியாது. நான் இதை அவரிடம் அவருடைய வகுப்பின் போது கட்டாயம் கேட்க வேண்டும்.

அடுத்த முறை எமது கணக்கு வகுப்பில் நான் ஆசிரியரிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் மிகவும் இலேசாக, எனது 'பெயில் மார்க்ஸ்' சரிதான் என்று சொன்னார். அவருக்கு என்மீது கோபமாக இருப்பதாகத் தோன்றியது. என்ன காரணமாக இருக்கலாம் என்று யோசித்தேன். எதுவும் பிடிபடவில்லை .

ஆசிரியர் எனக்குத் தராவிட்டாலும் நான் கஷ்டப்பட்டு படித்து எழுதி உண்மையாகப் பெற்ற புள்ளிகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் ஆசிரியரிடம் மன்றாட விரும்பவில்லை. ஒரு பெண் என்பதால், ஆசிரியரிடம் 'கதைத்துப் பேசி புள்ளிகளைப் பெற்றுக்கொள்பவள் என்று மற்றவர்கள் கதைக்கும் ஒரு நிலை உருவாவதை நான் விரும்பவில்லை. திரும்பி எனது இருக்கைக்குச் சென்றேன்.

எனது விடைத்தாள்களை என்னை விட நன்றாகச் செய்த மற்றவர்களுடைய விடைத் தாள்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். அவர்களது விடைகளும் என்னுடையவையைப் போன்றே அதே விடைகளாக இருந்தன. ஏன் இந்த ஆசிரியர் எனக்குரிய சரியான புள்ளிகளைத் தர மறுக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை .

இடைவேளை நேரம் இதைப்பற்றி எனது சகோதரியிடம் பேசினேன். அவள் எனது சந்தேகத்தைத் தீர்த்து வைத்தாள். இந்தக் கணித பாட ஆசிரியர் என்னைத் தான் விரும்புவதாகக் கூறி என்னுடன் உறவு வைத்துக் கொள்ள சில நாட்களுக்கு முன் முயன்றிருந்தார். அதற்கு நான் ஒப்பவில்லை .

'ஓ ..........அப்ப அதுதான் எனக்கு இப்படி அநியாயம் செய்கிறாரோ? அதையும் பார்ப்போம். என்ன நடந்தாலும் சரிதான். நான் எனது சரியான ‘மார்க்ஸ்'சைப் பெற்றுத்தான் ஆவேன்.'

எனது விடைத்தாளை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் போனேன். அவரது அலுவலகத்துக்கு நான் போனதும் அவர் சொன்னார்.

“என்ன அழகான பிள்ளை நீ. எனக்கு ஏனிந்த அதிர்ஷ்டம் கிட்டியிருக்கிறது. மடமொசிலி?"

இந்த அருவருப்பான ‘சுழட்டல்' வரவேற்பு எனக்கு எரிச்சலைத் தந்தது. ஆயினும் பாதிக்கப்பட்டவள் என்றபடியால் நான் அதை எதிர்க்கவில்லை.

“இதுதான் நடந்தது சேர், தயவு செய்து மன்னிக்க வேணும். ஆனால், நான் நேரடியாகப் பேசப் போகிறேன். எனது கணித பாட ஆசிரியர் என்மீது விருப்பம் என்று கூறி என்னுடன் உறவு கொள்ள முயன்றார். நான் அதை மறுத்துவிட்டேன். இதனால் அவர் எனது கணித பாடப் புள்ளிகளைத் தர மறுக்கிறார். இந்தப் பிரச்சினையை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் வந்தேன்.

அவர் தலையை ஆட்டியபடி நான் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

நான் சொல்லி முடித்ததும் அவர் சொன்னார் 'இன்று பின்னேரம் 3 மணிபோல என்னை எனது வீட்டில் வந்து சந்தியுங்கோ, மடமொசிலி. நான் உங்கள் ஆசிரியருடன் இதுபற்றிப் பேசித் தீர்க்கிறேன். இப்ப உடனடியாக அவரைக் கூப்பிட்டுக் கதைக்க என்னால் முடியாது. எனக்கு நிறைய வேலைகள் இப்போது இருக்கின்றன."

அன்று பிற்பகல் நான் தலைமை ஆசிரியரின் வீட்டுக்குப் போனேன். அவர் பாடசாலைக்கு அருகிலேயே வசித்து வந்ததால் எங்கள் எல்லோருக்கும் அவரது வீடு தெரிந்திருந்தது.

எனக்கு ஒரு வசதியான கதிரையை சுட்டிக்காட்டி உட்காரச் சொன்னார். எனக்கு குடிப்பதற்கு ஏதாவது தரவா என்று கேட்டார். நான் அதை அமைதியாக மறுத்தேன். நான் அங்கு எதையும் குடிப்பதற்காகப் போகவில்லை .

கணித பாட ஆசிரியர் வரவில்லையா? கேட்டேன் நான் .

"அவர் வரவில்லை வந்து விடுவார்"

எனக்கு அவர் சிலவேளை வரமாட்டாரோ என்று தோன்றியது.

தலைமை ஆசிரியர் சற்று அந்தரப்படுவதாக எனக்குத் தோன்றியது. ஏனாக இருக்கும் என்று எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன். எப்படி இருந்தால் என்ன, அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று என்னைச் சுதாகரித்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தின் பின் அவர் அறையிலிருந்து வெளியேறி இன்னொன்றுள் நுழைந்தார். அது அவரது படுக்கை அறையாக இருக்கலாம் என எனக்குத் தோன்றியது. அங்கிருந்தபடி என்னை அங்கு வருமாறு அழைத்தார். “வந்து பார் நான் எங்கள் வாசிகசாலைக்கு என்ன வாங்கியிருக்கிறேன் என்று"

எனக்கு வாசிப்பதில் உள்ள ஆர்வம் காரணமாக, என்னுள் எழுந்துகொண்டிருந்த மெல்லிய அச்சத்தையும், அவரது அறையில் நிலவிய அமைதி காரணமாக என்னுள் எழுந்த சந்தேகத்தையும் ஒதுக்கி விட்டு அவரது அறையை நோக்கிப் போனேன். நான் இப்படிச் சந்தேகப்படுவது சரியில்லை ... 'சிலவேளை அது அவரது புத்தக அறையாகவும் இருக்கலாம்' என்று எனது மனம் தேற்றியது.

நான் அவரது அறைக்குள் கதவைக் கடந்து போகும் வரை அவர் பொறுத்திருக்கவில்லை. என்னைப் பிடித்து தனது கட்டிலை நோக்கி இழுத்துக்கொண்டு போனார். என்னால் முடிந்தளவுக்கு நான் இதைப் பலமாக எதிர்த்தேன். ஆனால் வெறி கொண்ட ஒரு மனிதன் ஒரு காயப்பட்ட மிருகம் போலப் பயங்கரமானவன் ஆகிவிடுவான் என்பதை நான் மறந்து விட்டேன்.

எப்படியோ அவரது பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு பலத்துக் கத்தினேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதைப்பற்றி அறியாமல் இருக்க வேண்டுமென்றால் என்னை உடனடியாக விடவேண்டும் என்று அவரிடம் கூறினேன். அப்போது தான் என்னுடைய பிரச்சினையை அவருடன் பேசலாம்' என்று சொன்னேன்.

“நீ என்னுடன் வர ஒப்புக் கொள்வாயானால் உன்ரை பிரச்சினையை நான் தீர்த்து வைப்பேன்” என்றார் அவர். அதற்குப் பிறகு “நீ உனது பரீட்சையில் நல்ல புள்ளிகளைப் பெற்று சித்தியடைவதைக் காண்பாய்.”

“நீ என்னவென்று நினைத்தாய்? ஒரு விபச்சாரி என்றா?

நான் அப்படிப்பட்ட ஒருத்தி அல்ல”

திடீரென அவர் சொன்னார் : 'c பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளாய்...!

“ ஓ வெளியேற்றப்பட்டு விட்டேனா...? நல்லது, இது நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதைத் தீர்மானிக்க எனக்கு அனுமதியளிக்கிறது...."

நான் சொன்னேன். இன்னும் அவரை அவமதிக்கிற மாதிரிச் சொல்ல ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தேன். எதுவும் பிடிபடவில்லை . அவ்விடத்தை விட்டு வெளியேறினேன். வெளியே வந்தபோது எனக்கு அடக்க முடியாமல் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

மறுநாள் நான் வகுப்பிலிருந்து வெளியே அனுப்பப்பட்டேன். பாடசாலையிலிருந்தும் வெளியேற்றப்பட்டேன். காரணம் : பிடிவாதம், ஆசிரியர்களை மதிக்காமை.

அதன் பின் நான் பாடசாலையில் அனுமதிக்கப்படவில்லை .

அந்தக் கணம் நான் நினைத்தேன் நாங்கள் எல்லா மட்டங்களிலும் தாக்கப்படுகின்றோம். ஆனால், இதுதான் நிலைமையாக இருந்தாலுங் கூட எங்களால் இந்த நெருப்பு வளையத்தை உடைக்க முடியும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நாம் உரத்துப் பேச வேண்டும்.

 

*அகவிழி சஞ்சிகையில் பிரசுரமான இக்கட்டுரை தேவை கருதி அனுமதியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click