கதைகள்
1) குடியானவனும் நரியும்
2) ஒற்றுமையே வலிமை
3) ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் அழிவே
4) புலியும் வழிப்போக்கனும்
கதை 01 குடியானவனும் நரியும்
ஒரு கிராமத்தில் குடியானவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நிறைய வயர்கள் இருந்தன அதைத் தவிர அவனிடம் நிறைய ஆடுஇ மாடுஇ கோழிஇ வாத்து முதலியனவும் இருந்தன. குடியானவனின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள காட்டில் நரி ஒன்று இருந்தது. அது குடியானவனின் கோழிஇ வாத்துஇ ஆட்டுக்குட்டி முதலியவைகளை அடிக்கடி திருடிச் சென்று கொன்று தின்று வந்தது. அதனால் குடியானவன் எப்படியேனும் அந் நரியைப் பிடித்துக் கொல்ல நினைத்தான். பலமுறை முயன்றும் பயனில்லை. கடைசியாய் ஒரு பெரிய பொறி வைத்தான். நரியும் அப்பொறியில் அகப்பட்டுக் கொண்டது. பொறியில் நரியைக் கண்ட குடியானவன் அதைக் கொல்லவில்லை.
அதை வெளியில் எடுத்து அதன் வாலில் எண்ணெய் தோய்த்த கந்தல் துணியைச் சுற்றினான். பிறகு அத்துணிக்குத் தீ வைத்து. அதை வெளியே விட்டான். பயந்து நடுங்கிய நரி வெகுண்டு அங்கிருந்து வேகமாய் வாலின் தீப்பந்தத்துடன் குடியானவனின் வயலில் புகுந்து ஓடியது. அச்சமயம் குடியானவனின் வயலில் கதிர்கள் முற்றி நெல் அறுவடைக்குத் தயாராய் இருந்தது. வைக்கோலும் நன்றாய் உலர்ந்தருந்தது. அதனால் நரியின் வாலிலுள்ள தீச்சுவாலைபட்டதும் பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அக்குடியானவனின் வயலில் இர்ந்த நெற் பயிர்கள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. இதைக் கண்டு குடியானலன் தனது முட்டாள் தனத்தை நினைத்து வருந்தினான்.
கேள்விகள்
1) ஏன் நரியை பிடித்துக் கொல்ல குடியானவன் விரும்பினான்?
2) பொறியில் அகப்பட்ட நரியை குடியானவன் என்ன செய்தான்?
3) குடியானவன் செய்த முட்டாள் தனம் என்ன?
கதை 02 ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் அழிவே
ஒரு எளிய காட்டில் அருகே பெரிய புல்வெளி ஒண்று இருந்தது. அங்கு நிறைய மாடுகள் வசித்து வந்தன. அவைகள் எப்பொழுதும் சேர்ந்தே புல்மேயும். அதனால் வயிறார உண்டு கொழுத்து இருந்தன.
அருகிலுள்ள காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அதற்கு இம்மாடுகளைக் கொன்று தின்ன ஆவல். பலமுறை முயன்றும் முடியவில்லை. எல்லா மாடுகளும் ஒன்று சேர்ந்து சண்டையிட்டு சிங்கத்தைத் துரத்தி வந்தன.
அதனால் சிங்கத்தால் அவைகளின் அருகில் நெருங்க முடியவில்லை.
சில மாதங்கள் கழித்து அம்மாடுகள் தமக்குள் முட்டிக் கொண்டு சண்டையிட ஆரம்பித்தன. அதனால் அவற்றின் ஒற்றுமை குலைந்தது. அவைகள் தனித் தனியே மேய ஆரம்பித்தன. சமயம் எதிர்பார்த்திருந்த சிங்கம் இதைக் கண்டது. உடனே மாடுகளை ஒவ்வொன்றாகத் தாக்கிக் கொன்று தின்றது. சில நாட்களில் அங்கிருந்த எல்லா மாடுகளும் அச்சிங்கத்திற்கு இரையாயின. தமக்குள் ஓற்றுமை இழந்ததால் எல்லா மாடுகளும் அழிந்தன.
கேள்விகள்
1) முதலில் சிங்கத்தால் ஏன் அம்மாடுகளை கொல்ல முடியவில்லை?
2) தங்களுக்குள் சண்டை இட்டதால் மாடுகளுக்கு என்ன ஏற்பட்டது?
3) இப்பாடத்தின் கருத்து என்ன?
கதை 03 ஒற்றுமையே வலிமை
ஒரு கிராமத்தில் குடியானவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு முன்று பையன்கள் இருந்தனர். அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். இதைக் கண்ட முடியானவன் மிக வருத்தமுற்றான்.
குடியானவனுக்கும் வயது அதிகம் ஆயிற்று. ஒரு சமயம் உடம்பு முடியாமல் இருந்தான். அப்பொழுது தனது பையன்களை அருகில் அழைத்தான். அவர்களுக்கு பல அறிவுரைகள் கூறினான். அவர்கள் அதைப் பொருட் படுத்தவில்லை. சிறிது சிந்தித்தான். பிறது பையன்களில் ஒருவனை அழைத்து சில மெல்லிய குச்சிகள் கொண்டு வரச் சொன்னான். அவனும் அதை எடுத்து வற்தான். அவற்றை ஒரு கட்டாகக் கட்டினான்.
அவர்களை ஒவ்வொருவராக அழைத்தான்.
அக்குச்சிக்கட்டைகளை கொடுத்து அதை முறிக்கச் சொன்னான். ஒருவராலும் அக்கட்டைகளை முறிக்க முடியவில்லை. பிறகு கட்டை அவிழ்த்து குச்சினளை தனியே பிரித்தான். அதை அவர்களிடம் கொடுத்து முறிக்கச் கொன்னான். அவர்கள் ஏல்லாக் குச்சியையும் தனித்தனியே சுலபமாக இரண்டாய் முறித்தனர். குடியானவன் உடனே அவர்களிடம் "நீங்கள் சேர்ந்து ஒற்றுமையுடன் அருந்தால் எவரும் உங்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது. உங்களுக்குள் சண்டையிட்டால் சுலபமாக உங்களைப் பிரித்து தீங்கிழைப்பர்" என்று கூறினார். இது கேட்ட பையன்களுக்கு புத்தி வந்தது. அன்று முதல் தமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.
குடியானவனும் நிம்மதியாக வாழ்ந்து வந்தான்.
கேள்விகள்
1) குடியானவன் வருத்தமுறக் காரணம் என்ன?
2) குடியானவன் தனது பையன்கள் ஒற்றுமையாக இருக்க கையாண்ட உதாரணம் என்ன?
கதை 04. புலியும் வழிப்போக்கனும்
ஒரு காட்டில் வேடன் ஒருவன் மிருகங்களைப் பிடிக்கப் பொறி ஒன்று வைத்திருந்தான். அப்பொறியில் சிறுத்தைப் புலி ஒன்று மாட்டிக் கொண்டது. பலவாறு முயன்று பார்த்தும் அதனால் வெளிவர முடியவில்லை.
அதனால் அயர்ந்து வருத்தத்துடன் இருந்தது. சிறிது நேரம் கழித்து அவ்வழியே குடியானவன் ஒருவன் நடந்து சென்று கொண்டிருந்தான். அருகில் வந்ததும் புலி அவனைக் கூப்பிட்டது. அவனிடம் தன்னைப் பொறியிலிருந்து விடுவிக்கும்படி கெஞ்சிற்று.
ஆனால் அவனிடம் தாங்கள் என்னை விடுவித்தால் நான் உங்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்ய மாட்டேன். என்று உறுதியளித்தது. புலியின் வார்த்தைகளை நம்பிய குடியானவன் அப்புலியை பொறியிலிருந்து விடுவித்தான். ஆனால் புலி உடனே குடியானவன் மேல் பாய எத்தனித்தது. குடியானவன் அலறினான்.
குடியானவன் நரியிடம் "ஐயா நரியாரே! நான் இவ்வழியே சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது புலி இப்பொறியில் மாட்டிக் கொண்டு தவித்தது. தன்னை விடுவிக்கும்படி என்னிடம் கெஞ்சிற்று. எனக்கு எவ்விதத் தீங்கும் செய்வதில்லை என வாக்களித்தது. அதனால் அதை பொறியிலிருந்து விடுவித்தேன் ஆனால் இப்புலியோ உடனே என் மேல் பாய்ந்து கொல்ல வருகிறது. இது நியாயமா?" என்றான். இது கேட்ட நரி சிறிது சிந்தித்தது.
பிறகு புலியிடம் " நண்பரே! குடியானவன் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. தாங்கள் எப்படி இப்பொறியில் மாட்டிக் கொள்ள முடியும்? காண்பியுங்கள் பார்க்கலாம்" என்றது. நரியின் வார்த்தைகளை நம்பிய புலி நன்றாகப் பொறியில் மாட்டிக் கொண்டது. நரி குயொனவனிடம் "மூர்க்கருக்கு செய்யும் உதவி எப்பொழுதும் ஆபத்தில் முடியும்" என்று கூறிச் சென்றது. குடியானவனும் நரிக்கு நன்றி கூறி தன் வழியே சென்றான்.
கேள்விகள்
1) புலி எப்படி குடியானவனை கொல்ல வந்தது?
2) நரி செய்த தந்திரம் என்ன?
3) நரி கூறிய அறிவுரை என்ன?