-தமணிகை பிரதாபன்-
போலிச் சாயமிட்ட
வேஷச் சிரிப்பொலி நிறைந்த
விசித்திர மனிதர்கள் வாழும்
வினோத உலகமிது..
உனக்குள் இருக்கும் ஆயிரம் முகங்களை
திரைக்குள் மறைத்து ஏனிந்த மாயத்தை
புரிய நினைக்கின்றாய்..
உனக்கான பொய்யான மதிப்பிற்காய்
உனக்குள் ஒரு முகமும்
ஊருக்கு மறுமுகமும் காட்டி-உன்
உண்மை முகத்தை இழந்திடும்
துரோகத்தை நீ எதற்க்காக
புரியப் போகின்றாய் ..
பகை சொல்லி வெறுக்காது
வெற்றுப் புன்னகையுடன்
உன் பின்னால் கால்வாரி
முதுகில் குத்தும் பல முகங்களே
உன்னைச் சுற்றி நிற்பன என்ற
உண்மையை என்றாவது ஒரு நாள்
புரிந்து கொள்வாய்..
அன்று
போலிகளை நம்பும் இவ்வுலகில்
பொய்மை ஒருநாள் துகிலுரியப்படும் போது
உனக்காக வாழ யாருமில்லை என்றுணர்ந்து
ஊருக்காக வாழ முற்படுவாய் ..
அந்தநொடி உன்னை விட உத்தமன்
யாருமில்லை என்பதை
பல முகங்கள் உணர்த்தி நிற்கும்
உண்மையின் ஒரு குரல் மட்டும்
ஓர் மூலையில் ஓங்கி ஒலிக்கும்
உணர்வாய் மனிதா ....