வாழ்க்கையை
தினம் தொலைத்தே
திரிகின்றோம்
பணம் என்ற
காகிதத்துக்காக
தினமுமே
அன்னை இட்ட
அன்பு உணவை
கூடி இருந்து உண்ட காலம்
எங்கோ சென்றது
பணம் என்று
சுயநலம் கொண்டே
மனிதனை திண்கின்றோம்
நாமும் வாழ்வில்
காகிதம் எல்லாம்
வாழ்க்கை இல்லை
உணர்ந்தே திருந்தி
அன்பாய் வாழ்
அன்று உணர்வாய்
வாழ்வை நீயும்.
-பாரதி மைந்தன்-