-ராகவி இரத்தினராசா-
இஞ்சியுடன் தேநீரை அருந்து
கொதிநீரை குடித்திடு
மிளகை உணவுடன் சேர்த்து உண்டிடு
கராம்பை சாப்பிடு
உன் வாழ்க்கையை காப்பாற்ற
நீயே மீண்டெழுந்திடு
மனித குலத்தையே அழிக்க வந்த
கொடிய நுண் தொற்றே.
சீனாவிலிருந்து தொடங்கி
பல்வேறு நாடுகளுக்கும் பரவுகிறதே
கொரோனா எனும் கொடி நோயே
மக்களின் அலறல் சத்தம்
எம்மை மீள வைக்குமா
மனிதா உன் கையில் தான் இருக்கிறது
உனக்கேயான வழி
தடிமன், தலைவலி, மேல்சுவாசக்கோளாறு
தொண்டை கரகரப்பு, காய்ச்சல்
உடல் சோர்வாக இருந்தாலே
கொரோனா அறிகுறி என்பதை அறிந்து
உங்கள் முயற்சியால் மீண்டெழுந்திடுங்கள்.
கொரோனாவிலிருந்து வீழ்ந்தோம்
என்று நினைக்காதே
மீள்வோம் என மீண்டெழு.
சினோவாக், பாக்வேக், சினோபார்ம் சீனா தடுப்பூசிகளே
ஜான்சன், பைசர், மாடர்னா அமெரிக்கா தடுப்பூசிகளே
கோவிஷPல்டு, ஸ்புட்னிக்வி, கோவேக்சின் இந்தியாவின் தடுப்பூசிகளே
கொரோனா தொற்றுக்கு உயிர்க் கவசமாக மாறியதே
விலை மதிப்பற்ற உயிர்களைக் கொல்லும்
நோயை ஒழிக்க
பாதுகாப்புடனே இருந்து வென்று எழுந்திடுவோமே.
மூக்கையும் வாயையும் மூடிடுவோமே
ஆயளம காலே
கையிற்கு அணிந்திடுவோமே
கையுறைமை
வெளியில் சென்று திரும்பி வரும் போது
30 விநாடிகள் நன்றாக கைகளை கழுவுவோமே
எம்மைத் தீண்டும் வைரஸை
இல்லாது ஒழிக்க மீண்டெழுந்திடுங்கள்
இஞ்சியுடன் தேநீரை அருந்து
கொதிநீரை குடித்திடு
மிளகை உணவுடன் சேர்த்து உண்டிடு
கராம்பை சாப்பிடு
உன் வாழ்க்கையை காப்பாற்ற
நீயே மீண்டெழுந்திடு
அச்சமில்லாமல் உன்னை இல்லாது
ஒழிக்க
உச்ச நிலையை தொடுவோம்
மக்களை மீட்போம்
இனமத வேறுபாடின்றி
புரிந்துணர்வுடன் முயற்சி செய்
கொரோனா தொற்றை இல்லாமல் ஒழித்திடு
விலகியிரு உன்னையே நீ காப்பாற்று
எல்லோரும் நோய் நோடி இல்லாமல்
வாழ வேண்டும் என இறைவனைப்
பிரார்த்திக்கின்றேன்.