முருகன் அடியார்களே!
அருள்மிகு திருமுருகன் தேவஸ்தானம் ஆக்லாந்து -நீயூசிலாந்து . நீயூசிலாந்து நாட்டில் ஒட்டாகூகு நகரில் வீற்றிருந்து வேண்டுபவர்களுக்கு வேண்டுவனவெல்லாம் தந்தருள் புரியும் திருமுருகப் பெருமான் மஹோற்ஸவம் சார்வரி வருஷம் தை மாதம் 21-01-2021வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி 14 தினங்கள் நடைபெற திருவருள் பாலித்துள்ளார் . புண்ணிய காலங்களில் மெய்யடியார்கள் யாவரும் சைவ ஆசார சீலர்களாக வருகைதந்து திருமுருகனின் அழகுத் திருக்கோலங்களைத் தரிசித்து எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென வேண்டுகிறோம்.
நிர்வாகம்
அருள்மிகு திருமுருகன் தேவஸ்தானம்
ஆக்லாந்து -நீயூசிலாந்து