விநாயகர் அடியார்களே கற்பக விநாயகர் திருவருள் முன்னிற்க ஆக்லாண்ட் ஸ்ரீ கற்பக விநாயகப் பணிப்பாளர் சபை கற்பக விநாயக தேவஸ்தான 2021 ஆம் ஆண்டுக்கான மஹோற்ஸவம் ஜனவரி 07ஆம் திகதி பூர்வாங்கக் கிரியை நிகழ்வுகளுடனும் 8 ஆம் திகதி கொடியேற்றத்துடனும் (துவஜாரோஹணம்) ஆரம்பமாகி 16ஆம் திகதி தேர்த்திருவிழா (இரதோற்ஸவம்) 17ஆம் திகதி தீர்த்தத் திருவிழா. 18ஆம் திகதி பூங்காவனம், 19ஆம் திகதி வைரவர் மடை பூசை நிகழ்வுகளுடன் நிறைவுபெறும் என்பதை அடியார்களுக்கு பெருமையுடன் அறியத்தருகிறார்கள்.
மேலும் விநாயகர் அடியார்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் மஹோற்ஸவ விழாக் காலங்களில் வந்து கலந்து தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுறுமாறு வேண்டுகிறோம்.
ஆக்லாண்ட் ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தானம்
இல.4, டென்ற் பிளேஸ்,
பப்பகுறா, ஆக்லாண்ட்,
நியூசிலாந்து