ஞான கடவுளான சரஸ்வதியை வணங்கும் பூஜைக்கு மட்டுமே சரஸ்வதி பூஜை என்று பெயர்.
கல்வியோடு நாம் செய்யும் தொழிலும் இருகண்கள் ஆக திகழ்கின்றது, அதனாலேயே அன்றைய தினம் தொழில்களையும் வணங்கி மகிழ்கிறோம்.
நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் இந்தியா முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதில் முதன் மூன்று வீரத்தின் அடையாளமாய் துர்க்கையையும் அடுத்த மூன்று நாள் செல்வத்தின் அடையாளமாய் லட்சுமியையும் கடைசி மூன்று நாள் கல்வியின் வடிவமாய் திகழும் சரஸ்வதியையும் வணங்கி வழிபடுகிறோம்.
கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை கொண்டு பண்டிகை முடிவதால் அந்த பண்டிகை நாளை சரஸ்வதி பூஜை என்றவாறு அனைத்து மக்களும் கொண்டாடுகின்றனர். கல்வி கேள்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி கலைமகளை வணங்கிடும் நன்னாளே சரஸ்வதி பூஜை.