1. மண்ணில் விழுவது அவமானம் இல்லைவிழுந்தால் முயற்சி செய்து விதையாக மாறி பெருவிருட்சமாக எழு.
2. உன்னால் முடியும் வரை முயற்சி செய்.. உன்னால்முடியாது போனால் பயிற்சி செய்.
3. முயற்சி செய்ய சிறு நொடி கூட தயங்காதேமுயற்சி செய்யும் போதுதடைகளும் உன்னை தலை வணங்கும்.
4. முயற்சி என்பது விதை போல அதை விதைத்துக்கொண்டே இரு விதைத்தால்மரம் இல்லையேல் நிலத்திற்கு உரம்.
5. எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
6.முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது
7..எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை!
6.உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது!
7.ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை8.நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில். முயற்சி செய்.9.இருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.
10.முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
11.நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.
12.நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை, யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே.
13. உன் முயற்சிகள் உன்னை பல முறை கைவிட்டாலும்நீ ஒரு போதும் முயற்சியை கைவிடாதே.. முயற்சி தான்உனக்கான வெற்றியை உன்னிடம் அழைத்து வரும்.
14. முயற்சியும் பயிற்சியும் உன்னிடத்தில்இருக்குமானால் உன்னுடைய இலக்கினை உன்னால் அடையமுடியும்.
15. வெற்றியின் ரகசியம் உன்னில் நீ நம்பிக்கைவைத்து விடாமுயற்சி செய்வது தான்.
16. வாழ்க்கையில் நீ உயரத்தை அடைவதும்ஒன்றும் இல்லாதவனாகஇருப்பதும் உன் முயற்சியில்மட்டுமே தங்கி இருக்கின்றது.
17. முயற்சி இல்லாமல் உன்னில் நம்பிக்கைவைப்பது கால்கள்இல்லாமல் நெடுந்தூரம்நடப்பது போன்றதாகும்.
18. வாழ்க்கையில் உன் முயற்சி தோற்கலாம்..ஆனால் நீ முயற்சி செய்வதை தோற்றுப்போகவிட்டு விடாதே.. முயற்சி செய்வதை நிறுத்துவது தான்உண்மையான தோல்வி.
19. ஏற்றம் வரும் போதும் இறக்கம் வரும் போதும்நம் கூடவே இருக்கும் ஒரு நண்பன் நமதுமுயற்சியும் நம்பிக்கையும் மட்டும் தான்.
20. உன்னால் இயன்றவரை முயன்று விடு நீஇயற்கை எய்திய பிறகு உன் வாழ்க்கை ஒருவரலாறாகஇருக்க வேண்டும்.
21. வெற்றி எனும் உயரத்தை அடைய உனக்கு வழிகாட்டும்வழிகாட்டி தான் உன் தோல்வி உன் தோல்விகளை கண்டுகலங்காமல் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இரு.