1.இலட்சியத்தை அடைவதற்காக கஷ்ட நஷ்டம் என்ற விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்.
2.உங்கள் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து, அதே சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
3.தனது இலக்கினை அடைவதற்கான சரியான அணுகுமுறை கொண்ட ஒருவனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது; தவறான அணுகுமுறை கொண்ட ஒருவனுக்கு இந்த பூமியில் எதுவும் உதவ முடியாது.
4.நமது குறிக்கோள் என்பது காலக்கெடு கொண்ட கனவு தான்.
5.ஒரு இலட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தவறுகளிலிருந்தும் தாழ்வுணர்ச்சியில் இருந்தும் விடுபடுவீர்கள்.
6.இலக்கு என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய பொருள்.
7.லட்சியம் பெரிதாக இருக்குமானால் நமது வெற்றியும் பெரிதாக இருக்கும்.
8.லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.
9.உனது இலட்சியத்தினிடத்தில் அதிகமாக ஈடுபாடு வேண்டும். இல்லையேல் வெற்றி கிட்டுவது சிரமம்.
10.இலட்சியம் இல்லாத வாழ்க்கை கால்களால் நடப்பதை விட்டு கைகளால் நடப்பதற்கு ஒப்பாகும்.
11.ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று.
12. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
13. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
14. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
15. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
16. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
17. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
18. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
19. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
20. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
21. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
22. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
23. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
24. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
25. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
26. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
27. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
28. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
29. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
30. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.