தன்னம்மிக்கை என்பது எம் வாழ்வில் வெற்றி பெற மிக அவசியமான ஒன்றாகும். நம் வாழ்வில் வெற்றி பெற விடா முயற்சி, பணிவு, ஊக்கம், சிந்தனை மற்றும் அர்ப்பணிப்பு என பல காரணிகள் முக்கியமாக இருந்தாலும். தன்னம்பிக்கை மிக தேவையான ஒன்றாகும். நம் வாழ்வில் என்னதான் பல ஏமாற்றங்கள், தோல்விகள், சோகங்களை எதிர்கொண்டாலும் எந்த சூழ்நிலையிலும் தன்னமிக்கையை இழக்க கூடாது.

வாழ்வில் வெற்றி பெற்ற பல மனிதர்களின் வெற்றிக்கு காரணமாக அமைவது அவர்களின் தன்னம்பிக்கை தான். அவ்வாறு வாழ்க்கையின் வெற்றிக்காக தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் சிலவற்றை பார்ப்போம்.


1. தோழா! தூக்கி எறிந்தால்!
விழுந்த இடத்தில் மரம் ஆகு!
எறிந்தவன் அண்ணாந்து
பார்க்கட்டும் உன்னை!

2. தளர்ந்து நிற்க்காதே! சோர்ந்து இருக்காதே!
வளர்ச்சியில் வீழ்ச்சி என்பது ஒரு நிகழ்ச்சி மட்டும் தான்.
முயன்றால் எட்டும் உயரம் தான்
உன் .

3. தடைகளையும், எதிர்ப்புகளையும்
துணிவுடன் எதிர்கொண்டு
முன்னேறும் போது, வெற்றிகள்
மலராவும், மாலையாகவும்,
மகுடமாகவும் வந்து சேரும்.

4. சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில்
தோன்றி விட்டால்.
எது இருந்தாலும் இல்லை என்றாலும்
சாதிக்க முடியும்.
உன் விடா முயற்சியால்.

5. ஒவ்வொரு தோல்வியும் உன்னை
புது வெற்றிக்கு தயார் செய்யும்.
கனவுகள் கலைந்து போகலாம்.
நம்பிக்கையை தகர்ந்து போகவிடாதே.

6. முயற்சி செய்து
கொண்டே இரு.
ஒரு நாள் தோல்வி
தோற்றுப்போகும்
உன் முயற்சியிடம்.

7. இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை.
மீண்டும் புதிய இலைகளை தோற்றுவிக்கும்.
தோல்வி வந்தால் வாடாதே.
புதிய இலக்கை நோக்கி பயணம் செய்.

8. ஒரு வருடம் என்பது,
365 நாட்களை கொண்டதல்ல.
365 வாய்ப்புகளை கொண்டது.
வாய்ப்புகளை பயன்படுத்தி
வெற்றியை நமதாக்குவோம்.

9.வெற்றி பெற விரும்பினால்,
தடைகளை உடைத்து செல்.
நம்பிக்கையை விதைத்து செல்.

10. பார்த்திருந்தால், எதிர்பார்த்திருந்தால்,
காத்திருந்தால், எதுவும் நடக்காது,
கிடைக்காது, இறங்கி போராடு.
சோதனைகள் சாதனைகள் ஆகும்.
வெற்றி உன் மகுடம் ஆகும்.

11. நண்பா! நீ அடைய நினைத்த
இலக்கை அடையும் வரை.
கல் வந்தாலும் சொல் வந்தாலும்
கலக்காமல் நீ முன்னேறு.
நண்பா! அனைத்துக்கும் பதில்
சொல்லும் உன் வெற்றி.

12. அவமானப் படும்போது அவதாரம் எடு.
வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு.
புண்படுகிற போது புன்னகை செய்.
வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துகாட்டு.

13. ஊனம் ஒரு தடையல்ல.
ஊன்றுகோலாய்
உன் தன்னம்பிக்கை
இருக்கும்போது.

14

15. முடியும் வரை முயற்சி
செய்யுங்கள், உங்களால்
முடியும் வரை அல்ல
நீங்கள் நினைத்த காரியம்
முடியும் வரை முயற்சி
செய்யுங்கள்.

16. நீங்கள் வாழ்க்கையில் தடுக்கி
விழ பல கால்கள் இருக்கலாம்…
ஆனால் ஊன்றி எழ ஒரு கை
உள்ளது என்பதை மறந்து
விடாதீர்கள் அது தான்
“நம்பிக்கை”.

17. முடிந்த பிரச்சினைகளை
நினைத்து கவலை
அடைவதை நிறுத்தி விட்டு
வரும் காலத்தை துணிந்து
தன்னம்பிக்கையுடன்
எதிர்த்து நில்லுங்கள்.

18. கடினமாக உழைத்தவர்கள்
எல்லாம் முன்னேறி விடவில்லை.
கவனமாகவும் நம்பிக்கையுடனும்
உழைத்தவர்களே வாழ்க்கையில்
முன்னேறி உள்ளனர்.

19. எந்த சூழ்நிலையிலும் தளராத
உள்ளம் கொண்டவனுக்கு
இந்த உலகில் முடியாது என்று
எந்த விடயமும் இல்லை.

20. சோதனைகளை சாதனையாக்க
முயல்பவனுக்கே வேதனைகளும்
போதனைகளாக அமையும்.
சோதனைகளை கண்டு
பயந்து துவண்டு விடாமல்
அடுத்த அடியை
எடுத்து வையுங்கள்.

21.நேற்று நீ செய்த
தவறிற்கான தீர்வை
இன்று நீ கண்டு கொண்டால்
உன் நாளைய தினம்
உயர்வாக இருக்கும்.

22.வெற்றி எனும் இலக்கை அடைவதற்கு யாரும்
நமக்கான பாதையை உருவாக்க மாட்டார்கள்
நாம் தான் அதற்கான பாதையை செதுக்க வேண்டும்.

23. வெற்றிக்கான நிரந்தர வழி
தோல்வி அடைந்த பிறகும்...
இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது...!!

24. நகர்ந்தால் தான் நதி அழகு.
வளர்ந்தால் தான் செடி அழகு.
முயன்றால் தான் மனிதன் அழகு.
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல.
முயற்சி செய்பவனே மனிதன்...!

25.வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்,
கடமையை செய்தால் வெற்றி.
கடமைக்கு செய்தால் தோல்வி.
கடமையை கடுமை ஆக்கி வெற்றியை நமதாக்குவோம்.

மேலும்

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click