Skærmbillede 1443காவல் நிலையத்திலிருந்து காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்கப் போராடும் பழங்குடிப் பெண்ணின் போராட்டமே ‘ஜெய் பீம்’.சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள சினிமா 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்கள் காவல்துறையால் அனுபவித்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்தப் படம் தற்போது பொதுசமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த சினிமா பொதுசமூகத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது

 

. இந்த சினிமா குறித்து பார்ப்பதற்கு முன் அந்த உண்மைச் சம்பவம் குறித்து கொஞ்சம் தெரிந்துகொள்வோம். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் முதனை. அப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. 1993-ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாக்கண்ணு காவல்துறையால் லாக்அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். பழங்குடி வேட்டை சமூகத்தைச் சேர்ந்த அவரது கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட ராஜாக்கண்ணு குறிப்பிட்ட அந்த திருட்டு நிகழ்வில் தொடர்பில்லாதவர் என்பதும் பிறகு விசாரணையில் தெரியவந்தது.

 இருளர் - பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கில் ஆஜராகி நீதி பெற்றுத் தந்தவர் வழக்கறிஞர் கே.சந்துரு. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா மோகன் மூலமாக வழக்கறிஞர் சந்துருவை பார்வதி அணுகவே வழக்கு உயர்நீதிமன்றத்தை அடைந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.சந்துரு, வழக்கறிஞராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் எடுத்து நடத்திய இந்த வழக்குதான் 'ஜெய் பீம்'. ராஜாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதி தற்போது முதனை கிராமத்தில் வசித்து வருகிறார்.

சூர்யா, பிரகாஷ்ராஜ், கே.மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் இந்தக் கதையை தாங்கி நடித்திருக்கின்றனர். செஞ்சி பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் ராஜாக்கண்ணு தன் மனைவி செங்கேணியுடன் வசித்து வருகிறார். வேட்டை சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலியான ராஜாக்கண்ணு உள்ளூர் முக்கியஸ்தர் வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்கக் போகிறார். அதன் தொடர் நிகழ்வாக அந்த வீட்டில் இருந்த நகைகள் திருடு போகவே சந்தேகமானது ராஜாக்கண்ணு மீது திரும்புகிறது. காவல்துறை அவரை கைது செய்து குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி அடித்து கொடுமை செய்கின்றனர்; அதில் அவர் இறந்து போகிறார். ஆனால், காவல்துறை அவர் லாக்கப்பில் இருந்து தப்பிவிட்டதாக ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தகவல் சொல்கிறது. நீளும் சிக்கலில் செங்கேணி வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். பிறகு வழங்கப்பட்ட நீதியை நோக்கி நகர்கிறது வலிமிகுந்த திரைக்கதை.

 

படத்தின் துவக்கக் காட்சியே வெகுஜனங்களுக்கு அறிமுகமில்லத பக்கத்தைப் புரட்டுகிறது. காவல்துறையின் அயோக்கியத்தனத்தை முதல்காட்சியிலேயே இயக்குநர் தோலுரித்துக் காட்டுகிறார். படத்தின் கதைக்கரு ஆழமானது. திரைக்கதையிலும் வசனத்திலும் சற்றும் சுனக்கம் காட்டாமல் இந்தக் கதை மக்களுக்கு உறுதியாக நல்லமுறையில் போய் சேர வேண்டும் என உழைத்திருக்கிறது படக்குழு. காவல்நிலையத்தில் காவலர்கள், ராஜாக்கண்ணு உள்ளிட்ட மூவரை அடித்து துன்புறுத்துகிறார்கள். வலி தாளாமல் ராஜாக்கண்ணுவுடன் இருப்பவர் சொல்கிறார் "அண்ணே வலி தாங்க முடியலணே, பேசாம திருடுனோம்னு ஒத்துக்கிருவோம்ணே...!", அதற்கு ராஜாக்கண்ணுவின் பதில்: "தம்பி இந்த வலி காயம் ஒரு நாள் ஆறிப் போயிரும், ஆனா திருட்டுப்பட்டம் சாகுறவர கூட வரும். கொஞ்சம் பொறுத்துக்கடா..." - இந்தக் காட்சியில் எழுந்துநின்று கைதட்டத் தோன்றுகிறது.

ஒரு நடிகராக மணிகண்டன் மிகச் சிறப்பாக பாத்திரத்தின் அடர்த்தியை உணர்ந்து நடித்திருக்கிறார். லிஜோ மோல் ஜோஸ் சின்னச் சின்ன முகபாவங்களின் இயலாமையினையும், மன உறுதியினையும் அற்புதமாக காட்டி அசத்தியிருக்கிறார். உண்மையில் 1993-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை மணிகண்டனும், லிஜோ மோல் ஜோஜூம் மீண்டும் நம்முன் உயிர்ப்புடன் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர். இயக்குநர் இந்தக் கதைக்கு வெளியேயும் சில முக்கிய விஷயங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார் அல்லது நினைவுபடுத்துகிறார். பழங்குடியின மக்கள் தங்களுக்கான சாதிச் சான்றிதழைப் பெறக் கூட எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.

 

அதிகாரியொருவர் வேட்டை சமூக மக்களைப் பார்த்து "உங்களுக்கு சாதிச் சான்றிதழ் வேணுமாடா...? பாம்பு பிடிச்சுக் காட்டுவியா..?" என்கிறார். அதற்கு ராஜாகண்ணுவின் பதில் "பாம்பு பிடிக்க வேணாம்னுதான்யா சர்டிபிகேட் கேக்குறோம்.!" என்கிறார். இப்படியாக படம் முழுக்க அழுத்தமான கூர்மையான வசனங்களால் தலை நிமிர்கிறது 'ஜெய் பீம்'. சாதிச் சான்றிதழில்தான் சாதி இருக்கிறது என நம்பும் வெகுஜனங்கள் சாதிச் சான்றிதழை பெறக்கூட போராட வேண்டிய இடத்தில் இருக்கும் பழங்குடிகள் குறித்து புரிந்துகொள்வது அவசியம்.

வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருக்கும் சூர்யா ரொம்பவே செட்டில்டாக அலட்டிக் கொள்ளாமல் அதேநேரம் பாத்திரத்தின் முக்கியத்துவம் புரிந்து நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் உட்பட படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் பொறுத்தமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் இன்னொரு முக்கிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பழங்குடி சமூகத்தின் பிரச்னைகளை பதிவு செய்யும் இந்த சினிமா எந்த இடத்திலும் இரக்கத்தைக் கோரவில்லை. மாறாக அது நீதியை, தன் உரிமையை துணிவுடன் கோருகிறது.

'ஜெய் பீம்' என்கிற இந்த முக்கிய சினிமா காவல்துறையின் நாற்றம் பிடித்த பக்கத்தை நமக்கு வாசிக்கச் சொல்லி தருகிறது. கருத்து சொல்லும் சினிமா என்றளவில் சுருக்கிவிட முடியாதபடி திரையாக்கத்திலும் நேர்த்தி மிளிர்கிறது. கமர்ஷியல் சஸ்பென்ஸ் படங்களுக்கு சற்றும் குறையாத விறுவிறு திரைக்கதை. க்ளைமேக்ஸ்வரை அவிழாத முடிச்சுகள் என படம் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு சிறப்பு. ஷான் ரோல்டனின் இசை கூடுதல் பலம். இதுபோன்ற சினிமாக்கள் வெளிவரும் போதெல்லாம் "இப்ப யார் சார் சாதி பாக்குறா...? இதெல்லாம் பாருங்க 20 வருசம் 30 வருசம் முன்ன நடந்தது இன்னைக்கு எல்லாம் மாறிடுச்சு சார்., தவிர போலீஸ்காரங்க மக்கள பாத்து பயப்படுற காலமா இருக்கு சார்..." என பேசுகிறவர்களுக்காக சமீபத்தில் சாத்தான்குளத்தில் நடத்த பென்னிக்ஸ், ஜெயராஜ் கொலை சம்பவத்தை நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

சாதிச் சான்றிதழை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும், சாதியை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்குமான வித்தியாசத்தை சுட்டிக் காட்ட 'ஜெய் பீம்' போன்ற சினிமாக்கள் அதிகம் வரவேண்டும். பிடிவாதக்கார பொதுசமூகத்தின் நியாயமற்ற மனதில் சமத்துவத்தின் வாசமிகு பூ பூக்கட்டும்.

'ஜெய் பீம்'.... நவம்பர் 2 முதல் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

 

 

தொடர்ந்து படிக்க

https://www.puthiyathalaimurai.com/

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click