ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம், ஊடகங்களில் பேசுபொருளாகிறது.
பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள். அங்கிருக்கும் சுருதியும் (ப்ரியா பவானிசங்கர்) கார்த்திக்கும் எதிர்பாராதவிதமாக ஒரு அறைக்குள் மாட்டிக்கொள்ள, தங்கள் எதிர்காலக் கனவுகளையும் கடந்த காலத்தையும் இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச் செய்கிறது. இந்த உலகம் இப்படியான பல்வேறு பண்பாடுகளாலும், உறவுமுறைகளாலும், சமூக அழுத்தங்களாலும் பின்னிப் பிணைந்திருக்கிறது. இதுனூடே தான் வாழ்க்கை குறித்த புரிதல் மனித மனங்களில் அல்லாடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றிருக்கிற Nomadland திரைப்படத்தின் பேசுபொருளும் இதுதான்.
சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப் பற்றி இணையதளம் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்.
தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத் திரைப்படங்களில் முக்கியமானது.
காவல் நிலையத்திலிருந்து காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்கப் போராடும் பழங்குடிப் பெண்ணின் போராட்டமே ‘ஜெய் பீம்’.சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள சினிமா 'ஜெய் பீம்'. பழங்குடியின மக்கள் காவல்துறையால் அனுபவித்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்தப் படம் தற்போது பொதுசமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த சினிமா பொதுசமூகத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது
கிராமத்து நிலங்களை வளைத்துப் போட்டு பயோ டீசல் தொழிற்சாலையை நிறுவ நினைக்கும் தொழிலதிபரும், விவசாயத்தாலேயே மாற்றம் ஏற்படும் என்று நிரூபிக்கப் போராடும் இளைஞனும் மோதினால் அதுவே ‘லாபம்’.
தன் சொந்த ஊரான பெருவயல் கிராமத்துக்கு சுமார் ஆறேழு வருடங்களுக்குப் பிறகு வருகிறார் பக்கிரி என்கிற பக்கிரிசாமி (விஜய் சேதுபதி). விவசாயம் பொய்த்துப் போனதாக மக்கள் ஊரை விட்டே கிளம்பிக் கொண்டிருக்க பக்கிரியைக் கண்டதும் தங்கள் துயரம் தீர்க்க வந்த பெருமகன் என்று கொண்டாடுகிறார்கள். சில பல தடைகளுக்குப் பிறகு விவசாயத்தால் ஊரையும், ஊர் மக்களையும் செழிப்பாக்க முடியும் என்று விளக்கம் அளிக்கிறார் பக்கிரி. அதைச் செயல்படுத்துவதற்காக விவசாய சங்கத் தலைவராகவும் ஆகிறார். நண்பர்கள் படை சூழ கூட்டுப் பண்ணை விவசாய முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். இடையில் சர்க்கரை ஆலை, பருத்தி ஆலைக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று விளைபொருள் என்னவாக மாறுகிறது, அதிலிருந்து என்னென்ன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்று நேரடியாக விளக்குகிறார்.