Kaviraj
BSc Hons in Nursing
டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும்.
நோய்க்காரணி
ஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும் இவ்வகை நோய் அவற்றின் கால்களில் காணக்கூடிய வெள்ளை வரிகளை கொண்டு சிறப்பாக அடையாளம் காணமுடியும்.இவ்வகை நுளம்புகள் பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. சுத்தமான நீரிலேயே டெங்கு நுளம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கும்.
நோய் பரவும் முறை
தொற்றுக்குள்ளான ஒருவரை கடித்த நுளம்புகள் நோயற்ற ஒருவரை கடிக்கும்போது நோய் பரவும்.
அறிகுறிகள்
காய்ச்சல்
சோர்வு
தலைவலி
உடல்வலி
வாந்தி
வயிற்று வலி
கண்ணுக்கு பின்புறம் வலி ஏற்படுதல்
என்பு வலி
டெங்கு காய்ச்சலை கண்டறிய மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறை
குருதி பரிசோதனையில், குருதிச் சிறுதட்டுக்கள் எண்ணிக்கையில் ஏற்படும் குறைவின் அடிப்படையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படும். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோய் உறுதி செய்யப்படும்.
சிகிச்சை
இந்நோய்க்கு தனிப்பட்ட சிகிச்சை இல்லை. காய்ச்சலை குறைக்கும் பரசிற்றமோல் மருந்து வழங்கப்படும் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அல்லது குருதிச் சிறுதட்டு எண்ணிக்கை குறைந்தவர்களுக்கு குருதி சிறுதட்டுக்கள் கொண்ட இரத்தம் ம் செலுத்தப்படும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை 100ml நீராகாரம் (பழச்சாறு, இளநீர், கஞ்சி) அருந்தவேண்டும். நோயாளிகள் நுளம்புக வலைக்குள் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
தடுப்பு முறைகள்
டெங்கு நோய்க்கு தடுப்பூசி இல்லாமையால் நோயை பரப்பும் நுளம்பிலிருந்து பாதுகாப்பது சிறந்த தடுப்பு முறையாகும்.
ஏனைய முறைகள்
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளல்
நீர் தேங்கும் சாத்தியமுள்ள இடத்தை சுத்தம் செய்தல்
பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தல்
நுளம்புவலைகளைப் பயன்படுத்தல்
உடலை மூடிய ஆடைகளை அணிதல்
நுளம்பு சுருள் பயன்படுத்தல்