Skærmbillede 973மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, மருந்துகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு போன்ற போதாமைகளோடுதான் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் பெரும்பாலான தொற்றாளர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்கின்றனர். அவர்களைப் பராமரிப்பதிலும் பலதரப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன.

மூன்று வகைத் தொற்றாளர்கள்

கொரோனா தொற்றாளர்களை ஆரம்ப நிலை, மத்திய நிலை, தீவிர நிலை என மூன்று வகைப்படுத்தலாம். லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலை வலி, உடல் அசதி, வாசனை இழப்பு, சுவை இழப்பு, வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் ஆக்ஸிஜன் அளவு 94%-க்கும் அதிகம் என்றால் அவர்கள் ஆரம்ப நிலைத் தொற்றாளர்கள். இவர்கள் ஆரம்பக்கட்ட மாத்திரைகளை மருத்துவரிடம் பெற்றுக்கொண்டு, வீட்டிலேயே 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். பொதுவாக, இவர்களுக்கு அடுத்த 5 நாட்களில் அறிகுறிகள் குறைந்துவிடும்; வாசனையும் சுவையும் படிப்படியாக மீண்டுவிடும்.

மாறாக, 5 நாட்கள் கடந்த பிறகும் காய்ச்சல் நீடிப்பது, இடைவிடாத இருமல் எனச் சில அறிகுறிகள் தீவிரமடையலாம். முதலில் குறைந்த அறிகுறிகள் மீண்டும் தோன்றலாம். அப்போது அவர் நிமிடத்துக்கு 24 முறைக்கும் மேல் மூச்சுவிடுவார். ஆக்ஸிஜன் அளவு 94% - 90%க்கும் இடையில் இருக்கும். இவர்கள் மத்திய நிலைத் தொற்றில் இருப்பவர்கள். இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது கட்டாயம். இவர்களுக்கு மாத்திரை, ஊசி மருந்துகளுடன் மூக்கின் வழி ஆக்ஸிஜனும் செலுத்தப்படும் நிலை சில நாட்களுக்கேனும் இருக்கலாம்.

தொற்றாளருக்கு மூச்சுத்திணறல் தீவிரமாகிறது, நிமிடத்துக்கு 30 முறைக்கும் மேல் மூச்சுவிடுகிறார், ஆக்ஸிஜன் அளவு 90%-க்கும் கீழே செல்கிறது, சுயநினைவு குறைகிறது என்றால் அவர் தீவிர நிலைக்குச் சென்றுவிட்டார் என்று பொருள். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் அனுமதிக்கப்பட வேண்டும். அவருக்கு அதிவேக ஆக்ஸிஜனும் வென்டிலேட்டர் சிகிச்சையும் கூடுதல் நாட்களுக்குத் தேவைப்படும்.

வீட்டில் பராமரிக்கும் வழிமுறைகள்

கொகரோனா தொற்றாளர்களில் 80% பேர் வரை ஆரம்ப நிலையில் உள்ளவர்களே. இவர்களை வீட்டில் 2 வாரங்களுக்குத் தனி அறையில் வைத்துக்கொள்ளலாம். அறை ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டத்துக்கு வழிசெய்யுங்கள். குளிரூட்டம் வேண்டாம். அறையையும் கழிப்பறையையும் அவர் பயன்படுத்தும் உணவுத்தட்டு, கதவுக் கைப்பிடி உள்ளிட்ட எல்லாப் பொருள்களையும் தினமும் 1% சோடியம் ஹைப்போகுளோரேட் கிருமிநாசினியால் சுத்தப்படுத்துங்கள்.

தொற்றாளர் தனிமையில் இருந்தாலும், பகல் முழுவதும் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டுக் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் அவரிடமிருந்து 6 - 10 அடி தூரம் தள்ளியிருக்க வேண்டும். அவரைப் பராமரிப்பவரும் வீட்டில் உள்ள மற்றவர்களும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். தினமும் குறைந்தது 2 முறை அதை மாற்றிக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்லக் கூடாது. வீட்டுக்கு அடுத்தவர்கள் வரவும் அனுமதிக்க வேண்டாம்.

வெப்பமானி, பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ரத்த அழுத்தமானி ஆகியவை வீட்டில் இருக்க வேண்டும். இவர்கள் இணையம் அல்லது தொலைபேசி வழியாக மருத்துவர் ஒருவரின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். உடல் வெப்பத்தையும் பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் ஆக்ஸிஜன் அளவையும் சீரான இடைவெளியில் தினமும் தலா 4 முறையும் ரத்த அழுத்தத்தை 3 முறையும் அளந்துகொள்ள வேண்டும். அவற்றில் மாறுதல் தெரிந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். துணை நோய்கள் இருந்தால் அவற்றுக்கான மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குப்புறப் படுப்பது நல்லது

தொற்றாளரின் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கத் தொடர்ந்து 2 - 4 மணி நேரம் குப்புறப் படுக்க வேண்டும். தினமும் 4 - 8 முறை இப்படிப் படுத்துக்கொண்டால் நல்லது.

இரவில் தொடர்ந்துகூடக் குப்புறப் படுத்துக்கொள்ளலாம். ஆனால், கர்ப்பிணிகள், தீவிர இதயப் பிரச்சினை இருப்பவர்கள், முதுகெலும்பில் பிரச்சினை உள்ளவர்கள் இதற்கு விதிவிலக்கு. சாப்பிட்ட பின் அரை மணி நேரத்துக்குக் குப்புறப் படுக்கக் கூடாது. தொற்றாளர்கள் எந்நேரமும் படுத்தே இருக்காமல் அறைக்குள்ளே அவ்வப்போது நடக்கலாம். இதனால் ரத்த உறைவு ஏற்படாது. பிராணயாமம், பலூன் ஊதுவது, ஸ்பைரோமீட்டரில் காற்றை ஊதுவது உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகளையும் செய்யலாம்.
தொற்றாளரைப் பராமரிப்பவரும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவிக்கொள்ள வேண்டும். தொற்றாளருக்கான உணவுகள் அவரது அறையின் கதவுக்கு அருகில் வைக்கப்பட்டு, தொற்றாளர் எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும். பயன்படுத்திய முகக்கவசங்களைக் கிருமிநாசினி கலக்கப்பட்ட தண்ணீரில் நனைத்த பின் மூடி உள்ள குப்பைத் தொட்டியில் போடவேண்டும். அவரது துணிகளைக் கிருமிநாசினி கலக்கப்பட்ட தண்ணீரில் அல்லது வெந்நீரில் நனைத்த பின்பு சலவை செய்யலாம். தொற்றாளர் குணமானதும் அவரது அறையைச் சுத்தப்படுத்தி 5 நாட்கள் கழித்து மற்றவர்கள் பயன்படுத்தலாம். 90 நாட்கள் கழித்து அவர் கொகரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

ஊட்டச்சத்து உணவுகள் முக்கியம்

தொற்றாளர்களுக்குக் குறைந்தது ஒரு மாதத்துக்குப் புரதச்சத்து, நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தர வேண்டும். காலை இட்லி, தோசை, ஊத்தாப்பம், பொங்கல், கிச்சடி, கேசரி, சப்பாத்தி, பருப்பு, சாம்பார், சட்னி சாப்பிடக் கொடுக்கலாம். மதியம் சோறு, சப்பாத்தி, பாசிப்பருப்பு சாம்பார், கீரை, மிளகு ரசம், மோர், தயிர். தினமும் இரண்டு வகைக் காய்கள், ஒரு பழம், மாலையில் பயறு, சுண்டல், கொண்டைக்கடலை, சூப் கொடுப்பது நல்லது. மீன், இறைச்சிகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். இடைவேளையில் மஞ்சள் பால், மிளகுப் பால், சுக்கு, இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது ஆரோக்கியம் தரும். காலை உணவுபோல் இரவு டிபன் இருக்கலாம். தினமும் 2 முட்டை அவசியம்; அரை லிட்டர் பால், 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மதுவும் புகையும் ஆகாது.
தொற்றாளர் மூன்று முறையேனும் நீராவி பிடிப்பதும் தொண்டையை உப்புநீரில் கொப்பளிப்பதும் நல்லது. இதைத் தொற்றாளர் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் மேற்கொள்ளலாம். இவை எல்லாமே கொ கொகரோனா தொற்றாளர்களுக்கு ஆற்றலைக் கொடுப்பதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்தும். கரோனா மறுபடியும் தொற்றாத அளவுக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்.

https://www.hindutamil.in

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click