Skærmbillede 917விவேக் கரோனாவுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாளில் தீவிர மாரடைப்புக்குள்ளாகி இறந்தது தற்செயல்தானே அன்றி, தடுப்பூசியின் நேரடி விளைவு அது என்று சொல்லிவிட முடியாது.

ஒரு நகைச்சுவை நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிகழ்வு, ஒரு புதிய தொடக்கம். நெடிய தமிழ் சினிமா மரபை எடுத்துக்கொண்டால், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா இருவரின் கலவையும் தொடர்ச்சியும் என்று விவேக்கைச் சொல்லலாம். பழைமைவாதத்தையும் மூடத்தனத்தையும் சிரிக்கச் சிரிக்க விமர்சித்து சிந்திக்க வைக்கும் நகைச்சுவைப் பாணி அவருடையது. சமூக மாற்றத்துக்கான பகுத்தறிவுக் கருத்துகளைத் திரைப்படங்கள் மூலமாகச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அன்றாட வாழ்விலும் சாத்தியப்பட்ட வழிகளில் எல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார்.

கொரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசியே இன்று மனிதகுலம் கொண்டிருக்கும் முக்கியமான ஆயுதம் என்பதை மிகத் துல்லியமாக உணர்ந்திருந்த விவேக், தடுப்பூசியைத் தான் செலுத்திக்கொண்டதும், அதற்கு அரசு மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்ததும், ஊடகங்கள் வழியாகப் பொதுமக்கள் மத்தியில் அதைப் பிரச்சாரமாக முன்னெடுத்ததும் அவருடைய சமூகப் பணியின் தொடர்ச்சி. அவருடைய எண்ணங்களுக்கு நேர் எதிராக கரோனா தடுப்பூசிக்கு எதிர்ப் பிரச்சாரத்துக்கு ஒரு கூட்டம் இன்று அவருடைய மரணத்தையே ஒரு ஆயுதமாக்க முற்படுவது இந்தச் சமூகத்தில் புரையோடியிருக்கும் சில மூடத்தனங்களுக்கு எதிராகக் காலம் முழுவதும் நாம் போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டுமோ எனும் சலிப்பையே உண்டாக்குகிறது.

 விவேக் கரோனாவுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுநாளில் தீவிர மாரடைப்புக்குள்ளாகி இறந்தது தற்செயல்தானே அன்றி, தடுப்பூசியின் நேரடி விளைவு அது என்று சொல்லிவிட முடியாது.

பொதுவாக, கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. பயனாளிக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்திருந்தால் அது தற்செயல் நிகழ்வாக ஏற்படலாமே தவிர, தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்த ஒரு ஆய்வுக் கட்டத்திலும் தகவல் இல்லை. இந்தியாவில் இதுவரை 10 கோடிப் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அவர்களில் தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தரவுகள் எதுவும் இல்லை. உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக மட்டும் சில தரவுகள் வந்துள்ளன.

ரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பு

மாரடைப்பு என்பது இதயத் தசைகளுக்கு ரத்தம் விநியோகிக்கும் மூன்று கொரோனரி ரத்தக்குழாய்களில் ஏதாவது ஒன்றிலோ பலவற்றிலோ அடைப்பு ஏற்படுவதால் வருகிறது. இந்த அடைப்பு இரண்டு வழிகளில் ஏற்படலாம். ஒன்று, நாம் சாப்பிடும் உணவில் அதிகக் கொழுப்பு இருந்தால், அது கொழுப்புப் புரதமாக மாறி சிறிது சிறிதாக ரத்தக்குழாய்களில் படிந்து அடைத்துக்கொள்வது. இது நேரடியாக கொரோனரி குழாய்களில் படிந்து அடைத்துக்கொள்வதும் உண்டு. சமயங்களில், உடலில் வேறெங்காவது ரத்தக்குழாயில் இருக்கும் கொழுப்புப் புரதக் கட்டியானது ரத்தக்குழாயை உள்புறமாக முக்கால்வாசி அடைத்த பிறகு உடைந்துவிடும். அப்போது ரத்தக்குழாய் செல்களிலிருந்து சிறிது ரத்தமும் கசிந்து அந்த உடைப்புக் கட்டியின்மீது முலாம்போல் பூசி, ரத்த உறைவுக்கட்டியாக அதை மாற்றிவிடும். இது உடல் முழுவதும் பயணிக்கும். அந்தப் பயணத்தின்போது இதயத்துக்கு வந்து கொரோனரி குழாயை அடைப்பதும் உண்டு. இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரு நாளில் ஏற்பட வாய்ப்பில்லை. ஏற்கெனவே பல மாதங்களாக, வருடங்களாக இருந்து திடீரென்று அதன் இருப்பைக் காட்டும். அதுதான் நெஞ்சுவலி.

ஒருவருடைய கொரோனரி ரத்தக்குழாயில் கொழுப்புப் புரதக் கட்டி இருக்கிறதா, இல்லையா என்பதை சாதாரணப் பரிசோதனைகளில் தெரிந்துகொள்ள முடியாது. முக்கியமாக, கரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பு பரிசோதிக்கப்படும் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ரத்த ஆக்ஸிஜன் அளவு ஆகிய பரிசோதனைகளில் இதை அறிய முடியாது. கொரோனரி ஆஞ்சியோகிராம், சி.டி. ஆஞ்சியோகிராம் ஆகிய பரிசோதனைகளில்தான் இது தெரியவரும். வழக்கமாக, 50 வயதைக் கடந்தவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மிகை ரத்தக் கொழுப்பு போன்றவை கட்டுப்பாடில்லாமல் இருந்தால் மாரடைப்பு வரும். இது நாட்பட்ட நிகழ்வு. இதயம் தொடர்பான பிரச்சினை உடையவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாகத் தங்கள் இதய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது என்று சொல்வதற்குக் காரணம், நடிகர் விவேக்குக்கு நிகழ்ந்ததுபோல் தற்செயல் நிகழ்வுக்காகத் தடுப்பூசியைக் குறை சொல்லக் கூடாது என்பதற்குத்தான்.

ரத்த உறைவு ஏற்படுவது ஏன்?

தடுப்பூசியால் ஏற்படுகிற ‘ரத்த உறைவு’ பிரச்சினைக்கு இப்போது வருவோம். அடினோ வைரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மிக அரிதாக ‘ரத்த உறைவு’ ஏற்பட்டு இறப்புகள் நிகழ்ந்ததாக வெளிநாடுகளில் தகவல்கள் வந்துள்ளன. இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ரத்தத்தில் தட்டணுக்கள் குறைந்துவிடுவதாலும் தட்டணுக்கள் தேனடைபோல் ஒன்று சேர்ந்துகொள்வதாலும் ரத்த உறைவு ஏற்படுகிறது என அறிந்திருக்கிறார்கள். இந்த ரத்த உறைவு உடனே ஏற்படுவதில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட 20 நாட்கள் கழித்தே உருவாகிறது.

ஐரோப்பாவில் இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கும், பிரிட்டனில் 25 ஆயிரம் பேரில் ஒருவருக்கும் அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் ஒருவருக்கும் மரணம் நேர்ந்திருக்கிறது. ஆக, இந்த விபரீதம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியால் ரத்த உறைவு வந்து இறந்திருப்பவர்கள் 79 பேர். இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் வெறும் 0.0002%. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு கோவிட் 19 நோய் வந்து, தீவிரமானால் ரத்த உறைவு வந்து இறப்பதற்கு 40% வாய்ப்பு இருக்கிறது.

இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த ரத்த உறைவானது ‘மாடர்னா எம்.ஆர்.என்.ஏ.’, ‘பைசர் எம்.ஆர்.என்.ஏ.’, ‘கோவேக்சின்’ போன்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. நடிகர் விவேக் செலுத்திக்கொண்டது ‘கோவேக்சின்’ தடுப்பூசி. ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு மாரடைப்பு வந்தது என்று கூறுவதற்கு ஆதாரமே இல்லை. மேலும், தடுப்பூசியால் உடலில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய ‘டி-டைமர்’ பரிசோதனை உள்ளது. இந்தப் பரிசோதனையிலும் அவருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதற்கு ஆதாரமாகத் தகவல் இல்லை. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கொரோனரி ஆஞ்சியோகிராம் உறுதிசெய்துள்ளது என்றுதான் மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. எனவே, கரோனா தடுப்பூசி குறித்து ஊடகங்களில் உலவும் அறிவியலற்ற அறைகூவல்களுக்குப் பொதுச் சமூகம் அடிமையாகிவிடாமல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.

இந்த இடத்தில் அரசுக்குச் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. தடுப்பூசி போட்ட பின்னர் உடனடியாக நடக்கும் மரணங்களில், இறந்தவர்களின் உடல்களை மருத்துவத் துறையினர் உடற்கூறு ஆய்வுசெய்து உண்மையான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கும் முடிவை அரசு எடுக்க வேண்டும். அது தேவையற்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்!

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

https://www.hindutamil.in/

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click