- Details
- Hits: 921
1.மனிதனுக்குள் ஏற்கெனவே பரிபூரணத் தன்மை (நிறைநிலை, ணீஞுணூஞூஞுஞிtடிணிண) என்பது இருக்கிறது. அதை வெளிப்படுத்துவது தான் கல்வியாகும். எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம்கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்தெழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும். நியூட்டன் புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார் என்று செல்கிறோம்.
- Details
- Hits: 787
கலாநிதி க.சுவர்ணராஜா
ஓய்வுநிலை பீடாதிபதி
ஓர் ஆட்டிற்கு ஒருநாள் நல்ல பசி. நல்ல தண்ணீர் தாகம். ஆனால் அருகில் உணவுமில்லை. தண்ணீரும் இல்லை.கடுமையான வெயில் வேறு. இப்படியே இந்த இடத்தில் இருந்தால் பசியால் இறந்துவிடுவோம் என்ற எண்ணிக் கொண்டு உணவும் தண்ணீரும் தேடி புறப்பட்டது.வழியில் இன்னுமொரு ஆடு பசியால் வாடி சோர்ந்து கிடப்பதைக் கண்டது. ஓ இந்த ஆடும் என்னைப் போல துன்படுகின்றது. ஏன்று மனதிற்குள் நினைத்தது.
- Details
- Hits: 24050
கலாநிதி க. சுவர்ணராஜா
ஓய்வு நிலைப் பீடாதிபதி
ஒரு பிள்ளை புதுமையான முறையிலே செயலாற்றுவதனை நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் , அதாவது அப்பிள்ளையின் சிந்தனையோ, செயலோ வழமையாக நாம் எதிர்பார்க்கின்ற நிலைப்பாட்டிலிருந்து வேறுப்பட்டுக் காணப்படும்போது அப்பிள்ளை படைப்பாற்றல் உள்ளவனெனக் குறிப்பிடுகின்றோம்.
- Details
- Hits: 3135
கலாநிதி க. சுவர்ணராஜா
ஓய்வு நிலைப் பீடாதிபதி
வகுப்பறையில் ஒழுக்கம் ஏன் முக்கியமானது என நோக்கும் போது அதற்கு பல காரணங்களைக் கூறலாம். ஒழுக்கமுள்ள வகுப்பறை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு பாதுகாப்பான கல்விச் சூழலை ஏற்படுத்துகின்றது. ஆசிரியர்கள் தேவையற்ற குழப்பங்கள் இடையூறுகள் இன்றி பாடத்தை செவ்வனே நிகழ்த்த முடியும். மாணவர்களின் கவனச் சிதறல்களின் அளவு குறைக்கப்படுவதால் கற்றலின் அளவுஅதிகரிக்கும்
- Details
- Hits: 1116
ஆதி
கல்வியின் எல்லை மதிப்பெண்தான் என்றாகிவிட்ட இன்றைய சூழலில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் நம் கல்விமுறை பற்றிய கவலையை அதிகரித்தன. பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு, கணிதத் தேர்வு நடந்த அன்று, ஒரு மாணவன் வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாகச் செய்தி வெளியானது. பிணையத் தொகையாக ரூ.2 லட்சம் கேட்டதாகத் தகவல். இறுதியில், அது அந்த மாணவனே நடத்திய நாடகம் என்று தெரியவந்தது. கணிதத் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில், மற்றொரு மாணவன் தற்கொலை செய்துகொண்டான்.
- Details
- Hits: 1932
கலாநிதி க. சுவர்ணராஜா
ஓய்வு நிலைப் பீடாதிபதி
கற்றலில் சிறந்து விளங்குவதற்கு ஒரு மனிதர் தம்மிடையே ஏற்படுத்திக்கொண்டுள்ள பழக்கங்களும் ஒரு காரணமாக அமைகின்றது. மறுபக்கத்தில் பழக்கங்களுக்கு அடிப்படையாக அமைவது கற்றலாகும். ஆகவே கற்றலில் வெற்றி பெறுவதற்கு கற்போர் நல்ல பழக்கங்களை தம்மிடையே வலுப்பெறச் செய்தல் அவசியமானதாகும்.
- Details
- Hits: 1833
-டாகடர் சித்திரா அரவிந்த்-
கற்றல் குறைபாடு குழந்தையின் கல்வித்திறனை பாதிப்பதால், குழந்தையைப் பள்ளியில் சேர்த்த பின்பே இக்குறைபாடு இருப்பது பெரும்பாலும் தெரியவருகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதத்தில் கற்றல் குறைபாடுகளின் அறிகுறிகள் இருக்கக்கூடும் என்பதால் இதை அடையாளம் காண்பது கடினம்.
- Details
- Hits: 1630
கற்றல் என்பது ஒருவரது நடத்தையில் ஏற்படக் கூடிய நிரந்தரமான அல்லது நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய மாற்றம் என பொதுவாக வரைவிலக்கணப்படுத்தலாம். மாணவர்கள் சில உபா யங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இலகுவான முறையில் வினைத்திறனாகக் கற்பதற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறாக நோக்கத் துடனான கற்றலுக்கு ஒருவர் பயன்படுத்தக் கூடிய முறைகளும் உபாயங்களும் நுட்பங்களும் பொதுவாக சுய கற்றல் திறன்கள் என அழைக்கப்படுகின்றன.
- Details
- Hits: 3402
சுய கற்றல் என்பது ஒரு நபர் தனது சொந்த முயற்சியால் புதிய அறிவைப் பெறும் ஒரு செயல்முறையாகும் .
சுய கற்றலைப் பயிற்றுவிக்கும் நபர்கள் புதிய அறிவைப் பெறுவதற்கும் சுயாதீனமாக சோதனைகளை நடத்துவதற்கும் சிறந்த கருவிகள் மற்றும் வழிமுறைகளைத் தீர்மானிக்க அனுமதிக்கும் திறன்கள் மற்றும் அணுகுமுறைகளின் தொகுப்பை உருவாக்குவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறார்கள்.
- Details
- Hits: 1639
நாடு முழுவதும் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை ரத்து செய்ய வைத்து, இந்த கல்வியாண்டை கோவிட்-19 பரவல் சீர்குலைத்திருக்கிறது. மாணவர்கள் தங்களுடைய படிப்பைத் தவறவிடாமல் பார்த்துக் கொள்வதற்காக, அவர்களிடமிருக்கின்ற சாதனங்களின் வழியாக, தங்களால் நடத்தப்படுகின்ற வகுப்புகளில் கலந்து கொள்ளும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தி, இணையவழி வகுப்புகளை நோக்கி பள்ளிகள் உடனடியாக நகர்ந்திருக்கின்றன.
- Details
- Hits: 4281
வேலும்மயிலும் சேந்தன்
அறிமுகம்
"அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் சமத் துவமானதும் தரமானதுமான கல்விக்காகவும், கட்டாய வயதுக் கல்வியை மேம்படுத்தி அவர்களுக்கு அடிப்படைக் கல்வியை சமத்துவமாக வழங்குவதற்காகவும் போராடி வருகின்றன".