- Details
- Hits: 508
து.கௌரீஸ்வரன்
இந்தப்பூமியின் வரலாற்றில் மனிதனின் பேராசையும் அதனால் விருத்தி பெற்ற ஆதிக்கமும்
பூமியின் பன்மைத்துவத்தையும் அதன் பேரழகையும் ஆபத்தான திசை நோக்கி நகர்த்தி வரும் பின்னணியில் பூமியையும் அதன் பல்லுயிர்ப் பண்பாட்டையும் பாதுகாக்கும் நோக்குடன் சாதாரண மக்கள் தனியாகவும் குழுக்களாகவும் உலகம் எங்கும் இயங்கி வருகின்ற வரலாற்றை நாங்கள் கற்றறிந்து வருகின்றோம்.
- Details
- Hits: 621
கலாவதி கலைமகள்
அறிமுகம்.
வழக்காறுகள் என்பது சடங்குகள், கலைமரபுகள், நம்பிக்கைகள், பேச்சு வழக்குகள், வாய்மொழிப்பாடல்கள், கைவினை மரபுகள், பாரம்பரிய உற்பத்தி முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள்,பாரம்பரிய வைத்திய முறைகள், பாரம்பரிய பொருளாதார முறைகள், உள்ளுர் வாத்தியக்கருவிகள் அவை உருவாக்கப்படும் முறைமைகள் உள்ளுர் கலை
வரலாறு என அனைத்தும் உள்ளடக்கியதாகும்.
- Details
- Hits: 494
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.
"இசை என்பது, பொதுவெளியில், உணர்வுகளின் வெளிப்பாடாகக் கொள்ளப்பட்டாலும், இசை
அறிவியக்கமாக தொழிற்பட்ட, தொழிற்படுகின்ற நிலையையும் அவதானிக்க முடிகின்றது."அவரவர் மொழிப் பண்பாட்டினை கொண்டாடும் முகமாக, வருடம் தோறும் மாசி 21 ஆம் நாள், உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுகின்றது. தொடர்பாடல் செயன்முறையின்
இன்றியமையாத கூறாக மொழி குறிப்பிடப்படுகின்றது.
- Details
- Hits: 452
சி.ஜெயபிரதாப்
"மரபணு மாற்றப்படாத விதைகளைச் சேகரித்தல், நடல், பிறருக்கும் பகிர்தல் மற்றும் இக் கருத்தியல் சார்ந்த பூமிக்கு வன்முறை செய்யமாட்டோம் என்கின்ற அடிப்படையிலான ஆக்கங்கள், அளிக்கைகள் செய்தல் என பல்வேறு சமூக மாற்றம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது."
- Details
- Hits: 952
கலாநிதி சி.ஜெயசங்கர்
"மேன்மை கொள் அறவாழ்வு உலகெலாம் விளங்கும் நல்வாழ்வு செய்யும் தமிழிசையால் எழுவோம்." உலக தாய் மொழிகள் தினம் வருடா வருடம் பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வங்காள தேசத்தின் வங்காள மொழிப் போராட்டத்தின் அடையாளமாக யுனஸ்கோவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இத்தினம் தாய்மொழிகளின் இருப்பிற்கும், வளர்ச்சிக்குமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
- Details
- Hits: 462
சுந்தரலிங்கம் சஞ்சீபன்
நாடகமும் அரங்கியலும்
கிழக்குப்பல்கலைகழகம்
"ஓர் விசித்திரமான சிரிக்க வைக்கும் நிகழ்வு நடைபெறுகின்றதென்றால் “என்னண்ணே ஒரே முசுப்பாத்தியா இருக்கு போல” பொதுவாக நாம் பேசும் பேச்சுக்கள் பல சொற்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இருப்பினும் நம்மவர் நாம் சாதாரணமாக பேசும் போது சில சொற் பிரயோகங்கள் பிரயோகிப்பர். இலக்கிய ரீதியிலான எழுத்துவடிவம் கொடுக்கும்போது ஒருவகையான சொற்பிரயோகங்களை வழங்குகின்றனர். அவற்றை பேச்சு வழக்கு , எழுத்து வழக்கு என்று வகைப்படுத்திக் கொள்ளப்படுகின்றது.
- Details
- Hits: 850
– பா.அகிலன்-
"ஆவணப்படுத்தல் என்பது சேகரித்தல், பாதுகாத்தல், பகிர்தல் என்கிற மூன்று படிநிலைகளைக்கொண்டது என்று எளிமையாகக் குறிப்பிடலாம். இவை தம்மளவில் பெருமளவு நிதித் தேவையை எதிர்பார்த்திருப்பவை. ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுக்காக அரசு சார் அமைப்புகளில் இருந்து நிதியுதவிகள் கிடைக்காமல் இருக்கின்ற சூழலில் இந்த நிதித்தேவைகளை எவ்வாறு பூர்த்திசெய்யலாம்?"
யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கியநாதன் அகிலன் நல்லூரை நெடுங்காலமாக வாழிடமாகக் கொண்டிருக்கிறார். தனது ஆரம்பப் பாடசாலைக் கல்வியை வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை, நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் மிகக் குறுகிய காலம் பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் சென் ஜோன் பொஸ்கோவிலிருந்து பெற்றுக் கொண்டார்.
- Details
- Hits: 646
பேராசிரியர் சி .மௌனகுரு
ஓய்வுநிலைப் பேராசிரியர்
கிழக்குப் பல்கலைக்கழகம்
கொழும்பு அபிநய சேத்ர கலைக்கூடமும் உலக பரத நாட்டியக் கழகமும் இணைந்து ஒழுங்கு செய்த இணையக் கருத்தரங்கில் 18.1.2021 பங்கு கொண்டு மேற்படி தலைப்பில் காணொளி உபகரணங்களுடன் உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.
கருத்தரங்கின் தலைப்பு
செல்லவேண்டியதோ வெகு தூரம்
மாதவி ஆடிய ஜதிகளும் கூத்தர் ஆடும் ஜதிகளும்
இவ்வுரை நான்கு பெரும் தலைப்புகளில் அமைந்திருந்ததன அவையாவன
- Details
- Hits: 818
பேராசிரியர் சி .மௌனகுரு
யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை எல்லாம் காளி
தெய்வ லீலை அன்றோ
பூதம் ஐந்தும் ஆனாய் காளி
பொறிகள் ஐந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி
பொறியை விஞ்சி நின்றாய்
இன்பமாகி விட்டாய் காளி
- Details
- Hits: 659
சி .மௌனகுரு
ஓய்வுநிலைப் பேராசிரியர்
கிழக்குப் பல்கலைக்கழகம்
ரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலா ளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஓர் அழைப்பும் விடுத்தனர்
“நாங்கள் சிலர் இணைந்து பாலுமகேந்திரா பெயரில் ஓர் நூல் நிலையமும் பயிற்சிக் கூடமும் ஆரம்பிக்கிறோம். 27.12.2020 இல் அதன் ஆரம்ப விழா நடைபெறவுள்ளது அதில் ஓர் சிறப்பு விருந்தினராக நீங்கள் கலந்து கொள்ளவேண்டும். அதில் பாலுமகேந்திராவுடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்”
சரி என ஒப்புக்கொண்டேன்
பாலு மகேந்திரா என் ஊரவர். எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் 300 அல்லது 400 யார் தூரம்தான் இடைவெளி, அவர் என்னை விட 4 வயது மூத்தவர் அவரை நாம் மகேந்திரன் அண்ணன் எனவே அழைப்போம்.
- Details
- Hits: 1486
-கலாநிதி, சி. ஜெயசங்கர்-
"நவீனமயமாக்கம், நாகரீகப்படுத்தல் என்ற பெயரில் உலக வளங்களை கபளீகரம் செய்யும் ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகளது குரூரமானதும் தந்திரமானதுமான போர்களை எதிர்கொண்டவர்களும், பேரழிவுகளுக்கு இலக்கானவர்களும் இந்தப் பழங்குடி மக்கள்தாம். இத்தகைய புதைக்கப்பட்ட பேரழிவுகளின் மேல் நின்றே உலகின் நாகரிகம், நவீனமயமாக்கம், சனநாயகம், சட்டம், ஒழுங்கு என்பன கட்டமைக்கப்பட்டன."