- Details
- Hits: 614
திரு. க. சிதம்பரநாதன்
இன்று சுதந்திரம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் நிறையவே பேசப்படுகிறது. சுதந்திரமாக வாழும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அடிப்படையானதாகும். நீதியானதும், சனநாயகமானதுமான வாழ்க்கை நடைமுறையின் அடிப்படைகளை உருவாக்குவதிலும், பேணிப்பாதுகாப்பதிலும், முன்னெடுத்துச் செல்வதிலும் நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரசையும் செயலாக்கமான (Active) பங்கினை வகிக்கும் போதுதான் அச்சமூகத்தில் உண்மையான அர்த்தமுள்ள சுதந்திரம் நிலவ முடியும் இந்த கருமத் தொடரில் பங்குவகிக்கக்கூடிய ஆற்றல் ஒவ்வொரு பிரசைக்கும் இருக்கவேண்டியது முக்கியமானதாகும்.
- Details
- Hits: 4455
- குழந்தை ம. சண்முகலிங்கம்-
சிறுவருக்கான நாடகம் எழுதுதல் பற்றிச் சிந்திக்குமிடத்து, நாடகம் எழுதும் பணி, சிறுவரின் நாடகங்கள், சிறுவருக்கான நாடகங்கள் என்பன பற்றிச் சிந்திப்பது பொருத்தமாக அமையும்.
1. நாடகம் என்பது என்ன?
- Details
- Hits: 1307
கலாநிதி காரை, செ. சுந்தரம்பிள்ளை
முதல்நிலை, இரண்டாம் நிலை பாடசாலைக் கலைத்திட்டத்தில் நாடகம் பெறும் இடத்தினை ஆராய்வதன் முன், கலைத்திட்டம் என்றால் என்ன என அறிவது பொருத்தமுடையதாகும். ஆங்கிலமொழிச் சொல்லாகிய curriculum என்பதன் தமிழ்ச் சொல்லே கலைத்திட்டமாகும். Curriculum எனும் சொல் இலத்தீன் மொழியிலி ருந்து தோன்றியதென்றும் இதன் பொருள் “வண்டி ஓட்டும் பாதை" என்றும் சொல்வர், இப்பொழுது “கல்வியியல் வழிகாட்டும் பாதை" என்ற கருத்தில் ஆங்கில அகராதியில் இடம்பிடித்து விட்டது.
- Details
- Hits: 926
நாடகம் போடுதல் என்பதற்கும், அரங்கு , அரங்கச்செயற்பாடுகள் என்பதற்கும் வேறுபாடு இருக்குன்றது. நாடகம் நிகழ்த்துதல் , அதன் அழகியல், ரசனை , வெளிப்பாடு ஒரு வகை. ஆனால் அரங்கு என்பதும் அதன் இயங்கு நிலையும், அழகியல், ரசனை, வெளிப்பாடு முறமையிலும் இன்னொரு வகை அதாவது சடங்கை ஒரு அரங்கு என்கின்றோம் அங்கு பூசாரியும், கடவுளும், பக்தர்களும் இருப்பார்கள் பக்திதான் அதற்குஅடிப்படை. இதன் தர்க்கபூர்வமான அல்லது விஞ்ஞான பூர்வமான ஒரு வளர்ச்சியே அரங்கு. இங்கு அரங்காடியும், பங்குபற்றுபவர்களும், காண்பியங்களும் இருக்கும். நம்பிக்கைதான் இதற்கு அடிப்படை. எமது பண்பாட்டுவேர்களில் இருந்தே அவல நீக்க ஆற்றுப்படை அரங்கு புத்துயிர் பெறுகின்றது.
- Details
- Hits: 1099
செ. இளங்கோ
2004 டிசெம்பர் 26. ஆழியின் அலைக்கரங்கள் எல்லை கடந்து வந்து குடிமனைகளை வளைத்துச் சுருட்டியெடுத்துச் சென்ற நாள். எவரும் எண்ணிப் பார்த்திராத ஒரு கணப்பொழுதில், பொல்லாப் பேரலைகள் சப்பித்துப்பிய சக்கைகளாய் திக்கெட்டும் சிதறிப் போயினர் சனங்கள், உயிரோடும் உயிரற்றும். நினைக்க உயிர்க்குலை நடுங்கும், மெய் பதறும், வாயடைத்துப் போகும்.
- Details
- Hits: 1398
கலாநிதி - சுரேஷ் கனகராஜா
இத் தலைப்பு பலருக்கு முரண்பட்ட ஒன்றாகத் தோன்றலாம். "நாடகமும் இலக்கியமும்" முரண்பட்ட பதங்களாக கருதப்படுவதாலேயே இக்கருத்து ஏற்படுகின்றது. அடிப்படையில் நாடகம் கட்புலன் சார்ந்தது மேடையிலே நிகழ்த்தப்படும் செயல்களே அதன் மையம். இலக்கியமோ அடிப்படையில் மொழி சார்ந்த கலை தாளிலே தரப்படும் சொற்களை மையமாகக் கொண்டது.
- Details
- Hits: 2497
பேராசிரியர். கா. சிவத்தம்பி
கலை என்பது "சமூக - அழகியல் நிகழ்வு" (Socio- aesthetic phenomenon) ஆகும். அது சமூகத்தின் ''பண்பாட்"டினுள் நிலைகொண்டு நிற்பது. பண்பாடு என்பது அச் சமூகத்தின் வாழ்க்கை முறைமையாகும். அதற்குள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் யாவும் மதம், உணவு. சூழல், மனித உறவுமுறைமை, பொருளாதார நடவடிக்கைகள், சமூக ஒழுங்கமைப்பு. வாழ்க்கை நோக்கு முதலியன) இடம்பெறும்.
- Details
- Hits: 2654
எஸ்.ரி.அருள்குமரன்
ஆசிரியர்
யா/மானிப்பாய்இந்துக்கல்லூரி
மனிதன் நாகரிகமடைய ஆரம்பிப்பதற்கு முன்னரே கலைச்செயற்பாடுகளில் ஈடுபட்டான் என்பதினை வரலாற்று தடங்களில் இருந்தும் ஆய்வாளர்களது ஆய்வுகளில் இருந்தும் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது.
மனிதர்கள் தம்மிடையே உணர்வியல் ரீதியிலான கருத்துக்களினை பகிர்ந்து கொள்வதற்கும் தமது செய்திகளை வெளிப்படுத்திக்கொள்வதற்குமாக பயன்படுத்திக்கொண்ட ஊடகங்கள் கலைகள்.
ஆதிகால மனிதன் தனது உணர்வுகளினை ஆரம்பத்தில் ஓவியங்களின் வாயிலாக வெளிப்படுத்தினான்.
- Details
- Hits: 1319
"உடல் இறுக மனம்,மனம்இறுகும் மனம் இறுக உடல் இறுகும் இரண்டும் ஒன்றில்ஒன்று தங்கி உள்ளன.ஆடல்,பாடல்,விளையாட்டின் மூலம் உள நெகிழ்சிப்படுத்தப்பட சுரப்புக்கள் சுரக்கும்.முக்கியமாக (Dopamine, Serotonin )போன்ற ஹோர்மோன்கள் சுரக்க சந்தோசம் மலர்கின்றது. இதனால் தான்பிள்ளைகள் விளையாட விரும்புகின்றார்கள். ஆடவும்பாடவும் செய்கிறார்கள். அதனையே அரங்கு பிரதான பணியாக செய்கின்றது."