- Details
- Hits: 808
"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது."
ஆர். சி. கொலிங்வூட்
வரலாற்றியலறிஞர்.
பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள் எமக்கு இங்கு இயைபுடைய ஒன்றாகின்றது. வுரலாற்று முகவர்களின் “சிந்தனைப் பக்கத்தை” அறிவது வரலாற்றாசிரியரின் கடமையெனின், இலக்கிய வரலாற்றாசிரியனின் பணியோ, இலக்கியங்கள், வாத விவாத எழுத்துக்கள் ஆகியவற்றில் எடுத்துக் கூறப்பட்ட கருத்துக்கள் வரலாற்றை எவ்வாறு வெளிப்படுத்துவனவாயுள்ளன என அறிவதாகும்.
- Details
- Hits: 1366
- கார்த்திகேசு சிவத்தம்பி -
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே குத்திட்டு நிற்கின்றதும், நமது சமூக நடைமுறைகளைப் பெரிதும் ஒழுங்கு படுத்திக் கட்டுப்படுத்துவதுமான இந்த விடயம் பற்றி நாம் பேசுவதும் இல்லை.
- Details
- Hits: 1022
பேராசிரியர் கனகசபாபதி.கைலாசபதி
இலங்கைத் தமிழரிடையே மொழி பண்பாட்டு உணர்வு வளர்ந்த வரலாற்றை விபரிக்கும்போது அதனை ஏனைய அம்சங்களில் இருந்து தனிமைப் படுத்தி நோக்குதல் இயலாது. குறிப்பாக அத் தகைய உணர்வின் அடிப்படையாக அமைந்த அரசியல் பொருளாதாரக் காரணிகளையும் இவ்விரண்டினதும் பரஸ்பரத் தொடர்புகளையும் எவ்விதத்திலும் விலக்கி நோக்குதல் இயலாது. எனினும் அரசியல் பொருளாதாரக் காரணிகள் வேறிடத்தில் ஆராயப்பட வேண்டும். ஆனால் நான் இக்கட்டுரையைப் பண்பாட்டு, மொழியியல் அம்சங்கள் அளவில் எல்லைப்படுத்தியுள்ளேன்.
- Details
- Hits: 449
கலாநிதி சி.ஜெயசங்கர்
எந்த வகையிலான ஊடகங்களிலும், எந்தவிதமான இடங்களிலும் ஓவியப் படைப்புக்களை காண்பியக்கலை ஆக்கங்களை உருவாக்கவும், காட்சிப்படுத்தவுமான இயல்பு சுசிமன் நிர்மாலவாசனுக்குரியது. அவரது படைப்பாக்கத்திற்கான கருவூலங்களான மக்களதும் சூழலினதும் இணைவைப் பேணுவதிலும் கவனம் கொண்டிருப்பதை அவருடைய ஓவியக் காட்சிப்படுத்தல்கள் புலப்படுத்தி நிற்கின்றன.
- Details
- Hits: 539
கலைகள் மனித வாழ்வியலுடன் இன்றியமையாத தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. நவீன கலைகளின் தாக்கத்தால் கலைகள் தனியுரிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பாதகத்திலிருந்து நீக்கம் பெறுவதற்கு உலகில் பல்வேறு கலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் செயற்படுத்தப்பட்டும் வருகின்றன.
- Details
- Hits: 754
"பெண்ணே உன்னை நீயுணர் உன் பெருமையை உலகுக்கு உணர்த்து, உனக்கான வரலாற்றை நீ எழுது, உன் சந்ததியே உன்னை வணங்கும்."
பங்குனி 8 பதுமையவள் நாளாக உலகமெங்கும் கொண்டாடுகின்றோம். இந்த நாளிலே மட்டும் போற்றினால் போதுமா பெண்ணினத்தை?கடவுள் ஒவ்வொரு உயிர்களாகப் படைத்துக் கொண்டிருந்தாராம். பெண்ணைப் படைக்கும் நாள் வந்ததாம். ஏறத்தாழ ஆறு நாட்கள் தேவைப்பட்டதாம் அப்படைப்பிற்கு. அதற்கான காரணத்தை கடவுள் கூறும்போது 'இவள் வெறும் உருவம் மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமானவள், இவளின் உணர்வுகள் ஆக்கபூர்வமானவை ஆகவே இவளை ஓர் உன்னத படைப்பாக உருவாக்க வேண்டும் இதற்காகவே இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டேன் என்றார்.
- Details
- Hits: 1496
ஈழத்தமிழர் மத்தியில் இந்து மதம் அதன் சமூகப்பொருளாதாரப் பரிமாணம் பற்றிய சில சிந்தனைகள்
பேராசிரியர் வி. நித்தியானந்தம்
"மக்கள் தமது கல்வியறிவின் வழி, மனித மூலதனம் என்பதாகத் தாம் அடைந்திருந்த பெறுமதி உயர்வினைத் தம்மைச் சூழவுள்ள தமது பிரதேச வளங்களுடன் இணைப்பதற்குப் பதிலாகத் தமது தாய்மண்ணுக்கு அப்பால் அதனைக் கொண்டு சென்று பிணைக்கின்ற ஒரு கட்டாய நிலைக்கு ஆளாகியிருந்தனர். இரண்டாவதாக, ஆங்கிலத்திலான கல்வி தான் எப்போதும் தமது முன்னேற்றத்தின் அத்திவாரம் என்ற முற்றிலும் தவறான ஒரு நம்பிக்கையை அவர்கள் வளர்த்துக் கொள்ளத்தலைப்பட்டிருந்தனர்."
- Details
- Hits: 663
உலக தாய்மொழித் தினம் - 2021 பெப்ரவரி 21
கலாநிதி சி.ஜெயசங்கர், து.கௌரீஸ்வரன்
அறிமுகம்
இப்பூமியில் தமிழ் மொழியின் இருப்பிலும் வளர்ச்சியிலும் காத்திரமான தாக்கத்தைச் செலுத்தி வரும் கலை வடிவமாக இசை விளங்குகின்றது. காலனித்துவம் அறிமுகப்படுத்திய வசனநடை ஆதிக்கம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே வாய்மொழி வழக்காறுகள் ஊடாகவும் செவிவழி அறிகையூடாகவும் தமிழின் அறிவியல் பாரம்பரியம் செழுமையாகத் தொடரப்பட்டு வந்துள்ளமையினை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
- Details
- Hits: 848
இரா. சுலக்ஷனா,
இலக்கியங்களுக்கும் பண்பாட்டு உருவாக்கத்திற்கும் இடையிலான தொடர்பு என்பது நிலைபேறுடையதாக இருந்து வந்திருப்பதை, இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
சங்க இலக்கியங்களில் செய்யுள் யாத்த சங்கப்புலவர்கள் செய்யுள்வழி சொன்னவை
வெறும் கற்பனையல்ல; அஃது பண்பாட்டின் ஏதொவொரு அம்சத்தினை அல்லது
எல்லாவிதமான கூறுகளை வெளிப்படுத்துபவையாகவே இருக்கின்றன;
- Details
- Hits: 329
கலாவதி கலைமகள்
சிந்துஉசா விஜயேந்திரன்
தம் மொழியால் சிந்திப்பதும் பிறரை புரிந்து கொள்வதும் நாம் நம் மொழியை மதிப்பது போல் பிற
மொழியை மதிப்பதும் நம் மொழியில் கற்பனைத்திறன், படைப்பாகத்திறன் கொண்டவராய் நம்மை வளர்த்துக்
கொள்ளல் என்பதும் அவசியமானது.
- Details
- Hits: 582
உலக தாய்மொழி தினத்தை இசைத்தமிழால் கொண்டாடும் எமது சிறு முயற்சிக்கு பெருந்தகையோரது ஆசியையும், மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வையும் பன்மொழி அறிவையும்
ஊக்குவிக்கும் நோக்குடன் 1999ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு 2000ம்
ஆண்டிலிருந்து மாசி மாதம் 21ம் திகதி அன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற உலக தாய்மொழி தினமானது இந்த வருடமும் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றது