Skærmbillede 563– ரூபன் சிவராஜா-

Facebook என்பது ஆழமான வாசிப்பிற்குரிய தளமாக, ஆரோக்கியமான சமூக அரசியல் விவாதங்களுக்குரிய முற்றுமுழுதான பயன்பாட்டுத் தளமாக உருவாகிவிட்டது என்று கூறமுடியாவிட்டாலும் ஆரோக்கியமான விவாதங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அதன் வகிபாகம் பெறுமதி மிக்கது என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

வன்முறை, பயங்கரவாத்திற்கு எதிரான கரிசனை என்ற போர்வையில் இந்தத் தணிக்கை முன்னெடுக்கப்படுவது வேடிக்கையானதாகும். இங்குதான் Facebook-சமூக வலைத்தளத்தின் அரசியல் வெளிப்படுகின்றது. அது அதிகார நலன்களைச் சார்ந்து இயங்குகின்றது என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவைப்படாது.

 போர் அவலத்தின் குறியீடாக விளங்கும் வியட்னாம் சிறுமி உடலில் எரிகாயங்களுடன் நிர்வாணமாக ஓடும் காட்சியின் ஒளிப்படம் Facebook – முகநூல் நிர்வாகத்தினால் நீக்கப்பட்ட பின்னணியில், முகநூல் கடைப்பிடிக்கும் தணிக்கை அரசியல் அணுகுமுறை சார்ந்த விவாதங்கள், விமர்சனங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன.

1972 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தினரின் பிடியிலிருந்து உயிர் பிழைப்பதற்காக வியட்னாமி வீதியொன்றில் மரண பீதியுடன் சிறுவர்கள் ஓடுகின்ற காட்சியின் ஒளிப்படத்தில், குறிப்பாக அதில் 9 வயதுடைய Phuc Phan Thi என்ற வியட்னாமியச் சிறுமி உடைகளில் தீ பற்றவைக்கப்பட்டதால் வெறும்மேனியுடன் – எரிகாயங்களுடன் ஓடும் காட்சி அமெரிக்கப் படைகள் வியட்னாமிய மக்களுக்கு ஏற்படுத்திய அவலங்களின் குறியீடாக பார்க்கப்பட்டது. அந்த ஒளிப்படம் Associated Press செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த படப்பிடிப்பாளர் Nick Utஇனால் எடுக்கப்பட்டதாகும்

இது அமெரிக்க அடக்குமுறையின் குறியீடாகவும் அதேவேளை ஊடகங்களின் வலிமையை உலகறியச் செய்ததுமான படம். இது அரசியல் ரீதியான ஒரு குறியீட்டு அர்த்தம் கொண்டது. தவிர சிறுவர் துஸ்பிரயோகத்திற்கும் சிறுவர்களுக்கெதிரான அனைத்து வகை வன்முறைகளுக்கும் எதிரான விழிப்புணர்வுக்கு பயன்படுத்தக்கூடிய வலிமை இதற்கு உண்டு. இதன் குறியீட்டு அர்த்தம் பெறுமதி மிக்கது. மானிட அவலத்தின், ஆக்கிரமிப்புப் போர்க் கொடூரத்தின் நிலைத்த அடையாளங்களில் ஒன்று அப்படம். இதன் நீக்கம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது.

நோர்வேயின் முதன்மை நாளிதழான ஆப்தன்போஸ்தன் (Aftenposten) இந்தப்படத்தினை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட போது முகநூல் நிர்வாகம் அதனை நீக்கியிருந்தது. தொடர்ந்து நோர்வேயின் தலைமை அமைச்சர் Erna Solberg தனது முகநூல் சுவரில் பதிவிட்டபோதும் நீக்கியுள்ளது. இவை 2016 செப்ரெம்பர் முதல் வாரத்தில் நடந்த சம்பவங்களாகும்.

இந்தப் போக்கு ஊடக சுதந்திரத்தினைக் கேள்விக்கு உள்ளாக்குவதோடு, வரலாற்று உண்மைகளை மூடிமறைக்கும் முனைப்பு என்ற கோணத்தில் ஆப்தன்போஸ்தன் நாளிதழின் பொறுப்பாசிரியர் Espen Egil Hansen முகநூல் நிறுவனர் Mark Zuckerberg இற்கு பகிரங்கக் கடிதமொன்றின் மூலம் கடுமையான எதிர்வினையை ஆற்றியிருந்தார். அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் சர்வதேச நீதியில் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. முகநூல் நிர்வாகத்தை நோக்கிய பலத்த விமர்சனங்கள் எழுந்தன. பரவலாக விவாதத்தைத் தோற்றுவித்ததோடு அழுத்தத்திற்கும் அக்கடிதம் வழிகோலியது.

அந்த எதிர்வினைக்கு முதலில் பொதுவானதொரு சம்பிருதாயமான பதிலை வழங்கியது முகநூல். அதாவது வியட்னாம் சிறுமியின் படம் நிர்வாணப்படம் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டது. இவ்வாறான வரலாற்று ரீதியான குறியீட்டு அர்த்தமுளள படங்களையும் நிர்வாணப் படங்களையும் வேறுபடுத்தி அனுமதிக்கும் தொழில்நுட்பப் பொறிமுறையைத் தாம் கொண்டிருக்கவில்லை என்ற ரீதியில் அதன் முதற்கட்டப் பதில் அமைந்திருந்தது.

ஆப்தன்போஸ்தன் பொறுப்பாசிரியரின் காத்திரமான எதிர்வினையாற்றலுக்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்ட ஊடகக் கவனக்குவிப்பினால் முகநூல் தனது முடிவை மாற்றியமைக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. வியட்னாம் சிறுமியின் ஒளிப்படத்தினை போர் அவலக் குறியீட்டுப் படமாக ஏற்று அனுமதிப்பதாகக் கூறவைத்துள்ளது.

இந்தச் சிக்கலை ஆப்தன்போஸ்தன் நாளிதழ் கையிலெடுத்தமைக்கான பின்னணியைச் சற்று நோக்குதல் பொருத்தமானது. இந்தச் சம்பவத்திற்குச் சில வாரங்களுக்கு முன்னர் நோர்வேஜிய எழுத்தாளர் Tom Egeland போர் வரலாற்றை மாற்றியமைத்த 7 ஒளிப்படங்கள் என்ற தலைப்பில் தனது முகநூல் சுவரில் ஒரு பதிவினை இட்டார். அவற்றில் வியட்னாம் சிறுமி படம் நீக்கப்பட்டது. சிறுவர் போர்னோகிராபி (Child Pornography) என்ற வரையறையின் கீழ் அது நீக்கப்பட்டது. சிறுவர் போர்னோகிராபியையும் போர் அவலக் குறியீட்டினையும் பிரித்தறியாத வகையிலான விதிமுறைகளை அனுமதிப்பது வரலாற்றுத் திரிப்பிற்கு வழிகோலிவிடும். அது கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் செயல் என்ற அடிப்படையில் ஆப்தன்போஸ்தன் இதற்கான எதிர்வினையை ஆற்றியதோடு, இதற்கு ஒரு சர்வதேச கவனத்தினையும் ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம்.

வியட்னாம் சிறுமியின் பட நீக்கம், அதற்கான சர்வதேச எதிர்வினைகளின் விளைவாக முகநூல் அதனை அனுமதிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சமகாலத்தில் இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் முகநூல் நிர்வாகத்திற்குமிடையில் நடந்த உயர்மட்டச் சந்திப்பு பற்றிய செய்தி வெளிவந்திருக்கிறது. அந்தச் சந்திப்பில் ஒரு உடன்பாடும் எட்டப்பட்டது. அதாவது இஸ்ரேல் மீது வன்முறைகளைத் தூண்டும் பதிவுகளைத் தடுப்பது, நீக்குவது என்பதே அந்த இணக்கப்பாடு. அதாவது பலஸ்தீனத் தரப்பினைக் குறிவைத்து இந்த கருத்துத் தடுப்புச்சுவர் ஏற்படுத்தப்படுகின்றது என்பதை இலகுவில் எவரும் புரிந்து கொள்ள முடியும். இதனைப் புரிந்துகொள்ள ஆழமான அரசியல் அறிவேதும் தேவையில்லை.

இஸ்ரேல் நீதியமைச்சர் Ayelet Shaked, பாதுகாப்பு அமைச்சர் Gilad Erdan ஆகியோருக்கும் முகநூல் உயர்மட்டக்குழுவினருக்குமிடையில் பேச்சுக்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றைக் கண்காணிப்பதற்கு தனியான செயற்குழு அமைப்பது தொடர்பான இணக்கமும் எட்டப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அவர்களை நிலமற்றவர்களாக்கி, படுகொலைகள், பொருளதார நெருக்குவாரங்களை ஏற்படுத்தி, 6 தசாப்தங்களுக்கு மேலாக அம்மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டுவந்துள்ள ஒரு அடக்குமுறை அரசுடன் முகநூல் செய்துள்ள உடன்படிக்கை என்பதாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Youtube-காணொலிகள், சமூக வலைத்தளங்கள் மூலம் பலஸ்தீனியர்கள் வன்முறைத் தாக்குதல்களுக்குத் தூண்டப்படுகின்றார்கள் என்கிறது இஸ்ரேல். இது பலஸ்தீனியர்களை மட்டும் குறிவைத்த செயற்பாடு அல்ல என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினையும் அரச பயங்கரவாதத்தினையும் எதிர்க்கும் அரபு, மற்றும் மத்திய கிழக்குப் பிராந்திய முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துருவாக்க அடக்குமுறையைக் குறிவைத்த இஸ்ரேலின் செயலுடன் கைகோர்க்கின்றது Facebook.

தமது அரசிற்கு எதிரான பதிவுகளை நீக்கக்கோரி, 2016 நடுப்பகுதியில 158 கோரிக்கைகள் இஸ்ரேலினால் YouTubeஇற்கும் 13 கோரிக்கைகள் Facebookஇற்கும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 95 வீதமான கோரிக்கைகள் YouTubeஇனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவுகள் நீக்கப்பட்டதாகவும், 80 வீதம் Facebookஇனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நீக்கப்பட்டதாகவும் இஸ்ரேலின் நிதியமைச்சர் Ayelet Shaked கூறியுள்ளார்.

இது மட்டுமல்ல. குர்திஸ்தான் (Kurdistan) என்ற சொல் Facebookஇனால் அதிகமாகத் தணிக்கைக்கு உட்பட்டிருப்பதாகவும், குர்திஸ்தான் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் இதற்கு எதிரான முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அது மட்டுமல்லாமல் குர்திஸ் மக்கள், போராளிகள் மீதான துருக்கிய அரச வன்முறைகளுக்கு எதிரான கருத்துகளும் தணிக்கைக்கு உள்ளாகி வருகின்றன. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட ஆவணங்கள், காணொளிகள், பாடல்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங்கள் முகநூல் மற்றும் Youtubeதளங்களிலிருந்து நீக்கப்படுகின்றமையும் இவற்றோடு இணைத்துப் பார்க்கப்படவேண்டியது.

வன்முறை, பயங்கரவாத்திற்கு எதிரான கரிசனை என்ற போர்வையில் இந்தத் தணிக்கை முன்னெடுக்கப்படுவது வேடிக்கையானதாகும். இங்குதான் Facebook-சமூக வலைத்தளத்தின் அரசியல் போக்கு வெளிப்படுகின்றது. அது அதிகார நலன்களைச் சார்ந்து இயங்குகின்றது என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவைப்படாது.

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சமூக வலைத்தளங்களின் வகிபாகம் மிகமிக முதன்மையான இடத்திற்கு வந்துள்ளது. சாதாரணமாக ஒரு குடும்பத்தின் கிட்டத்தட்ட எல்லா அங்கத்தவர்களும் Facebook பயன்படுத்துகின்றனர். பாவனைக்கான வயதெல்லை 13 என்ற விதி இருப்பினும் வயதுக்கட்டுப்பாட்டுக் கண்காணிப்பிற்குரிய பொறிமுறை இதுவரை நடைமுறையில் இல்லை. 13 வயதிற்குக் குறைந்தவர்கள் Facebook கணக்கு வைத்துள்ளனர்.

Facebook என்பது ஆழமான வாசிப்பிற்குரிய தளமாக, ஆரோக்கியமான சமூக அரசியல் விவாதங்களுக்குரிய முற்றுமுழுதான பயன்பாட்டுத் தளமாக உருவாகிவிட்டது என்று கூறமுடியாவிட்டாலும் ஆரோக்கியமான விவாதங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அதன் வகிபாகம் பெறுமதி மிக்கது என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

அதிகமதிகம் நட்புகளை, குடும்ப உறவுகளை ஒருங்கிணைக்கின்ற, (நாடு கடந்து வாழும் குடும்ப உறவுகள், நட்புகளையும்) மற்றும் தனிப்பட்ட-குடும்ப-சமூக அமைப்புகளின் நிகழ்வுகள், செயற்பாடுகளின் ஒளிப்படங்கள், செய்திகள், தகவல்களைப் பகிர்கின்ற அளவிலேயே அதன் பயன்பாடு கூடுதலாக உள்ளது. தொலைத்த நட்புகளை, உறவுகளை மீட்டெடுத்துத் தந்துகொண்டிருப்பதில் அதன் பங்கு பெரியது. எனினும் சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகள் சார்ந்த கருத்துகள், விவாதங்களுக்குரிய தளமாகவும் சமூக வலைத்தளங்கள் விளங்குவதை மறுப்பதற்கில்லை.

Facebook என்பது ஒவ்வொரு தனிமனிதர்களும் நினைத்த நேரத்தில் கருத்துகளை, தமது தனிப்பட்ட நாளாந்த செயற்பாடுகள், பொழுதுபோக்குகள் உட்பட்ட இன்னபிற பயனற்றதும் பயனுள்ளதுமான பதிவுகள், தகவல்கள், படங்களைப் பகிர்கின்ற தளமாகவே அதிகமதிகம் பயன்படுத்தப்படுகின்றது. தகவல்களைப் பகிர்கின்ற, விவாதங்களை முன்னெடுக்கின்ற உலகப் பொதுத் தளமாக சமகாலத்தில் பெரும் சமூக வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றது.

உலகின் மிகப்பெரிய ஊடகங்கள் கூட தமது செய்திகள், கட்டுரைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உட்பட்ட ஊடகச் செயற்பாட்டு விளைவுகளை பெருவாரியான வாசக-நேயர்களிடம் சேர்ப்பிப்பதற்கு Facebookஇனை அதிகம் பயன்படுத்துகின்றன, நம்பியிருக்கின்றன. இவ்வாறான யதார்த்தத்தில் தகவல் யுகத்தின் அதிகூடிய அதிகார வலுக் கொண்ட சமூக ஊடகமாக உள்ளது. இந்த அதிகாரத்தினை Facebook துஸ்பிரயோகம் செய்கின்றது என்ற கோணத்தில் சில விடயங்கள் ஆப்தன்போஸ்தன் பொறுப்பாசிரியரின் கடிதத்தில் Facebookஇற்குச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பொதுவெளியில் சமூக ஊடகமாக விளிக்கப்பட்டாலும் ’Facebook – நிர்வாகம்’ அதனை ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக அல்லது தொழில்நுட்பத் தளமாகவே அடையாளப்படுத்துகிறது. ஊடக நிறுவனமாகவோ, வெளியீட்டுத் தளமாகவோ அல்ல.

தணிக்கை அரசியல் சார்ந்த ஊடக தர்மத்திற்கு அமைய, கருத்துச் சுதந்திரத்திற்கு அமைய மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. வியட்னாம் சிறுமி பட நீக்கத்தை எதிர்த்து ஆப்தன்போஸ்தன் பொறுப்பாசிரியரின் பகிரங்கக் கடிதம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகவே இந்தக் குரல்களைக் கேட்க முடிகிறது. தொடர்ச்சியாக இவ்வாறான காத்திரமான குரல்கள் ஒலித்த வண்ணம் இருக்கும் பட்சத்திலேயே அதிகார சக்திகளின் நலன்களுக்கு முண்டுகொடுக்கும் முகநூலின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

நன்றி :- https://svrooban.com

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click