தொழில் வழிகாட்டல் என்பது ஒரு தனிநபர், தொழில் உலகத்தினுள் தமது வகிபங்கினை அறிந்து கொள்வதற்கும், தன்னை பற்றிய சுயநம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், தனக்கும் சமூகத்திற்கும் பயனளிக்ககூடிய தொழிலை திருப்தியாக செய்வதற்கும் உதவும் செய்முறையாகும்”
என டொனால்ட் சுப்பர்
(Donald Super) என்ற தொழில் வழிகாட்டல் அறிஞர் குறிப்பிடுகின்றார்.
தொழில் வழிகாட்டலுக்கான கோட்பாடுகள் (Career Counseling Theory)
1. ஆன்றோவின் (Andrew’s) தொழில் ஆலோசனை வழங்கற் கோட்பாடு.
இக் கோட்பாட்டை நோக்கும் பொழுது “தனிநபரின் தொழில் தெரிவுச் செயன்முறையில் பிள்ளைப்பருவ அனுபவம் செல்வாக்கு செலுத்தும்”; எனக் குறிப்பிடுகின்றார். எனவே இக் கோட்பாட்டின் அடிப்படையில் பிள்ளையின் விருப்பங்கள், ஆசைகள் பூரணப்படுத்தப்படல் என்பது முக்கியமாகும். இந் விருப்பங்களில் பல ஆழ்மனத் தேவைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒருவர் தனது தேவைகளை நிறைவு செய்யும் முறைக்கு ஏற்ப அவரது தொழிலில் இசைவாக்கம் பெறுதல் தனிநபர் அபிவிருத்தியாக இங்கு வெளிக்காட்டப்படும்.
2. டொனால்ட் சுப்பரின் (Donald Super’s) தொழில் விருத்திக் கோட்பாடு.
டொனால்ட் சுப்பரின் கோட்பாட்டின்படி தாம் தெரிவு செய்கின்ற தொழிலில் மூலம் தமது சுய எண்ணக்கருவை அடைந்து கொள்வதற்கு ஒருவர் எதிர்பார்க்கின்றார். தொழில் விருத்தி செயன்முறை ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும்.
3. எளி கின்ஸ்பேர்க்கின் (Eli Ginzberg’s) தொழில் தெரிவுக் கோட்பாடு.
கின்ஸ்பேர்க்கின் கோட்பாட்டிற்கு அமைய நபர் ஒருவருக்கு எழுகின்ற தொழில் ஒன்றைத் தெரிவுசெய்வது பற்றிய உணர்வானது நீண்டகால செயன்முறையின் பெறுபேறாகும். ஒருவர் மேற்கொள்ளும் தொழில் தொடர்பான தீர்மானம் அவரது வயதிற்கு ஏற்ப வித்தியாசப்படும் என்பது இவரது நம்பிக்கையாகும். இவர் தனிநபரின் தொழில் தெரிவு செயன்முறையை மூன்று சந்தர்ப்பங்களாக வகுத்துள்ளார்.
கற்பனைத் தெரிவு பருவம் : 11 வயது வரை.
செய்துபார்த்தல் மூலம் தெரிவு செய்யும் பருவம் : 11-17 வயது வரை.
யாதார்த் தரீதியாக தெரிவு செய்யும் பருவம் : 17 வயது தொடக்கம் இளமை பருவத்திற்கும் முதுமை பருவத்திற்கும் இடையிலான பருவம்.
4. ஹோலன்ட்டின் (Holandin‘s) பண்புத்திறனும் காரணிகளும் கோட்பாடு.
தொழில் தீர்மானம் எடுப்பதற்கான அடிப்படை காரணியாக தனியாள் ஆளுமை அமையும் என ஹோலன்ட் குறிப்பிடுகின்றார்.
தொழில்ற் தகவலை சேகரித்தல் (மூலாதாரங்கள்)
01. தொழில் சந்தைகள்
02. கண்காட்சிகள்
03. தொழில் பயிற்சி முகாம்கள்
04. வானொலி
05. தொலைக்காட்சி
06. வலைப்பின்னல்
07. பத்திரிகை
08. துண்டுபிரசுரங்கள்
09. வர்த்தமானி அறிவித்தல்கள்
10. விளம்பரங்கள்