Skærmbillede 1090கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பதற்கு ‘சமூகத் தடுப்பாற்றல்’தான் (herd immunity) முக்கியமான வழி என்றே சொல்லப்பட்டுவருகிறது. போதுமான அளவு மக்களுக்குத் தடுப்பூசி போட்டால் – அதாவது 60%-லிருந்து 70% வரையிலான மக்களுக்கு – வைரஸால் அதற்கு மேல் பரவ முடியாமல் போகலாம் என்று சொல்லப்பட்டது.

ஆனால், பெருந்தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட முடியும் என்ற நம்பிக்கை சமீபத்தில் குறைந்துள்ளது. “சமூகத் தடுப்பாற்றலுக்கான எல்லையை எட்ட முடியாது என்ற கருத்தொற்றுமை அறிவியலர்களிடமும் பொதுச் சுகாதார வல்லுநர்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது” என்று ‘தி டைம்ஸ்’ இதழில் அபூர்வா மந்தவில்லி எழுதியுள்ளார்.

மிகவும் கடுமையாகப் பரவும் கொரோனா வைரஸின் பி.1.1.7. வேற்றுருவத்தின் வருகைக்கு முன்புதான் சமூகத் தடுப்பாற்றலுக்கான எல்லை வரையறுக்கப்பட்டது. தற்போது அந்தக் கணிப்பு 80%-ஐ நோக்கித் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வேகமாகப் பரவும் வேற்றுருவங்கள் உருவானால், இந்தக் கணிப்பு இன்னும் அதிகரிக்கும்.

 

தடுப்பூசித் தயக்கம்

தடுப்பூசி செலுத்தப்படாத பகுதிகளில் கட்டுப்படுத்தப்படாமல் இந்த வைரஸ் எந்த அளவுக்குப் பரவுகிறதோ அந்த அளவுக்கு அது புதுப்புது அவதாரங்கள் எடுக்க வழி ஏற்படும். தற்போது, உலகளாவிய தடுப்பூசி விநியோகம் மிகவும் ஏற்றத்தாழ்வான நிலையிலேயே உள்ளது. உலக அளவில் போடப்படும் டோஸ்களில் 0.3%-தான் குறைந்த அளவு வருமானம் கொண்ட நாடுகளில் போடப்படுகின்றன.

இந்த எல்லாக் காரணிகளும் சேர்ந்து கரோனா வைரஸை உலக அளவில் ஒழிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாக ஆக்குகின்றன: நோய்த் தடுப்பாற்றல் வல்லுநர்கள், தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள், வைரஸ் வல்லுநர்கள் போன்ற 100 பேரிடம் ‘நேச்சர்’ இதழ் ஜனவரியில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது; இனிவரும் காலங்களில் கொரோனா தொற்று சீரான அளவில் உலகெங்கும் சுற்றிக்கொண்டுதான் இருக்கும் என்று 90% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படியென்றால் இயல்பு வாழ்க்கை என்பது திரும்பவே திரும்பாதா? அப்படி இல்லை. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு சமூகத் தடுப்பாற்றலை மட்டுமே நம்பி இருப்பது தவறு என்று ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அப்ரார் கரண் உள்ளிட்ட வல்லுநர்கள் பலரும் தற்போது கூறுகிறார்கள்.

சமூகத் தடுப்பாற்றல் வரலாறு

முந்தைய பெருந்தொற்றுகளின் வரலாறு நமக்கு இங்கே உபயோகமாக இருக்கலாம்: 1918-ம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளூவின்போது தடுப்பூசி ஏதும் இல்லை. அந்தப் பெருந்தொற்றின்போது மனிதர்களுக்கு சமூகத் தடுப்பாற்றலும் ஏற்படவில்லை. எந்த நோய்க்குமே சமூகத் தடுப்பாற்றல் எட்டப்பட்டதில்லை என்று யேல் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பேராசிரியர் ஹோவர்டு ஃபோர்மன் என்று கூறுகிறார். 1918 வைரஸுக்கு அதிக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி தோன்றவே, அந்த வைரஸ் பரிணாமமடைந்தது, இன்றும் காணப்படும் வைரஸ்களிடம் தனது வலுவற்ற வடிவங்களை அது கடத்தியது என்றும் இதழாளர் ஹெலன் பிரான்ஸ்வெல் கூறுகிறார். “உண்மை என்னவென்றால் பெருந்தொற்றுகள் எப்போதுமே ஒரு முடிவை அடைந்துவிடுகின்றன” என்கிறார் பிரான்ஸ்வெல்.

சமூகத் தடுப்பாற்றல் என்பது எட்ட முடியாத ஒன்று என்றால் வேறு எதுதான் இலக்கு? “இன்னும் கொஞ்ச காலத்துக்கு, நன்றாகத் தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் வைரஸை ஒழிக்க முடியலாம் அல்லது அம்மைபோல கட்டுப்படுத்தப்பட்ட அச்சுறுத்தலாக ஆக்கலாம்” என்று ‘தி வாஷிங்டன் போஸ்ட்’டில் ஆஷிஷ் கே.ஜா எழுதுகிறார். மக்கள்தொகை அடர்த்தி, காற்றோட்டம், முகக்கவசம் அணிதல் போன்றவையும் பெருந்தொற்று வெடிப்புகளுக்கு எதிராக ஒரு சமூகம் தடுப்புக் கவசம் கொண்டிருப்பதைத் தீர்மானிக்கும்.

தடுப்பூசி கிடைப்பதில் ஏழை நாடுகளுக்கும் செல்வந்த நாடுகளுக்கும் இடையில் இருக்கும் பெரிய இடைவெளியைக் குறைப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தடுப்பூசிக் காப்புரிமைகளுக்குத் தடைவிதிப்பதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது ஆதரவு தெரிவித்துவருவது அந்தத் திசையில் முக்கியமான நகர்வாகும். அதற்கு உலக வர்த்தக நிறுவனம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள் கரணும் பார்சானெட்டும்.

ஏற்கெனவே சாதாரண ஜலதோஷம் போன்றவற்றுக்குக் காரணமாக இருக்கும் நான்கு கரோனா வைரஸ்களைப் போல, வரும் ஆண்டுகளில் தற்போதைய கரோனா வைரஸானது பரிணாமம் அடையும். இந்த வைரஸ்கள் மக்களுக்கு அடிக்கடியும் திரும்பத் திரும்பவும் தொற்றினாலும் மிக அரிதாகவே தீவிர உடல்நலக் குறைபாட்டுக்குக் காரணமாகின்றன. குழந்தைகளுக்கு இந்த வைரஸ்கள் தொற்றும்போது அவர்களுக்கு ஓரளவு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு அவர்கள் பெரியவர்களாகும்போது தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து பாதுகாக்கிறது.

உசிதமான எதிர்பார்ப்பு

“நமக்கு சமூகத் தடுப்பாற்றல் கிடைக்காது என்று சொல்வது எந்த வகையிலும் மரண தண்டனைத் தீர்ப்பு போலாகாது” என்கிறார் உயிரியல் ஆய்வாளர் ஜென்னி லேவைன். “அப்படி என்றால் அது எப்போதும் இருக்கப் போகிறது என்று அர்த்தம். அப்போது அது தீவிரம் குறைந்த அளவில் எப்போதும் இருக்குமா அல்லது தீவிரமாக எப்போதும் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது? தீவிரம் குறைந்த அளவில் எப்போதும் இருக்கும் என்பதுதான் என் கணிப்பு. அதுதான் நடக்கும் என்று உண்மையில் தோன்றுகிறது” என்கிறார் லேவைன்.

அது ஒரு உசிதமான எதிர்பார்ப்பு. அதுவே மோசமான சூழல் என்றால் எப்படி இருக்கும்? பெரும்பாலான வைரஸ்கள் மாற்றுவடிவம் அடைய அடைய அவற்றின் தீவிரம் குறையும்; ஆனால், கரோனா வைரஸ் விஷயத்தில் அந்த உத்தரவாதத்தைக் கொடுக்க முடியாது. பி.1.1.7 வேற்றுருவம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதன் தொற்றுத்திறன் மட்டும் அல்ல இறப்பு ஏற்படுத்தக்கக்கூடிய திறனும் அதிகம் என்று பல்வேறு ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன. தற்போது உள்ள தடுப்பூசிகள் பலவும் அந்த வேற்றுருவத்தை எதிர்த்து நன்கு போராடக்கூடியவை என்றாலும் தடுப்பூசி அளிக்கும் கேடயத்தைத் தகர்க்கக்கூடிய வேற்றுருவங்கள் உருவாகலாம்.

இன்னும் உருவாகாத வேற்றுருவங்களுக்கும் எதிராக மக்களுக்குத் தடுப்பு சக்தி அளித்து அவர்களைக் காக்கக்கூடிய தடுப்பூசி ஒன்றை ஒருவாக்குவதற்குப் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பந்தயமானது பெருந்தொற்று முடிவதற்குள் ஒரு வெற்றிகரமான தடுப்பூசியை நமக்குத் தரும் என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபாஸி கூறுகிறார்.

தி நியூயார்க் டைம்ஸ்’

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click