TV

கலாநிதி.க.கஜவிந்தன்.

சிரேஸ்ட உளவியல் விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்.

நமது சமுதாயத்தை பொறுத்தவரை இன்று வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து விட்ட ஒன்று தொலைக்காட்சி ஆகும். அத்துடன் இது மக்களின் முக்கிய பொழுதுப்போக்கும் கூட, இதனால் அதிக நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதில் செலவழிக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் அது சிறந்ததாக காணப்பட்டாலும் எதிர்கால சந்ததியினரை, குறிப்பாக குழந்தைகளின் கல்வியினை சீர்குலைப்பதுடன் அவர்களுக்கு உடல் – உள பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வின் மூலம் பெறப்பட்ட உண்மையாகும்.

குழந்தைப் பருவமானது ஒருவனுடைய ஆளுமை வளர்ச்சியில் (Personality development) முக்கிய பங்கு வகிக்கிறது என்று உளவியாலர் குறிப்பிடுகின்றனர். இந்த வகையில் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆளுமை வளர்ச்சிதான் ஒருவருடைய எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. ஒரு குழந்தை ஒரு பழக்கத்தை பழக ஆரம்பித்துவிட்டால் அக் குழந்தையின் சிந்தனைகள், செயல்கள் அதைச் சார்ந்தே காணப்படும். இது போலத்தான் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமும் கூட.

பெற்றோர்கள் சிலர் குழந்தை தொலைக்காட்சி பார்க்கும் போது 'குழந்தை தானே' என எண்ணி அதற்கு முக்கியத்துவம் கொடுக்காது கவனக் குறைவாகவும் இருந்து விடுவார்கள். வேறு சில பெற்றோர்கள் வெளியில் சென்று குழந்தைகளுக்கு வேறு பிரச்சனைகள் வருவதைவிட வீட்டில் தொலைக்காட்சியை பார்ப்பதை அவர்களே அனுமதிப்பதுடன் அதை குறையாகவும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். காலப்போக்கில் இது அவர்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்படுத்திவிடும். குறிப்பாக பரீட்சை நேரங்களில் குழந்தைகளை அவர்கள் கட்டுப்படுத்த முயற்சிக்கும் போது அக்குழந்தை கோபம், சினம், சாப்பிடாமல் இருத்தல், ஏட்டில் கிறுக்குதல், புத்தகத்திலுள்ள பக்கங்களை புரட்டிக் கொண்டிருத்தல், அந்த இடத்திலேயே தூங்கிவிடுதல், என்பன அறிகுறிகள் குழந்தைகளின் செயற்பாட்டில் காணப்படும். இதன் காரணமாக படிப்பில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

தொலைக்காட்சிக்கு அடிமையானவர்கள் போதைப் பொருள்களுக்கும் அடிமையானவர்கள் போன்றுதான் நடந்துகொள்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சியானது போதைப்பொருளை விட கொடூரமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதனின் மனதை பாழாக்கி வன்முறை மீது நாட்டம் கொள்ளவைத்து நாட்டையும், சமுதாயத்தையும் அது அழிக்கின்றது.

தொலைக்காட்சியானது வளர்ந்து வரும் தலைமுறையினர் மனநிலையை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றின்படி ஒரு குழந்தை ஒவ்வொருவாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன்பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களைப் பேச வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிகளில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் 1023 மணி நேரங்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுகின்றனர். உயர்நிலைப்பள்ளியை முடிக்கும் முன்பு 19 ஆயிரம் மணி நேரத்தை அவர்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுவதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கு தொலைக்காட்சி கார்ட்டூன் (Cartoon) படங்கள் பல உளச்சிக்கல்கள் என்பதில் ஆராட்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர் .அது அவர்களுக்கு சந்தேகம், அதீத கற்பனை என்பவற்றை ஏற்படுத்தும். மேலும் கார்ட்டூனில் பிம்பங்கள் அடிக்கடி மாறும் தன்மை கொண்டன. குழந்தைகள் இவற்றை உற்றுப் பார்க்கும் போது அவர்களுக்கு விரைவில் பார்வைக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. கிராபிக்ஸ் உத்திகளாக கார்ட்டூன்களாக வரும் வன்முறைகள் ஏற்படுத்தும் உடல்–மன நல பாதிப்புகளும் அநேகம், மேலும் அதிகமாக சண்டைக் காட்சிகள் பார்ப்பதால் அதேமாதிரியே தம்மை கற்பனை செய்து பார்க்கவும் முயற்சிக்கின்றனர் காலப்போக்கில் இவற்றை தொடர்ந்து பார்க்கும் குழந்தைகள் அதனை செய்து பார்க்கவும் முயற்சிக்கின்றனர். இது குழந்தைகளின் மனநிலைகளையும், பழக்கவழக்கங்களையும் பாதிப்பதோடு, தொடர்ந்து நல்ல நிகழ்ச்சிகளானாலும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமும் பல மோசமான பாதிப்புகளைள உண்டாக்கலாம்.

அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் பள்ளி மாணவர்களால் குறைந்த பட்ச அளவு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கூட ஈடுபட முடிவதில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவம் கிடக்கும் 5 வயதில் இருந்து 8 வயதுக் குழந்தைகளுக்கு இதய நோய்களில் ஏதாவது ஒன்று தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. ஆசிய நாடுகளில் 1960 களில் இருந்த தொகையைவிட 1990 களில் மிதமிஞ்சிய உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு உடல் ரீதியாக எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் முடங்கிக் கிடப்பது தான் முக்கிய காரணம் என உளவியலாலர்கள்கள் கூறுகிறார்கள்.

இதில் முதன்மையாக, மிகுதியாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள், மற்றவர்களுடன் பேசிப்பழக கிடைக்கும் நேரமும் ஏற்படும் சந்தர்ப்பங்களும் மிகக் குறைவு. இதனால் அவர்கள் நல்ல உறவு முறைகளை வளாத்துக் கொள்ளவும், பிறருடன் சுமூகமாக தொடர்பு கொள்ளவும் கற்றுக் கொள்ளாமல்போகலாம். இதனால் சமூகதிலிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புவர்கள்.

மேலும் மிகுதியாக தொலைக்காட்சியை பார்க்கும் குழந்தைகள் தங்களுடைய ஆக்கப்பூர்வமான எண்ணங்களை ஈடுபாடுகளை வெளிக்காட்ட வெகு சில சந்தர்ப்பங்களே ஏற்படுகின்றன. இதற்கு நேர்மாறாக, புத்தகங்கள் படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், மனப்பாங்கு, மனக்கட்டுப்பாடு என்பன வளர்கின்றன. புத்தகங்களை படிக்கப் படிக்க சொல்வளம், சொல் ஆக்கம் ஆகியவை வளர்கின்றன. தொலைக்காட்சி பார்க்கும் தொடர் பழக்கம் இது போன்ற ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளை குழந்தையின் வாழ்விலிருந்து அறவே நீக்கிவிடுகின்றன.

தொலைக்காட்சியை பார்க்கும் சிறுவர்கள் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொண்டு; வன்செயல்களில் இறங்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், தொலைக்காட்சி ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவற்றோடு இரவு பிந்தி விழித்திருந்து தொலைக்காட்சி பார்ப்பது தூக்க நேர ஒழுங்குகளை சீர்குலைப்பதுடன் (Sleeping Disorder) காலையில் குழந்தைகளை பிந்தி எழுந்து அவசரமாக பாடசாலைக்கு செல்லும் பொழுது பதட்டமான (Tension) மனநிலையை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களது ஆக்கத்திறனும், கல்வி கற்கும் திறனும் பாதிக்கப்படுகின்றன.

பதினெட்டு வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு குழந்தை 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் 10,000 வன்முறைகளையும் தொலைக்காட்சி வழியே பார்க்க நேரிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி வன்முறையை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் குழந்தைகள் எந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். தாயும் தந்தையும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு குழந்தையை மட்டும் தொலைக்காட்சி பார்க்காதே, படி என்று கட்டாயப்படுத்துவது , அவர்கள் ஆர்வத்தை மேலும் தூண்டிவிடும், இது மோசமான எதிர்விளைவுகளை உண்டாக்கும், இதனால் குழந்தை படிக்கும் நேரங்களில் குடும்பத்தினர் அனைவருமே தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்கலாம். பொதுகாவே வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைத்து கொள்வது நல்லது. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நல்ல நிகழ்ச்சிகளாக தேர்ந்தெடுத்து பார்க்கத் திட்டமிடலாம்.

பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவு கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். தொலைக்காட்சியில் சித்தரிக்கப்படும் போலியான நிகழ்வுகள் உண்மையான வாழ்வில் நடப்புகளாக பசுமரத்து ஆணி போல பிஞ்சு நெஞ்சங்களில் பதிவாகின்றன. இதனால் குழந்தைகள் தங்களின் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு தொலைக்காட்சி வழியே நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன என்பதே உண்மை.

நல்ல நிகழ்ச்சிகளை பார்க்கத் திட்டமிடும் பொழுது , மருத்துவ, ஆரோக்கிய குறிப்புகள், பண்பாட்டு, கலாச்சார மற்றும் வாழ்வியல் நிகழ்ச்சிகள், வினாடி வினா மற்றும் பொதறிவு வளர்க்கும் நிகழ்ச்சிகள், தொழில் நுட்பம் வளர்ச்சியினை சித்தரிக்கும் நிகழ்ச்சிகள், அவ்வப்போது நடைபெறும் நாட்டு மற்றும் சர்வதேச நடப்புகள் ஆகியவற்றை குழந்தைகள் பார்க்க நாம் அனுமதிக்கலாம். ஆனால் இந்நிகழ்ச்சிகளிலும் குழந்தைகளின் வயதுக்கேற்றவைகளாக தேர்ந்தெடுப்பது அவசியம். உதாரணமாக தினசரி செய்திகளில் காட்டப்படும் சர்வதேச போர் நடவடிக்கைகளும், சமூகக் கலவரங்களும்,வன்முறைகளுமே தினம்தினம் செய்திகளாகும், இது குழந்தைகளிடம் ஒரு பாதுகாப்பின்மையை உருவாக்கிவிடலாம் இதனால் முடியுமானவரை குழந்தைகளுடன் நிகழ்ச்சிகளை அமர்ந்து பாருங்கள், நிகழ்ச்சியின் நன்மை தீமைகளை எடுத்துச் சொல்லுங்கள்.

ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதோடு, வேறு பல ஆக்கபூர்வமான பொழுதுபோக்கு திட்டமிட்டு நேரம் ஒதுக்கவேண்டும். குழந்தைகளுக்கு நல்ல பல புத்தகங்கள் வாங்கி கொடுப்பதோடு அவர்களோடு உட்கார்ந்து படித்து, படிக்கும் ஆர்வத்தினை அவர்களில் ஏற்படுத்துங்கள். மேலும், குழந்தைகளின் அறிவு வளர்வதோடு, உடல் உறுதியும் வளர்பபது அவசியம். அதற்கு வேண்டிய விளையாட்டு, ஓட்டம், ஆட்டம், பாட்டம் மற்றும் இவற்றோடு நுண்கலைகள் போன்ற போக்குகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் இவை அவர்களுடைய உடல் – உள ஆரோக்கிய த்திற்கு உறுதுணையாக அமையும்.

இன்றைய பெற்றோர்கள் பகுத்தறிவோடு தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த முன் மாதிரிகளாய் இருந்து தொலைக்காட்சி என்னும் பிரம்மாண்டமான ஊடகத்தின் நல்விளைவுகளை அவர்களுக்கு பெற்றுத் தருவதோடு, அவற்றின் தீமைகளிலிருந்து பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு உண்டு. உங்கள் குழந்தைகளின் எதிர் காலம் உங்கள் கையில் தான் உள்ளது.

'எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.......'

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click