01 2கலாநிதி.க.கஜவிந்தன்.

சிரேஸ்ட உளவியல் விரிவுரையாளர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

 "முகநூல் எனப் பெயர் உண்டே தவிர உண்மையான முகங்களைக் கண்டுகொள்ள முடிவதில்லை. ஆனால் இன்று ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றியும் அறிமுகம் இல்லாத அயல் நாட்டவர்களுடனும்கூட இலகுவில் நண்பர்களாக மாறிக் கொள்கின்றனர்".

நூற்றாண்டுக்கு நூற்றாண்டு விருத்தியாகும் விஞ்ஞான மாற்றங்கள் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்;ப சாதனங்கள் மக்கள் தேவைக்கு விருந்தளிப்பதாக அமைவதுடன் மனித தேடல்களுக்கு சாதனையாகவும் அவனது வாழ்க்கைக்கு சவாலாகவும் அமைகின்றது. ஒரு காலத்தில் உறவுகள் நேருக்கு நேர் பார்த்து தொடர்பு கொண்டாலே தவிர கருத்துகளையோ தகவல்களையோ பரிமாறுவது அரிது. தபால்களும், தந்திகளும் ஏதோ கொஞ்சம் உதவி செய்தன. காலப்போக்கில் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் இணைய அமைப்புகள் வலையமைப்புகள் என்று தொடர்பாடலுக்கு தொலை தூரம் என்பது முற்றாக மாற்றப்பட்டு தொடு தூரமாக்கப்பட்டது.

நாம் விஞ்ஞான யுகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றோம் இதன் விளைவுகள் எனும் போது நன்மைகளுக்கு சமாந்திரமாகவும் சமமாகவும் பாதிப்புகளும,; தீமைகளும் தமது வேலையை செய்து கொண்டே தான் இருக்கின்றன. அதன் போக்கிலே நோக்கும் போது இன்று மோசமான நிலையிலும் பயனுள்ள வகையிலும் பரவிக் கொண்டிருக்கும் ஒரு விடயமாகவே முகநூல்ப்பாவனை (Face Book) காணப்படுகின்றது. எந்தவொரு விடயத்திற்கும் ஒரு மறைவான பக்கம் காணப்படும். அதனைப்போன்றே முகநூல் தொடர்பாடலும் தனது எதிர்ப்பக்கத்தைக் கொண்டு அனைவரது வாழ்கையையும் தனதாக்கிக் கொள்ள எத்தனித்துக் கொண்டு இருக்கின்றது. ஏனெனில் மிகக் குறுகிய கால வரலாற்றில் 800மில்லியன் பாவனையாளர்களை தமதாக்கிக் கொண்ட இம் முகநூல்வலையமைப்பின் சாதனை பேசப்படத்தக்க ஓர் விடயமாக உள்ளது.

முகநூல்ப் பாவனைஇளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தனது ஆதிக்கத்திற்குள் வைத்துக் கொள்ள முனைகிறது. என்றே கூறலாம். முன்பெல்லாம் 'நேரம் பொன்னானது' என்று பொன் மொழிகள் உருவானதும் அதனை வீண் செய்வது கொலை செய்வது போன்று என்றெல்லாம் அநேக கருத்துக்கள் தோன்றியுள்ளது. ஆனால் நேரத்தைப் போக்குவதற்கு பயன்படும் தொடர்பாடல் சாதனங்கள் இன்று அத்தனை பெறுமதியாக மாற்றப்பட்டுள்ளன. இன்று கைபேசி இல்லாத இளைஞர்கள் இல்லை அது போன்று முகநூல் இல்லாத நபர்களும் மிக அரிது.

தொடர்பாடலை இலகுவாக்கிக் கொள்கின்றோம் துரிதப்படுத்திக் கொள்கின்றோம் என்பதனை கவனத்தில் கொண்டு தொடர்புகளுக்காக ஏதோ ஒருவருடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இங்கு நண்பர் வட்டாரம் விரிவாவதும் நாட்டுக்கு நாடு செய்திகள் சுடச்சுட தகவல்கள் கடத்தப்படுவதும் என்னவோ நன்மையான விடயமாகவே உள்ளது. ஆனாலும் இதன் தாக்கம் பற்றிப் பேசுவதும,; விழிப்புணர்வு அடைய வேண்டியதும் மிகவும் அவசியமானது ஒன்றாக உள்ளது.

இன்று பாடசாலை மாணவர்களாயினும் இளம் பராயத்தினராயினும் எதனையும் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வம் கொண்டு உலக மாறுதல்களை கண்டறியவும் புதுமை புனையவும் எண்ணி முகநூலின் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றனர். இம் முகநூலில் ஒருவர் தனது சுயத்தை அடையாளப்படுத்தும் முகமாகவோ அல்லது தனது சுய கருத்துக்களை வெளிப்படுத்தும் முகமாகவோ தனது தொடர்பாடலை மேற்கொள்ளுகின்றனர். இங்கு வயது, இனம், மொழி, சாதி பேதம், நாடு நகரம் கடந்து நண்பர் வலையமைப்பினை விரிவாக்கிக் கொள்ளும் அளவு மிகவும் பரந்தளவிலான தொடர்பாடல் அமைப்பாக முகநூல் காணப்படுகின்றது.

முகநூல் எனப் பெயர் உண்டே தவிர உண்மையான முகங்களைக் கண்டுகொள்ள முடிவதில்லை. ஆனால் இன்று ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றியும் அறிமுகம் இல்லாத அயல் நாட்டவர்களுடனும்கூட இலகுவில் நண்பர்களாக மாறிக் கொள்கின்றனர். இதன் விளைவுகள் என்ன? முகநூல் தொடர்புகள் பண மோசடிகளாகவும், காதல், கள்ளகாதல் உறவுகளாகவும், ஏமாற்று திருமணங்களாகவும் எப்படியெல்லாமோ மாற்றப்பட்டு இளைஞர்கள் ,யுவதிகள் மோசமான உளப்பிரச்சினைகளுக்கு ஆளாகும் சூழலும் இன்று பெருகி வருகின்றது.

'எனது அயல்வீட்டு நண்பியின் முகநூல் நண்பன் இன்று அவளைக் காதலித்து திருமணம் செய்து இருவரும் நல்ல முறையில் வாழ்கின்றனர்' என ஏதாவதொரு விதிவிலக்கை உதாரணமாகக் கொண்டு தமது வாழ்வை தவறான வழியில் இட்டுச் சென்று முகநூல்ப் பாவனையால் வந்த உறவுகளால் சீரழிந்தவர்கள் ஏராளம் உண்டு. முகநூலில் மொட்டவிழும் அனேக காதல் இன்று பாரிய விளைவுகளை சந்தித்து தற்கொலையில் முடிக்கின்றன. இன்று இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முக்கியமான காரணமாக முகநூல்பாவனை அமைகின்றது. அதனைப் போன்றே தொழில் வேலைகளிலும் குடும்பங்களிலும் உறவுகளிலும் முகநூல்ப் பாவனை பாரிய தாக்கம் செலுத்துகின்றன என்றே கூறலாம்.

தொழில் நேரங்களில் அலுவலக கணினிகள் முகநூல் பாவனைக்காக உபயோகிக்கப்படுதவனால் ஊழியர் வேலையில் அக்கறையின்மை உற்பத்தி வீழ்ச்சிகள் நிறுவன ஊழியர்களிடையே தவறான உறவு நிலமைகள் என்பன ஏற்படவும் இம் முகநூல்பாவனை காரணமாக அமைகின்றது. குடும்பங்களை எடுத்துக் கொண்டோமானால் கணவன் மனைவி ஏன் பிள்ளைகளும் கூட முகநூலில் பல மணி நேரங்களை செலவிடுகின்றனர். இதனால் கணவன் மனைவி உறவு நிலைக்குள் வீணான சந்தேகங்கள், மனக்கசப்புகள் ஏற்படுகின்றது. தேவையற்ற முகநூல் உரையாடல்கள் புகைப்பட பகிர்வுகள் அனைவராலும் விரும்பப்படுவதில்லை.

முகநூலில் அடிமையாக வாழ்பவர்களும் உள்ளனர். நேரம், காசு என்பன வீணாக்கப்படுவதுடன் தவறான பழக்கவழக்கங்கள் தேவையற்ற முன் மாதிரிகளின் பின்பற்றல்கள் இவர்களைத் தொற்றிக் கொள்கின்றன. விளம்பர மோகம் என்பது மனிதனுக்கே உரித்தானது. இன்று உணவுப் பொருட்கள் முதல் உடை அலங்காரங்கள் வரை முகநூல் தொடர்புகள் ஊடாக கொள்வனவு செய்யக்கூடியதாக உள்ளது. வியாபாரத் தந்திரங்கள் மக்களை அடிமைப்படுத்தி மறைமுகமான அனேக இழப்புக்கள், பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கத் துணைபோகின்றது.

இதனைப் போன்றே தேவையற்ற போதைப் பொருள்களின் விளம்பரங்கள் மற்றும் தவறான பாலியல் தொடர்பான வீடியோக்கள் என்பனவும் முகநூலின் மூலம் சமூகத்தில் பரவி வருகிறது. பெற்றோர்களும் முகநூல்ப் பாவனையில் ஈடுபடுவதினால் பிள்ளைகளைக் கண்டிப்பது கடினமாக மாறியுள்ளது. இதைவிட பெற்றோரின் பிள்ளைகள் குறித்த அதிக நம்பிக்கை மற்றும் தொழில்நுட்பக் கல்வியை பெற்றுத்தரும் ஆசை என்பனவும் பிள்ளை முகநூல் அடிமையாக காரணமாக அமைகின்றது.

சில பெற்றோர்களின் அறியாமையினாலும் கல்வியறிவு இன்மையினாலும் பிள்ளைகளை கண்டுகொள்ளாது விடுகின்றனர். இதன் விளைவாக முகநூல் அடிமையாக மாறும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகமாகின்றது. இதனால் இவர்கள் தமது கல்வியில் அக்கறைகாட்டாமல் நகரத்திற்கு நகரம், நாட்டிற்கு நாடு நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டு தமது ஆளுமையில் பிறழ்வுகளை உருவாக்க தெரிந்தோ ,தெரியாமலோ அடித்தளம் அமைத்துக் கொள்கின்றனர்.

நண்பர்கள், காதலர்கள், கணவன்- மனைவி; தமது முகநூலின் கடவுச் சொற்களை ஒருவருக்கொருவர் உறவு என்ற நம்பிக்கையில் தெரியப்படுத்துவது உண்டு.சிலர் இதனைத் தவறான வழிகளில் பயன்படுத்தி தவறான செய்திகளை வேறு ஒருவரின் முகநூல் முகவரியில் இருந்து அனுப்புதல் அல்லது இன்ரநெற் கடைகளில் முகநூலைப் பார்த்து விட்டு அதிலிருந்து உரிய முறையில் ஏனையவர்கள் பார்க்க முடியாதவாறு வெளிவராமை என்பன நிகழும் போது குறித்த முகவரியிலிருந்து தவறான படங்கள் ஆபாசமான விடயங்கள் மற்றும் மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் விடப்படுதல் என்பனவும் இடம்பெறுகின்றன.

பணத்தை பெற்றுக்கொள்ளவோ, தனிப்பட்ட தேவைகளுக்காகவோ ஒரு தனிப்பட்ட விடயங்கள் தொடர்பான இரகசிய வீடியோக்கள் மற்றும் ஏனைய அச்சுறுத்தல் தகவல்கள் விடப்படுகின்றன. இவ்வாறு முகநூலில் பகிரப்படும் புகைப்படங்கள் தவறான முறையில் மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுதல் குறிப்பாக பெண்பிள்ளைகளின் புகைப்படங்கள் துஷ;பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுதல் என்பனவும் குறிப்பிடத்தக்க ஓர் விடயமாக அமைகின்றது.

சமகாலத்தில் முகநூலை தனியார் மற்றும் பொது விழிப்புணர்வு அமைப்புகளும் பயன்படுத்துகின்றன. அந்த அடிப்படையில் இவைகளில் சில நிறுவன ஊழியர்கள் தமது பெயரைப் பிரபல்யம் செய்ய வேண்டி சில ஒழுக்கத்திற்கு புறப்பான தகவல்களை புகைப்படங்களுடன் வெளியிடுதல் மிகவும் தவறானதும் அது குறித்த நபர் அல்லது அவரை சார்ந்தவர்களை பாதிக்கப்படக்கூடிய விடயமாகும். உதாரணம்ளூ காணாமல்ப் போன 18 வயது பெண்பிள்ளையை கண்டுபிடித்தோம் என குறித்த பெண்ணின் புகைப்படத்துடன் வெளியிடுதலும், பாலியல் கொடுமை,சிறுவர் துஸ்பிரயோகம் என்பவற்றிற்கு உட்பட்வரின் படத்தை தரவேற்றி அதை விபரித்து கருத்துத் தெரிவித்தலும் காணக் கூடியதாக உள்ளது.இது தனிநபர்,சமூகத்தில் மறைமுகமான தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

அனேகர் முகநூலில் தமது கருத்துக்களைப் பகிரும் போது தமது தனித் திறமைகளை காண்பிக்க வேண்டும் என எண்ணி பல்வேறான சுய விருப்பங்களை பிறரது கருத்துகளுக்கு விளக்கம் அளிப்பதற்காவோ அல்லது கேலி செய்வதற்காகவோ கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இத்தகைய தன்மை பிறரது கோபத்தையும், எரிச்சலையும், கவலையையும் தூண்டுவதாக அமைந்து விடுகிறது. ஒருவருக்கு ஒருவர் போட்டியிட்டு நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் தனக்கு விரோதமானவர்களை அல்லது பிடிக்காதவர்களை பற்றி தவறான கருத்துக்களை அவர்களது தனிப்பட்ட விடயங்களை முகநூலில் அனுமதியின்றி பதிவு செய்து அவர்களை அவமதித்தல் என்பனவும் முகநூல்க் குற்றங்களாகவே கருதமுடியும்.

இங்கிலாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி முகநூல் தொடர்பான குற்ற செயல்கள் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளன எனவும் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை முகநூல் தொடர்பான குற்றச் செயல் ஒன்று பொலிசாரிடம் பதிவாகி உள்ளன எனவும் சென்ற ஆண்டில் மட்டும் 12,300 குற்றங்கள் பதிவாகி உள்ளன என குறித்த ஆய்வு கூறியுள்ளது. இதனைப் போன்று கொலைகள், பாலியல் சுரண்டல்கள், வக்கிரங்கள் மற்றும் வன்போக்கு நடத்தைகள் என்பனவும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. குற்றவாளிகள் தம்மை; இனங்காட்டிக் கொள்ளாமல் இருக்க தவறானதும் போலியானதுமான முகவரிகளை உருவாக்கி தவறுகளைத் துணிகரமாகச் செய்கின்றனர்.

முகநூல் , டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.கனடாவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக அந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது. அப்போது 25மூ மாணவர்கள் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக முகநூல் , டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தியது தெரியவந்தது.தமது இருப்பபை அல்லது சுயத்தை நிலைநாட்ட,வெளிப்படுத்த அதிகமானவர்கள் சமூக வலைத்தளங்களை நாடுகின்றனர்.சிலருக்கு இதனால் மனதிருப்தி ஏற்படடாலும் அது ஒர் வகை மனப்பிரம்மைதான்,தங்களின் தீராத மனக்குறைகளை தீர்ப்பதற்காக இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக சமூக வளைத்தளங்களை பயன்படுத்தினால் நாளடைவில் அதுவே மனநோயாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் (Cyber Psychology) சைபர் சைக்கொலஜி என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

முகநூல் காதல் தோல்விகள் நண்பர் முரண்பாடுகளாலும், ஒரு தலைக் காதல் போன்ற விடயங்களாலும் தவறான கருத்துப் புரிதல்களாலும் சுயம் இழந்தவர்களாக அனேகர் தற்கொலை செய்து கொள்கின்றமையும் தம்மைதாம் ஒதுக்கி சமூக இடைவினையைக் குறைத்துக் கொள்கின்ற பண்பினையும் அதிகம் காணக்கூடியதாக உள்ளது. அனேகர் தமது சுய மதிப்பினை அதிகரிக்கும் நோக்கில் முகநூலில் இணைந்து கொண்டாலும் முடிவில் அதனைக் குறைத்துக் கொள்கின்ற பண்பினையும் காணமுடிகின்றது. தேவையற்ற கருத்துப்பரிமாற்றங்கள் என்பன பிரச்சினைக்குரியதாகவே அமைகின்றது. அனேகர் அரசியல் நாட்டம் உள்ளவர்கள் அரசியல் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களை விபரீதமான முறையிலும் வன்முறையாகவும் கண்டிப்புடனும் பதிவு செய்தல் விமர்சனம் செய்தல் என்பன அரசியல் அமைப்புக்களை கேலி செய்வதுடன் அரசு மற்றும் அரசியல் தந்திரங்களின் தாக்கங்களுக்கும் உள்ளாகின்றனர். இதன் விளைவாக தனிநபர் மாத்திரமல்லாது குடும்பம் மற்றும் சமூக அமைப்புக்களும் தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் சூழல் ஏற்படுகின்றது.

இவ்வாறான தாக்கங்கள் விளைவுகள் இருக்கின்ற போதும் முகநூல் பாவனை முற்றாக தடைவிதிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது இதன் கருத்தல்ல ஏன் எனில் தகவல் பரிமாற்ற வேகம், நண்பர்களின் ஒற்றுமை, வாழ்த்துக்கள், உதவிகள் வழங்கல், மற்றும் பாராட்டுக்கள், ஊக்கப்படுத்தல்கள் எனவும் பல்வேறு சமூக அமைப்புகளின் ஒருமைப்பாடுகள், இணைந்த செயற்பாடுகள் மற்றும் பல்வேறான விழிப்புணர்வுகள் என்பனவும் இம் முகநூல்ப் பாவனையில் பயனுள்ள விடயமாக நடைமுறைப்படுத்துவதும் உண்டு.

எனவே நன்மைகளை மட்டும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுவதுடன் முன்கூறப்பட்டதான தவறுகள் சமூகத்தால் ஏற்க முடியாத சமூகவிரோத நடத்தைகள், வக்கிரங்கள் தவிர்க்கப்படுவதுடன் பயனுள்ள விடயங்கள் முகநூல்ப் பாவனையில் மேலும் ஊக்கப்படுத்தல் வரவேற்கக்கப்படக் கூடியதாக அமையும். இவற்றினைக் கருத்தில்க் கொண்டு முகநூல்ப் பாவனையாளர்கள் விழிப்புணர்வுடன் செயற்படும் போது ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும் சமூகமும் பாதிக்கப்படுவது குறைக்கப்படும் என்பது உண்மையே.

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click