Skærmbillede 679கலாநிதி.க.கஜவிந்தன்.

சிரேஸ்ட உளவியல் விரிவுரையாளர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

இன்றைய மாணவர்களே நாளைய சமுதாயத்தை கட்டியெழுப்புபவர்கள் ஆவார். சமுதாயத்தை வழிகாட்டுவதில் அன்று குருகுல கல்வி இன்று பாடசாலையாகும். ஒரு பாடசாலை திறக்கப்படுகின்ற வேளையில் பல சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன. அந்த வகையில் கற்றல் - கற்பித்தலுடன் தொடர்புடைய மையமாக வகுப்பறையே விளங்குகின்றது. தனிமனிதன் ஆளுமையின் நிறைவான, இசைவான செயற்பாட்டை வெளிப்படுத்த வகுப்பறை உதவுகின்றது.

மனக் கோளாறுகள் இல்லாமல் தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியையும், பயனையும் விளைவிக்கும் வகையில் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பொருத்தப்பாட்டுடன் துலங்குவதே ஆரோக்கியமான உளநலம் ஆகும். மாணவர்களின் உளநலம் சிறப்பாக அமைவதற்கும், அவர்கள் கற்றலுடன் பொருத்தப்பாடடைவதற்கும் வகுப்பறையானது தகுந்த முறையில் அமைந்திருத்தல் வேண்டும். வகுப்பறையிலே பல்வேறு நிலையிலுள்ள மாணவர்கள் காணப்படுவார்கள். ஆகவே தான் வகுப்பறையானது உளத்தை வளமாக்குவதற்கான கருவியாக காணப்பட வேண்டும். வகுப்பறையின் அமைவிடம், வகுப்பறைச் சூழல், மாணவர்களின் எண்ணிக்கை, கற்பித்தல் நுட்பங்கள், ஆசிரியர்-மாணவர்களின் இடைவினைகள், மாணவர்களின் தனியாள் வேறுபாடுகள் போன்ற பல காரணிகள் மாணவர்களின் உளநலத்தை பேணுவதாகவும், பாதிப்பதாகவும் காணப்படுகின்றன.

சிறந்த வகுப்பறைச் சூழலானது மாணவரின் உளநலத்தை பேணுவதோடு, உளவிருத்திக்கும் உதவுகின்றது. அதே நேரம் சிறிய பரப்பில் அதிகளவு மாணவ எண்ணிக்கை, நெருக்கம், இரைச்சல் போன்றவை மனநலத்தை பாதிக்கும். காற்றோட்டமானதும், ஒலி-ஒளி வசதிகளை உடையதுமான வகுப்பறை கிரகிப்புதிறன், ஞாபகத்திறனை ஏற்படுத்துவதுடன் மகிழ்வையும், புரிதலுடன் கற்றலுக்கும் உதவுகின்றது.

ஆசிரிய-மாணவ உறவுமுறை, ஆசிரியர்களின் கற்பித்தல் முறை போன்றவை வகுப்பறையிலே மாணவர் உளநலத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. ஊக்கிகள், வெகுமதி-தன்டணை, மீள்வலியுறுத்தல் ஆகியவை உளநலத்தை விருத்தி செய்கின்றன. பாடங்கள் திட்டமிட்டு, ஒழங்கமைக்கப்பட்ட முகாமைத்துவ பணியாக அமைதல் வேண்டும். வகுப்பறையானது புத்தகப்படிப்பை மட்டும் கொண்டமையாது கலாச்சார, பழக்கவழக்கங்கள், ஒழுக்கங்களை கொண்டிருத்தல் வேண்டும். சிறந்த கற்றல், ஒழுக்கப் பண்பாடுகளுக்கு நேர் மீள் வலியுறுத்தல்களாக வெகுமதிகள் வழங்கப்பட வேண்டும். காயங்கள் ஏற்படுத்தும் தண்டனைகள் தவிர்க்கப்படுவது உள நலத்தை பாதுகாக்க கூடியதாகும்.

வகுப்பறையில் தனியாள் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில மாணவர்கள் திறன் கூடியும், குறைந்தும், உடல் குறைபாடுகளை கொண்டவர்களாகவும் தீவிரமான ஒழுக்கப் பிரச்சினை கொண்டவர்களாகவும் இருப்பர். வகுப்பறையில் போதிய கல்வி பெறாத மீத் திறக் குழந்தைகள் பகற் கனவு காணல், அக நோக்குடைமை (Introversion) போன்ற மனநலம் குன்றிய நடத்தைகளில் ஈடுபடுவர். பிற்பட்ட பிள்ளைகள் வகுப்பறையில் கவனிக்கப்படாத விடத்து ஆளுமை சமநிலையின்மை, நெறிபிறழ்வு, சமூக எதிர்ப்பு நடத்தையை தோற்றவிப்பார்கள். விஷேட தேவை உடைய மாணவர்கள் சாதாரண வகுப்பறையில் மனவெழுச்சிப் பிரச்சினைகளை எதிர் நோக்குவார்கள். அவர்களுக்கு விஷேட வகுப்பறைகளை உருவாக்கி பயிற்சிகள் வழங்குவதால் உளநலம் பாதுகாக்கப்படும்.

சூழ்நிலை காரணிகளால் எழும் பிற்பட்ட நிலையானது வகுப்பறையில் மாணவர்களின் உள, உடல் நலத்தை பாதிக்கின்றது. வறுமை, காலநிலை, நோய் நிலைமைகள், பசி போன்ற காரணிகளால் வகுப்பில் நித்திரை கொள்ளுதல், கிரகிக்காமை, வெறுப்புணர்வு, சில பாடங்களில் பின் தங்கிய நிலை காணப்படும். இதனால் மாணவர்கள் அதிக உள நெருக்கீட்டிற்கு உள்ளாவதாக கோனல், மென்றோ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வகுப்பறையானது செயற்பாடுகளுடன் கூடியதாக இருத்தல் சிறந்தது (Action classroom) தொடர்ச்சியான பாடங்களினால் மாணவர்கள் எரிச்சலும், அலுப்பும் கொள்ளக் கூடும். அவ்வாறான வேளைகளில் மாணவர்களின் செயற்பாட்டை மாற்றி அமைக்கலாம். குழு விளையாட்டுக்கள், பிரச்சினை தீர்க்கும் நுட்பங்களை விளையாட்டுக்களின் ஊடாக வழங்குதல், நகைச்சுவை, கலைப்படைப்புக்கள் போன்றவற்றின் மூலம் செயற்படுத்தலாம். வகுப்பறை சூழலில் குழு இணக்கம் இன்றியமையாததாகும். இணக்கமின்மையானது போட்டி, பொறாமை, அடைவு இலக்கினை அடைவதற்கான தடை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. குழுக்களோடு இணைந்து போக முடியாதவர்களிடையே தாழ்வுணர்ச்சி ஏற்படுகின்றது. இவை மேடைக் கூச்சம், கருத்துக்களை முற்படுத்துவதிலும் தடையாக அமைகின்றன.

தற்காலத்தில் கல்வியின் நோக்கங்கள் விரிவடைந்து ஆசிரிய - மாணவர்களின் பொறுப்புக்களும் விரிவடைந்துள்ளன. மாணவர்கள் ஆசிரியர்களாலும், பெற்றோர்களாலும் கற்பதற்கு அதிகமாக திணிக்கப்படுகின்றார்கள். விரும்பிய துறையில் பிரவேசிப்பதற்கு தடைகளும், வசதிக்குறைவும் காணப்படுகின்றது. உதாரணமாக தரம் ஐந்தில் நடைபெறும் புலைமைப்பரீட்சையானது மாணவர்களுக்கு பெரும் சவாலாக அமைகின்றது. இதனால் மாணவர்கள் உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர். வகுப்பறையிலே ஆசிரியரின் உளநலம், வழிகாட்டும் தன்மை, பயன்படுத்தும் சொற்பிரயோகம், ஆடை அணியும் முறை, கடமை உணர்வு போன்ற ஆசிரியரின் அணைத்து பண்புகளுமே மாணவரின் உளநலத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. உள விருத்தியில் அதிக பகுதி வகுப்பறையேயாகும். வகுப்பறையை வழிநடத்துபவர் ஆசிரியரே. மாணவர்களிடையே வெறுப்பும், அக்கறையும் இல்லாத ஆசிரியர்கள் மாணவர்களால் ஏற்கப்படுவதில்லை. எமது நாட்டில் வகுப்பறைகளில் கற்பித்தல் கருவியாக மொழியே காணப்படுகின்றது. இந் [5/6600 Dysgraphia, Dyscalculia, Dyslexia GUIGON 6606060D8 GTIGÜ 2_66 LDI 6001 6UİT 86 (THUG பிரச்சினையான விடயமாகவுள்ளது. எனவே பல்வேறு புலன்களின் வழியே (multi sensory approach) கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும். இதனால் கற்றல் ஈடுபாடுடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக கற்கும் நிலை ஏற்படும். மேலும் தொனி , கற்பிக்கப்படும் விடயத்தில் அழுத்தம், காட்சிப்படுத்தல், செவிமடுத்தல், நேருக்குநேர் பார்த்தல் போன்றவை சிறந்த புலன் வழி தொடர்பாடல்களாகும். இவை கற்றல் பொருத்தப்பாட்டிற்கும், உளநலன் பாதுகாப்பிற்கும் உதவுகின்றன.

வகுப்பறையிலே மாணவர் உளநலத்தை பேணுவதில் வகுப்பறைச்சூழல், ஆசிரியரின் கற்பித்தல் முறை, கற்பித்தல் கருவிகள், சகபாடிகள், காலநிலை, பொருளாதாரம் போன்ற பல உள்ளார்ந்த, வெளியார்ந்த காரணிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்க முறுகின்றன இவ் விடயங்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக ஆராய்ந்து சரியானதும் நுட்பமானதுமான வகுப்பறை சூழலை உருவாக்கினால் மாணவர் உளநலத்தை விருத்தி செய்து கற்றலோடு பொருத்தப்பாட்டை செய்யலாம் என்பதில் ஐயமில்லை.

 

உசாத்துணை நுால்கள்

Teaching Students with Attention-Deficit/Hyperactivity Disorder: A Resource Guide for Teachers

Teaching Students with Mental Health Disorders: Eating Disorders (2000)

Teaching Students with Mental Health Disorders: Depression (2001)

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click