01 okஅறிமுகம்

வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள்; தூங்குவார்கள்; சுற்றத்தை விட்டு விலகுவார்கள்; நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள்; வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்."

மன அழுத்தம் (Depression ) ஒரு நோய். இன்றைய காலகட்டத்தில் நாளிதழ்களில் அதைப் பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. மன அழுத்தம் என்றால் என்ன? யாரெல்லாம் அதன் பாதிப்புக்கு உள்ளாகக் கூடும்? அதற்கான சிகிச்சை முறை என்ன? பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளன.

முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல; சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும் உண்மையை எதிர்கொள்ளும்போது வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும்; தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும்.

ஏமாற்றங்களும் பிரிவுகளும் இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால் மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் சோகத்தில் தேங்கிவிடும். இந்தத் தேக்க நிலை அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால் மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.

மன அழுத்தம் என்றவுடன் அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள்; தூங்குவார்கள்; சுற்றத்தை விட்டு விலகுவார்கள்; நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள்; வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.

ஒரு செயலைச் செய்வதற்கான ஆற்றல் குறைந்தவர்களாகவோ ஆற்றல் இல்லாதவர்களாகவோ இருப்பார்கள். வழக்கத்துக்கு மாறாக அதீத மறதியுடன் ஒருவிதக் குழப்ப மனநிலையில் இருப்பார்கள். கோபமும் வருத்தமும் பயமும் மிகுந்து ஒருவித விளிம்பு நிலையில் உணர்ச்சிகள் வெடித்துவிடும் நிலையில் அவர்கள் இருப்பார்கள். தனக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் எண்ணமும் அவர்களிடம் இருக்கும். நீண்டகால நோய்கள் பதற்றம் எண்ணச் சுழல் நிர்ப்பந்த நோய் மனச்சிதைவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளோடு மனஅழுத்தத்துக்குத் தொடர்புண்டு. இது வழக்கமாக இரண்டாண்டுகளோ அதற்கு மேற்பட்ட ஆண்டுகளோ நீடிக்கலாம்.

 மன அழுத்த பாதிப்புக்கு உள்ளானவர்கள்

முன்னர் செய்திகளில் அதிகமாக இடம்பெறாமல் இருந்த இந்த மன அழுத்தம் கடந்த பத்தாண்டுகளில் அபரிமிதமான அளவில் அதிகரித்துள்ளது. 30 கோடிக்கும் அதிகமான மக்கள் அதாவது உலக மக்கள்தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு (WHO ) 2015–ல் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன. மன அழுத்தத்தால் ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலக அளவில் மனிதர்களிடமுள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்தில் உள்ளது. முன்கூட்டிய மரணத்துக்கான காரணங்களில் பத்தாவது இடத்தில் மன அழுத்தம் உள்ளது. 15 வயதுக்கும் 29 வயதுக்கும் உட்பட்டவர்களின் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணம் தற்கொலை. தற்கொலைக்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உலகில் ஒரு நிமிடத்துக்கு இருவர் இதனால் உயிர் இழப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தத்தைப் பொறுத்தவரை உலகில் அமெரிக்காவே அதிக மன அழுத்தமுள்ள மனிதர்களைக் கொண்ட நாடாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கொலம்பியா உக்ரைன் நெதர்லாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. ஜப்பான் நைஜீரியா சீனா ஆகிய நாடுகளில் மனஅழுத்த பாதிப்பு குறைந்த அளவில் உள்ளது.

 

வேறுபாடுகள்

கீழை நாடுகளில் குறைவாகவும் மேலை நாடுகளிலும் அதிகமாகவும் மன அழுத்தத்தின் தாக்கம் இருப்பதால் அது மேலைநாடுகளின் பிரச்சினை என்றோ ஆடம்பரத்தின் வெளிப்பாடு என்றோ சிலரால் கருதப்படுகிறது. துப்பாக்கி முனையில் நிறுத்தப்படும்போதோ அடுத்தவேளை உணவுக்கே வழியில்லாத போதோ மன அழுத்த்தைப் பற்றியெல்லாம் சிந்திக்க நேரமிருக்காது என்பது இந்த வாதத்தின் சாரம்.

ஆனால் உண்மை அதுவல்ல. பணக்காரருக்கு மன அழுத்தம் இருக்கும் ஏழைக்கு மன அழுத்தம் இருக்காது என்ற கூற்றைவிடப் புள்ளிவிவரங்கள் மிக எளிமையாக உள்ளன. பெரும்பாலான நாடுகளில் மன அழுத்தம் ஒரே அளவில்தான் உள்ளது என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வடக்கு ஆப்பிரிக்க நாடுகள் மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றில் இந்தப் பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளதாக அந்த முடிவுகள் அறுதியிட்டுக் கூறுகின்றன. மேலும் மன அழுத்தத்தின் பாதிப்பு ஆப்கானிஸ்தானில் மிக அதிகமாகவும் ஜப்பானில் மிகக் குறைவாகவும் இருப்பதாக அவை தெரிவிக்கின்றன.

வளர்ச்சியடையாத நாடுகளில் மன அழுத்தம் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் கட்டமைப்பு இருப்பதில்லை. அங்கு வாழும் மக்களுக்கு மன அழுத்தத்தை ஒரு குறைபாடாகக் கருதும் மனமுதிர்ச்சி இருப்பதில்லை. தங்கள் உணர்வுகளையும் எண்ண ஓட்டங்களையும் வெளிப்படையாகப் பேசினால் சமூகத்தில் தங்களுக்குக் களங்கம் ஏற்படும் என்று அஞ்சி வெளியில் உதவி பெறத் தயங்கி அவர்கள் தங்கள் குறைபாட்டைத் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்பவர்களாக உள்ளனர். இவற்றின் காரணமாகவே வளர்ச்சியடையாத நாடுகளில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருப்பது போன்ற தோற்றம் உள்ளது.

 

மன அழுத்தக் காரணிகள்

மனநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பேய் பிடித்துள்ளது என்று கருதி சமூகத்திலிருந்து விலக்கிவைப்பதோ மந்திரவாதிகள் எனக் கருதி தூக்கிலிடுவதோ முன்பு வாடிக்கையாக இருந்தது. அந்தக் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இன்று மனநோய் குறித்த விழிப்புணர்வில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் மன அழுத்தத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இன்றும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறார்கள்.

நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்து சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்குமாறு அவர்களுக்கு எளிதில் அறிவுரை வழங்கப்படுகிறது. அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர்களிடம் அதிக வேலைகள் சுமத்தப்படுகின்றன. ஆனால் மனநல மருத்துவர் டிம் காண்டோபெர் இதற்கு நேரெதிராக மன அழுத்தத்தை 'வலுவானவர்களின் சாபம்' என்று சொல்கிறார்.

அவரது கூற்றுப்படி மூளையில் இருக்கும் லிம்பிக் அமைப்பு நமது உடலின் செயல்பாடுகளையும் மனநிலையையும் கட்டுப்படுத்துகிறது. வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளுக்குப் பின் நமது மனநிலையை இந்த அமைப்பே சமன்படுத்துகிறது. நரம்புகளாலான லிம்பிக் அமைப்பில் செரடோனின் நொராடிரினலின் என்ற இரண்டு ரசாயனங்கள் தகவல்களைப் பரிமாறும் வேலையைச் செய்கின்றன. மன அழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு இந்த ரசாயனங்களின் சுரப்பு குறைவாக இருக்கும். இதன்படி பார்த்தால் மன அழுத்தம் என்பது மனநோய் அல்ல; அது உடலின் நோய். 'பூஞ்சை மனம் கொண்டவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகும்போது எளிதில் உடைந்து மனச்சோர்வில் வீழ்ந்து விடுகிறார்கள். உறுதியான மனம் கொண்டவர்கள் தங்கள் முயற்சிகளின் அளவை இரண்டு மடங்காக்கி லிம்பிக் அமைப்பு முற்றிலும் குலையும்வரை வீழாமல் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முயல்கிறார்கள்' என்று காண்டோபெர் கூறுகிறார். ஆனால் இந்தக் கூற்று அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

 நிதி நெருக்கடி தனிப்பட்ட இழப்புகள் உறவுகளின் பிரிவுகள் நீண்ட நாள் நோய் தாங்க முடியாத வலி போதைப் பொருட்களின் பயன்பாடு கடந்த கால அதிர்ச்சிகள் அவமானங்கள் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படக்கூடும் என்பதை மருத்துவ உலகம் இன்று ஏற்றுக்கொண்டு உள்ளது. மேலும் அதீத மன அழுத்தமோ சிலவகை நோயோ நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பைத் தேவைக்கு அதிகமாக இயங்கவைக்கும். இதன் காரணமாக மூளையில் வீக்கமும் அதன் காரணமாக மன அழுத்தமும் ஏற்படும் என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது.

 

சிகிச்சைகள்

உடலின் ரசாயனக் குறைப்பாட்டால் நேரும் மன அழுத்தத்தைத் தீவிர மன அழுத்தம் என்றும் வாழ்வின் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை மிதமான மன அழுத்தம் என்றும் மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

'தீவிர மன அழுத்தத்துக்கு இருவகை அழுத்தம் குறைக்கும்  மருந்துகள் உள்ளன. ஒருவகை மருந்து நோயுற்றவரின் பரபரப்பைக் கட்டுப்படுத்தி அவரை அமைதிப்படுத்தும். இரண்டாவது வகை மருந்து சோர்வையும் அசதியையும் நீக்கி சுறுசுறுப்பை அதிகரிக்கும். தற்கொலை எண்ணங்களோ முயற்சிகளோ அதிகமாக இருக்குமேயானால் அப்போது நோயுற்றவர்களை மருத்துவமனையில் சேர்த்துக் கண்காணிக்க வேண்டும். எவ்வளவு காலம் மருந்து உட்கொள்வது என்பதை மருத்துவரே தீர்மானிக்க முடியும்.

இந்த மருந்துகளால், நாக்கு உலர்தல், மலச்சிக்கல், பசியின்மை, அதிகப் பசி, லேசான மயக்கம், வயிற்றில் எரிச்சல், மாதவிலக்கு தள்ளிப்போகுதல், மாதவிலக்கில் அதீத , குறைவான ரத்தப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என அவர் கூறுகிறார். மேலும், தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டவருக்கு, ஆரம்ப கட்டங்களில் மன ஆலோசனை பயனளிக்காது. ஆனால், அவர்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்த ஆலோசனை, அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவை. மன அழுத்தத்தின் அறிகுறிகள் கட்டுக்குள் வந்தபிறகே மன ஆலோசனை நோயாளிகளுக்கு கைகொடுக்கும் என்கிறார் அவர்.

 மிதமான மன அழுத்தத்துக்கு மன ஆலோசனை மிகவும் முக்கியம். அதனால் ஏற்படும் உறக்கமின்மை, பதற்றம் ஆகிய இரண்டையும் குறைப்பதற்காக ஆரம்ப கட்டங்களில் மாத்திரைகள் தேவைப்படும். தூக்கம் இயல்பான நிலைக்குத் திரும்பிவிட்டால், மாத்திரைகளை நிறுத்திவிடலாம். ஆழ்நிலை உறக்க வைத்தியத்தில் செய்யும் கருத்தேற்றம், மிதமான மன அழுத்தத்துக்கு நல்ல பலன்களைத் தரும்.

 

மன அழுத்தத்தின் போக்குகள்

மன அழுத்தத்துக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும், உலகில் மன அழுத்தம் குறைந்தபாடில்லை. மனிதர்களின் மீதான அதன் பிடி இறுகிக்கொண்டேயிருக்கிறது. 2015-க்குப் பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 1945-க்குப் பிறகு பிறந்தவர்கள் 10 மடங்கு அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் உலக அளவில் தற்கொலை விகிதம், 25 சதவீதம் குறைந்துள்ளது. 1990-ல் 1,00,000 பேருக்கு 14.55 என்ற நிலையிலிருந்த தற்கொலை விகிதம், 2016-ல் 1,00,000 பேருக்கு 11.16 ஆகக் குறைந்துள்ளது.

மன அழுத்த நோய்க்கான சிகிச்சைக்குப் பின்னும் நோயாளிகள் முழுவதும் குணமடைவது இல்லை என்பதாலேயே இந்நோய் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மன அழுத்தமும் தனிமையும் இந்த நோயின் உயர்வுக்கான முக்கியக் காரணங்கள். 60- 74 வயதுடையவர்கள் மற்ற வயதினரைவிட மன அழுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். உலகில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் இந்த நோய் அதிகரித்து வருகிறது.

கடந்த 25 ஆண்டுகளில் புதிதாக எந்த அழுத்தம் குறைக்கும் மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், மன அழுத்தத்தைக் குணப்படுத்த மருந்துகளைத் தாண்டி சிந்திக்கும் நிலைக்கு மனநல மருத்துவர்கள் தள்ளப்படுகிறார்கள். கீட்டமைன், சைலோசைபின் போன்றவற்றைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் வருங்காலம் குறித்து நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. மரபணு மாறுபாடுகள் குறித்த சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள், மன அழுத்தத்துக்கான புதிய தலைமுறை சிகிச்சைகள் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

குறைவான நோய்த் தடுப்பாற்றலுக்கும், மனச்சோர்வு, மூளையில் வீக்கம் ஆகியவற்றுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றியுமான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இது சர்ச்சைக்குரிய ஆராய்ச்சியாக இருப்பினும், இதன்மூலம் புதியவகை சிகிச்சை முறைகள் உருவாக சாத்தியம் உள்ளது. மருந்துகளுக்கு மாற்றாக, உளவியலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் அவசியத்தை இன்று பல நாடுகள் உணர்ந்துள்ளன.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தாமாகவே முன்வந்து தமது பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசி, உதவி கோரும் அளவுக்கு ஓர் ஆரோக்கியமான சமூகத்தை ஏற்படுத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. இந்தப் பொறுப்பை நாம் உணர்ந்தால், மன அழுத்தத்தால் களையிழந்த வாழ்வுக்கு மீண்டும் உயிர்ப்பூட்ட நம்மால் முடியும்; நம்புவோம். வாழ்வுக்கு உயிர் கொடுப்போம்.

 

ஆதாரம் : தி.ஹிந்து தமிழ்

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click