Skærmbillede 126ஆசிரியர் திரு.சு.இக்னேசியஸ் கிளனி

உள ஆற்றுப்படுத்தலும், தொழில் வழிகாட்டலும்

யாஃ சென்.ஜேம்ஸ் ம.வி

யாழ்ப்பாணம்.

 

மனங் கொள்வோம் - ஆயத்தமாவோம்.

கோவிட்-19 வைரஸினால், உலகம் முழுவதும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில், இலங்கையர்களாகிய நாமும், அதனை எதிர் கொள்ளும் வகையில் அரசின் முன்னேற்பாடுகளுக்கும், சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலுக்குமமைய பாடசாலைகள், அரச நிறுவனங்கள், கைத்தொழிற்பேட்டைகள் மட்டுமன்றி, தனியார்துறையினர், நாளாந்தம் உழைத்து உண்போர் என யாவருமே வீடுகளுக்குள் முடங்கியிருந்ததன் விளைவாக அதன் முதல் அலையை வெற்றிகொண்டோம் எனக் கூறுவது பொருத்தமானது

. ஏனெனில் வளர்முக நாடுகள் கூட இந்த வைரஸினால் திண்டாடி பொருளாதாரச் சரிவுகளை எதிர் கொண்ட வேளையில், இலங்கையர்களாக நாம் அதனை வெற்றி கொண்டிருக்கின்றோம். அதன்படி நாடு படிப்படியாக வழமைக்குத் திரும்பிய நிலையிலேயே நாம் கோவிட்-19 வைரஸின் அடுத்ததடுத்த பரம்பலை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. இதனால் நாம் பல நெருக்கடி நிலைகளைச் சந்திக்க வேண்டியேற்பட்டது. குறிப்பாக பாடசாலைகளைப் பொறுத்தவரையில் நாடளாவியரீதியில் மார்ச்-12ல் மூடப்பட்டு, கால வோட்டத்தில் திறக்கப்படுவதும், கோவிட்-19 நெருக்கடிகள் அதிகரிக்கின்ற வேளைகளில் மூடப்படுவதும் என 2020ம் ஆண்டுக்கான கல்வியாண்டு நிறைவடைந்திருக்கிறது.

இப்போது கோவிட்-19 வைரஸ் தொற்றின் சவாலை எதிர் கொண்டு எமது நாளாந்த வாழ்வை நகர்த்திச் செல்வதற்கு எம்மைப் பழக்கப்படுத்தி, இயல்பு நிலைக்கு படிப்படியாகத் திரும்பும் நிலையில், 2021ல் புதிய கல்வியாண்டிற்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்பாடாகியுள்ளது. அதன்படி, இலங்கையில் அரச பாடசாலைகள் மட்டுமன்றி, முன்பள்ளிகளும் மீளத்திறக்கப்படவிருக்கின்றது. ஏற்கனவே தொழிலுக்குச் செல்கின்ற பெற்றோர் தமது பிள்ளைகளைப் பராமரிப்பதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், இந்தச் செய்தி அவர்களுக்கு ஆறுதல் தரக்கூடியதொன்றே. அதேவேளை பாடசாலை மீள ஆரம்பிக்கின்ற நிலையில் ஆசிரியர்களும், குறிப்பாக மாணவர்களும் பல்வேறு சவால்களை எதிர் கொள்ளலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. ஏனெனில் முக்கிய பரீட்சைகளை எதிர்கொள்ளுகின்ற மாணவர்களை, மிகக் குறுகிய காலத்தில் தயார்ப்படுத்த வேண்டிய பொறுப்பில் ஆசிரியர்களும், பரீட்சைகளுக்குத் தயாராக வேண்டிய தவிர்க்க முடியாத நிலையில் மாணவர்களும் பல சவால்களை உடல்-உள ரீதியாக எதிர்கொள்வர். அந்த வகையில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில் பரீட்சையை எதிர்கொள்ளுகின்ற மாணவர்கள் மட்டுமன்றி, ஏனைய தரங்களில் கற்கும் மாணவர்களும், அவர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களும், அவர்களின் பெற்றோர்களும் உளரீதியாக தம்மைத் தயார்படுத்துவதனூடாக மீண்டும் ஆரம்பிக்கும் பாடசாலையின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும்.

மாணவர் மையக்கல்வி முறைமை நடைமுறையிலிருந்தாலும், பொதுவாகப் பரீட்சையை நோக்காகக் கொண்டுதான் எமது கலைத்திட்ட முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், ‘விட்டதைத் பிடித்தல்’ என்ற போக்கு பாடசாலைகளில் மட்டுமன்றி, தனியார்கல்வி நிறுவனங்களிலும் முனைப்புக் காட்டத்தொடங்கும் போது இதற்கு முகங்கொடுக்க வேண்டிய மாணவர்களும், பெற்றோர்களும் உளச் சமநிலையை இழப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். இதனைச் சரியான வகையில் நாம் அணுகாதவிடத்து, மேற்குறித்த மூன்று வகையினருக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு, முரண்பாட்டுச் சூழ்நிலை உருவாகும். இந்நிலையில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கின்ற போது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்கொள்ளக் கூடிய சவால்களைக் கையாளுவதற்கான சிலவழிவகைகளைப் பற்றிப் பேசுவதாக இப்பகுதி அமைகின்றது.Skærmbillede 155

பெற்றோர்கள்:- பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுதல் என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு விருப்பத்திற்குரிய தொன்றாக இருப்பதில்லை. ஏனெனில் சாதாரணமாக பாடசாலையின் தவணை விடுமுறையை அனுபவிக்கின்ற நாட்களிற்கூட புதிய தவணை ஆரம்பிக்கின்ற போது விரும்பமின்றியே பாடசாலைக்கு வருகை தருவது அவர்களிற்குரிய இயல்பாகும். அவ்வாறான நிலையில் அதிக விடுமுறையை அனுபவித்த நிலையில், விருப்பத்துடன் பாடசாலைக்கு வருவார்களென்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கமைய மீளத் திறக்கப்படுகின்ற பாடசாலைகளில் கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளைத் தவிர ஏனைய மாணவர்சார் செயற்பாடுகளுக்குத் தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையானது, மாணவர்களின் வரவு வீதத்தை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புக்களை அதிகம் ஏற்படுத்தலாம். இவ்வாறான நிலையில் தமது சகபாடிகளைச் சந்திக்கும் நோக்கோடு பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களும் கற்றல் செயற்பாடுகளில் காட்டும் ஆர்வம் குறைவானதாகவே இருக்கும்.

மேலும் கடந்தகால பாடசாலை அனுபவங்கள் கசப்பாகவுள்ள மாணவர்கள், பாடசாலையைத் தனது சுதந்திரத்திற்கான தடையாகக் கருதுகின்ற மாணவர்கள், பாடசாலைகளில் அதிகம் தண்டனைகளைப் பெறும் மாணவர்கள், ஆசிரியர்களால் கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட மாணவர்கள், விடுமுறை நாட்களில் கற்றல் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடாத மாணவர்கள், வைரஸ் தொற்றுக்குட்டபட்ட மாணவர்கள், வைரஸ் தொற்றுத் தொடர்பான காரணமற்ற பயத்தைக் கொண்டுள்ள மாணவர்கள் எனப் பலதரப்பட்ட நிலைகளில் நெருக்கடிகளைச் சந்திக்கும் மாணவர்களின் பாடசாலைக்கான மீள்வருகையானது சவாலுக்குரியதாகவே அமையும்.

இந்நிலையில் பிள்ளைகளை மீண்டும் பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் முறையாகப் பிள்ளைகளைத் தயார்ப்படுத்துவதனூடாக மேற்கூறிய சவால்களை வெற்றி கொள்ளலாம்.

*பிள்ளைகளுடைய நித்திரைக்குச் செல்லும நேரம், நித்திரை விட்டு எழும்பும் நேரம் என்பனவற்றை பாடசாலைக்கேற்ற வகையில் மீளொழுங்கமைத்தல். ஏனெனில், விடுமுறைகாலத்தில் இவை மாற்றங்களுக்குட்படுவது இயல்பானது.

* பிள்ளைகளின் மூன்று வேளை உணவு மட்டில் நேரவரையறையைக் கடைப்பிடிப்பது அவசியமானது. ஏனெனில் உணவுப் பழக்க வழக்கத்தோடு தொடர்புடைய நேரமாற்றம் விடுமுறைக் காலத்தில் மாற்றமடைவது தவிர்க்க முடியாதது.

* கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான மிகைப்படுத்தப்படாத, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பிள்ளைகளுடன் கலந்துரையாடுதல்.

* சுகாதார நடைமுறைகளையும், சமூக இடைவெளியைப் பேணல் தொடர்பான விடயங்களில் நாம் எப்போதும் முன்மாதிரிகையாக நடந்து கொள்ளல்.

* பாடசாலையில், கற்றல் செயற்பாடுகளில் நேரத்தைச் செலவிடும் வகையில், வீடுகளில் படிப்படியாக நேரத்தை அதிகரித்துக் கற்றல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்தல்.

* பிள்ளைகளின் வயதிற்கேற்ப பாடசாலைக்குச் செல்வதன் அவசியத்தை, முக்கியத்துவத்தை தெளிவாக்குதல்.

* பாடசாலைக்குத் தேவையான சீருடைகள், கற்றல் உபகரணங்கள் என்பனவற்றை ஒழுங்குபடுத்துவதில் பிள்ளைகளுக்கு ஒத்துழைத்தல்.

* பாடசாலைக்குச் செல்வதற்கான சுகாதார நடைமுறைக்கேற்ற முகக்கவசங்கள் முதலான பொருட்களுக்கு முற்கூட்டியே ஆவண செய்தல்.

இவ்வாறான ஏற்பாடுகளை பெற்றோர் படிப்படியாக முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம் பிள்ளைகளிடம் பாடசாலைக்குச் செல்வதற்கான விருப்பு மனநிலையை படிப்படியாக ஏற்படுத்தலாம்.

ஆசிரியர்கள்:- பாடசாலைக்கு பல்வேறு மனநிலைகளோடு, நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகின்ற மாணவர்களைப் பொருத்தமாக வரவேற்பது ஆசிரியர்களின் இன்றியமையாத கடமையாகின்றது. மாணவரை வரவேற்றல் என்பது ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமன்றி, சகல தரங்களிலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஏற்புடைய தொன்றாகும். குறிப்பாக இந்த நீண்ட கால விடுமுறையின் பின்னர் பாடசாலை மீள்வருகைக்காக ஆசிரியர்கள் தம்மைத் தயார்ப்படுத்துவது பொருத்தமானது.

அதேவேளை, இந்த விடுமுறையானது ஆசிரியர்களுக்கும் நல்ல சில வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது. குடும்பத்தினருடன் தங்கியிருந்து மூன்று வேளையும் சமைத்து ஒன்றாகவிருந்து உணவை உண்ண முடிந்திருக்கிறது. அதாவது அதிகமான ஆசிரியர்கள் தமது உடல்நலம் குறித்து விடுமுறைக்காலத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்று கூறலாம். தமது உறவுகளைப் வலுப்படுத்தும் காலமாகவும் இது பலருக்கு அமைந்திருக்கிறது. இவ்வாறான மகிழ்வான தருணங்களை பாடசாலைக்குச் செல்வதற்காக தொடர முடியாத நிலை ஏற்படலாம். இதனால் அவர்களும் சில ஆயத்தங்களைச் செய்வதனூடாக பாடசாலையில் மாணவர்களை கையாளும் நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளலாம்.

 *தமது உணவுண்ணும் நேரங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பின் அவற்றை சீராக்கிக் கொள்வது நல்லது.

* நேரம் தவறிய தூக்க முறைமைகளைக் கூட படிப்படியாக மாற்றிக் கொள்வது பொருத்தமானது.

* பாடசாலைக்குள் நுழைகின்ற ஒவ்வொரு ஆசிரியரும் ஏனைய காலங்களைப் போல தாம் கற்பிக்கும் பாடஆயத்தத்துடன் மட்டுமன்றி, மாணவர்களை அரவணைக்கும் நுட்பங்களையும் அறிந்திருக்க வேண்டும்.

* பாடசாலைக்கு வரவிருப்பமில்லாத மனநிலையுடன் வரும் மாணவர்களை பாடசாலைக்குள், வகுப்பறைக்குள் நிலைப்படுத்துவதற்கான உத்திகளை அறிந்திருக்க வேண்டும்.

* தற்கால நெருக்கடி தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு உண்மையான தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

* மாணவர்களைக் கற்றலுக்குத் தயார்ப்படுத்த முன்னர் அவர்களுக்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான அணுகுமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.

* பல்வேறு உளப்பதட்டங்களுடன் வருகின்ற மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் இடமாக பாடசாலைச் சூழலை மாற்றியமைக்க வேண்டும்.

 

download 3

 பாடசாலை மீள ஆரம்பிக்கின்ற செய்தி மாணவர்களைப் போலவே சில ஆசிரியர்களுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்துகின்ற செய்தியாக அமையலாம். எவ்வாறெனில், நிர்வாகத்தினரால் கடுமையான அழுத்தங்களைச் சந்தித்தவர்கள், தூர இடங்களில் கற்பிப்பவர்கள், தமது வீடுகளில் முதியவர்-சிறுவர்களைப் பராமரிப்போர், மாணவர் எண்ணிக்கை கூடிய பாடசாலைகளில் கற்பிப்போர், தமது கற்பித்தலை வினைத்திறனாக நிகழ்த்த முடியாதோர், கொரோனாவினால் நேரடியான மறைமுகமான தாக்கங்களுக்குட்பட்டோர் ஆகியோர் பாடசாலைகளுக்கு முழுமன விருப்புடன் வரமாட்டார்கள். எனவே ஆசிரியர்கள் தங்களை சுயபரிசோதனைக்குட்படுத்தி, மேற்கூறிய தயார்ப்படுத்தலுடன் பாடசாலைக்குச் செல்வதன் மூலம், தம்மையும், தம்மை நம்பி அனுப்பப்படுகின்ற மாணவர்களையும் பாதுகாத்து, கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வினைதிறனுடன் மேற்கொள்ளமுடியும்.

மாணவர்கள்:- இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால் சத்தம் வரும் என்பது போல, வீடுகளில் பெற்றோரும், பாடசாலைகளில் ஆசிரியர்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும், மாணவர்களின் சுயவிருப்புத்தான் அவர்களை பாடசாலைகளில் விருப்புடன் செயற்பட வைக்கும். எனவே தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்குள் பிரவேசிப்பதற்கு மனங்கொள்ள வேண்டும்: ஆயத்தமாக வேண்டும். அதற்கான சில ஆலோசனைகளiயும் தந்து இப்பகுதியை நிறைவு செய்வோம்download

 

 

*விடுகளில் பெற்றோர், சகோதரர், உறவினரின் ஒத்துழைப்புடன் இரவில் நித்தரைக்குச் செல்லும் நேரம், காலையில் நித்திரை விட்டெழும் நேரம் என்பனவற்றை பாடசாலைக்குச் செல்வதற்கு ஏற்ற வகையில் ஒழுங்கமைத்துக் கொள்ளுதல் நல்லது. ஏனெனில் போதிய ஓய்வு எமக்குப் பல பிரச்சினைகளிலிருந்துவிடுபடுவதற்கான வழியாக அமைகிறது

 * விடுமுறைக்கால ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்க முறையை சீராக்கி, மூவேளை உணவுக்கான நேரத்தை வரையறுத்தல். ஏனெனில், ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்க முறையினால் ஏற்படும் உடலியல் உபாதைகள் கவனச் சிதறல்களுக்குக் காரணமாகின்றது.

* தாம் கற்கும்தரம், தாம் கல்விகற்க வேண்டியதன் அவசியம், தமது தனிப்பட்ட வளர்ச்சியில் கல்வி கற்பதன் முக்கியத்துவம் என்பனவற்றை சுயமாகத் தேடியறிதல். இதன்மூலம் கல்வி கற்பதற்கான விருப்பை இயல்பாக்கி கொள்ள முடியும். சுயமாகத் தேட இயலாதவர்களுக்கு ஆசிரியர்-பெற்றோர் இதனை எடுத்துணர்த்தலாம்.

* நெருக்கடி காலத்து, உண்மைத் தகவல்களை மட்டும் கருத்திலெடுக்கப் பழகுதல். இதன் மூலம் தேவையற்ற பதட்டத்தைக் குறைக்கலாம். குறிப்பாக அரச தகவல்களை அறிந்து கொள்வது நல்லது.

* பாடசாலைக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை, சீருடைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது சிறந்தது. இதனால் பாடசாலைக்கு செல்வதற்கான ஊக்கி தானாகவே செயற்படத் தொடங்கும்.

* விடுமுறைகாலத்தில் பாடசாலைகளால் வழங்கப்பட்ட கற்றற் செயற்பாட்டு வேலைகளை முடிந்தவரை சுயமாக, நண்பர்கள், ஏனையோரின் உதவியுடன் பூரணப்படுத்துதல். இச்செயற்பாடு பாடசாலைக்குச் செல்வதற்கான நாட்டத்தை அதிகரிக்கும்: திருப்தி நிலை ஏற்படும்.

* நண்பர்கள், சகபாடிகளைத் தொடர்பு கொண்டு அவர்களையும் பாடசாலைக்கு வருவதற்கு ஊக்கப்படுத்துதல். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் சகபாடிகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக்களை உறுதிப்படுத்துவதனால் பாடசாலைக்குச் செல்வதற்கான உற்சாகம் அதிகரிக்கும்.

இவ்வாறான ஒழுங்குபடுத்தல்களை கூட்டிணைவாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து மாணவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளும் போது அதிகமான மாணவர்களை சுயவிருப்புடன் பாடசாலைக்குள் காணலாம். இதன் மூலம் பாடசாலைகளும் தமது கலைத்திட்ட அமுலாக்கத்தை செவ்வனே நிறைவேற்றலாம்.

அதேவேளை மேற்கூறிய நிலமைகளையும் தாண்டி மாணவர்கள் பாடசாலைக்கு வருவதை விரும்பாத நிலையில், அவர்கள் மட்டில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அதாவது, நெருக்கடிகால நிலமைகளால் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள குடும்பப் பின்னணியைக் கொண்ட பிள்ளைகள், தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர்கள், நெருக்கடிகால குடும்ப வன்முறைக்குட்டவர்கள், பாடசாலைகளில் தொடர்ந்து மாணவர்களால், ஆசிரியர்களால் ஒதுக்கப்படுகின்ற மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அதீத பயம் உள்ளவர்கள், சமநிலையற்ற குடும்பச்சூழல், பாதுகாப்பற்ற குடும்பச் சூழல் போன்ற பின்னணிகள், மாணவர்களின் பாடசாலைக்கான வரவைத் தாமதப்படுத்தலாம். அன்றேல் வரவொழுங்கீனத்தைக் காண்பிக்கலாம். இல்லையேல் கற்றல் செயற்பாடுகளில் நாட்டங் குறையலாம்.

ஆகவே இவ்வாறான விசேட நிலமைகளில் ஆசிரியர்களும் பெற்றோரும் மாணவர்களை நிதானமாகக் கையாண்டு பொருத்தமான உளநலப்பரிகாரம் (Psychological remedy) காண்பது, கற்றல் செயற்பாடுகளில் மட்டுமன்றி, மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கும் ஆரோக்கியமுடையதாக அமையும். எனவே மனங் கொள்வோம்: ஆயத்தமாவோம்.

Skærmbillede 155

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click