Skærmbillede 1000- எஸ்.எல்.மன்சூர்-

கற்றலில் இடர்பாட்டினை ஏற்படுத்துகின்ற பல்வேறு வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற ஆட்டிசம் அதாவது மன இறுக்க நோயைப் பற்றிய அறிவினை ஆசிரியர்களும், பெற்றோரும் அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

.வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கின்றார். சில மாணவர்கள் சிறந்த அடைவினை காண்பிக்கின்றனர். சிலர் குறைவான அடைவினை காண்பிக்கின்றனர். சிலர் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் காண்பிப்பர். குறைந்த அடைவினை பெற்ற மாணவர்களுக்கு பரிகாரம் காணவேண்டிய கடமைப்பாடு அந்த ஆசிரியருக்குரியதாகும். ஆனால் சில ஆசிரியர்கள் அதனைக் தன் கடமையாகக் கொண்டு உரிய பரிகாரத்தைக் காண்பதற்குரிய வழிகளை மேற்கொள்வார்கள். சிலர் எதுவும் செய்யமுயலாது அப்படியே விட்டுவிடுவார்கள். மாணவர்களும் இதுதான் சுகம் என்றெண்ணி அப்படியே இருந்து விடுவார்கள். காலப்போக்கில் மாணவர்களுக்கு கற்றலின் சுமைதாங்க முடியாது தொடர்ந்தும் இடர்பட்டு இறுதியில் பாடசாலையை விட்டு இடைவிலகிச் செல்வார்கள். இடைவிலகியதற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் அப்படியே விட்டு விடுவார்கள். இது கற்றலில் இடர்படுகின்ற மாணவர்களுக்குரிய பரிகார நடவடிக்கையாகும்.

அதேவேளை கற்றலில் இடர்பாட்டினை ஏற்படுத்துகின்ற பல்வேறு வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகின்ற ஆட்டிசம் அதாவது மன இறுக்க நோயைப் பற்றிய அறிவினை ஆசிரியர்களும், பெற்றோரும் அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும். மாணவர்களைப் பொறுத்தளவில் வெவ்வேறு சூழலிலிருந்து பாடசாலைக்கு வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் இனங்காண்பதும், அவர்களுக்கு ஏற்றவிதமான கற்றலை வழங்கவேண்டியதும் ஆசிரியர் பணியாகும். அந்தப் பணியினை சரியாக வழங்காதபோது மாணவர்களில் ஒரு பகுதியினர் கற்றலில் இடர்பட்டு இடைவிலகியோர் பட்டியலில் இணைந்து கொள்வார்கள். அல்லது சமூகத்தில் அவர்கள் பிரச்சினைக்குரிய சந்ததிகளாக உருவாக்கப்படுவார்கள். அந்த உருவாக்கத்திலிருந்து விலக்கிக்கொள்வதற்கு ஆசிரியர்கள் மாணவர்களைப் பற்றியும், அவர்களது நடத்தைக்கோலங்கள் பற்றியும், அவர்களிடமிருக்கின்ற நோய்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டியதும், அதனை பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தி தீர்வினை பெறுவதற்கு உதவுவதும் ஆசிரியர்களது பணியாகும். ஏனெனில் ஆசிரியரது நடிபங்கில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதும் ஒருகாரணமாகும்.

ஆட்டிசம் எனும் மன இறுக்கம் என்றால் என்ன?

ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் ஏற்படுகின்ற ஒரு குறைபாடாகும். மூளையின் முக்கிய செயற்பாடுகளாகிய பேச்சுத்திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கின்ற நோயாகும். மற்ற குழந்தைகளை போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விபரங்கள் தெரியாது. இதனால், அவர்களால் மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது.

ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், இந்நோயினை பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்க தவறிவிடுகின்றனர். 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து, ஓரளவு குறைபாட்டை சரி செய்துவிடலாம். ஆனால் ஆட்டிசம் குறைபாடு எப்படி ஏற்படுகிறது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகள் தான் இக்குறைபாட்டால் 4 மடங்கு பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணமும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை . 10 ஆயிரம் குழந்தைகளில், 5 பேருக்கு இக்குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆட்டிசம் காணப்படுகின்ற குழந்தைகளிடம் பின்வரும் செயற்பாடுகள் காணப்படலாம்.

*யார் முகத்தையும் பார்க்காதிருத்தல்

*தனியாக இருப்பதை விரும்புதல்

*காது கேளாது போல் இருத்தல்

*காரணமின்றி மற்றவர்களை தாக்குதல்Skærmbillede 999

*அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல்

*கை, கால்களை வேகமாக அசைத்து வித்தியாசமாக சத்தம் போடுதல்

*தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்

*பேச்சுத்திறன் குறைதல்

*விரல் சூப்புதல், நகம் கடித்தல் -

*பதட்டநிலை

*அடம் பிடித்தல்.

போன்றவைகளைக் கூறலாம்

சாதாரண குழந்தைக்கும், இக்குறைபாடு உள்ள குழந்தைக்கும் வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள பிள்ளையை அவதானிப்பதன் மூலம், அவர்களது செயற்பாடுகளின் ஊடாகவும் கண்டறிந்து கொள்ளலாம்.

ஆட்டிசம் தானா? என்பதை நாம் கண்டறிய ஆட்டிசம் பற்றிஅறிந்திருக்கவேண்டியது அவசியமல்லவா.

இக்குறைபாடு உள்ளவர்கள் மற்றைய குழந்தைகளைப் போல் அல்லாமல் இவர்களின் பார்வை கூரையையே வெறித்து பார்ப்பது போல ஒரே இடத்தில் நிலைத்திருக்கும். நாம் ஒருவரிடம் பேசும் போது கண்ணைப் பார்த்து பேசுவது போல், ஆட்டிசம் உள்ள குழந்தைகள் கண்ணைப் பார்த்து பேசாமல், கைகளை உதறிக்கொண்டே இருப்பார்கள். அன்புகொண்டு இக்குழந்தைகளைக் கட்டி பிடித்தால்கூட கோபம் வரும். சிலவேளைகளில் இக் குழந்தைகள் மூர்க்கத்தனமாகவும் நடந்து கொள்வர். தண்ணீர் வேண்டும் என்றால் வாய் திறந்து கேட்காமல், சைகை மூலம் கேட்பார்கள். சில குழந்தைகள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். பாத்ரூம் செல்வதற்கு தண்ணீர் வேண்டும் என்பார்கள், தண்ணீர் வேண்டும் என்றால் பாத்ரூம் போக வேண்டும் என்பார்கள். சில குழந்தைகள் தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பார்கள். வேறு சில குழந்தைகள் திடீரென சிரிப்பார்கள். சில குழந்தைகள் திடீரென அழுவார்கள். எதற்காக சிரிக்கிறார்கள், எதற்காக அழுகிறார்கள் என தெரியாது. உடலில் சிறிய அளவில் வலி இருந்தாலும் “ஓ” வென அலறுவார்கள். சில குழந்தைகள் கடும் வலி இருந்தாலும் வலியை உணர்ந்துகொள்ளவேமாட்டார்கள். இவ்வாறான செயற்பாடுகளை வெளிகாட்டுகின்றவர்களிடம் ஆட்டிசம் என்கிற மனஇறுக்கக் குறைபாடு காணப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆட்டிசம் குறைபாடு இருக்கின்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டியவைகள்

நாம், எமது அன்றாட வாழ்வியலின் அனைத்துவிதமான பழக்க வழக்கங்களையும் ஆட்டிசம் பீடித்துள்ள குழந்தைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சியாக கற்றுக் கொடுக்கின்றபோது ஆட்டிசத்தைக் குறைத்துக் கொள்ளலாம். இவ்வாறான பயிற்சிகளே இதற்கான சிகிச்சைகளாகும் என்கின்றனர் மருத்துவர்கள். ஏற்கெனவே சொன்னது போல ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான பிரச்சினை இருக்காது. எனவேதான் நம் குழந்தைக்கு என்ன விதமான குறைபாடு உள்ளது என முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எது வேண்டும், எது வேண்டாம் என கூறத்தெரியாமல் இருப்பார்கள். உதாரணமாக : சிறுநீர் கழிக்க வேண்டும் என உணர்ந்துகொள்ளத் தெரியாது இருப்பர். ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கலாம்.

எனவேதான் எல்லா குழந்தைகளுக்கும் பொதுவான பயிற்சி முறைகளை வகுக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு குழந்தையையும் சரியாக புரிந்துகொண்டு,

எக்காரணத்தை கொண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தவே கூடாது. இவர்களுக்கு முதலில் கல்வி என்பது, அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான்.

ஒரு விடயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது அவர்கள் அதைப் புரிந்துகொண்டு அதன்படி நடப்பர். மற்றக் குழந்தைகளை போல் இவர்களால் பாடங்களை படிக்க முடியாது. எனவே இவர்களை சிறப்பு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம். அங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொடுப்பது எளிதாக இருக்கும்.

வழக்கமான கல்வி படித்து, மற்றவர்களை போல் வேலைக்கு செல்ல முடியாது என்பதால் இவர்களுக்கு சிறப்பு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தையல் கற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கலாம். இக்குழந்தைகள் சில அற்புதத் திறமைகளை கொண்டிருப்பர். அதைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். வண்ணம் தீட்டுவது, பேனா, பென்சில் கொடுத்து ஏதாவது கிறுக்க செய்வது என பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களை அன்றாட வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டும். உணவைப் பொறுத்தளவில் தனி உணவு தேவையில்லை. என்றாலும் பால், கோதுமை, பிஸ்கட், சாக்லேட், பாஸ்ட்புட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முடிந்தளவு அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சைகள் என்று எதுவும் இல்லை. ஆனால், மூர்க்கத்தனமாக செயல்படுகின்றபோது அவர்களை அமைதிப்படுத்து வதற்காக சில மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

அண்மைய ஆய்வொன்றின் பிரகாரம் "குழந்தைகளைப் பாதிக்கும் மூளை வளர்ச்சி குறைபாடான மனஇறுக்க (ஆட்டிசம்) நோயை ஒட்டகப் பால் குணப்படுத்துகிறது” என்று குழந்தைகளுக்கான “பாபா பரீத்” மையமும் இஸ்ரேலைச் சேர்ந்த டாக்டர் ரெவின்யாகிலும் இணைந்து தெரிவித்துள்ளனர். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒட்டகப்பால் கொடுக்கும் போது அந்தப் பாலில் உள்ள அமினோகுளோபின் ஆட்டிசக் குறைபாட்டை எதிர்த்து செயல்பட்டு குறைபாட்டை நீக்கி நோயில் இருந்து விரைவில் குணமாக உதவுவதாக ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் அமீர்சிங் தெரிவித்திருந்தார்.

ஆட்டிசம் என்பது தன்முனைப்பு குறைபாடு எனவும் கூறலாம். ஆட்டிசம் குழந்தைகளையும், பெரியவர்களையும் தாக்குகிறது. பெற்றோருக்கும் ஏனையோருக்கும் இதுதொடர்பில் போதியளவு விழிப்புணர்வு இல்லை. மேலை நாடுகளோடு ஒப்பிடும் போது ஆசிய நாடுகளின் நிலை மோசமாகவே உள்ளது. ஆட்டிசம் என்பது மூளை தகவல்களை பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனை தடுப்பதாகும். பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதனால் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதேஆட்டிசம் எனவும் கூறலாம்.

முயன்றால் முடியும். ஏன், எதற்கு, எப்படி என புரியாத நோய்களில் ஆட்டிசமும் ஒன்று. மூளையில் ஏற்படும் குறைபாட்டினால் ஏற்படுகின்ற ஆட்டிசத்தை பெரிய அளவில் சரி செய்ய முடியாது என்பது வேதனைக்குரிய விடயம். “குழந்தை இப்படி பிறந்துவிட்டதே” என வேதனைப்படுகின்ற பெற்றோர் தங்களது வாழ்வினை பாழாக்கி பிள்ளையின் எதிர்காலத்தையும் பாழாக்கிவிடுவர். அதற்கு பதிலாக விடா முயற்சியுடன் போராடினால் வெற்றி பெற முடியும் என்கின்றது மருத்துவ ஆய்வுகள்.

இவ்வாறான பிள்ளைகளுக்கு பெற்றோரது பங்கு முக்கியமாகும். அவர்களால் தான் இக்குழந்தைகளை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர முடியும். இது ஒரு குறைபாடு என உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை அவமானம் என கருதக் கூடாது. இது நமது குழந்தை என்கிற மனோபாவத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது இன்ப, துன்பத்தை அவர்களால் உணர முடியாது. ஒரு துயரமான சூழலில் சிரித்துக் கொண்டிருப்பர். இதற்காக அவர்களை வெறுக்கக்கூடாது. மூளை குறைபாட்டால்தான் அவர்கள் அப்படி இருக்கின்றனர் என புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள் அப்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் 5 சதவீதமான குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். அதேவேளை சாதாரணமான எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் ஒரு சதவீத குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த எடையுடனோ அல்லது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை பரிசோதிப்பது அவசியம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கல்வி ரீதியாக பார்க்கின்றபோது ஆட்டிசக் குறைபாடுள்ள குழந்தைகள் கற்கும்திறனில் குறைபாடுடையோராகவும் காணப்படுவர். பொதுவாக மனரீதியான குறைபாடுகளையும் இவர்கள் கொண்டிருப்பர். இவர்கள் பேச்சுத் திறனில் குறைவாகவும், அறிவுத்திறனில் குறைந்தவர்களாகவும், குறைவான புள்ளிகளைப் பெறுபவர்களாகவும் இவர்கள் வகுப்பறைகளில் காணப்படலாம். ஆட்டிசம் இவர்களை பீடித்துள்ளது என்று தெரியாமல் ஆசிரியர் அந்த மாணவனை வாங்குவாங்கென்று ஏசிப் பேசுவதால் எவ்விதமான பலனும் கிடைக்கப்போவதில்லை. ஆட்டிசம் சம்பந்தமான அறிவு இருந்தால்தான் இவரிடம் ஆட்டிசம் இருப்பதை உறுதிப்படுத்தலாம். ஏனெனில் பயிற்சி பெறாதோர் /குறிப்பிட்டளவான பயிற்சிபெற்றோரால்கூட இதைக் கண்டுபிடிப்பது மிகக் கடினமாகும்.

ஒரு சிறந்த நிபுணர் பலமுனைத்திறன் கொண்டவரை பரிந்துரைத்தால் அவர்களிடம் சிகிச்சை பெறலாம். உதாரணமாக - நரம்பியல் நிபுணர் (neurologist), உளவியலாளர் (developmental pediatrician), பேச்சு/ மொழி சம்மந்தமான சிகிச்சையாளர்கள் (speech / language therapist), கல்வியாலோசகர் (learning consultant) போன்றோர் மூலம் ஆட்டிசத்தை அடையாளப்படுத்திக் கொண்டு குழந்தையை மனோவலிமை உடையோராக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். கற்றலில் தாக்கம் செலுத்தும் எத்தனையோ தடைகளில் இதுவும் ஒன்று என்பதை உணர்ந்து மாணவர்களை அவதானித்து கற்றல் கற்பித்தலை மேற்கொள்கின்றபோது சிறந்த கற்றல் பேறுகளை வெளிக்கொணர்வது இலகுவாக அமையும். அதற்கான பயிற்சிகளை ஆசிரியர் பெற்றிருப்பது மேலும் சிறப்பான கற்றலை மேம்படுத்த உதவும்.

ஆட்டிசம் பற்றிய மேலதிக வாசிப்புக்கு....

ஆட்டிசத்தை வென்ற அன்பு  

ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணங்கள்

"ஆட்டிசம் ” எனும் குறைபாட்டினை இனங்காணல்

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click