ஊக்கலும் கற்றலும்ஒருவனிடம் ஒரு தேவைக்காக ஆரம்பித்து அத்தேவை நிறைவடையும் வரை நடைபெறுகின்ற ஓர் உள-உடலியற்றொழிற்பாடே ஊக்கல் ஆகும். இது ஒருவனிடம் உந்தலாக - சக்தியாக அல்லது செயல் மூலம் வெளிக்காட்டும்.ஊக்கல் ஆளுக்காள் வேறுபடும்.

 

ஊக்கற் கொள்கைகள் (கோட்பாடுகள்)

ஊக்கல் பற்றிப் பல கொள்கைகள் தோன்றியுள்ளன. ஒவ்வொரு கொள்கையும் ஊக்கலின் சில அம்சங்களையே விளக்குகின்றன. முக்கியமானவை

1. மக்டுகலின் இயல்பூக்கக் கொள்கை

2. பிராய்ட்டின் உளப்பகுப்புக் கொள்கை

3. சமூகக் கொள்கை. இதில் இருவகை

    1. பண்பாட்டுக் கோலக் கொள்கை

     2. களக் கொள்கை

4. தேவைக் கொள்கை

 

மக்டுகலின் இயல்புக் கொள்கை

 எல்லா உயிரினங்களும் மரபு வழியாகப் பெறுகின்ற ஒரு சிக்கலான போக்கே இயல்பூக்கம் எனக் கருதப்படுகின்றது. இயல்பூக்க நடத்தையில் மூன்று நிலைகள் உள்ளன.

1. அறிதல் - புலக்காட்சி பெறுதல்

2. உணர்தல் - மனவெழுச்சி பெறுதல்

3. தொழிற்படுதல்

 மனிதன் உள்ளம் உள்ளார்ந்த அல்லது மரபு வழியான போக்குகளைக் கொண்டது. என்றும் இவையே மனித நடத்தையை நிர்ணயிக்கின்ற, அடிப்படையான ஊக்கல் விசைகள் என்றும் மக்டுகல் கூறுகின்றார்.

மக்டுகல் பதினான்கு வகையான இயல்பூக்கங்களின் பட்டியலைத் தருகின்றார். ஒவ்வொரு இயல்பர்க்கத்துடனும் தொடர்பான

1. பொருள்

2. மனவெழுச்சி

3. தொழிற்பாடு ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

பதினான்கு இயல்பூக்கங்களாவன.

1. உணவு தேடுக்கம்

2. ஆராய்வூக்கம்

3. போரூக்கம்.

4. வெறுப்பூக்கம்

5. ஏதுங்கூக்கம்

6. திரட்டூக்கம்

7. ஆக்கவூக்கம்

8. பாலூக்கம்

9. மகவூக்கம்

10. குழுவூக்கம்

11. தன்னெடுப் பூக்கம்.

12. பணிவூக்கம்

13. தன்னிழிவூக்கம்

14, சிரிப்பூக்கம்.

 உதாரணங்கள்

இயல் பூக்கம் பொருள் மனவளர்ச்சி தொழிற்பாடு

1. போரூக்கம் எதிரி (ஆபத்து) கோபம் எதிர்த்தல்

2. பாலூக்கம் எதிர்பாலார் காதல் - காமம் கூடல்

3. பணிவூக்கம் வலியோர் தாழ்வுணர்வு பின்பற்றல்

4. திரட்டுக்கம் பொருட்கள் உடைமை திரட்டுதல்

 

இவற்றிலே இயல்பூக்கங்கள் மனவெழுச்சியுடனும் தொழிற்பாட்டுடனும் மிகவும் எளிமையான முறையில் தொடர்பு படுத்திக்காட்டப்பட்டுள்ளன. உண்மையில் இவை சிக்கலான நிகழ்ச்சியாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனவெழுச்சிகள் ஒரே நேரத்தில் தோன்றுவதால் சிக்கலான மனவெழுச்சிகள் தோன்றுகின்றன. கோபம், வெறுப்பு ஆகிய மனவெழுச்சியினால் பொறாமையெனும் மனவெழுச்சி தோன்றும்.இயல்பூக்கங்களின் அளவும் ஆளுக்காள் வேறுபட்டிருக்கும். திருடனிடம் திருட்டுக்கம் அதிகமாக இருக்கும் கொலைகாரனிடம் அதிக போரூக்கமும் காமுகனிடம் அதிக பாலூக்கமும் காணப்படும். பிள்ளை பிறக்கும்போதே எல்லா இயல்பூக்ககங்களையும் கொண்டிருப்ப தில்லை பாலூக்கம் கட்டிளமைப் பருவத்திலேயே வளர்ச்சி பெறுகின்றது.

 

இயல்பூக்க கொள்கையை எதிர்ப்பவர்கள் கூறும் காரணங்கள்

1. எவரும் இயல்பூக்கங்களை இயற்கையாகக் கொண்டிருப்பதில்லை. இவை வளர்ச்சியின்போது கற்றல் மூலமே பெறப்படுகின்றன.

2. சில இயல்பூக்கங்கள் சமூகப் பழக்கவழக்கங்கள் வளர்ப்பு முறை ஆகியவற்றால் பெறப்படுகின்றன.

 

இயல்பூக்கங்களைக் கற்றலில் பயன்படுத்தல்

1. ஆக்க ஊக்கத்தைப் பயன்படுத்தி பொருட்களை உருவாக்குதல் வர்ணம் தீட்டுதல் போன்ற ஆக்கச் செயல்களில் அவர்களை ஈடுபடுத்தலாம்.

2. திரட்டுக்கத்தைப் பயன்படுத்தி மாதிரிப் பொருட்களைச் சேகரிக்காலாம்.

3. குழுவூக்கத்தைப் பயன்படுத்தி குழுச் செயல்முறைகளில் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.

- இயல்பூக்கங்களுக்குத் தன்னிச்சையான சுதந்திரம் கொடுக்கக்கூடாது. அவை அடக்கப்படுமானால் பிழையான பொருத்தப்பாடும் பிறழ்வான நடத்தைகளும் தோன்றலாம்.

 

1. நன்நெறிப்படுத்தல்

இயல்பூக்கங்களை நன்னெறிப்படுத்தல் நன்று. போரூக்கத்தைப் போட்டிகளிலும், பாலூக்கத்தை ஒவியத்திலும், குழுவூக்கத்தை சமூக சேவையிலும் நன்னெறிப்படுத்தலாம்.

 2. பிராய்டின் உளப்பகுப்புக் கோட்பாடு

 சிக்மன் பிராய்டே முதலில் இக்கோட்பாட்டை அறிமுகம் செய்தார். இவர் உள்ளத்தை

1 நனவுநிலை

2. நனவிலி உள்ளம் என இரண்டாகப் பகுக்கின்றார்.

 நாளாந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளும் நியாயமான நடத்தைகளும் நனவு நிலை உள்ளத்துடனேயே தொடர்புடையன. குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும் நனவிலி உள்ளத்துள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை எவரும் நினைவுக்குக் கொண்டுவரமுடியாது. அவாக்கள் பாலியல் ஆசைகள் வன்செயல் உணர்வுகள் நனவிலி உள்ளத்தின் ஒரு பகுதியாகிய நனவடி உள்ளத்துள் ஒடுக்கப்படுகின்றன. இவை அமுக்கப்பட்ட கம்பிக் சுருள்போல ஒடுக்கப்பட்டிருப்பதாகவும். அடிக்கடி நனவுநிலைக்குத் திரும்பிவர முயன்றுகொண்டிருக்கின்றன வென்றும் பிராய்ட் கூறுகின்றார்.

 ஒரு உள நோயாளியினால் நனவுக்குக் கொண்டுவரமுடியாதவற்றை போலி உறக்கநிலை (உறக்கப் போலி) யில் நனவுக்குக் கொண்டுவர முடியும் என அவர் கண்டார். இதற்கு சுயாதீன இயைபு முறையைப் பயன்படுத்தினார். இதிலே ஒருவன் படுக்கையில் இருக்கும் போது தான் உள்ளத்தில் உள்ள நனவுகள் யாவற்றையும் சுயாதீனமாகக் கூறுவான் அவற்றிலிருந்து அவனது நடத்தையின் காரணங்களை அறிய முடியும்.

 பிள்ளையின் பாலியல் நடவடிக்கையுடன் தொடர்பானவையே பொரும்பாலும் நனவிலி உள்ளத்துள் ஒடுக்கப்டுகின்றன. இன்பம் அனுபவிப்பது பிள்ளையின் குறிக்கோள். அதற்குத் தடை ஏற்பட்டால் பிறழ்வான நடத்தையில் அது ஈடுபடுகின்றது.

 பிள்ளையின் பாலியல் தொடர்பான வளர்ச்சியில் பிராயட் நான்கு நிலைகள் பற்றிக் கூறுகின்றார். அவை

1. வாய் நிலை 2. குதநிலை 3. பாலு றுப்பு நிலை 4. மறைநிலை

 

1. வாய் நிலை

இப்பருவம் பிறப்பு முதல் ஒருவயது வரையாகும். (0-1) இப்பருவத்தில் வாய், குழந்தை வெளி உலகுடன் தொடர்ப்புகொள்ளும் முக்கிய உறுப்பாகவும் உள்ளது. வாயினால் பிள்ளை பெறும் உணர்ச்சிகளுள் பாலியல் இன்பம் முக்கியமானது. முலைப்பாலூட்டப்படும் பொழுது வாய் மூலமும், தாய் முலைமூலமும் பிள்ளை இன்பத்தைப் பெறுகிறது.

 2. குதநிலை

இப் பருவம் ஒரு வயது முதல் இரண்டு வயதுவரை (1 - 2)பிள்ளையின் வாழ்வில் மலசலங் கழித்தல் முக்கியமானது. அது பிள்ளைக்கு காமக் கிளர்ச்சிக்குரிய இன்பத்தினைத் தருகின்றது. பிள்ளை விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்தில் மலசலங் கழிக்கும் போதும், அதை அளையும் போதும், இன்பம் அடைகின்றான். இதற்காகப் பிள்ளையைப் பயமுறுத்தவோ தண்டிக்கவோ கூடாது.

 3. பாலுறுப்பு நிலை

இப் பருவம் இரண்டு முதல் ஐந்து வயது வரை (2 - 5) இப் பருவத்தில்

பிள்ளை பாலுறுப்புகளைக் கையாளுவதன் மூலமும், ஆடையின்றி விளையாடுவதன் மூலமும் காமக்கிளர்ச்சி அடைந்து இன்பம் பெறுகின்றான்.

 4. மறைநிலை

இப் பருவம் ஐந்து முதல் பன்னிரெண்டு வயது வரை (5 - 12) இப் பருவத்தில் பிள்ளை பாலியல் தொடர்பான நாட்டங்கள் அற்றதாக இருக்கின்றது. 12ஆம் வயதில் பூப்படைவதுடன் மீண்டும் பாலியல் நாடடம் காட்டத்தொடங்குகிறான்.

 

பிள்ளைகளின் உளச்சிக்கல்களுக்கு பிராய்ட் எதிர்ப்பால் தொடர்பான விளக்கம் அளிக்கின்றார்.

1. ஆண் குழந்தை தாயிடம் அன்பு கொண்டு தந்தையை எதிரியாகக் கருதுகின்றான்.

2. பெண்பிள்ளை தகப்பனை அதிகமாக நேசிப்பாள்.

 

பிராய்ட்டின் ஆளுமைக் கொள்கை

 மனிதனது ஆளுமை இட்'(நனவடிஉளம்) அகம், அதியகம் ஆகிய மூன்று சூக்குமமான கூறுகளைக் கொண்டுள்ளது. இவை மூன்றும் வெளியுலகுடன் தொடர்புடையன. இட்' முழுவதும் நனவிலி உள்ளத்துள் அமைந்துள்ளது. இங்கு அடங்கியுள்ளவை உயிரியல் தேவை சார்ந்தவை; நியாயத்திற்கு கட்டுபடாதவை. தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு நிர்ப்பந்திப்பவை.

‘அகம் பிள்ளை வளர அவனது உயிரியல் தேவைகளின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்டுப் பிள்ளையிடம் அகம் என்னும் ஆளுமைக் கூறு வளர்ச்சியடைகின்றது. அவனது செயல்கள் உயிரியல் தேவைகளின் அடிப்படையில் நிகழ்வது குறைந்து, அறிவின் அடிப்படையில் நிகழ ஆரம்பிக்கின்றன. தன்னைப் பற்றிய கருத்தைப் பிள்ளை விருத்தி செய்கிறான். எது சரி எது பிழை என்பவற்றை விளங்கிக் கொள்கிறான். இந்த வகையில் பிள்ளையிடத்தில் மனச்சான்று வளர்ச்சி பெறுகிறது. இதனை பிராய்ட் 'அதியகம்' என அழைக்கின்றார். சிறந்த இலட்சியங்கள், அறநெறிகள், ஒழுக்கங்கள் என்பன ஒருவனது அதியக வளர்ச்சியிலேயே தங்கியுள்ளன. அதியகம் வளர்ச்சியடையும் போது அகமானது இட், அதியகம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் கூறாக தொழிற்படுகின்றது.

சமூகக் கொள்கை

இது இரண்டு (2) வகை

1. பண்பாட்டுக்கோலக் கொள்கை

2. களக் கொள்கை

 

1. பண்பாட்டுக் கோலக் கொள்கை

மாக்கிறட் மீட், ரூத் பெனடிக்ற் முதலிய மானிடவியலாளரின் ஆய்வுகளின் அடிப்படையில் இக்கொள்கை உருவானது. இவர்கள் பல்வேறு வகையான பிள்ளை வளர்ப்பு முறைகள் எவ்வாறு பிள்ளைகளின் எதிர்கால நடத்தைக் கோலங்களைப் பாதிக்கிறதென ஆய்வுகள் நடத்தினர். பிள்ளை வளர்ப்பு முறை சமூக வகுப்பு, குடும்ப நிலை முதலியவற்றால் அமைகின்ற பண்பாட்டுக் கோலங்கள் ஒருவனது நடத்தையின் ஊக்கிகளாக அமைகின்றன என்பதே இக்கொள்கையின் அடிப்படையாகும்.

 

ஆய்வுகள்

1. நீயூகினியில் அரபேஷ், மொன்டுகுமோர் என்னும் இரு இனங்கள் உண்டு.

 அரபேஷ் மக்கள் மிக அன்புடனும் பாசத்துடனும் பிள்ளைகளை வளர்க்கின்றனர். பிள்ளைகள் உரிய வயதை அடைந்த பின்னரே தாய்ப்பாலை மறப்பர். கடினமான ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லை. அதனால் பிள்ளைகள் வன்செயல் நடத்தையுடையவராக வளருவதில்லை.

ஆனால்,மொண்டுகுமோர் மக்களிடையே இதற்கு எதிர்மாறான வாழ்க்கை முறை பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு காட்டுவதில்லை. பிள்ளைகள் முதிர்ச்சியடையுமுன்னர் தாய்ப்பால் நிறுத்தப்படும். பிள்ளைகள் சண்டையிடுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதனால் சண்டைகளும், குழப்பங்களும், கொலைகளும் சாதாரணமாக நிகழும்.

 2. சீனாவில் வாழும் ஒரு பழங்குடியினரிடையே ஒருவன் பல மனைவியரை வைத்திருப்பான். முதல் மனைவியே எல்லா மனைவியருக்கும் பிறக்கும் குழந்தைகளை வளர்ப்பாள். பிற மனைவியர் தம் பிள்ளைகளை மறந்து விடுவர்.

 

2. களக் கொள்கை

இதை வெளியிட்டவர் கேட்லிவின் என்பவர். பண்பாட்டுக் கோலக்கொள்கை புராதன பழங்குடியினருக்குப் பொருந்தும். இன்று பல துணைப்பண்பாடு விருத்தியாகி மாறும் இயல்புடைய சமூகங்களுக்கு இக்கொள்கை பொருந்தாது. குறிப்பிட்ட காலத்தில் வாழும் சமூகக் குழுவின் அமைப்பு, அக்குழுப்பேனும் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைப் பொறுத்தே ஊக்கங்களும் நடத்தைகளும் அமைகின்றன. ஒருவனுடைய நடத்தை, பொருட்கள், வாழ்க்கை நிலை, வேணவாக்கள், மனித உளவுகள் முதலியவற்றைக் கொண்ட அவனது உளவியக்கம் என்பதனுள் தொழிற்படுகின்ற எல்லாவிசைகளின் விளைவேயாகும் என்பது இவரது கோட்பாடு.

 

ஒல்போட் என்பவரின் ஊக்கியின் தன்னியக்கத் தொழிற்பாட்டுக் கொள்கை

 ஒருமுறை கற்ற பழக்கங்களே நடத்தையை உருவாக்குகின்ற பலமான உந்து விசைகளாகின்றன. இவை எவ்வித உடலியற் தேவைகளுடனும் தொடர்பற்றுச் சுதந்திரமாக அல்லது தன்னியக்க ஊக்கிகளாகச் செயற்படுகின்றன இந்தப்பழக்கங்களே ஒருவனது நடத்தையிை உருவாக்குகின்ற ஊக்கிகளாக அமைகின்றன.

 ஓர் எடுத்துக்காட்டு

சிறுபிள்ளையாக இருக்கும் போது பிறரைப் பாவனை செய்வதற்காக புகைத்தவன் இன்று அதைப் பழக்கமாக்கிக் கொண்டான்.

 தேவைக் கொள்கை

1. மக்டுகலும் பிராய்ட்டும் தனியாளுக்கே முக்கியத்துவம் அளித்தனர்: மாக்கிறட் மீட், டூத் பெனடிக்ற் முதலிய மானிடவியலாளர் பண்பாட்டுக் கோலங்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர், அண்மைக்கால உளவியலாளர் தனியாளுக்கும் சூழலுக்கும் இடையேயுள்ள இடைவினைகளை அடிப்படையாகக்கொண்டு ஊக்கலுக்கு விளக்கமளித்தனர்.

 டபிள்யூ ஐ தோமஸ் என்பவர் நெறிபிறழ்வடைந்த பெண்கள் வாழ்ந்த விடுதியிலுள்ளவர்களை ஆய்வு செய்து ‘பொருத்தப்பாடற்ற பெண் என்னும் நூலை எழுதினார் அதிலே அப்பெண்களின் மூலாதாரமான உளவியற் தேவைகளைச் சமூகம் பூர்த்தி செய்யாததாலேயே அவர்கள் நெறி பிறழ்வடைந்தனர் எனக்குறிப்பிட்டார். அவர் (1) காப்பு (2) புதிய அனுபவம் (3) பொறுப்பு (4) கணிப்பு என்னும் நான்கு உளவியல் தேவைகளைக் குறிப்பிட்டார்.

2. மாஸ்லோவின் தேவை பற்றிய கொள்கை

தோமசைத் தொடர்ந்து தேவை பற்றி வெளியிட்ட கொள்கைகளுள் மாஸ்லோவின் கொள்கை தெளிவானது பயனுடையது. இவர் படிமுறை அமைப்பில் ஏறு நிரலில் தேவைகளை நிரற்படுத்தியுள்ளார்.

அவை:

1. உடலியற் தேவை

2. காப்புத் தேவை

3. அன்புத்தேவை

4. கணிப்புத் தேவை

5. சுய திறனியல் தேவை என்பனவாகும். ஒருவனுக்கு ஒரு தேவை நிறைவு செய்யப்பட்ட பின்னரே நிரலிலுள்ள அடுத்த தேவை எழுகின்றதென்பது இவரது கோட்பாடு. உதாரணமாக, பசியால் வாடும் ஒருவனுக்கு பசி தணியும் வரை அவன் வேறு தேவைகள் பற்றிச் சிந்திக்க மாட்டான்.

 1. உடலியற் தேவை

பசி, தாகம், பாலூக்கம் போன்ற உடலியற் தேவைகள் மற்றைய தேவனைகளை விட வலிமையானவை. அவை ஒருவனிடம் எழுமாயின் ஏனைய தேவைகள் பின்னணிக்குச் சென்று விடும். பசியால் வாடுபவனுக்கு உணவைத் தவிர வேறெதிலும் நாட்டம் எழாது.

 2. காப்புத் தேவை

உடலியற்தேவை பூர்த்தியடைந்ததும் நிரலில் அடுத்துள்ள காப்புத் தேவை எழும். அப்போது ஒருவனின் சகல திறன்களும் காப்பைத் தேடவே பயன்படுத்தப்படும். பாதுகாப்பாக வசிக்க ஒரு வீடு, நிரந்தர தொழில், சுற்றத்தவர்கள் ஆகியவற்றைத் தேடி ஒருவன் காப்பைப் பெறுகின்றான். அநீதி: பாரபட்சம், குடும்பச்சண்டைகள் விவாகரத்து உறவினர் இறத்தல் போன்ற வீட்டுநிலைமைகள் காப்புணர்வைப் பாதிக்கும். பாடசாலை வாழ்விலும் பிள்ளைகள் காப்புணர்வை இழக்கும் நிலைமைகள் ஏற்படலாம்.

 3. அன்புத் தேவை

உடலியற் தேவைகளும், காப்புத் தேவைகளும் நிறைவடைந்த பின்னர் அன்புத்தேவை எழுகின்றது. அப்போது பெற்றோர் நண்பர் உறவினர், மனைவி மக்கள் ஒருவனுக்குத் தேவையாகின்றது. ஒருவன் பிறர் மீது அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் விரும்புகின்றான். பிள்ளையின் ஆரம்பப் பருவத்தில் அன்புத்தேவை நிறைவேறாவிட்டால் அதன் ஆளுமை விருத்தி பாதிப்படையும். நெறி பிறழ்வடைவதற்கு இது முக்கிய காரணியாகும்.

 4. கணிப்புத்தேவை

மாஸ்லோ கணிப்புத் தேவையை இரண்டாக வகுக்கின்றார்.

1. சுயகணிப்பு

2. பிறர்கணிப்பு

 சுயகணிப்பு

இது உயர்ந்த இலக்கை அடைவதற்குரிய அவா. குறித்த சாதனையை என்னால் செய்யமுடியும் என்ற நம்பிக்கை பிள்ளைகளின் வாழ்க்கையில் சுயகணிப்பு முக்கிய இடம் பெறுகின்றது. இத் தேவை நிறைவேறாதுபோனால் தாழ்வுணர்சி, தன்னிழிவு போன்றன ஏற்பட்டு உளப்பிணிகள் ஏற்படும். பிள்ளைகள் தமது வாழ்வை தாமாக வழி நடத்ததித் தாமே முடிவெடுக்க சுதந்திரம் அளிக்கப்படவேண்டும். பிள்ளைகளின் சாதனை புரியும் அவா ஒரு பெரும் உந்துவிசையாகும்.

 பிறர் கணிப்பு

இது பிறரிடமிருந்து பேரும் புகழும் கணிப்பும் பெறவிரும்பு வதாகும்.பிள்ளைகள் தமது செயல்களைப் பெற்றோரும், ஆசிரியரும் சக மாணவரும் மெச்சவேண்டுமென விரும்புவர்.

 5. சுயதிற்னியல் நிறைவுத்தேவை

இது ஒருவன் தன்னிடமுள்ள உள்ளார்ந்த ஆற்றல்களை விருத்தி செய்து நிறைவு பெறுவதாகும். ஒருவன் என்ன். நிலையை அடைய ஆற்றல் உடையவனாக உள்ளானோ அந்நிலையை அவன் அடைய வேண்டும். அது நிறைவேறும்வரை ஒருவனிடம் அதிருப்தியும் அமைதியின்மையும் காணப்படும். இதைப் பூர்த்திசெய்யும் முறை ஆளுக்காள் வேறுபடும்.

அறிவுசார் தேவை: சுயதிறனியல் தேவையுடன் அறிவுசார் தேவையொன்றும் உள்ளதென மாஸ்லோ கூறுகின்றார்

 2. கற்றலும் ஊக்கலும்

திறமையாகக் கற்பதற்கு ஊக்கல் முக்கியமான காரணி. ஆசிரியர் மாணவரின் ஊக்கற் கூறுகளை அறிந்திருப்பது அவசியம்.

அக ஊக்கிகள் : மாணவரிடம் மரபுவழி வந்த அக ஊக்கிகள் உண்டு. அவற்றுள் நல்லனவும் தீயனவும் உண்டு. ஆசிரியர் நல்ல அகவூக்கினை விருத்தி செய்யவும் தீய அகவூக்கினை தடுக்கவும், நன்னெறிப்படுத்தவும் உதவுதல் வேண்டும்.

சமூக ஊக்கிகள் : அன்பையும் கணிப்பையும் பெறுதல், தீரச் செயல்கள் புரிந்து திறமைகளைக் காண்பித்தல், பிறரோடு ஒன்றித்தல் முதலிய சமூக ஊக்கிகள் ஒருவனின் நடத்தைக்கு ஊக்கமளிக்கின்றன.

 ஊக்கலை ஏற்படுத்தும் காரணிகள்

1. முதிர்ச்சியும் ஊக்கலும் : முதிர்ச்சியும் ஆயத்த நிலையும் அடையாத

போது ஒருவனைக் கற்குமாறு தூண்டுவதில் பயனில்லை.

2. இலக்குகளும் ஊக்கலும் : ஒருவன் ஒரு கற்றல் செயலைச் செய்யுமுன் அதனால் கிடைக்கும் பயனை உறுதியாக அறிந்திருந்தால் ஊக்கம் பெறுவான்

3. அவா நிலையும் ஊக்கமும் : ஒருவன் தான் எத்தகைய ஒருவனாக் மாறவேண்டும் என்ற அவாநிலை, அவனுக்குக் கற்றலில் ஊக்கத்தை ஏற்படுத்தும்.

 4. வெற்றிதோல்விகளும் ஊக்கலும் : வெற்றி ஒரு வெகுமதி, தோல்வி தண்டனையாகக் கருதப்படும். வெற்றியினாலும், தோல்வியினாலும் கற்றல் நிகழலாம்.

 5. புகழ்ச்சி - இகழ்ச்சிகளும் ஊக்கலும் : கற்றலில் புகழ்ச்சி - இகழ்ச்சி இவை இரண்டும் அவசியம். புகழ்ச்சியும் இகழ்ச்சியும் மாணவரின் ஆளுமைக்கேற்ப வழங்கப்படவேண்டும்.

 6. வெகுமதி தண்டனைகளும் ஊக்கலும் : ஒருவனின் நடத்தையை சிறந்த முறையில் இயங்க வைப்பதே வெகுமதி, தண்டனை ஆகியவற்றின் நோக்கமாகும். இவற்றைப் புறவூக்கிகள் என்பர்.

 7. பாடசாலை முயற்சிகளும் ஊக்கலும் : பாடசாலைச் செயற்பாடுகள்

மாணவரின் கற்றலுக்கான ஊக்கலைத் தூண்டுவதாக அமைதல் வேண்டும்.

அவற்றுள் முக்கியமானவை:

1. புள்ளியிடல்

2. பெறுபேறுகளை அறிதல் (பின்னூட்டல்)

3. போட்டிகளை ஏற்படுத்தல்

4. கூட்டுறவு முறையில் மாணவரை இயங்கவிடல்.

 

ஆசிரியர் வகுப்பறையில் கையாள வேண்டிய ஊக்கல் முயற்சிகள்

1. மாணவரின் முதிர்ச்சிக்கேற்ப வகுப்பறைப் பணிகளை அளித்தல்

2. பணிகள் அனுபவத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப அமைதல்

3. மாணவரின் நாட்டங்களுக்கு மதிப்பளித்தல்

4. புகழ்ச்சி - இகழ்ச்சி, நேர்மையான முறையில் பயன்படுத்தல்

5. மாணவர் தம்மைத்தாமே வழிகாட்டச் சுய ஊக்கலை வளர்த்தல்

6. வெகுமதி - தண்டனைகளை நிதானமாக வழங்குதல்

7. ஆசிரியர் ஜனநாயக முறையில் வகுப்பை நடத்தல்.

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click