2604 02உளவியல் என்னும் அறிவியல் துறை

ஆங்கிலத்தில் Psychology என அழைக்கப்படும் ஆன்மா அல்லது ஆவி இயல்புகளை விளக்கும் இயல் என்பதே இதன் கருத்தாகும். பண்டைக் காலந்தொட்டு மனிதன் தனது உடலுக்குள் 'ஆன்மா’ என்னும் ஓர் உருவமற்ற பொருள் உறைவதாகவும்,

இவ்வான்மாவே உடல் இயக்கங்களின் காரணப் பொருளென்றும் கருதிவந்தான். இந்த ஆன்மாவின் இயல்புகளையும் செயல்களையும் ஆராய்ந்தறியும் இயலாகவே முதலில் உளவியல் தோன்றியது.

  இவ்வாறு தோன்றிய உளவியல் பல நூற்றாண்டுகள் வரை தத்துவ இயலின் ஒரு பிரிவாக இருந்து வளர்ந்து வந்தது.  அரிஸ்ரோட்டில் என்னும் கிரேக்க தத்துவப் பேரறிஞர் எழுதிய ‘ஆன்மா வின் இயல்புகள் என்னும் நூலே உளவியலின் முதல் நூலாகக் கருதப்படுகின்றது.

  சிலகாலஞ் சென்ற பின்னர், உளவியலின் ஆய்வுப் பொருளாகக கருதப்பட்டு வந்த ஆன்மா பற்றிக் கருத்து வேற்றுமை எழுந்தது. இதனால் உளவியலறிஞர்கள் உளவியலை மனிதனது மனம் அல்லது உள்ளம் என்பதன் செயல்களை விளக்கும் அறிவுப் பிரிவு எனக் கருதத் தொடிங்கினர். இவ்விளக்கமும் சிறிது காலம் செல்ல மாறத் தொடங்கியது. இம்மாற்றத்தின் இறுதியில் உளவியலை நனவு நிலைச் செயல்களை விளக்கும் அறிவியல் என்று உளவியலாளர் கருதத் தொடங்கினர். நனவுநிலை எனப்படுவது, ஒருவன் அயர்ந்து தூங்குகையில் முற்றிலும் செயலிழந்து, அவன் மெள்ள விழிப்படைய படிப்படியாக அதிகரித்துச் செல்லும் நிலையாகும். இவ்விளக்கத்திலும் குறைபாடு உள்ளதென்பதைக் காலப் போக்கில் உளவியலாளர் உணர்ந்தனர்.

உளவியலாளருள் உளப்பகுப்புக் கோட்பாட்டாளர் மனிதனது நடத்தைக்கு முக்கிய காரணங்களாக அமைவன பெரும்பாலும் நனவிலி உள்ளத்தில் உறையும் ஆசைகளும், எண்ணங்களும், நோக்கங்களும் எனக்கூறினர். உளவியலை நனவு நிலைச் செயல்கள் பற்றிய இயல் என்று மாத்திரமே கொள்வோமாயின் நனவிலி நோக்கங்களும் அவற்றால் ஊக்குவிக்கப்படும் செய்ல்களும் உளவியல் ஆய்வுக்கும் புறம்பானவையாகி விடும் எனக் கூறினர்.

 ‘இக்காரணத்தால் இக்கால உளவியலாளரில் பெரும்பான்மையினர் உளவியலை மனிதனது நடத்தைப் பற்றிய அறிவியல்' என்பர். இவ்விளக்கத்தில் உளவியலைப் பற்றிய முன்னைய விளக்கங்களும் அடங்கியுள்ளன எனலாம். பின்னர் உளவியல் மனித நடத்தையின் இயல்புகளையும் அதன் பொதுவிதிகளையும் பற்றியது எனக் கருதப்படலாயிற்று.

 

2. நடத்தை

நடத்தை என்பதற்கு விரிந்த பொருளுண்டு. பிறரால் புறத்தில் நின்று கண்டு அறியக் கூடிய உடலியக்கங்கள் மட்டுமன்றி, சிந்தித்தல், பொருள் காணல், உணர்ச்சி வயப்படுதல் போன்ற உள்ளார்ந்த செயல்களும் உள்ளடங்கியதே நடத்தை எனப்படும் உள்ளார்ந்த அல்லது அகவயப்பட்ட செயல்களின் அடிப்படையே "உள்ளம் அல்லது மனம் எனப்படுகின்ற அருவப் பொருள் எனப் பல உளவியலறிஞர்கள் கருதுகின்றனர், உள்ளம் என்னும் கருத்துப் பொருள் உளவியலின் இன்றியமையாத முதற்கோளாகும். இவ்வுளச் செயல்களே நாம் பெறும் அனுபவங்களாகும். இவ்வனுபவங்கள்,

 1. அறிதலனுபவம்

2. எழுச்சி அனுபவம்

3. முயற்சி அனுபவம்

 என மூவகைப்படுவன.

 

உளவியலில் நடத்தை

உளவியலில் நடத்தை என்பது துண்டல்களால் தோற்றுவிக்கப்படுகின்றதுலங்கல்களைக் குறிக்கும்.

 தூண்டல்

உடல் இயக்கத்தையோ செயலையோ ஒருவனைத் தொடங்கச் செய்யும் சக்தியினைத் தூண்டல்கள் என்கிறோம்.

 

தூண்டல்கள்

1. உடலுக்குள் இருந்தோ, புறச் சூழ்நிலையிலிருந்தோ தோன்றும்.

 

நடத்தைக் கோலங்கள்

உளவியல் மனிதனது நடத்தைக் கோலங்களின் பொது விதிகளை அறிந்து கூறுகின்றது. அத்துடன் நடத்தையிற் கானப்படுகின்ற தனியார் வேற்றுமைகளைப் பற்றியும் ஆராய்கின்றது.

நடத்தைக் கோலங்கள் என்பது வெளியுலக நிகழ்ச்சிகளுடனோ அல்லது உடலுக்குள் இருந்து எழும் நிலைகளுடனோ பொருத்தப்பாட்டினைப் பெற உதவும் பல இணைந்த செயற்றொடர்கள் ஆகும்.

 

3. 19ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்

 உளவியல் தத்துவ இயலின் ஒரு பகுதியாக இருந்ததே தவிர தனியான அறிவியல் துறையாக விளங்கவில்லை. தத்துவ விசாரணைக்கேற்ற தருக்க முறைகளே உளவியல் ஆய்வுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தத்துவ அறிஞர்களது தனிப்பட்ட ஊகங்களும் கருதுகோள்களும் ஆதிக்கம் செலுத்தின. ஆகவே பண்டைய உளவியலை நிச்சயமான உண்மைகள் அடங்கிய அறிவுத்துறை என எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது.

 

4. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்

 உளவியல் ஆய்வுகளில்

1. பரிசோதனை

2. அளவீடுகள்

முதலிய திட்பமான முறைகள் கையாளப்பட்டன. இதன் விளைவாக உளவியல் அறிவியற்துறையின் ஒரு சிறப்புத் துறையாக வளரத் தொடங்கியது, 1879 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் ஆண்ட் என்பவர் லிப்சிக் நகரில் நிறுவிய முதல் உளவியல் ஆய்வுக்களம் உளவியல் ஆய்வில் ஓர் சிறந்த இடம் பெறுவதாகும். இதன் பின்னர் பல உளவியலறிஞர்களது இடையறாத முயற்சிகளினால் உயிரியல் போன்ற அறிவியல்களின் வரிசையில் ஒன்றென எண்ணத்தகும் வகையில் உளவியல் வளர்ச்சியுற்றது.

 

5. உளவியலில் கையாளப்படும் முறைகள்

உளவியல் உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்காக உளவியலறிஞர்கள் பல முறைகளைக் கையாண்டு வந்துள்ளனர். இம் முறைகள் மனிதனது வளர்ச்சி, நடத்தை ஆகியவை பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்கும் திரட்டிய விபரங்களை ஆய்ந்து அவற்றினின்றும் உளவியல் விதிகளை பெறுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அம்முறைகளுள் முக்கியமானவை

1. அகநோக்கு முறை

2. உற்று நோக்கல் முறை

3.வாழ்க்கைத் துணுக்கு முறை

4.பரிசோதனை முறை

5.வளர்ச்சி முறை

6.தனியாள் வரலாற்று ஆய்வு முறை

7.புள்ளியியல் முறை

8.வினாக் கொத்து முறை

9.கள ஆய்வு முறை

 

1. அகநோக்கு முறை

இது உளவியலில் நீண்ட காலம் பயன் படுத்தப்பட்டு வந்தது. இம்முறையில் உளவியலாளர் தாமே தமது உள்ளத்துள் எழும் அனுபவங்களையும் மாறுதல்களையும் அவை நிகழும்போது அவற்றின் இயல்புகளை அறிய முயற்சி செய்கிறார்கள்.

இம்முறையில் பல குறைபாடுகள் உள்ளன.

1. மனவெழுச்சிகள் அவற்றை ஆராய முற்படும்போது மறைந்துவிடும்

2. முடிவுகள் ஆளுக்காள் வேறுபடும்

 

2. உற்று நோக்கல் முறை

பிறர் நடத்தைக் கோலங்களை புறத்தே நின்று தொடர்ந்து கூர்ந்து கவனித்து உண்மைகளை அறியும் முறையே உற்று நோக்கல் முறை எனப்படும். பாடசாலை மாணவர், குழந்தைகள் ஆகியோரது நடத்தைகளை ஆராய்ந்து விபரங்கள் திரட்ட இம்முறை சிறந்தது. இம்முறையில் பெறப்படும் முடிவுகளில், தெளிவும் திட்பமும் இருக்கும், இதில் உளவியலாளர் பல முறைகளைக் கையாள்வர்.

1. பல பயிற்சி பெற்ற நோக்கர்கள் ஒரே சமயத்தில் ஒருவனது நடத்தையை ஆராய்வது.

2. நடத்தையின் பல்வேறு கூறுகளை ஒரே நேரத்தில் ஆராயாது சில குறிப்பிட்ட கூறுகளை மட்டும் உற்று நோக்குவது.

3. உற்று நோக்குபவனுக்குத் தெரியாமலே அவனது நடத்தையை உற்று நோக்குவது.

4. திரைப்படக் கருவிகள் ஒலி நாடாக்களைப் பயன்படுத்தி உற்று நோக்குவது. இதிலும் குறைபாடுகள் உள. முழுவதும் நம்பகமாய் இராது.

 

1. உற்று நோக்குபவர்கள் தமது ஊகங்களையும் சேர்த்து விடுவர்.

2. உற்று நோக்குபவர்களுக்குக் குழந்தைகளின் பல்வேறு தரங்கள் அதன் முன்னனுபவங்கள் தெரியாது.

 

உற்றுநோக்கல் முறையும் ஆசிரியரும்

1. மாணவரின் இயல்புகளைக் குறித்து வைத்தல்,

2. திரள் பதிவேடுகளைப் பேணல்,

3. ஆசிரியர் மாணவரது திறன்கள், கவர்ச்சிகள், மனப்பாங்குகள், ஆளுமைப் பண்புகள், ஒழுக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ளல்,

4. உளவியல் பற்றிய ஆசிரியரது அறிவைத் தெளிவுபடுத்தல்

ஆகியவற்றுக்கு இம்முறை மிகப்பயனுடையது. இம்முறையில்,

 

1. திரள் பதிவேடு

2. பேட்டி முறை

3. வினாக் கொத்து முறை

முதலியவற்றை ஆசிரியர் பயன்படுத்தலாம்

 

3. வாழ்க்கைத் துணுக்கு முறை

இம்முறையும் உற்று நோக்கல் முறையுடன் தொடர்புடையது. ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் நிகழும் முக்கியமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வைத்தலே வாழ்க்கைத் துணுக்கு முறை எனப்படும். ஆசிரியர் தமது மாணாக்கரின் பாடசாலை வாழ்க்கையில் நிகழும் முக்கிய நிகழ்ச்சிகளைக் குறித்து வைத்தால் அவர்களது நடத்தைகளைப் புரிந்துகொள்ள முடியும்.

 

4. பரிசோதனை முறை

எல்லா அறிவியற் துறைகளுக்கும் நம்பகரமான முறை இது, இம்முறையில் பெறப்படும் முடிவுகளைப் பிறரும் சரிபார்க்கலாம். ஒரு நிகழ்ச்சியின் காரணிகள் எனக் கூறப்படுபனவற்றை நம்மாற் கட்டுப்படுத்த முடியும் என்பதே இம்முறையின் அடிப்படையாகும். இவ்வாறு கட்டுப்படுத்த முடியாவிடில் அந்நிகழ்ச்சியைப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாது. இதனால் இம்முறையைக் கட்டுப்பாடுகளுக்குட்பட்ட உற்று நோக்கல் முறை எனலாம்.

 எடுத்துக்காட்டாக -

'P' என்னும் நிகழ்ச்சி எழக் காரணம் யாது என்பதைப் பரிசோதனை முறையில் ஆராய்கின்றோம். இந்நிகழ்ச்சியின் காரணிகளாக A,B,C என்ற மூன்றும் காணப்படுவதால் இவற்றில் எதேனும் ஒன்று காரணியாக இருக்கலாம். எது என்பதைக் கண்டு பிடிக்க A,B,C என்ற மூன்றில் B,C என்பவற்றில் மாற்றம் ஏதும் செய்யாமல் 'A' என்பதை மட்டும் மாற்றி இம்மாற்றம் 'P' என்ற நிகழ்ச்சியைப் பாதிக்கின்றதா என நோக்குகின்றோம். அடுத்து A,C ஆகியவற்றை விட்டு வைத்து B' என்பதில் மாற்றம் செய்கிறோம். இறுதிச் சோதனையில் 'C' யினை மட்டும் மாற்றம்

செய்கிறோம். இம்மாற்றம் 'P' யை பாதிப்பதைக் காண்கிறோம். ஆதலின் 'P' நிகழ்ச்சிக்கும் 'C' என்பதற்கும் காரிய - காரணத் தொடர்பு உள்ளதென்பது புலனாகின்றது. பரிசோதனை முறையைக் கொண்டே உளவியல் ஆராய்ச்சிகள் யாவற்றையும் நடத்த இயலாது. ஒரு நிகழ்ச்சியை முழுவதும் கட்டுப்படுத்தமுடிந்தாலன்றி, அதனைப் பரிசோதனை மூலம் ஆராய (ՄծlգաfrՑl.

 

5. வளர்ச்சி முறை

ஒருவன் குழந்தைப் பருவம் தொட்டு முதிர்ச்சி அடைய அடைய அவனது நடத்தைக் கோலங்கள் மெதுவாக வளர்ச்சியுறுகின்றன. இவ்வளர்ச்சியையும், மாறுதல்களையும் நோக்கி அறியும் முறையே வளர்ச்சி முறை எனப்ப்டும். இம்முறையிலும் உற்று நோக்கல் முறை அடங்கியுள்ளது. வளர்ச்சிமுறை இரு வகைப்படும்.

1. ஒரேவயதுள்ள குழந்தைகளைத் தொடர்ந்து பல ஆண்டுகள் நோக்குதல்

2. பல வயதுக் குழந்தைகளை ஒரே சமயத்தில் நோக்கி அவர்களது

வேறுபாடுகளினின்றும் வளர்ச்சியின் போக்கை அறிதல்.

 

6. தனியாள் வரலாற்று ஆய்வுமுறை

இம்முறையில் ஒருவனது தற்போதைய நிலைக்கு அவனது முன்னைய வாழ்க்கை எவ்வகையில் காரணமாகிறது என்பது ஆராயப்படுகின்றது.

 

7. புள்ளியியல் முறை

இம்முறையில் பிரச்சினையுடன் தொடர்பான எல்லாப் புள்ளி விபரங்களும் திரட்டப்பட்டு, அவை தொகுக்கப்பட்டு வகைப்படுத்தப்படும். இறுதியில் அவற்றின் பொதுப் பண்புடன் அறியப்படுகின்றன.

 

8. வினாக் கொத்து முறை

பிள்ளைகளின் நடத்தையின் காரணங்களை ஆராய்வதற்கு அவர்களுக்கு அவர்களது வாழ்க்கை தொடர்பாக விபரங்களைத் திரட்டுவதற்கு இம்முறை பயன்படுத்தப் படுகின்றது. இதன் மூலம் திரட்டிய விபரங்களிலிருந்து அவர்களது நடத்தைக் கோலங்களின் காரணங்கள் அறியப்படுகின்றன. ஆசிரியர் இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய முறை இது.

9. கள ஆய்வு முறை

மாணவர் வாழ்கின்ற சூழலில் வைத்து அவர்களது நடத்தைக் கோலங்களை ஆராயும் முறை இதுவாகும். இதன் மூலம் நம்பகமான தகவல்களைப் பெற முடியுமாயினும் ஆசிரியரைப் பொறுத்தவரை அர்ப்பணிப்பு அவசியம்.

 6. உளவியற் கோட்பாடுகள்

மனிதனது நடத்தையையும், இயல்புகளையும் ஆராய்ந்தறிய முனையும் உளவியலறிஞர்கள் பல்வேறு கோணங்களினின்றும் நோக்குவதால் பல கோட்பாடுகள் தோன்றியுள்ளன.

அவ்வாறு எழுந்த உளவியற் கோட்பாடுகள் பல, அவற்றுள் முக்கியமானவை :

1. நடத்தைக் கோட்பாடு

2. நோக்கக் கோட்பாடு

3. உளப்பகுப்பு கோட்பாடு

4. முழுநிலைக்காட்சிக்கோட்பாடு

 

1. நடத்தைக் கோட்பாடு

 * இக்கோட்பாட்டை உருவாக்கியவர் வாட்சன் என்னும் உளவியலறிஞர்.

* உளவியலின் ஆய்வுப் பொருள் புறத்திலிருந்து பிறரால் பார்த்து. ஆரரயக்கூடிய நடத்தைக் கோலங்களேயாகுமென இக்கோட்பாட்டாளர் கருதுகின்றனர்.

* மனித நடத்தையின் அடிப்படையாக அமைவன மறுவினைகள் போன்ற இயற்கையான தூண்டல் - துலங்கல் தொடர்புகளேயென்றும், இவையே பின்னர் கற்றலினால் மாறுபட்டு சீக்கடைந்து முதிர்ச்சி பெற்ற மனிதனிடம் காணப்படுகின்ற, பலவகை நடத்தைக் கோலங்களாகப் பரிணமிக்கின்றன. என்றும் இவர்கள் கருதுகின்றனர். ‘மனம்’, ‘உள்ளம்', ‘நனவுநிலை போன்ற பரிசோதனைக்குட்படுத்த முடியாத உளவியற் கருத்துக்களில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை.

 

2. நோக்கக் கோட்பாடு

இது நடத்தைக் கோட்பாட்டுக்கு நேர் எதிரானது. இதனைக் தோற்றுவித்தவர் வில்லியம் மக்டுகல் என்பவராவர். உயிர்களில் நடத்தையை ஒரு நோக்குடைச் செயலாகவும் நடத்தையானது உயிரிகளுக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஓர் இலக்கை அடைய உதவுகிறது என்றும் இவர்கள் கருதுகின்றனர். உயிரிகளின் உள்ளே உள்ள உயிர் உந்தலே நடத்தைக்கு காரணமாகும். இவ்வுயிர் உந்தல் பல்வேறு இயல்பூக்கங்களாக கிளைத் தெழுந்து உயிரிகளின் நடத்தையாகச் செயற்படுகின்றது. இவையே மனிதனது நடத்தைப் போக்கையும் ஒழுக்க வளர்ச்சியையும் தீர்மானிக்கின்றன.

 

3. உளப்பகுப்புக் கோட்பாடு

சிக்மன்ட் பிராய்ட் என்பவர் தோற்றுவித்த உளவியற் கோட்பாடு உளபகுப்புக் கோட்பாடாகும். மனித நடத்தையில் நனவிலி மனத்தின் முக்கியத்துவத்தை இக்கோட்பாடு வலியுறுத்துகின்றது.

இந்நனவிலி மனத்தில் ஒருவனால் அறிய முடியாத பல எழுச்சிகளும், எண்ணங்களும், சிக்கல்களும், நோக்கங்களும் மறைந்து கிடக்கின்றன. இவை முன்னர் நனவு நிலையிலிருந்து பின்னர் நனவிலி மனத்துள் நசுக்கப்பட்டவையாகும். நனவிலி மனத்துள் காணப்படுகின்ற ஊக்கிகள் பெரும்பாலும் பாலுணர்ச்சியுடன் தொடர்பானவை என இவர் கருதுகின்றார்.

இவை பல்வேறுவழிகளில் வெளிப்பட்டு ஒரு மனிதனுக்குக் தெரியாமலே அவனது நடத்தையைத் தீர்மானிக்கின்றன. மகிழ்ச்சியடைதலையே நோக்காக் கொண்ட பண்படாத ஊக்கிகளுடனேயே குழந்தை பிறக்கிறது. இவற்றைப் பிராய்ட் 'இட்’, ‘அகம்’, ‘அதியகம்' ஆகிய உளக்கூறுகள் மூலம் விளக்குகின்றார்.

 

4. முழு நிலைக் காட்சிக் கோட்பாடு

இக் கோட்பாட்டாளர் உளவியலில் ஒரு புதுக் கருத்தைப் புகுத்தியுள்ளார். மனித நடத்தைகளின் உண்மை இயல்பை அறிய வேண்டுமாயின் அதனைச் சிறு சிறு கூறுகளாகப் பகுத்து ஆராயாது, அந்நடத்தையை முழுமையாக உற்று நோக்கி ஆராய்தலே சிறந்த முறையாகும் என்பது இவர்களது கோட்பாடு. ஒரு முழுப் பொருள் அதன் பகுதிகளின் வெறும் தொகுப்பு அன்று; அம்முழுப் பொருளுக்கென்றே ஒரு தனி அமைப்பும் இயல்புகளும் செயற்படும் விதிகளும் உள்ளன. இவற்றை அதன் பகுதிகளின் அறிவினின்றும் பகுத்தறிய முடியாது என இவர்கள் நம்புகின்றனர். இவைவே கெஸ்ரால்ட் கோட்பாட்டாளரின் அடிப்படைக் கருத்துக்களாகும்.

உளவியலில் இத்தகைய கோட்பாடுகள் இருப்பினும் அவற்றுக் கிடையேயும் கருத்தொற்றுமைகள் காணப்படுகின்றன. கல்வியாளர்களும் ஆசிரியர்களும் பொது உண்மைகளை பாடசாலை நிலைமைகளுக்கேற்பப் பயன்படுத்தலாம்.

  7. உளவியற் பிரிவுகள்

உளவியல் பல பிரிவுகளைக் கொண்டது. அவற்றுள் முக்கியமானவை

 

1. பொது உளவியல்

இதுவே அடிப்படை உளவியலாகும். இதனுள் எல்லா உளவியற் பிரிவுகளுக்கும் பொதுவான கருத்துக் காணப்படும்.

 

2. குழந்தை உளவியல்

குழந்தையின் வளர்ச்சி, வளர்ச்சிக்கான காரணிகள். திறன்கள் இவற்றை அளவிடும் முறைகள், முதலியவற்றை இது விளக்குகின்றது.

 

3. நெறிபிறழ் உளவியல்

உளநலம் கெட்டு, நரம்பு நோய், உளப்பிணி போன்ற கோளாறுகளால் பீடிக்கப்பட்டவர்களின் அசாதாரண நடத்தையை இது விளக்குகின்றது.

 

4.கல்வி உளவியல் அடிப்படைகள்

சமுக உளவியல் மனிதன் மற்றவர்களுடன் சேர்ந்து சமூக வாழ்க்கை நடத்தும்போது எழும்அவனது எண்ணங்கள், மனப்பாங்குகள், பழக்கவழக்கங்கள் நெறிபிறழ்வுகள் ஆகியவை பற்றி இது ஆராய்கின்றது.

 

5. விலங்கு உளவியல்

விலங்குகளின் நடத்தைப் பற்றி இது விளக்கமளிக்கின்றது.

 

பிரயோக உளவியல் ஏனைய உளவியல் ஆய்வு முறைகளாலே பெற்ற உண்மைகளை நடைமுறையில் பயன்படுத்தும் உளவியற் கூறு இது. இதிலே

1. தொழில் உளவியல்,

2. விளம்பர உளவியல்,

3. கல்வி உளவியல் என்பன அடங்கும்.

 

கல்வி உளவியல்

*பொது உளவியலால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உண்மைகளை ‘கற்பித்தல் - கற்றல் செயன்முறையின் விருத்திக்குக் கல்வி உளவியல் பயன்படுத்து கின்றது.

* கல்வி உளவியலின் மையப் பொருள் மாணவரது நடத்தையாகும்.

*கல்வி உளவியலின் அடிப்படையிலே கலைத்திட்டமும் கற்பித்தல் முறைகளும் அமையுமாயின் கற்பித்தல் கற்றல் பயனுடையதாக அமையும்.

 

கல்வி உளவியலின் பயன்கள்

1.ஆசிரியர் தம்மைத் தாமே புரிந்து கொள்ளல்

2.மாணவரைப் புரிந்து கொள்ளல்

3.மாணவரின் தனியாள் வேற்றுமைகளை அறிதல்

4.வகுப்பறைச் செயற்பாடுகளைச் சீர் செய்தல்

5.மாணவரின் செயல்களைக் கட்டுப்படுத்தல்

6.மாணவரைச் சிறந்த பொருத்தப்பாடடையச் செய்தல்

7.கற்றல் - கற்பித்தல் செயன் முறையில் எழும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணல்

முதலியவற்றுக்குக் கல்வி உளவியல் துணை புரிகின்றது.

 

மூலம்: கல்வி உளவியல் அடிப்படைகள்

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click