I 1சடங்கு அரங்கின் பிரதானமான அம்சம் பார்ப்போர், நிகழ்த்துவோர் என்னும் வேறுபாடுகள் இன்றி அனைவரும் இணைந்து அந்நிகழ்விளை நிகழ்த்தி முடிப்பதாகும். இங்கு நாடகம் என்கின்ற மனோ நிலையை விட ஒரு கரணம் என்னும் நம்பிக்கையுடன் மக்கள் ஈடுபடுவதனால் அச்சடங்கில் ஈடுபடுவோர்க்கு அது சடங்காகவும், அச்சடங்கில் நம்பிக்கையற்றோருக்கு அது நாடகமாகவும் தென்படும். இதனை,

1. நாடகம் சார்ந்த சமயச் சடங்குகள்

2. சமயக் கரணங்கள் சார்ந்த நாடகங்கள்

3. சமயக் கரணம் சாரா நாடகங்கள்

என்று மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

சமுதாயம் என்னும் கட்டுக்கோப்புக்குள் இயங்குகின்ற ஒரு நிறுவனமே நாடகம். எனவே நாடகம் பற்றிய பூரண ஆய்வுக்கு உட்படும்போது நவீன நாடகங்களுடன் அல்லது நவீன நாடகச் சூழலில் நடக்கும் நாடகங்களுடன் மட்டுப்படாது விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சிக்கு முற்பட்ட பின் தங்கிய மக்களிடையே வழங்கிய நாட கங்களையும் எடுத்து நோக்க வேண்டும். ஏனெனின் இவை யாவும் நாடகத்தினது வளர்ச்சியின் பல்வேறு படி நிலைகளைக் காட்டி நிற்பன வாகும். இந்நிலையில் முன்னர் குறிப்பிட்ட மூன்று படிநிலை வளர்ச்சியும் ஒரு சமூகத்தின் நாடக வளர்ச்சியில் ஆராயப்படவேண்டிய விடயங் களாகும். நாடகம் சார்ந்த சமயச் சடங்குகள்:

யாழ்ப்பாணத்தின் சில பாகங்களிலும், முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளிலும் மலை நாட்டிலும் சிறப்பாக மட்டக்களப்பு, மூதூர், திருகோ ணமலைப் பகுதிகளிலும் தமிழர் மத்தியிலே பல நாடகம் சார்ந்த சமயக் கரணங்கள் நடைபெறு கின்றன. இதனை 4 முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. மதகுருவே தெயவமாக அபிநயித்து ஆடுகின்ற சமயச் சடங்கு

2 மதகுரு இயக்க, இன்னொருவர் தெய்வமாக அபினயித்து ஆடுகின்ற

சமயச் சடங்கு.

3. ஐதீகக் கதைகளை உள்ளடக்கிய சமயச் சடங்கு

4. நாடக நிகழ்ச்சிகள் தனியாகப் பிரியத் தொடங்கிய சமயச் சடங்கு

மதகுருவே தெய்வமாக ஆடும் சமயச் சடங்கு

மட்டக்களப்புப் பகுதியிலே வேட வெள்ளாளரிடம் நடைபெறும் சமயச் சடங்கு நமக்கு-புராதனமானதொரு வணக்க முறையையும் ஆட்ட முறையையும் காட்டுகின்றது.

இக்குழுவினரால் நடத்தப்படுகின்ற இச்சடங்கு வருடா வருடம் நடைபெறுகின்றது. இவர்கள் சில தெய்வங்களுக்கு அபிநயித்து சன்னதம் கொண்டாடுவர். உத்தியாக்கள் (குழுவிலே இறந்த முன்னோர்) மாறா (வேட்டையாடும் தெய்வம்) பணிக்கம் (யானை கட்டும் தெய்வம் ) வதனமாறா (யானை பிடிப்பவரையும், மாடு கட்டுதலையும் செய்யும் தெய்வம்) என்பன இத் தெய்வங்களுள் சில. இத் தெய்வங்களின் பெயர்களும் செயல்களும் மரபு மரபாக வரும் தெய்வங்களில் நின்றும், செயல் முறைகளில் நின்றும் வேறுபட்டவை. குழுவிலே இறந்த முன் னோர்கள் ஆவி வடிவில் திரிவார்கள் என்னும் சூழ்நிலையில் வாழ்ந்த பண்டைய மக்களின் நினைவே உத்தியாக்கள் என்னும் தெய்வமாடலாக உருப்பெற்றது. தெய்வ வணக்கம் தோன்ற முன்னர் இவ்வணக்கப புராதன மனிதரிடம் நிலவியது என்பர் மானிடவியலாளர்.
ஏழு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இக்கோயில் சடங்கில், இறுதி நாள் விழா முக்கியமானதாகும் இறுதி நாளன்று மாறா தெய்வ மேறியாடுபவர் வேட்டையாடச் செல்வது போல அபிநயித்துக் காட்டி ஆடுவார். இவரே தேன் எடுக்கப் போவது போன்றும், தேன்பூச்சி குத்தி விழுவது போன்றும் அபிநயித்து ஆடுவார். வதனமார் தெய்வமேறியாடு பவர் கோயில் விழாக்காண வந்த சிறுவர்களை மாடுகளாகப் பாவித்து அவர்களை ஒரு கயிற்றால் கட்டி கோயிலை வளைத்தோடி வருவார். பின் மாடுகளுக்குக் கொடுப்பது போல அவர்களுக்கு வாழைப்பழம் வாயிலே கொடுப்பார். பின் அவர்களை மாடுகளைக் கலைப்பதைப் போலக் கலைத்தும் விடுவார்.

இங்கெல்லாம் கோயிலே மேடையாக அமைய, ஒரு நாடகம் சார்ந்த சமயச் சடங்கு நடப்பதையே காண்கின்றோம். இந்து மக்களிடையே நடைபெறும் வேட்டைத் திருவிழாவும் இதனையே உணர்த்தும், இங்கெல்லாம் புராதன வாழ்க்கை முறை அபிநயிக்கப்படுவதைக் காண்கின்றோம். இது எமக்குப் புராதன நாடகத்தை (Primitive Theatre) நினைவூட்டுகின்றது. இப்புராதன அரங்கு பலநாடுகளிலும் வாழும் பின்தங்கிய மக்களிடம் காணப்படுவதாக மானிடவியலாளர் கூறுவர். ஈழத்திலும் தமிழர் மத்தியில் இப்புராதன அரங்கு உண்டு. மதகுரு இயக்க இன்னொருவர் தெய்வமாக ஆடிய சமயச்சடங்கு

வேட்டையாடிய சமூகம் நிலைபெற்று வாழ்ந்த காலத்தில் அவர்க ளின் வணக்க முறையும் ஆடல்முறைகளும் வேறுபட்டன. மட்டக்களப் பில் இடம் பெறும் சிறுதெய்வச் சடங்குகள் நாடகம் சார்ந்த சமயச் சடங்குகளின் அடுத்தகட்ட வளர்ச்சியை எமக்குணர்த்துகின்றன. இவை வளம் வேண்டியும், நோய் தீர்ப்பதற்காகவும் நடத்தப்பட்டன.

வேட்டையாடிய சமூகம் நிலைபெற்று வாழ்ந்த காலத்தில் அவர்க ளுக்கு மழை தேவைப்பட்டது. இதனால் மாரியம்மனை வழிபட்டனர். மாரி என்றால் மழை எனப்பொருள்படும். மழைவேண்டி மாரியம்மனை வேண்டினோர் மாரி பெய்யாவிடில் நோய் பெருகுவதைக் கண்டு அவளையே நோய் தீர்க்கும் தெய்வமாகவும் வணங்கினர். மட்டக்களப் பிலே நடைபெறும் மாரியம்மன் குளிர்த்திச் சடங்கு நாடகத்தன்மையு டையதாகும். கண்ணகியம்மன் ஆலயங்களில் நடைபெறும் குளிர்த்திச் சடங்கு, மாரியம்மன் கோயில்களில் நடைபெறுவது போன்றே நடை பெறும். கண்ணகியம்மன் சடங்கோடு தொடர்புடையதாக மட்டக்களப்பில் நடைபெறும் கொம்புமுறித்தல் என்னும் ஊர் விழா வளம் வேண்டு தலோடும், நோய் தீர்தலோடும், மழை வேண்டுதலோடும் தொடர்புடையது. வடசேரி, தென்சேரி என இரண்டு கட்சியாக ஊர் முழுவதும் பங்குகொள்ளும் இவ்விழா, நாடகத்தன்மையுடையதாக இருப்பதுடன் சமயச் சடங்கோடு மாத்திரம் நின்று விடாது, தனியாக ஆடல் பாடலை யும் உள்ளடக்கியிருப்பதைக் காணலாம். ஐதீகக் கதைகளை உள்ளடக்கிய சமயச்சடங்கு:

மக்களுக்கு நல்வாழ்வையும் பாதுகாப்பையும் நோய் தீர்க்கும் தெய்வங்களான காளி நரசிங்கம், வைரவர், காத்தவராயன், அனுமான், ஐயனார் கெங்காதேவி போன்றவைதரும். நோய்களைத் தரும் பிசாசுகளா வன ஊத்தைகுடியன், காடேறி, இரத்தக் காடேறி, சுடலைமாடன், பிணந் தின்னி போன்றவை சடங்கு செய்யும் போது இத்தெய்வங்களைப் போல அபிநயித்து ஆடுதல் வணக்க முறைகளில் ஒன்றாகும். புராண, இதிகாசங் களில் இத்தெய்வங்கள் பற்றிய கதைகள் உண்டு. இத்தெய்வங்களுக்கு அபிநயிப்போர் அத்தெய்வங்கள் பற்றிய ஐதீகக் கதைகளை அபிநயிப்பர். உதாரணமாக காத்தவராயனுக்கு அபினயிப்போர் காத்தவராயனின் லீலைகளைப்போல சில லீலைகளைச் செய்வர். சாராயப் போத்தலை மகிழ்ச்சியோடு பார்ப்பர். இளம் பெண்களை மகிழ்ச்சியோடு அழைத்து கட்டுச் சொல்லி ஆடி மகிழ்வர்,

முதலாவதாக நாம் கூறிய நாடகம் சார்ந்த சமயச் சடங்குகளில் இருந்து இச்சடங்குகள் இரண்டு விதங்களில் வேறுபடுகின்றன. ஒன்று, இங்கு ஆடுவோர் வேறு பூசாரி வேறு. இரண்டு, இங்கு வாழ்க்கை முறை அபிநயிக்கப்படாமல் ஐதீகங்கள் அபிநயிக்கப்படுகின்றன. நாடக நிகழ்ச்சிகள் தனியாகப் பிரியத் தொடங்கிய சமயச் சடங்கு:

இயக்குபவன் வேறாகவும் நடிகன் வேறாகவும் பிரியும் முறையும், ஐதீகக் கதைகள் அபிநயிக்கப்படுவதும் சேர்ந்ததனால் நாடகம் தனியொரு கலையாகப் பிரியும் தன்மையேற்படுகின்றது. இம் மாறும் தன்மையினை கிழக்கிலங்கையில் கல்முனையின் அருகேயுள்ள பாண்டிருப்பிலுள்ள திரௌபதை அம்மன் கோயிலில் நடைபெறும் நாடகம் சார்ந்த சமயச் சடங்கிலே காணலாம். பல சடங்குகள் இடம் பெற்ற போதும் இங்கு இடம் பெறும் வனவாசச் சடங்கு சிறப்பாக நோக்கத்தக்கது.

இங்கு ஐவர் பாண்டவரைப்போல் தெய்வம் ஏறியாடுவர் ஐவரும் வனவாசம் செல்வதுபோல அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மீள்வர். வீமனுக்கு ஆடுபவர் வனவாசத்தின் போது கனி பறிப்பதை அபிநயிப்பார். ஆட்களின் வளவுகளுக்குள் புகுந்து வாழை, பலா, மா முதலிய கனிகளைத் திரட்டுவார், மக்கள் இவரை உண்மையான வீமனாக எண்ணி வணங்கி இவற்றை வழங்குவர், இங்கு ஊர் மக்களும் பங்கு பெறுகின்றனர். சமயக்கரணம் சார்ந்த நாடகங்கள் சமயம் சார்ந்த நாடகங்களுக்கு உதாரணம் பெரும் தெய்வக்கோயில் களில் நடைபெறும் சூரன் போர், கம்சன்போர் என்பனவாகும். இவை சமயச் சடங்குகளாயினும் கோயிற் பெருவெளியில் நடைபெறும் நாடங்களுமாகும். சூரன்போரிலே சூரன் சிலை மரத்தினாற் செய்யப் பட்டிருக்கும். சுவாமியின் உற்சவமுகூர்த்த சிலை வெளியிலே கொண்டு வரப்படும். நாரதர் வீரவாகுத்தேவர், பூதகணங்கள் தேவகணங்கள் என்போருக்கு மாந்தரே வேடமணிந்திருப்பர். அனைவரும் இணைந்து சூரசம்ஹாரத்தினை கோயிற்பெருவெளியில் நடத்தி முடிப்பர், மக்கள் பார்ப்போராய் அமைவர். முந்திய சமயச் சடங்குகள் போலன்றி வேடப் புனைவும், அபிநயிப்பும், ஒரு முழுக்கதை வெளிப்பாடும் இங்கு கூடுதலாக அமைந்துள்ளன,

மேற்கூறிய சமயச் சடங்குகளிலே கோயிலின் உட்புறமும் வெளிப் புறமும் மேடையாக அமைந்தன. சடங்கில் பங்குகொள்வோர் தெய்வங் களுக்கு அபிநயித்தனர். தெய்வமுற்றோரை மக்கள் தெய்வம் என்று நம்பி அவருடன் பேசினர். இவற்றிலே நாடகத்தின் புராதன அமிசங்களைக் காண முடிகிறது. இந்நிகழ்ச்சி வெளியில் பலரும் காண இடம் பெற்றது. கிராமப்புறக் கோயில்களில் விநாயகப்பானை எடுக்கும் இடத்து பூசாரியார் பெண் வேடமிட்டு வருவார். இங்கெல்லாம் நாடகமாக வேடமிடுவதற்கான வித்துகளைக் காண்கின்றோம். இவை சமயமாக இடம் பெற்றதால் மக்கள் நம்பிக்கையுடன் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் கேளிக்கைக்கு உரிய நிகழ்ச்சியாக அது மாறவில்லை. தம் வாழ்வோடு ஒன்றிய ஒரு நிகழ்ச்சியாகவே மக்கள் அதைக் கொண்டனர். இதனால் அச்சடங்குகள் நாடகமாக முடியவில்லை . எனினும் நாடகத்துக்கான மூலவித்துக்களை அச்சடங்குகள் கொண்டிருந்தன. நாடகத்திற்குரிய அரங்கு, நடிப்பவர்கள், இயக்குபவர்கள், பார்ப்போர் என்ற நாடக அம்சங்களை இச்சடங்குகளில் காண்கின்றோம். கோயிலே அரங்கு; தெய்வம் ஏறியாடுபவர்களே நடிகர்கள்; மந்திரவாதியே அவர்களை இயக்குபவர்; மக்களே பார்ப்போர் இன்றும் வெளிநாட்டார் ஒருவரின் பார்வைக்கு நமது சிறு தெய்வ வணக்கச் சடங்குகள் ஒரு புராதன அரங்கையே ஞாபகம் ஊட்டும். 

மூலம்:- அரங்கு ஓர் அறிமுகம்

 

 

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click