அருட்டிரு நீ . மரியசேவியர் அடிகள்
கல்வி வேறு, அரங்கியல் வேறு என்ற கருத்தை முழுதாக ஏற்காது, ஒன்று மாற்றதற்குத் துணையாக நிற்க முடியும் என்ற கொள்கை அடிப்படையில் 'கற்' இயங்குகிறது. அது, கல்வியை அரங்கவினைப்பாடுகள் மூலம் சுலபப்படுத்துகின்றது; கல்வி பயிலும் நகர்வாழ் மாணவ சமூகத்தைப் பாதிக்கும் சமகாலப் பிரச்சினைகளை ஆய்ந்தறிந்து, அவைகள் விடுக்கும் சவால்களை ஏற்று, அரங்க ஆக்கங்கள் மூலமும் நாடகப் பட்டறைகள் மூலமும் நல்லபடி வாழும் தகமையை மாணவர்களுக்கு ஊட்ட முனைகிறது.
1995ல் அமெரிக்க அரசின் கலாசாரப் பிரிவினால் நியூ யோர்க் நகரிலுள்ள பல்வேறு கலை நிறுவனங்களைப் பார்வையிடும் வாய்ப்பு இக் கட்டுரை ஆசிரியருக்கு வழங்கப்பட்டது. ''கற்' நிறுவனத்தின் பிரமுகர்களைச் சந்தித்ததுடன் அவர்கள் நடத்திய பட்டறைகளிலும் ஆற்றுகைகளிலும் கலந்து கொண்டார்.
drama நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் ஓர் அலகாக இயங்கும் "கற்" அல்லது படைப் பாக்கக்கலைகளின் அணி'' என்னும் கலை நிறுவனம், கல்வியையும் அரங்கையும் இணைத்து உலகின் பல நகரங்களிலும் செயற்படும் முன்னோடி நிறுவனங்களுள் ஒன்று .
கல்வி வேறு, அரங்கியல் வேறு என்ற கருத்தை முழுதாக ஏற்காது, ஒன்று மற்றதற்குத் துணையாக நிற்க முடியும் என்ற கொள்கை அடிப்படையில் 'கற்' இயங்குகிறது. அது, கல்வியை அரங்கவினைப்பாடுகள் மூலம் சுலபப்படுத்துகின்றது; கல்வி பயிலும் நகர்வாழ் மாணவ சமூகத்தைப் பாதிக்கும் சமகாலப் பிரச்சினைகளை ஆய்ந்தறிந்து, அவைகள் விடுக்கும் சவால்களை ஏற்று, அரங்க ஆக்கங்கள் மூலமும் நாடகப் பட்டறைகள் மூலமும் நல்லபடி வாழும் தகமையை மாணவர்களுக்கு ஊட்ட முனைகிறது. ஏட்டுப் படிப்புக்கு அப்பாலும் பல வகைகளில் கற்றல் நிகழ்கின்றது என்பது "கற்'' போன்ற நிறுவனங்களது கொள்கை. இதற்கிணங்க, கலைகள் மூலம் கற்றுக்கொள்ளலாம் என்பது தெளிவு. மேலும், முறையான அரங்கியல், அறிவூட்டல் பண்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது இத்தகைய அரங்கியல், பார்வையாளர் அல்லது பங்குபற்றுவோர் மத்தியில் கேள்விகளை எழுப்ப வைக்கும்; உலகைப்புதுக்கண்ணோட்டத்தில் பார்க்க உந்தும் மக்கள் வாழ்க்கையை இயக்கும் நிறுவனங்களை, ஒழுக்க முறைகளை, பழக்க வழக்கங்களை புதிதாகக் கூர்ந்து நோக்கத் தூண்டும் : '' நான் யார்?'' என ஒவ்வொருவரும் தம்மைப் பற்றியும், '' நமது சிந்தனை, சொல் செயல் எத்தகையவை'' என்று தமது வினைகள் பற்றியும் கேள்விகளை எழுப்ப உதவும், ஒவ்வொரு வரையும், தமக்கும், தம்மைச் சூழ உள்ளோர்க்கும், தமது சூழலுக்கும் இடையே உள்ள உறவை அடிக்கடி மீளாய்வு செய்யத் தூண்டும். அப்போ தெல்லாம் கற்றல்'' நடை முறைப்படுத்தப்படுகிறது.
இப்படியாகக் கல்வியுடன் அரங்கியல் இணைக்கப்படுவது கல்வி புகட்ட உதவும் அரியதோர் ஊடகமாயும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர் குழுவிற்கு உகந்த கலை வடியமாகவும் அமைகின்றது. இக் கொள்கையை வலியுறுத்திச் செயற்படும் கலை நிறுவனம் கள் இங்கிலாந்தில் அறுபதுகளின் நடுவில் உருவாகி எழுபதுகளில் உரமடைந்து நின்றன. அக்கால சட்டத்திற்றான் ' கற்'' றும் ஆரம்பிக் கப்பட்டது.
"கற்' போன்ற கலை நிறுவனங்கள் நாளைய நாடகக் கலை நிகழ்ச்சிகளை சுவைக்கும் பார்வையாளர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டவை அல்ல; மாறாகச் சமூக மாற்றங்களுக்கு அடிகோலுவதற்கு அரங்கியல் பயன்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயற்படுபவை.
"கற்" நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றி அறியப் புகு முன், - பேர்த்தோல்ட் ப்ரெஃற் - அவர்களின் கூற்று ஒன்றை நினைவுபடுத்துவது சாலப்பொருந்தும்:
'ஒருவர் ஒரு பொருள் பற்றி அறிந்து கொள்வதற்கும், பொழுதைப் போக்கும் நோக்குடன் தன்னைக் களிப்பூட்டுவதற்கும் கண்டிப்பாக வேறுபாடு உள்ளது. அறிதல் பயனுள்ளதாக இருக்கலாம்; ஆனால் களிப்பூட்டுவது இதமானது. இவை இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெய்வத்தினால் நிறுவப்பட்ட தல்ல இந்நிலை. இப்படித்தான் இருந்து வந்துள்ளது என்றோ, இப்படித்தான் இனிமேலும் இருக்கும் என்றோ கூறுவதற்கில்லை. நாடகக்கலை அறிவூட்டத்தக்கது என்று எடுத்தாற்கூட நாடகக் கலை நாடகக் கலையாகவே இருக்கும் ஆயின் நல்லதொரு நாடகக் கலையெனில் அது களிப்பூட்டுவதாகவும் இருக்கும்.
''கற்'' கலை நிறுவனம் நாலு வகையான முக்கிய செயற்றிட்டங்களுடன் செயற் படுகிறது.
அறிதல் பயனுள்ளதாய் இருக்கலாம்;
ஆனால் களிப்பூட்டுவது இதமானது.
* வரம்பிகந்த நாடகம்
* சிறப்புக் கடுகதி
* தொடர்புத் திட்டம்
* நாடகம் மூலம் முரண்பாடுகளைதல்
இவைகளை நடத்தி முடிப்பதில் இன்றி யமையாது இணைந்து கொள்வோர் : -
மாணவர்களின் வகுப்பாசிரியர்கள்
- பட்டறை நடத்தி ஆற்றுகை அளிக்கும் நடிக ஆசிரியர்கள்.
- குறிப் பிட்ட வயதிற்குட்பட்ட மாணவர் குழு.
- நாடகப் பிரதியைத் தயார் செய்யும் சதாசிரியர்.
- படாத் திட்டங்களைத் தயார் செய்யும் ''கற்'' நிறுவத்தைச் சேர்ந்த இயக்குனர்.
வரம்பிகந்த நாடகம் :
இது ஆறு வயதிலிருந்து பன்னிரண்டு வயதுவரையுள்ள மாணவருக்கு வழங்கப்படும் பட்டறை, ஆற்றுகை மூலமான பயிற்சி மாணவர்கள், வகுப்பாசிரியர்கள், நடிக ஆசிரியர்கள் இடையில் கூட்டுப் பங்காண்மையை உருவாக்குவது, மாணவர்களின் திறனாய்வுச் சிந்தனையை மெருகூட்டுவது, சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு கொள்வது போன்ற இலக்குகளை இது கொண்டது. ஒவ்வொரு பட்டறையும், குறிப்பிட்ட வயது மாணவருக்கு (எடுத்துக் காட்டாக 6-9 அல்லது 10 -12 வயதுக் குழுவினருக்கு) நடிக ஆசிரியர்களின் உதவியுடன் தயாரிக் கப்படுகிறது.
ஒவ்வொரு அமர்வும் வாரத்துக்கு ஒரு தடவை இடம் பெறும். மொத்தமாக பத்து அமர்வுகள் உள்ளன, ஆகவே இப் பாடத்திட்டம் பத்து வாரங்களுக்கு நீடிக்கும், இப்படி ஒரு வார, பத்து அமர்வுகள் கொண்ட கால இடைவெளியானது. நடிக ஆசிரியர்கள் வகுப்பு ஆசியர்களைச் சந்தித்துப் பாடத்திட்டத்தின் முன்னேற்றத்தைப் பற்றி உரையாடுவதற்கும், மாணவர்கள் ' நடிக , வகுப்பு ) ஆசிரியர்களின் உதவியுடன் தமது பாடத்திட்டத்தை ஆழமாக அலசிப்பார்த்து திறம்படச் செயல்படவும் துணைபுரிகிறது.
வகுப்பு ஆசிரியர்களுக்கும் ஓரிரு தடவை நடிக ஆசிரியர்களால் பாடத்திட்டத்தைத் தகுந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகளைப்பற்றி பட்டறைகள் நடத்தப்படும்.
எடுத்துக்காட்டு நிகழ்ச்சி:
பொதுத்தளம் மேற்குறிப்பிட்ட அமர்வுகளில் ஆறு அமர்வுகளின் போது பின்வருவது காட்சியாக நிகழ்த்தப்படும் ;
பல்வேறு இனம், நிறம், சமயம், உடைநடை பாவனை கொண்ட மக்கள் ஒன்றிணைந்து ஒரே குழுமமாக வாழ்கிறார்கள் தங்களை அடையாளங்காட்டியும் மற்றையோரிடமிருந்து வேறுபடுத்தியும் நிற்கும் சின்னங்கள் பல அவர்களிடத்தில் உண்டு. பொது ஒழுங்கு முறை அவர்களது வாழ்வை நெறிப் படுத்துகிறது. அவர்களுடைய வாழ்வு அமைதிப்பாதையில் செல்கிறது.
சடுதியாக, அவர்களைப் போல் அல்லாத வேறுபட்ட குழு ஒன்று தோன்று கிறது. முன்னைய குழுவின் பொது ஒழுங்கையும் வாழ்க்கை முறையையும் நிராகரிக்கிறது அதனால் இரு குழுவினருக்கும் இடையில் குரோதம் உருவாகி றது, பின்னைய குழுவினர் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதாக முதற் குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், முதற் குழுவினர் பின் னையவர்களைத் தவறாகப் புரிந்து கொண்டதை ஒரு சில நிகழ்ச்சிகள் மூலம் உணர்ந்து கொள்கின்றனர். வேறுபாட்டிலும் ஒற்றுமையாக ஒருவர் ஒரு வரை மதித்து வாழ முடிவு செய்கின்றனர். ''பேதாபேதத்துடன்' இரு குழு வினரும் இணைந்து வாழ உறுதி பூண் கின்றனர்.
கடைசி நான்கு அமர்வு ககளின் போதும் பங்குபற்றுவோர் தமது வாழ்க்கையில் நிலவும் வளரும் மனித உறவுகளைப் பற்றியும், மாறுபட்ட வாழ்க்கை நெறி பற்றியும் ஆராய்வர்.
சிறப்புக் கடுகதி
இது ஆறுக்கும் பதினாறு வயதுக்கும் உட்பட்ட மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு உருவாக்கப்படும் அரங்கநெறி. வழமையாக ஐந்து அமர்வுக ளைக் கொண்டது; பன்முகப் பண்பாட்டு வாழ்வியல் பற்றியது. தன்மான உணர்ச்சி, குடும்ப நெருக்கீடுகள், இனத்து வேசம், 'முற்சார்பு எண்ணம்' ஒத்துழைப்பு போன்ற தலைப்புக்கள் இவ்வமர்வுகளின் மையப் பொருட்கள். தங்களை அடையாளங் காட்டியும் மற்றையோரிடம் இருந்து வேறு படுத்தியும் நிற்கும் சின்னங்கள் பல அவர்களிடத்தில் உண்டு.
எடுத்துக்காட்டு நிகழ்ச்சி :
நண்பர்களின் கடலரசு''
* இது ஆறுவயதுக்கும் ஒன்பது வயதுக்கும் உட்பட்ட மாணவர்களுக்கானது.
* ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம் நீடிக் கும் ஐந்து பட்டறைகளைக் கொண் டது.
* மற்றையோரில் காணப்படும் வேறு பாடுகளை ஏற்றுக்கொள்வதையும் சுய மரியாதையை வளர்ப்பதையும் நோக்க மாகக் கொண்டது.
முதலாவது அமர்வில்;
கடலுக்குக் கீழேயுள்ள நாடு! அதை ஆளும் அரசினால் விருந்தினர் (மாணவர் கள்) சிலர் தேநீர் விருந்துக்கு அழைக்கப் படுகிறார்கள். அழைக்கப்பட்டோர், தாங்கள் மேற்கொள்ள விருக்கும் கடற்பயணத்துக்குத் தேவையான பயிற்சிகளைப் பெறு கிறார்கள் ,
இரண்டாவது அமர்வில் :
அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்குப் (நடிக ஆசிரியர் களால்} அரசியின் கோட் டையைக் கண்டு படிக்க இன்றியமையாத பதக்கம் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து. விருந்தினர்கள் கடலை நீந்திகட்ட எரசுக்கு வந்து சேர்கிறார்கள். அரசி, விருந்தினர் ஒவ்வொருவரையும் அவர்களின் பெயரைச் சொல்லியும் அவர்கள் ஒவ்வொரு வரின் சிறப்புப் பண்புகளைக் குறிப்பிட்டும் (ஏற்கனவே வகுப்பாசிரியர்களிடமிருந்து நடிக ஆசிரியர்கள் இத்தகவல்களைப் பெற்றிருந்தனர்.) வரவேற்கிறாள் : தேநீர் விருந்து முடிய சுவையான பாடல் ஒன்றை அரசி கற்றுக் கொடுக்கிறாள்.
விருந்தினர் கடல் அரசை விட்டு வீடு திரும்ப நீந்திச் சொலும் போது விசித்திர மான ஒலியொன்று கடலில் கேட்கிறது. அவ்வொலி எண்காலி ஒன்றினால் எழுப் பப்படுகிறது. நீந்திச் செல்பவர்கள் அத னுடன் உரையாடுகிறார்கள். தான் அழகற்றிருப்பதனால் விருந்துக்கு எப்போதுமே அழைக்கப்படுவதில்லை என்று தன் மனச் சுமையை எடுத்துரைக்கிறது.
மூன்றிலிருந்து ஐந்தாவது அமர்வு
கடலில் நீந்தி வீடு செல்லும் விருந்தினர் எண்காலிக்கு அதனுடைய சிறப்புப் பண்பு களைச் சுட்டிக் காட்டி அதுவும் தன்மானம் மிக்க உயிர் என்பதை உணர்த்துகின்றனர். அத்துடன் நின்று விடாது. அதையும் விருந்துக்கு அழைக்கும்படி தாம் அரசியிடம் பரிந்து பேசுவதாகவும் வாக்களிக்கின்றனர். அது வெற்றியும் அளிக்கிறது.
சிறப்புக் கடுகதியை தொடங்கு முன்பு அதன் நோக்கம் பற்றியும் வகுப்பாசிரியரின் பங்கு பற்றியும் வகுப்பாசிரியர்களுக்கு தனிஅமர்வு நடத்தப்படும். ஏனெனில் அவர் களின் பங்களிப்பு இத்திட்டத்திற்கு மிகவும் இன்றியமையாதது.
தொடர்புத் திட்டம்
13 வயது தொடங்கி 16 வயது வரையிலான மாணவர்களுக்கென இது தயாரிக் கப்படுகிறது. பட்டறைகளுடன் ஆற்றுகை சையும் நடத்தப்படுகின்றன. எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும் தம்மை வெளிப்படுத்தி மற்றவர்களிடம் தொடர்பு கொள்ளும் திறன் களை கூர்மைப்படுத்து வதே தொடர்புத் திட்டத்தின் நோக்கம்.
இந்நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்படும் நாடகப் பிரதி மேற்குறிப்பிட்ட மாணவ சமுதாயத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை அலசி ஆராய்கிறது. மாணவர் மத்தியில் நிகழும் தற்கொலைகள், ஆயுதங்களைக் கையாளுவதனால் விளையும் ஆபத்துக்கள், இனப் பாகுபாட்டால் எழும் வன்முறைகள், போதைப் பொருட்பாவனையால் விளையும் தீமைகள், குழந்தைகளுக்கு எதிரான வன் முறைகள் நாட்டின் குடிமக்களது உரிமைகள் போன்றவை. அனேகமாக அண்மைக் காலத்தில் மாணவர் நினனவில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு நிகழ்ச்சி கருப்பொருளாக எடுக்கப்படும்.
இத் திட்டத்தில் இடம் பெறும் ஆற்றுகையில் தோன்றும். பாத்திரங்களின் செயற்பாடுகளை எடைபோட்டு நாடகக் கருப் பொருளை பங்கு பற்றும் மாணவர்கள் நுண்ணிதாக ஆராய்ந்து அறிய உதவி செய்யும் நோக்குடன் முழுத் திட்டமும் வகுக்கப்படுகிறது
' போறம் தியோட்டர்' பாணியில், ஆற்றுகையின் இடையில், அதில் கலந்து கொள்ளும் கதாபாத்திரங்களுடன் மாணவர்கள் உரையாடி, - அவர்களுடன் வாதாடியும் அவர்களின் செயல்களை விமர்சித்தும், உடன்பட்டும் முரண்பட்டும் - நிகழ்ச்சியோட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும், ஆற்றுகைக்கு முன்னும் பின்னும் வகுப்பில் பட்டறைகள் நடத்தப்படுகின்றன.
எடுத்துக்காட்டு நிகழ்ச்சி :
சென்ற ஆண்டு , இது இளைஞர்கள் மத்தியில் நிகழும் தற்கொலை பற்றியது.
கதைச் சுருக்கம் :
வெலிசியா என்றழைக்கப்படும் மாணவி தன்னைத் தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள். அதிலிருந்து காப்பாற்றப்பட்டு நாளொரு வண்ணம் குணமடைந்து வருகிறாள், தனது நண்பனாகிய ரைறோனின் துணையுடன் தன்னைத் தற்கொலைக்கு இட்டுச் சென்ற காரணிகளை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கிறாள். வெலிசி யாவின் தாய் கணவனைப் பிரிந்து தனியே வாழ்பவள். - தாயுடன் ஒத்து வாழ முடியாத நிலை வெலிசியாவுக்கு. அவளின் தோழி ஷீனா, வெலிசியா படிப்பதை நிஜத்திவிடவேண்டும் என தூண்டுபவள். இவளது வரலாறு இப்படியிருக்க'
இவளது நண்பன் ரைறோனுக்கு மலை போன்ற பிரச்சனைகள் தலையெடுக் கின்றன, அவன் தந்தை, அவனது ஆற்றலுக்கு மேலாக படிப்பில் ரைறோன்.
முரண்பாடுகளின் காரணிகளையும் அவைகளை தீர்க்கும் வழி வகை களையும் ஆராய்வர்.
சாதிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்.. தாய் குடிகாரி. வகுப்புப் பாடங்களிலும் புள்ளிகள் குறைந்து வருகின்றன. அத்தோடு, வெலிசியர்வுக்கும் ரைறோனின் நண்பன் ப்றீசுக்கும் கள்ளக் காதல்'' வளருவதாக அவனுக்குப் பயம். தாய் தந்தையின் உறவு சீர் குலைந்து தந்தை விவாகரத்துச் செய்யப்போவதாக அறிவிக்கின்றார். இந்த நிகழ்ச்சிச் சுழற்சியில் தத்தளிக்கும் ரைறோன் இதிலிருந்து தன்னை மீட்கக் காணும் ஓரே வழி : தற்கொலை.
தற்கொலைக்கான அறிகுறிகளை அறிந்த வெலிசியா அவனைக் காப்பாற்ற முனைகிறாள்.
இந்நிகழ்ச்சியை காட்சிப்படுத்திய பின் உயிரோட்டமான கலந்துரையாடல் நடை பெறும்.
நாடகம் மூலம் முரண்பாடு களைதல் :
இத்திட்டம் 16 வயதுக்கும் 19 வயதுக்கும் உட்பட்ட மாணவர்களினுடைய திறன் களையும் சக்தியையும் ஆக்கபூர்வமான செயலாற்றல்களுக்கு நெறிப்படுத்தும் நோக்குடன் தயாரிக்சுப்படுகிறது. இதில் கலந்துகொள்ளும் மாணவர் பலர் கடுமையான பிரச்சினைகளில் சிக்குண்டு நிற்பவர்: பாடசாலைக்கு போகவேண்டியிருந்தும் அங்கு செல்லாது வேற்றிடங்களில் வீணே நேரம் போக்குவோர், பாடங் களில் குறைந்த புள்ளிகளை எடுப்பவர், நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், குடி - போதைப் பொருட்பாவனையில் மூழ்கிக் கிடப்போர்.
இதில் கையாளப்படும் முறை :
முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சிகள் சில காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒரு சில கட்டங்களில் நடிகர்கள் உறை நிலையில் நிற்க மாணவர்கள் வியாதிப்பார்கள் ; முரண்பாடுகளின் காரணி களையும் அவைகளைத் தீர்க்கும் வழிவகைகளையும் ஆராய்வார்கள். அக் கலந்துரையாடல் மூலம் அவர்கள் மத்தியில் பரிமாறப்பட்ட கருத்துக்கள் வழி நின்று மாற்றுச் செயற்பாடுகளையும் தீர்மானங்களையும் நடிக ஆசிரியர்களை கொண்டோ, இல்லைத் தாங்களோ காட்சிப்படுத்துகிறார்கள். இத்தகைய நிகழ்ச்சியின் பயனாக ஒருவரின் செயல்கள் பற்றிய விளைவுகள், முடிவுகள். தேர்வுகள் உணர்வுபூர்வமாக ஆய்வு செய்யப்படுகிறது. இத்திட்டத்தை நடை முறைப்படுத்த வெவ்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.
முற்சார்பு எண்ணம், இனக்குரோதம் பற்றிய பட்டறைகள் :
இரண்டு நாட்பட்டறையில் முரண்பாட்டுக்கு வித்திடும் பலவகையான முற்சார்பு எண்ணங்கள் அடையாளம் காணப்படுகின்றன. வகுப்பு. பால், அங்கவீனம், வயது, இனம் போன்ற அடிப்படைகளில் எழும் முற்சார்பு எண்ணங்கள் அலசி ஆராயப்படுகின்றன.
இவைகளின் காரணிகளைக் கண்டு பிடிக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப் படுகின்றன.
* இளைஞர் வேலைத் திட்டத்தைப்பற்றிய ஒளிப்பதிவு நாடாக்களுடன் நாலு நாட் பட்டறை நடத்தப்படுகிறது.
இதில் வேலைத் தலங்களில் பயனிறைவுடன் செயலாற்றுதற்குரிய மனப் பக்குவம் சார் திறன்கள் ஆராயப்படு கின்றன.
* தீவிரமான மூன்று நாள் நாடகப்பட்டறை மாணவர்களின் உடனடித் தேவைகளை ஆராயும் ,
* எயிட்ஸ் பற்றிய இரண்டு நாள் நாடகப் பட்டறையில் எயிட்ஸ் பற்றிய தப்பான கருத்துக்கள், அதைத் தவிர்ப்பது எப்படி என்ற பொருள்கள் விவா தத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
எடுத்துக்காட்டு நிகழ்ச்சி :
" கண்ணாடி மேல் நடத்தல்''
* இது இரண்டு நாட்கள் இரண்டு அமர்வுகளில் நடைபெறும். ஒவ்வொரு அமர்வும் தொண்ணூறு நிமிடங்களைக் கொண்டது.
* இதில் 14 தொடக்கம் 19 வயதுடைய 25 அல்லது 30 மாணவர்கள் கலந்து கொள்வர்.
* முப்பது மாணவர்கள் வசதியாக இருக்கக்கூடியதும் சில தளபாடங்களை உடையதுமான அறையில் நடக்கும்.
* வகுப்பாசிரியர்கள் ஒவ்வொரு அமர்விலும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். அமர்வுகளின் முடிவில் அவைபற்றிய மதிப்பீடு செய்ய வேண்டும்.
முரண்பாட்டுக்கு வித்திடும் பல வகையான முற்சார்பு எண்ணங்கள் அடையாளம் காணப்படுகின்றன.
ஆற்றுகையின் சாரம் :
ஓர் இளம் பெண், ரஷா . தனக்குத் தொல்லை கொடுக்கும். வளர்ப்புத் தந்தை யைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பழிவாங்குகிறாள். அதற்குத் தண்டனையாகச் சிறைவாசம் அனுபவிக்கிறாள், இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அவளது சிற்றன்னை வாழும் வேறு ஒரு நகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறாள். அங்குள்ள கல்லூரிக்குச் சென்று படிக்கிறாள். அங்கு, ட்றெவர். ராடி, சின் ஷி என்பவர்களுடை.ய உறவு கிட்டுகிறது. ட்றெவர் தன்னைப் பெரிதாக நினைக்கும் அகம்பாவம் கொண்டவன். தன்னைக் காதலிக்கும் சின்ஷியை அவமானப்படுத்துவதில் தனி இன்பம் அடைபவன், அடி, சின்ஷியின் அண்ணன். சொந்தக் காலில் நிற்க முடியாது ட்றெவர் இட்ட கட்டளைகளையே செய்து வாழ்பவன்.
ரஷா, தன்னுடன் நெருங்கிப்பழக விரும்பும் ட்றெவருக்கு இடம் கொடுக்கவில்லை. சின்ஷி படும் மானபங்கத்தைப் பார்த்து பொருமுகிறாள். அவளுக்கு, நாட்குறிப் பொன்றை எழுதுமாறும் சுயமதிப்பை வளர்க்குமாறும் அறிவுறுத்துகிறாள். அத்தோடு, தனது தங்கைக்காக வாதாடா திருக்கும் அடியையும் சாடுகிறாள்.
முரண்பாடுகள் வளர்ந்து விஸ்பரூபம் எடுக்கின்றன. ட்றெவர், தனது 'காதலை'ப் புறக்கணிக்கும் ரஷாவின் பழைய வன்முறை வாழ்வைப் பகிரங்கப்படுத்தப் போவதாக அச்சுறுத்துகிறான். ஆனால், சின்ஷியின் நாட்குறிப்புகளைக் கண்டதும் அதிர்ச்சி யடைந்து கோபம் கொள்கிறான் தனது 'மானம்'' கப்பல் ஏறப் போவதை உணர்ந்த ட்றெவர் ஒரு சில செயல்களைச் செய்ய, அவைகளால் அனைவரும் வன் முறை நீரோட்டத்துள் இழுத்துச் செல்லப் படுகின்றனர்.
ரஷா, தனது இளம் வாழ்வை அழிக்க அல்லது ஆக்க வல்ல தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
- இவ்வாற்றுகை பட்டறையின் குறிக்கோள்
வன் செயல்களின் காரணிகளையும் அவைகளின் விளைவுகளையும் மாணவர்கள் உய்த்துணர்ந்து, மாணவர் சமூகத்தில் மலிந்து வளரும் வன்முறைகளைக் குறைக்க உதவுவது சமூக உறவை வளர்க்கும் திறமைகளை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பது; தனிப்பட்ட சொந்தப் பொறுப்புக்களின் வரையறைகளை உணர வைப்பது; தனிப்பட்டவர்களிடையில் நிகழும் வன் முறைகளைப் குறைக்கத் திட்டம் வகுப்பது.
''கற்'' நிறுவனம் - இங்கு கூறப்பட்ட திட்டங்களைத் தவிர, வேறு பலவற்றையும் வெற்றிக்கரமாக நடத்திப் பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றுள்ளது, எடுத்துக் காட்டாக பள்ளி செல்லாத நாலு வயதுச் சிறுவர்களுக்கான பட்டறைகளையும் ஆற்றுகைகளையும் நடத்துகிறது, நட்பு. குடும்ப உறவுகள், சமூக உணர்வுகள், மற்றவர்களின் விருப்பு வெறுப்பு, உணர்ச்சிகளை அறிதல் முதலியவை கருப் பொருளாக அமையும்.
நாளாந்தம் அல்லது வாரத்துக்கு இரு தடவை நடிக ஆசிரியர் சேர்ந்து வெவ் வேறு பாத்திரங்களை ஏற்று நடித்து குழந்தைகளுடைய கருத்துக்களை உள் வாங்கி குறிப்பிட்ட ஒரு கதையை காட்சிப் படுத்துகின்றனர்.
இதன் மூலமாக நாலு - ஐந்து வயதுடையவர்களுக்க, தம்மால் தமது வாழ்வையும் சூழலையும் மாற்ற முடியும், என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகிறது
''கற்'' போன்ற நிறுவனங்களின் கல்வி சார் அரங்கு -நம்மத்தியிலும் திட்டமிடப் பட்டு வளர்க்கப்படின், மாணவ சமூகம் அதனால் பயனடையும் என்பது தெளிவு .
இக்கட்டுரை வரைவதற்குப் பயன்பட்டவை :
* ''கற்" நிறுவனத்தின் துண்டுப் பிரசுரங்கள்.
* ரி, ஜக்சன் எழுதிய லேணிங் த்று தியேட்டர்''
* "கற்'' நிறுவன நியூயோர்க் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜிம் மிறியோனி, திரு, லோறன்ஸ் கார் முதலியவர்களுட னான நேர்காணல்.
நன்றி:- ஆற்றுகை