01பா. அகிலன்

"கலை கல்வியுடன் இணைந்து அதற்கு மேலாக நாடகமென்பது ஒரு வரன் முறையானவொரு 'சாஸ்திரம்' ஆயிற்று. நாடக வரலாறு, பயிற்சி என்பன பாடங்களாயின''

பேரா, கா.சிவத்தம்பி

 எப்பொழுதெல்லாம் ஒரு சமூகம் சுய விமர்சனத்தையும் மறு விசாரணைகளையும் கைவிடுகின்றதோ, எப்பொழுது கேள் விக்குள்ளாக்கவே முடியாத கருத்துக்களை ஒருவகையான அராஜகத்தன்மையோடு பேணத்தொடங்குகின்றதோ, அந்தச் சமூகம் வீழ்ச்சியின் திசையில் விரைந்து செல்கின்றதென்பதே அதனர்த்தம். மிகவும் துயரமான தென்னவெனில் இவ்வாறான வொரு நெருக்கடி நிலையைத் தமிழ்ப்பண் பாடு அடைந்திருக்கிறதென்பதே. ஆனால் தேக்கங்களை உடைக்கவும், தீர்க்க தரிசன மான அடியெடுத்து வைப்புக்களுக்காகவும் மறு விசாரணைகள் அவசியமானவை.

 எமது கல்விமுறைமைகள் அனைத்தும் மீளாய்வு செய்யப்பட வேண்டியனவாகவுள்ளன. உருப்போடலை அடிப்படையாகக் கொண்ட தகவல் 'வங்கியாக (data bank) மாணவர்களை உருவாக்கும், போட்டிமைய, தரிசனமும் ( Vision) பிரயோகமுமற்ற கல்வியமைப்பின் பலவீனங்கள் பற்றிய விவாதங்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றன . இருபத்தியோராம் நூற்றாண்டை வலிமையோடு எதிர்கொள்ள, அதன் சவால்களை முனைப்புடன் கட்டியாள இது மிகவும் அவசியம் இந்தக் கூற்றுக்கள் அனைத்தும், நுண்கலைத் துறைகளுக்கு பொருந்தும்.

இன்று நாடகமுட்பட, ஓவியம், இசை, நடனம், இலக்கியம் முதலிய அனைத்துக் கலைத்துறைகள் மீதும் மூடி மறைப்பற்ற காரசாரமான விவாதங்கள் தொடக்கப் படவேண்டும். மிகவும் தேக்கத்திற்குள்ளாகியிருக்கின்ற எமது கலைச்சூழலின் எதிர் காலத்திற்கும் அதன் வலுவாக்கத்திற்கும் இது மிக அவசியம்.

மேனாட்டு வயமாக்கத்தின், பண்பாட்டு மாற்றங்களின் விளைவுகளில் ஒன்று குலமரபுக்கலைகள். அதிலிருந்து வெளியெடுக்கப்பட்டு. கல்வி நிறுவனங்கள் சார்ந்த முறைசார் கற்கை நெறிகளாக மாற்றப்பட்டு பயில் நிலைக்கு வந்தமையாகும். புதிதாக ஏற்பட்ட பண்பாட்டுப் பிரக்ஞையின் மிக முக்கிய விளைவாக அது காணப்பட்டது. நாடக அரங்கு சார் கல்வியும் இந்தப்பாதை வழியே, ஏனையவற்றோடு ஒப்பிடும் போது மிகக் காலந் தாழ்த்தி எம்மிடம் பயில் நிலைக்கு வந்த கற்கை நெறியாகும்,

இலங்கையில் கொழும்பு வாளாகம் 1976, 1977 காலப்பகுதியில் நடாத்திய நாடக அரங்கியலுக்கான பட்ட மேல் நிலை ஆசிரியத் தகைமைப் பயிற்சி நெறி, இதற்காக எடுத்து வைக்கப்பட்ட முதலடி யாகும்.

இதன் உடன் நிகழ் விளைவாக 1977ல் க. பொ. த. (உ/த) ற்கான கலைப் பாடங்களுள் நாடக அரங்கியலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது இவற்றின் உருவாக்கம், பயில்வு ஆகியவற்றுக்கு காரண கர்த்தாக்களாக இருந்து பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், கா.சிவத்தம்பி முதலியோர் யாழ். பல்கலைக்கழகம் சார்ந்தவர்களாக அப்போதிருந்த காரணத்தால் 1985ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இலங்கையிலேயே முதற்தடவையாகத் தமிழில் நாடகமும் அரங்கியலும் பட்டப் படிப்பிற்கு உரிய துறையாக 'ஸ்தாபிக்கப் பட்டது , என்பது . மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும்.

1977 ல் இருந்து பார்த்தோமானாலும் - இன்று இருபதாண்டுகள் முடிந்து விட்டன இந்த இருபதாண்டுகால நாடகக்கல்வியின் பெறுபேறுகள் என்ன? வரலாற்றில் அது ஏற்படுத்தியிருக்கும் தடம் எத்தகையது? இதுவே இக்கட்டுரை முக்கியமாகக் கேட்க விரும்பும் அடிப்படையான கேள்வியாகும் கட்டுரை நாடகக்கலை பற்றியே கவன மெடுத்தாலும் இங்கே கிளப்பப்படும் பல பிரச்சினைகள் நடனம், இசை உட்பட பல கற்கை நெறிகளுக்கும் பொருந்தக் கூடியது. வெறுமனே இங்கு கிளப்பப்படும் பிரச்சினைகள் யாவும் நாடகத்திற்கு மட்டுமே உரியது. ஏனைய கற்கை நெறிகள் யாவும் மிகவும் சரியான தடத்தில் பயணஞ் செய்து கொண்டிருக்கின்றன, என்ற முற் கற்பிதத்தோடு இக் கட்டுரையை அணுகக் கூடாது . .

 1977ல் சந்தேகமில்லாமல், மிகவும் அமைதியாக பத்தோடு, பன்னிரண்டாக அறிமுகமாகிய இக்கற்கை நெறி இன்று மிகவும் ஜனரஞ்சகமான தளத்தில் அதிக வர்ணப்பகட்டோடு நடமாடுகிறது.
க.பொ.த. (உ / த) தைப் பொறுத்த வரை மிகவும் விரைவாக புகழ் பெற்றதும், வேறெந்த நுண்கலைத் துறையை விடவும் விரைவாகவும் பரவலாகவும் தனியார் கல்வி நிறுவனங்களுள் சென்றதாகவும் காணப்படுகிறது. 1979, 80 களில் நாடகம் கல்வியாக அறிமுகமாகிய போது ஒன்றோ இரண்டோ பேர் நாடகம் மீதான அடக்க முடியாத விருப்பு ஒன்றையே காரணமாகக் கொண்டு, தம்முடைய நடுவயது தாண்டிய பின்பும் படித்தார்கள். ஆனால், இன்று

 நாடக அரங்கியல் மாணவர்கள் என்போர் ' ஊதிப்பெருத்துள்ளார்கள்' தனியார் கல்வி - நிறுவனங்களுக்கு இலாபத்தை உழைத்துத் தரும் கற்கை நெறிகளுக்குள் நாடகம் ஒன்றாகி விட்டிருக்கிறது. நடகமொரு கற்கை நெறியாக அறிமுகமாக்கப்பட்டமை பெருமைப்படத்தக்கதும், புகழுரைக்கு உரியதுமானவொரு நிகழ்ச்சி என்பதில் எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லை . தமிழர்களான ''பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், கா. சிவத்தம்பி உட்பட ஏ ஜே. குணவர்த்தன. தம்மஜா கொட முதலிய பல கல்விமான்கள் இதனுருவாக்கம், பாடத்திட்ட அமைப்பாக்கம் என்பவற்றில் முக்கிய பங்கெடுத்துள்ளனர். (நா. சுந்தரலிங்கம்) என அறிய முடிகிறது.

இந்த அறிமுகமாக்கலின் மூலம் நாடக மென்ற இழிந்தோர் கலைக்கு சமூக அந்தஸ்த்துப் பெற்றுத்தரப்பட்டமை மிகமுக்கிய விடையாகும். இதன் மூலம் நாடகம் என்ற கலை வடிவத்தின் மீது ஆர்வமுள்ளவர்கள் - அக்கலை வடிவத்தில் சிறப்புத் தேர்ச்சி பெறுவதற்கான தளம் உருவாக்கப்பட்டது. இப்படிப்பட்டவர்கள் தொழில் முறையாளர்கள் (Professional) ஆவதற்கான சந்தர்ப்பம் இதனால் உருவாகியது. நாடகம் பற்றிய ஆய்வுகள், பாரம்பரிய அரங்கு பற்றிய தேடல் - அவற்றின் மீதான மீள்பார்வை, அரங்கினூடாக சமூகத்தைப் படித்தல் முதலியவற்றிற்கான தளங்கள் உருவாகியது. நாடகத்தை சமூகம் எதிர் கொள்ளும் முறையில் இதனூடாக மாற்றம் வருவதற்கும். அதனை Serious ஆக வாழும் முறைமைகளுள் ஒன்றாகப் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களும் உருவாகியது.

ஆனால், இந்தப் புதிய பாடம் அதன் உச்சப் பாய்ச்சலை நிகழ்த்த முடியாமைக்கான தடைக்கற்களை தன் கர்ப்பப்பையிலேயே கொண்டிருந்தது என்பது தான் துரதிஷ்டவசமானது. நாடகமென்ற ஆற்றுகைக் கலை அதன் உயிரம்சமான ஆற்றுதலைக் கைவிட்டு வெறும் அறிமுறையாக (Theory) அறிமுகஞ் செய்யப்பட்டது என்பது. தான் அதன் வருகையில் நடந்த முரணாகும். அப்போதிருந்த நிலையில் செய்முறையை'' நடாத்த ஆளணியினர் போதாது என்று குறிப்பாக தமிழர்கள் இது சம்பந்தப்பட்டவர்கள் கருதினர் எனவும் அதனால் ' செய்முறையை' அறிமுறை போல எழுதுவிக்க முடிவு செய்யப்பட்ட தாகவும் நா . சுந்தரலிங்கம் அவர்கள் கூறினார்கள் ஆனால், இதற்கு மாற்றுச் செயற்பாடு கண்டுபிடித்திருக்கப்பட வேண்டும் ஏனெனில் பலவீனமான அடித்தளத்தின் மேற் 'கட்டடங்கள் நின்று பிடிக்க முடிவதில்லை; பலவீனமான தளம் பின்னர் பாரத்தையே தாங்க முடியாத ஒன்றாகிவிடும். அப்போதிருந்த உடன் நிகழ்காலச் சூழலில் Diploma முடித்திருந்த பதினொரு தமிழ் ஆசிரியர்கள் இருந்துள்ளார்கள். இவர்களில் பலர் ஏற்கனவே நாடகக்காரர்கள் இவர்களை பயன்படுத்தி இதனை முதற்கட்டத்தில் முயன்றிருக்கலாம். 1980 களில் நடுப்பகுதி வரை மிகவும் குறைந்த விரல் விட்டு எண் ணக் கூடிய மாணவர்களே இதனைப் படித்தார்கள். எனவே இது 'நடைமுறைக்கு சாத்தியமாகக் கூடிய ஒன்றாகவே இருந்திருக்கும். ஆனால் அது நடைபெறவேயில்லை .

'இந்த உடம்பையே ஆடைபோல் அணிந்து கொள்ளும்' ' (மிகைல் செக்கோவ்) ஒரு கலை வடிவத்தின் உயிர்மையம் மீதான கவனக் குவிப்பு இதனால் அதன் முழு வீச்சோடு உணரப்படாமலே போயிற்று. இது மிகவும் கவலைக்கிடமானது நாடகத்தை ஒரு கலையாக ஒரு மொழியாகப் புரிந்து கொள்வதற்கான அனுபவபூர்வமான தளம் இந்த நிலையில் சாத்தியமில்லாமலே போயிற்று.

செய்முறையைக் ( Practical) கைவிட்டு அல்லது அறிமுறை அடித்தளச் செய்முறையாக ( Theory based Paraticais) நாடகம் அறிமுகமாகிய போது நடனத்திற்கும் , இசைக்கும், ஓவியத்திற்கும் நடந்து விடாத அவலம் நாடகத்திற்கு நேர்ந்தது. உடலுக்கும் வெளிக்கும் இடையில் நிகழும் தீப் பற்றி எரியும் கணங்களின்றி நடனம் எவ்வாறில்லையோ கொதிக்கும் உணர்ச்சிகளின் ஒலிப்பிரயாணங்கள் இன்றி இசை எவ்வாறு உயிர் தரிப்பது இல்லையோ, அவ் வாறுதான் நாடகமும். கூடுவிட்டு கூடு பாயும் ஆள் மேற்கொள்ளலின் (gmpersonation) பரிமாணங்களின்றி இல்லை. அதனியல்பே கணத்தில் வாழ்தலாகும். ஆனால் செய்முறையை விட்டு அது பாடமாகிய போது இந்த சமயம் பற்றிய புரிதலுக்கே இடமில்லாமல் போய் விட்டது.

அப்படியானால் இந்த நாடக அரங்கியற் பாடத்திட்டத்தின் இலக்கு என்ன? எதனை நோக்கி அது குவிக்கப்பட்டிருக்கிறது. செய்முறை இல்லாமல் ஒரு நுண்கலைப் பாடத் திட்டம் வரலாற்று ரீதியாக அடையக் கூடாதா? தனியே வரலாறாக நுண்காலைகள் கற்பிக்கப்படும் மரபுகள் உண்டு தானே? முதலிய கேள்விகளை முன் வைத்து ஆராய்வதன் மூலம் இந்த நிலைமையைப் பற்றி மேலதிகமானதும், ஆழ அகலமானதுமான புரித்து கொள்ளல்களிற்குச் செல்லலாம், இந்தப் பாடத்தின் இலக்கு என்ன?

* நாடக அரங்கு சார்ந்த துறைசார் கலைஞர்களை உருவாக்குதலா?

*வரலாற்று ஆசிரியர்களை உருவாக்கி விடுதலா?

*விமர்சகர்களையும், அரங்க விமர்சன மரபையும் கட்டி வளர்ப்தா?

*நாடக அரங்கியல் கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்குதலா?

இந்த நான்கில் எது முதலாவதுதான் நோக்கமாயின் அதற்கு செய்முறை மிகவும் முக்கியம் நடிகன் தொடக்கம் இசையமைப்பாளன் வரை தனக்கான துறைசார் பயிற்சிகளை மிகவும் ஆழமாகப் பெற வேண்டும் - அரங்கக்கைவினையும், அதிலிருந்து எழுந்து பறப்பதற்கான ஆக்க அடித் தளமும் (Creative Foundation) உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்தப்பாடத்திட்ட அமைப்பில் அது இல்லை உண்மையில் இப்பாடத் திட்டத் தின் மூன்றாம் பகுதி எனப்படும். செய் முறை அறிமுறையைத் தொடரும். அதே நேரம் 'செய்முறை' இருப்பது போலக் காட்டும் ஒரு ' சமரசமான இடைவழிதான், இதனால் பிரயோசனம் இல்லை . அது 'செய்முறை' எனப்பட்டாலும் அறிமுறை தான் . கடந்த வருடம் தொடக்கம் அறிமுகமாக்கப்பட்டுள்ன. க. பொ.த (உ/தற் கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத் திட்டமும் ' செய்முறை' உடையதல்ல ஆனால் செய்முறை' அறிவுடைய ஒருவராலேயே விடையளிக்க முடியும் என்பதான ஏற்பாட்டோடு தான் பரீட்சையில் கேள்விகள் கேட்கப்படுமென அறிவுறுத்தப்பட்டாலும் கூட, அது பெரிதாக உதவப் போவதில்லை. எங்களது ஊட்டிவிடும் கற்பித்தல் முறை இதற்கு இலகுவான பொறிமுறையைக் (Mechanism) கண்டுபிடித்து விடுமென குழந்தை , ம.சண்முகலிங்கம் அவர்கள் கூறுவது மிகவும் சரி'

அதே நேரம், பாடத் திட்டம் வகுக்கப்படும் போது கூட, ஆசிரியர்கள் செய்முறைகளில்' ஈடுபட வேண்டுமென்றோ பாடவேளையில் இதற்கான நேரம் ஒதுக்கப்பட வேண்டுமெனவோ, அதற்கான பாடமுறைமையோ பாடவிதானத்தில் அறி வுறுத்தப்பட வில்லை .குறைந்த பட்சம் விஞ்ஞானப்' பாடம் போலலேனும் பரீட்சைக்கு மாணவர்களது செய்முறைக்குச் சமூகம் தந்ததற்கான வரவு இடாப்புகள் இணைக்கப்படல் வேண்டும், இதில் ஏமாற்றுதல்களைச் செய்யலாம் அல்லது இதுதான் இதற்கான முறையென இக்கட்டுரை கூறவரவில்லை இப்போது கொண்டுவரப்பட்ட புதிய மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமாவது, மிகவும் குறைந்த பட்சம் இவ்வாறெனினும் சிந்தித்திருக்கலாம்.

இன்றெல்லாம் எங்களிடம் நடிகர்கள் வருகின்றார்களில்லை'' என்று நாடகத் தோடு தொடர்புடைய பலரும் கூறுகிறார்கள் நாடகமொரு முறைசார் கல்வியாக, பல்கலைக்கழக மட்டத்திற்கூட வந்த பின். அது தொழில் முறையாகக் கூடிய அதிக பட்ச வாய்ப்புகள் ஏற்பட்ட பின் நடிகர்கள் வருகிறார்கள் இல்லை என்றால் பிரச்சினையின் அடித்தளம் எது?'' நம் முடைய சமூகத்தில் அப்படித்தான் படிக்கிறார்கள், படித்து முடிய விட்டு விடுகிறார்கள்'' என்று மட்டும் மேலோட்டமாக விடை பகர்ந்து விட முடியுமா? ஏன் நாடகத்தை ஒரு வாழ்க்கை முறையாக ஒரு நாடக அரங்கியல் மாணவனால் இனங்காண முடியாதிருக்கிறது பிரச்சினை செய்முறையாக அது இல்லை என்பதில் இருந்து தான் ஆரம்பமாகிறது எனலாம். இந்தப் பாடத்திட்டம், இந்த பாடத்தை படிப்பவனுக்கு தன்னை தன் வழியைக் கண்டு பிடித்தற்கான சந்தர்ப்பத்தை வழங்காததுதான் காரணம். செய்முறை தான் ஒரு நடிகன் தன்னிடமுள்ள நூற்றுக்கணக்கான பாத்திரங்களை கண்டு பிடிப்பதற்கான திறவுகோல். அதுவே அவனது உடலை , அவனுக்கு வாலாயமாக்கித் தர முடியும் 'உணர்வோட்டத் தசை மண்டலத்தை நடிகருக்குச் செய்முறைகள் வழங்கியாக வேண்டும்'' (ஆட்டு வாட்) நாடகத் தின் அனைத்துத் துறைகளுக்கும் இது பொருந்தும் ஒரு ஒப்பனையாளன் எவ்வாறு இடையறாத தேடலாலும், தொழிற்பாட் டாலும் மனித முகத்தின் இரகசியங்களை படித்தறிகின்றானோ அது போலவே அனைத்தும், வெறும் அறிமுறையால் இதனைப் பெற்றுத்தர முடியாது.

நாடக வரலாற்றாசிரியர்களை உருவாக்கி விடுவதுதான் நோக்கமாயின், அவர்கள் தொழிற்படுவதற்கான தளம் முதலில் உருவாக வேண்டும். பரந்துபட்ட ஆற்றுகைக்களம் இன்றி அடியார்க்கு நல்லார் உருவாகி இருக்க முடியுமா? - அப்படித்தான் சமூகத்தில் கலைப் படைப்பாக நாடகங்கள் வாழும் போது தான் இதுவெல்லாம் நிகழும். பழைய விடயங்கள் மீதான மறு வாசிப்புகளுக்குக் கூட அப்போது தான் அர்த்தம் உண்டாகும். இல்லா விட்டால் ஒரு யாந்திரிகமான புராண படலம் போல அதுவும் ஆகிவிடும் , எனவே, வரலாற்று ஆசிரியர்கள் உருவாகுவதற்கான முதற்தேவை, நாடகம் கலைப்படைப்பாக ஸ்திரம் பெறுதலே, எனவே பாடத் திட்டம் முதலில் அதனை நோக்கியே தொழிற்பட வேண்டும்.

விவாதிப்பிற்காக இந்தப் பாடத்திட்டம் வரலாற்று ஆசிரியர்களையே உருவாக்கும் நோக்கம் கொண்டது என்று வைத்துக் கொண்டாலும், அதற்கான முறையியலிலும் அது கோர்க்கப்படவில்லை இதற்கு மிக அடிப்படையான இரண்டு உதாரணங்களைக் காட்டலாம். கிரேக்கத்திற்கும், மத்திய காலத்திற்கும் இடையில் உரோம அரங்க மரபு கைவிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் ஐரோப்பிய வரலாற்றின் பிற்கால போக்கை புரிந்து கொள்வதற்கு அது இல்லாது இருப்பது முக்கிய குறைபாடு என விவாதிப்பின் போது கூறினார். இது போலலே எலிசபெத் காலத்தில் இருந்து மறுமலர்ச்சி காலத்தை கைவிட்டு ஒரு தாவலைப் பாடத் திட்டம் மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. ஆனால் வரலாற்றின் தொடர்ச்சியில் மறுமலர்ச்சிக் காலம் முக்கியமானதொருமைல்கல் ஆகும். எனவே வரலாற்று ரீதியானது என்ற எடுகோளும் சிக்கலுக்குரியதாகிறது. அது மட்டுமன்றி நாடக வரலாறு தொடர்பாக எழுதப்பட்ட பல நூல்களிலும், நாடகவரலாற்றை பார்ப்பதற்கான, அரங்கு சார்ந்த பார்வை பெருமளவிற்கு இல்லாது இருப்பதை அவதானிக்க முடிகிறது

விமர்சகர்களை  உருவாக்குவது தான் நோக்கமாயின் அதிலும் முன் சொன்ன அதே பிரச்சினைகள் உள்ளன. முதலில் விமர்சன நோக்கை உருவாக்குவதற்கான பாடத்திட்டம் அல்ல இது. மேலும் ' நல்ல கலைப்படைப்புக்களின் உடன் நிகழ்வே - நல்ல விமர்சகர்கள்' எனக் கூறுவார்கள். தென்னிந்தியாவின் ஒரு செழுமையான இசைப் பாரம்பரியத்தின் இருப்பின்றி ஒரு சுப்புடு வந்திருக்க முடியாது. அது போலவே அனைத்திற்கும். எனவே, நல்ல கலைப் படைப்புக்களே முதன்மைத் தேவைகள் ஆகும். மேலும் விமர்சகர்கள் ஒரு பாலம் போல, படைப்பிற்கும் - சமூகத்திற்கும் இடையில் நிற்பவர்கள்; படைப்பை மறு படைப்பு செய்பவர்கள். 'படைப்புக்கள் இல்லாத போது விமர்சகர்கள் கருக்கட்டவே முடியாது.

இந்த இருபதாண்டு கால கல்வியின் வெளிப்பாடுகள் யாராவது நாடக விமர்சகர்களை அரங்க மொழியைப் படித்து கூறுபவர்களைத் தந்திருக்கிறதா? நாடகம் பற்றி - எழுதுபவர்களின் அளவுகோல்களோ நாடகத்திற்கு உரியதல்ல என்ப தொன்றே போதும் இந்த நலிவைக் காட்ட நடனத்தைப் பற்றி, ஓவியத்தைப் பற்றி எழுத வேண்டுமானால் குறைந்த பட்சம் அது பற்றிய அறிவு இருக்க வேண்டுமென்று நினைப்பது போல நாடகத்தைப் பற்றி யாரும் நினைப்பதில்லை. நாடகத்தைப் பற்றி யாரும் பேசலாம்; எழுதலாம் என நினைக்கும் ஒரு சமூகத் தவறு கூட நாடகம் ஒரு கல்வியாக ஆழமாகச் செறியாமையின் விளைவென்றே கூற வேண்டும். இந்த அரங்கக் கல்வி ஆழமாக செறியாமையின் இன்னொரு விளைவைத் தமிழ்த்தினப் போட்டிகளுக்கான இவ்வாண்டுச் 'சுற்று நிருபத்தில் தரப்பட்டிருக்கும் நாடகத்திற் கான அறிவுறுத்தல்களிலும் கூட
காணலாம். எதுவாக இருந்த போதிலும் கலை விமர்சனம் மற்றும் அறிமுறை முதலியன கலை வெளிப்பாட்டினோடு ஒப்பிடுகையில் இரண்டாம் பட்சமானவையே'' (தியோ டோர் சான்ங்)நடப்பது, இப்பாடத்திட்டம் விரும்பியோ, விரும்பாமலோ நாடகக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் உருவாக்கம் தான் துரதிஷ்டவசமாக எமது கல்வி முறை முழு வதிலும் இந்தபலவீனம் இருக்கிறது. அவை எல்லாமே ஆசிரியர்களையே உற்பத்தி செய்கின்றன. கலைஞர்களையோ அறிவியல் துறைசார் விவேகிகளையோ அல்ல. ஆசிரியர்களை உருவாக்குவது குற்றமல்ல; ஆசிரியர்களை மட்டும் உருவாக்குவது தான் குற்றம். நாடக அரங்கில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் இப்பாடத்திட்ட முறைமை காரணமாக, குறைபாடுடைய, செய்முறை தெரியாதவர்களாக அல்லது மிகக் குறைவாகவே தெரிந்தவர்களாக இருக்கவே அதிக வாய்ப்புக்கள் உண்டு. எனவே, பலவீனமான ஒரு ஆசிரியர் பரம்பரை தயாரிக்கப் படுவதற்கான வாய்ப்புக்களே மிக அதிகம் , நாடக அரங்கியல் ஆசிரியர் என்போர் '' அரங்க கலைஞர்களைப் போன்ற உணர் திறன்களுடைய ஆசிரியர்களாக'' (அலெக் சாண்டர் பிரையன் சேர்வ்) இருக்க வேண்டும்.

'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு தவாது' என்பார்களே அதுதான், நாடக அரங்கக் கல்வி அவ்வாறு தான் ஆகியிருக்கிறது. அதன் பரவலாக்கம் எனப் பெருமை பேசிக் கொள்வது இந்த ஏட்டுச்சுரைக்காய்ப் பரவலாக்கத்தைத் தான். இது மிகவும் கவலைக் குரியவிடயம். தொகையல்ல  தரமே எதனையும் தீர்மானிப்பது. பல நூற்றுக் கணக்கான பலவீனமான விலங்குகள் இருப்பதை விட, ஒரு சிங்கம் இருப்பது போதும்,

 நாடகக்காரர்கள் மாற்றுக்கல்வி பற்றி அதிகம் பேசியவர்கள், மாற்றுக் கல்வியை வற்புறுத்தியே நாடகங்கள் பல எழுதப்பட்டுள்ளன. இவ்வகைப்பட்ட மாற்றுச் சிந்தனைகளால் கவரப்பட்ட பல இளைஞர் கள் 80 களின் நடுப்பகுதியில் அரங்கக் கல்வி, ஆற்றுகை நோக்கி ஈர்க்கப்பட்டும் இருந்தனர். ஆனால் இன்று அவர்களது கலை வடிவத்திற்குள்ளேயே அவர்கள் எதனை விமர்சித்தார்களோ அதுவெல்லாம் நடக்கத் தொடங்கி விட்டது எமது கல்விமுறையில் விஷக் கொடுக்குகள் நாடகத்தினுள்ளும் நீட்டப்பட்டுள்ள நிலையில் அவர்களது குரல் மூடப்பட்டிருப்பதும், பலவீனமாகிப் போனதும் மிகவும் வருத்தத்திற்குரியது .

இன்றெல்லாம் பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்களுக்கெல்லாம் நாடகம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரு வகையில் நாடகம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு வித கிராக்கி நிலவுகிறது நுகர்வோரது அதிகரிப்புத் தான் இதற்குக் காரணம். நுகர்வோரென்பது நாடகமென்ற கலைப்படைப்பின் நுகர் வோரல்ல, நாடக மென்ற Easy Subjcet ன் நுகர்வோர் Special in taka உண்டு . 'Campus' போக இலகு எனப் படிக்கும் நுகர்வோர். இவர்களை வெறுமனே குறைகூற முடியாது. பரீட்சைமைய, போட்டிக் கல்வி (சங்கீதக் கதிரைக் கல்லி) - முறைமை இவ் விதமான மேம்போக்கான மாணவர் சமூகத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது . இது அனைத்துக் கற்கை நெறிகளுக்கும் பொருந்தும். இது ஆக்கத்திறன் உடைய கல்விசார் சூழலையே இல்லாதொழித்துக் கொண்டிருக்கிறது.

 நாடகத்தை 'இலகுநோக்கில்' படிக்கின்ற மாணவர்களிற் பலர் நாடகங்களையே பார்ப்பதில்லை. இவ்வகைப்பட்டவர்கள் வெறும் அறிமுறையை கரைத்துக் குடித்துவிட்டுப் பரீட்சையில் உயர் பெறு பேறுகளைக் கூடப் பெறமுடிகிறது. நாட கம் நடிக்கப், பங்கு கொள்ள மாத்திரமல்ல. நாடகம் பார்ப்பதற்குக் கூடத் தூண்டப் படாத நிலையில் இப்பாடம் உயிர்வாழுகிறது.

விரும்பிப் படிப்பவர்கள் போக இப்போதெல்லாம் ' Special in take' ல் 15 - 20 பேர் வரை யாழ். பல்கலைக்கழகத்திற்கு எடுபடுகின்றார்கள். இவர்களின் நாடகம் மீதான விருப்பம் எள்ளளவும் இல்லாத தலைவிதியே என அதனை ஏற்றுக் கொண்டவர்களை நடை முறையில் சந்திக்க முடிகிறது. இவர்களால் யாருக்கு என்ன பலன்? இப்படியான விசேட சேர்த்தல் முறைக்கான மாற்று ஏற்பாடுகள் பற்றி நாடகக்காரர்கள் சிந்திக்க வேண்டும். அல்லது எல்லா முயற்சிகளும், விழலுக்கு இறைத்த நீராகிப் போகும். பல்கலைக் கழகம் கூட க பொ . த (உ/த)ல் நிலவிய வெறும் அறிமுறைச் சூழலை உடைக்கக் கூடியதாகச் செயற்படவில்லை . அவர்களது பாடத்திட்டம் கணிசமான அளவு செய் முறைகளைக் கொண்டிருந்தாலும், ''கலைஞர்களை உருவாக்குதல் தான் முதன்மை நோக்கம்'' (குழந்தை ம. சண்முகலிங்கம்) என்ற வகையில் அதற்கான பாட மீள் ஒழுங்கு. செய்முறை அதிகரிப்பு ஆகியன செய்யப்பட வேண்டியிருக்கின்றது மேலும் செய்முறைக்கான வசதிகள் ஏற்படுத்தப்படாத நிலையிலும், இருக்கும் நிலைமைகளுக்குள் தாக்கவல்லமையுடன் செயற்படுவதற்கான முறையை கண்டு பிடிக்காமல் இருப்பதும் இதற்கான அடிப்படைக் காரணங்களாகும், பயிற்சிகள் மிக முக்கியமானவை. ''எந்தத் துறையிலும் முறையான பயிற்சி பெற்றவர்கள் தான் அதனை வளர்த்தெடுக்க முடியும் வெறும் அமெச்சூர் பயிற்சிகள் அவ்வளவாக பயன்தராது'' (தாசீசியஸ்) என்பதை கவனத் தில் எடுக்க  வேண்டும். நாடகக் களப்பயிற்சிகள் வெவ்வேறு நோக்கங்களோடு நடாத்தப்படலாம். ஆனால் இப்போதுள்ள நிலையில், நாடகத்தின் அடிப்படை இலக் கணங்களைச் (Theatrical Grammer) சொல்லிக்கொடுக்கும் ஆழமான பயிற்சிகள் அவசியம்.

ஆரம்பத்தில் நாடகத்தை விருப்பத் தேர்வாக கொண்டிருந்தவர்களுக்கு இருந்த பிற அனுபவங்கள், முயற்சிகள் போன்றன இல்லாத மாணவர்கள் வரத்தொடங்கி இருக்கும். சூழலில் இது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் க.பொ.த (உ/த) இல் தொடங்கிய வெறும் அறிமுறை மரபே ஓங்கி, ' செய்முறை' கிஞ்சித்தும் இல்லாதவர்கள் வந்து விட வாய்ப்புக்கள் அதிகம், விஞ்ஞான செய்முறை வகுப்பு எடுக்கத் தெரியாமல் ஒரு விஞ்ஞான ஆசிரியர் இருக்க முடியாது அல்லவா? --- அது போலத் தான் இதுவும்..

மேற்படி உயர்கல்விக்கு பாடத்திட்டத் திற்கு வெளியே நாடக அரங்கியலுக்கான பரீட்சைகளை வட இலங்கை சங்கீதசபை நடத்தி வருவது பாராட்டத்தக்க ஒன்றாகும், இதிலுள்ள முக்கிய அம்சம் இதனை படிப்பவர்கள் பெருமளவிற்கு நாடக அரங்கத்தை விருப்பத் தேர்வாக கொள்பவர்கள், எனவே, அதிக ஈடுபாட்டோடு அதனை . எதிர்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம், மிகவும் வல்லமை பூர்வமான பாடத்திட்டத்தோடு, ஒழுங்குபடுத்தப்பட்ட பலமான ஆக்கவல்லமையுடை பரீட்சை முறைகளோடு இதனை கற்பவர்களை வளர்த்தெடுக்க முடியும்.

ஆனால், இதன் பரீட்சை முறைமை குறிப்பாக செய்முறை நடாத்தப்படும் முறைமைபற்றி அண்மைக்காலமாக பல கண்டன, விமர்சனக் குரல்களைக் கேட்க முடிகிறது. நாடகக் கலைஞர்கள் . அதிலேயே கற்று துறைபோகியவர்கள் இதில் ஈடுபட்டுக் கவனம் எடுக்க வேண்டும். மிகக் குறுகிய ஒரு சூத்திரப்பாங்கான, தரமற்ற பரீட்சிப்பு முறை பலன்தராது. நாடகத்தின் அடிப்படையான இலக்கணங்கள் (Theatrical Grammer) ஆழமாகப் பரீட்சிக்கப்பட வேண்டும். ஒரு நாடகக்காரனுக்கு. நாடகத்தின் உடற்கூற்றியல் (Theatrical anotomy) முக்கியம். உடற் கூற்றியல் தெரியாமல் ஒரு மருத்துவன் இருக்கக்கூடாதென்றால், நாடகத்தின் உடற்கூற்றியல் தெரியாமல் ஒரு நாடகக்காரனாக எவ்விதம் இருக்கமுடியும். நாடகத்தின் உயிர் நிலையை விட்டு விட்டு, அதனைச் சுற்றியோடிக்கொண்டிருக்கக் கூடாது,

N C. O.M.S. இன் பொன் விழாக் கொண் டாட்டத்தின் போது பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆசிரியர்களை , கலைஞர்களாக  கொள்ளும் பிழையான ஒரு கண்ணோட்டம் எமது சமூகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினார். இந்தச் சுட்டலுக்கான பிரதான உதாரணமாக N. C. 0. M.S. சே ஆகிபிருப்பது ஆச்சரியமான உண்மை , ஆசிரியர் தராதரம் சித்தி எய்தியவர்களுக்கு N. C 0. M. S பொன்விழா ஆண்டுவரை அவர்களின் துறைசார்ந்து கலாவித்தகர (' நடன கலாவித்தகர், நாடக கலாவித்தகர்' .) பட்டம் அளித்தது. இது மிகவும் பழையான முன்னுதாரணம் ஆசிரியராக இருப்பது வேறு கலைஞனாக உயிர் வாழ்வது வேறு. ஆசிரியர்கள் அடிப்படைக் கைவினைகளை உடையவர்கள், கலைஞர்களோ அதில் காலூன்றி உன்னி மேலெழும்புபவர்கள். விதிகளை உடைத்து விதிகளை ஆககிச்செல்பவர்கள்.

இது நடைமுறையில் புரிந்து கொள்ளப் படாத சமூகச் சுற்றுச் சூழலில் பல பிரச்சனைகள் எழுகின்றன.

நாடகம் ஒரு கற்கைநெறியாயமை, நாடக அரங்கக் சுல்லூரியின் வருகை. பல்கலைக் கழகத்தில் அது பாடமாதல் ,எல்லாம் ஒரே சமூகச் சூழலில் ஏற்பட்ட விடையங்கள்தான். நாடக அரங்கக் கல்லூரியின் இயக்குனரான குழந்தை ம. சண்முகலிங்கம் நாடகம் ஒரு கல்வி என்பதை வற்புறுத்தத்தான் ' ' கல்லூரி' என்ற பெயரிடலை திட்டமிட்டு பயன்படுத்தியதாக கூறுகின்றார். எனவே, இந்நிறுவனமும் தன்னை கற்கைநெறி சார்பாகவே அதிகம் இனங்காட்டுகின்றது. இதேநேரம் அரங்கு சார்ந்து யாழ்ப்பாணத்தில் செயற்படும் இன்னொரு நிறுவனம் திருமறைக் கலாமன்றம், இவர்கள் தம்மை கற்கைநெறி அரங்கச் செயற்பாட்டாளர்கள் என்று பிரகடனப் படுத்தாவிட்டாலும், அவர்களது 'நாடகப் பயிலக' செயற்பாடுகள் கற்கைநெறி சார்பாகவே இருக்கின்றது. இவ்விரு நிறுவனங்களும் கூட மேற்படி விவாதித்த போக்குகளின் எதிரொலிகளையே அதிகம் கொண்டுள்ளன, வீரியமான அரங்கப் போக்கின் திசைமாற்றங்களைக் கணித்துக்கொண்டு, தூரநோக்கோடு இந்தப் போக்கிற்கு மாற்றாக (Alternative) அவையும் செயற்படாமலே இருக்கின்றன . என்பது மற்றொரு துரதிஷ்டமாகும்.

ஆக, மேற்படி விவாதித்த பல்வேறு கற்கைநெறிசார் பிரச்சனைகளை இதனோடு தொழிற்படும் அனைத்து நிறுவனங்களும் வெவ்வேறு விகிதாசாரத்தில் கொண்டே இருக்கின்றன் இதனை அனைத்து தரப்பினர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்றையசமூகங்கள், மிகக் கூடிய கல்வித்தகுதி உடையவர்களுக்கு மட்டுமே சிறந்த பதவிகள் செல்ல வேண்டுமென விரும்புகின்றன. ஆயினும் அப்பதவிகளுக்கு தேவையான அறிவு, ஆற்றல், திறன்கள் என்பவற்றுக்கும் அவர்களுடைய கல்விச் சான்றிதழ்களுக்கும் எவ்வித தொடர்பும்  இருப்பதில்லை .' (சோ. சந்திரசேகரன்) என்ற நிலைக்கு நாடக அரங்கக் கல்வியை ஆளாக்காமல் காப்பாற்றவேண்டிய உடனடிப் பொறுப்பு இத் துறைசார்ந்த அனைவரது கடப்பாடு ஆகும். வரலாறு எப்போதும் மனிதன் வரலாற்றில் - இருந்து எதையும் கற்றுக் கொள்வதில்லை என்பதையே திரும்பத் திரும்ப நிரூபிக்கிறது என்பார்களே அது தானா நாடகத்திற்கும். இத்தனை காலம் நடந்த நாடக வரலாறு, நாடகக்காரர் வாழ்க்கை பற்றிய படிப்பு அனுபவங்கள் என்ன? ஏன் அவற்றையெல்லாம் எம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

வரலாற்றின் கடந்தகாலங்கள் எப்பொழுதெல்லாம் மறுக்கப்படுகின்றதோ, அப் போதெல்லாம் குருட்டுப்பயணங்களே நிகழ்ந்துள்ளன என்ற எச்சரிக்கையை நாம் செவிமடுக்காது இருபது ஏன்?

(இக் கட்டுரை ஆக்கத்திற்கான உரையாடல்களின்போது விவாதித்தும், கருத்துக் கூறியும் கட்டுரையாக்கத்திற்குதவிய மூத்த நாடகக் கலைஞர்கள் குழந்தை ம. சண் முகலிங்கம் (இயக்குனர் - நாடக அரங்கக் கல்லூரி, வருகை விரிவுரையாளர் யாழ். பல்கலைக் கழகம்), நா, சுந்தரலிங்கம் கல்விப் பணிப்பாளர் - வலயம் 1. யாழ்ப் பாணம் ) ஆகியோருக்கும் ஓவியர் சனாதளன் - (விரிவுரையாளர் - நுண்கலை). செல்வி ந.நவதர்ஷினி விரிவுரையாளர் - நாடகமும் அரங்கியலும்). திரு. எஸ். ஸ்ரீரங்கநாதன் அதிபர், கரம்பன் சண் முகானந்தா மகாவித்தியாலயம்) ஆகியோருக்கும், சம்பிரதாயபூர்வமற்ற நன்றிகள். )

நன்றி:- ஆற்றுகை

 

கட்டுரைகள்

 சபா. ஜெயராசா அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்....

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click