thilakan க.திலகநாதன் BA.PGDE.MATE.M.Phil (Drama and Theatre)

விரிவுரையாளர்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி.

 உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர். இங்கிலாந்தில் உள்ள ஸ்ராபோட் (start ford) திருச்சபைப் பதிவேட்டில் இருந்து பிறந்த நாள் 23-04-1564 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் ஓர் வியாபாரியின் மகன் 1582 இல் (18 வது வயதில் ) அன்னாஹாதாவே (anne hathaway) என்பவதை திருமணம் செய்தார். மூன்று பிள்ளைகளின் தந்தை. 1592 ல் ஹென்றி VI என்ற நாடகம் முதல் வெளிவந்தது 30 திற்கு மேற்பட்ட நாடகங்களை எழுதினார்.

நாடகாசிரியர், நடிகர். 1599ல் குளோப் அரங்கில் பங்குதாரர் ஆனார். இவரது நாடகங்கள் அரச வம்சங்கள், ரோமானிய இலங்கிலாந்து பேரரசின் மன்னர்கள் பற்றியவை. ஏனையவை அவல, மகிழ்நெறி சமூக வாழ்வு பற்றிய நாடகங்கள். இவரது நாடகங்களை 5 பிரிவுகளாக பிரிக்கலாம் என்பர்.

1) 1589- 1594 I. தொடக்க கால நாடங்கங்கள்

உ-ம் : Hentry vi part I, II, III 2) 1594-1597

2. பெருமளவு கவித்துவ பாணியிலான நாடகங்கள்

உ-ம் : Romeo and Julieat, The merchant of venice

3) 1597 - 1600 3. பரிபக்குவ முற்ற காலத்து நாடகங்கள்

2-4 : Henry IV part I, II,III, Jullius seaser

4) 1601 - 1608 4. பிரச்சினை தழுவிய மகிழ்நெறி, அவலச் சுவை நாடகங்கள்

உ-ம் : Hemlet, Othello, king lear, maebeth, coriolanus

5) புனைவு, காதல் நாடகங்கள்

உ-ம் : Prince of tyre

Cymbeline

The wintors tale

The tempest

* ஜனரஞ்சக அரங்குகளிற்காகவே இவரது நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன என்பவர்.

*சிறந்த கவிஞர்.

* 19ம் நூற்றாண்டில் புதிய மாறுதல்கள் வரும் வரை இவரே இணையற்ற நாடகாசிரிய ராகத் திகழ்ந்தார்

*ஆழ்ந்த ஞானம் கொண்டவர், வலிமையும் அழகும் மிக்க நேர்த்தியான மொழியைக் கையாண்டவர்.

* சேக்ஸ்பியர் தனது நாடகங்களின் கதைகளை வேற்று நாடுகளின் கதைகளினூடாகப் பெற்று மனித உள்ளங்களை காட்டியுள்ளார் என்பது தென்படுகின்றது

உ-ம்:

ஜீலிய சீசர் இத்தாலிய ரோம் நகர்ப் பேரரசு

ஹம்லட் - டென்மார்க்கின் அரசன்

மக்பெத் - கொட்லாந்தின் அரசன் (டங்கன்)

ரூவங்கம் கிரேவில்டாவு - ரோய் நகர இளவரசன்

ஆன்ரனியும் கிளியோட்பெட்ராவும் - அன்ரனி ரோமாபுரியும் கிளியம்பெட்ரா எகிப்திய இளவரசியும்

ஆலங்வெல்த் எண்டர்ஸ் வெல் - பிரான்சிய அரசன் ரைன் ஆப் எதென்ஸ் - கிரேக்க அரசன் (எதென்ஸ்)

*நாடக எழுத்துருப்பற்றிய கற்கைக்கு நாடகாசிரியர் பின்புலம், ஆளுமை பற்றி அறிவு அவசியமானதாகும்.

 

கிங்கிலியர் (king lear)

சேக்ஸ்பியரின் நாடகங்களின் கதைகள் யாவும், வரலாற்றிற்கு அப்பால் மனித குணங்களைப் பற்றியதாகும். கிரேக்க, ரோமானிய, டென்மார்க், கொற்லாண்ட் மற்றும் பிரித்தானிய அரசுகள், தளபதிகள் பற்றிய கதைகளாகும். இக்கதைகளை எடுத்தாண்டு நாடகங்களைப் படைத்துள்ளார். அந்நாடகங்களின் ஊடாக அக்கால மக்களிற்கு பல செய்திகளைக் கூறியுள்ளார். வரலாற்று நாடகங்களினூடாக வரலாற்று உண்மைகளையும் மகிழ்நெறி நாடகங்களினூடாக நல்ல சிந்தனைகளையும் (சிரிப்பினூடாக) அவலச்சுவை நாடகங்களினூடாக தனிமனித அவலங்களையும் அவற்றின் ஊடாக மேற்கிளம்பும் பிரச்சினைகள் பற்றியும் அலசி ஆராய்ந்து அளிக்கை செய்துள்ளார்.

கிரேக்க நாடகங்கள் போன்று எலிசபெத் கால நாடகங்களும் குறிப்பாக சேக்ஸ்பியரின் நாடகங்களும் மேடையேற்றம் கண்டன. மேடையேற்றம் கண்டதாலேயே அந்நாடகங்கள் இன்றும் வாழ்கின்றன.

சேக்ஸ்பியர் தனது நாடகங்களை குளோப்' அரங்கிற்காக எழுதியதன் காரணமாக அரங்கும் நாடகமும் பிண்ணிப் பிணைந்ததாக காணப்படுகின்றதை அவதானிக்கலாம். அரங்கில் காட்சிகளும், காட்சிக்கான பின்புலங்களும் பின்புலங்களினூடாக அலங்கரிக்கும் நடிகர்கள், அவர்கள் அணியும் வேட உடைகள், கைப்பொருட்கள் என்பனவும் நாடக எழுத்துருவில் குறிப்பிடத்தக்கவாறு அரங்கிலே காட்சிகளாக்கப்பட்டன. அத்தகையெதாரு ஆழ்ந்த புலமை அவருக்கு இருந்தது. ஆகவே தான் நாடகத்தை வாசிக்கும் போது காண்பியம் கண்முன்னே நிற்கின்றது.

அவ்வகையிலேயே கிங்கிலியர் நாடகத்தையும் அவர் சமூகப் பின்புலத்தையும் அறிய முடியும்.

 

பாத்திரங்கள்

 1. லியர் - பிரிட்டிஸ் மன்ன ன் - Lear - King of britian

2. கென்ற் பிரபு - Earl of kent

3. கிளண்ட ர் பிரவு (குளோசென்டர்) – Earl of Gloucestar

4. பர்கண்டி பிரபு -dule ofburgundy காடில்யாவை அடையப்போட்டி போட்டவன்

5. எட்மன்ட் - கிளஸ்டர் பிரபுவின் பரத்தை மகள் - Bastard on Gloucestor (Edmand)

6. எட்கார் - கிளண்ட ர் பிரபுவின் மகன் (Edgor)

7. கானரில் - லியரின் முதலாவது மகள் - Goneril

8. ரீகன் - லியரின் இரண்டாவது மகள் - Regan

9. கார்டீலியா - லியரின் மூன்றாவது மகள் - Cordelia

10. ஆல்பணி கோமகன் - Duke of Albuny- கானரில் கைப்பிடித்த கணவன்

II. கார்ணவால் கோமகன் - Duke of cornwall - ரீகன் கைப்பிடித்த கணவன்

12. பிரான்ஸ் அரசன் - King offrance - கார்டிலினா கைப்பிடித்த கணவன் 13. கியூரான் - a courtier- அரசவைப்பிரிவு

14. கிழவன் - oldman, Tenant to Gloucester

15. ஆஸ்வால்டு - steward to goneril கானரியின் செயலர்

16. கோமாளி - fool - லியரின் அரசவைக் கோமாளி

17. மருத்துவர் - physician

 

மற்றும் கனவான், தூதன், பணியாட்கள், படைவீரர்கள் ஆகிய பலர்.

இந்நாடகம் (5) ஐந்து களங்களாக வகுக்கப்பட்டுள்ளது. களங்களில் பல காட்சிகள் மூலம் பிரிக்கப்பட்டுள்ளன.

 

லியர் மன்னன்

• இந்த நாடகத்தில் ஏனை பாத்திரங்களை விட லியரின் பாத்திரம் சிக்கல் நிறைந்ததாகும்.

•இப்பாத்திரம் பரந்த வீச்சிலான இயக்கம், உணர்ச்சி, உளவியல் மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

•ஆரம்ப கட்டத்தில் லியர் பூரண அதிகார நிலையில் இருக்கின்றார். •சுலபமாக ஆத்திரப்படக்கூடியவர் விருப்புகளை திருப்திப்படுத்திக் கொள்ள வற்புறுத்துவார்.

• இந்த குழந்தைத்தனமான நடத்தை நிறைவேற முடியாத போது

தோற்கடிக்கப்படுகிறார்.

•அடுத்த கட்டத்தில் இயலாமை காரணமாக சித்தப் பிரமை ஏற்படுகின்றது. இறுதிக்கட்டத்தில் ஆன்மீக நிலை ஏற்படுகின்றது.

• உண்மையை உணரும் போது ஏமாற்றமடைகிறார்.

 தனது பிள்ளைகள் தன்னைப் புகழ வேண்டும் என புகழும் பிள்ளைகளை (பெண்) நம்பினார். இதன் காரணமாக தன் நம்பிக்கைக்குரிய kent பிரவுவையும் நாடு கடத்தினார். கடைசி மகள் காடில்யாவை வெறுத்தார். அவளை பிரான்ஸ் மன்னனிடம் திருமணம் முடிக்க ஒப்புக்கொண்டு நாட்டை விட்டே கலைத்துவிட்டார். ஆனால் மூத்த இரு பிள்ளைகளும் அவரை நிர்க்கதியாக்கி விட தனது இளைய மகள் காடில்யாவை தேடுகிறார். இறுதியில் மகள் காடில்யா இறக்க தானும் உயிர் இழந்து விடுகிறார்.

 

கிளஸ்ரர் பிரபு

•லியர் போன்று அவலத்திற்கு தள்ளப்படும் பாத்திரம் செஸ்டர் ஆவார். (வயோதிபர் சுலபமாக ஏமாற்றப்படுபவர்கள் என்பதற்கு உதாரண புரசர்)

•இவரும் தனது போலியான மகனால் ஏமாற்றப்படுகின்றார்.

•கண்களை இழந்து கொள்கிறார். இறுதியில் வெளித்தோற்றத்திற்கும் உண்மை நிலைக்குமிடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்கிறார்.

இவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் ஒருவர் எட்டவர்ட் (எட்மண்ட்) (பரத்தைக்கு பிறந்தவர்) மற்றையவர் மூத்தவர் எட்கார். எட்மண்ட் சொத்துக்கு ஆசைப்பட்டு தனது அண்ணனை தந்தையிடம் கூடாதவன் என நிரூபிக்கிறான். அதன் உணராத எட்கார் தந்தையை விட்டு விலகுகிறார். மீண்டும் வந்து தந்தையைக் காப்பாற்ற முனைந்த போதும் தந்தை இறந்து விடுகிறார். எட்மண்ட் பல துரோகச் செயல் செய்து அவனும் இறுதியில் மாண்டு விடுகிறான்.

 கானரில், ரீகன்

•லியரின் இரு பெண்பிள்ளை .

•போலியானவர்கள்

• வெளித்தோற்றத்தில் லியரைப் புகழ்பவர்கள்

•லியரின் ஆட்சியை கவிழ்த்து லியரை மரணத்திற்கு இட்டுச் சென்றவர்கள்

•பார்வையாரளரை கவரத்தக்க பாத்திரங்கள்

• கெட்ட குணமுள்ளவர்கள்

லியருக்கும் அரசுக்கும் துரோகம் செய்து இறுதியில் இருவரும் நஞ்சூட்டப்பட்டும் குத்தியும் தமக்குள் சண்டையிட்டு இறக்கின்றார்கள்.

 ஆல்பனி , கார்னவால்

இவர்கள் முறையே கானரில், ரீகன் கைப்பிடித்த கணவன் மார் (Dukes)

கார்னல் - ரீகனதும், கானரினதும் சொல் கேட்டு எட்வட்டின் துரோகச் செயலில் இணைந்து கிளஸ்டஸ் பிரபுவின் இரு கண்களையும் குத்தியெடுக்கிறார். இதைக் கண்ட கிளஸ்ரரின் நம்பிக்கையான பணியாள் கார்னவாலை வாளால் வெட்டிக் காயப்படுத்த அவன் கொல்லப்படுகின்றான். ஆல்பனியோ - ஆரம்பத்தில் தனது மனைவி சொல்கேட்டு சிறிது தளம்பினாலும் உண்மையை அறிந்து அரசுக்காககப் போராடுகின்றான் . எட்காரைக் கொண்டு எட்மண்டைக் கொல்கிறான். லியர், காடில்யா அனைவரையும் காப்பாற்ற முனைந்து தோற்றுப்போகிறான். இறுதியில் Kent பிரபு எட்கார் உடன் இணைந்து நாட்டை சீர்ப்படுத்துகின்றான்.

 எட்மண்ட்

• குளொசெஸ்டர் பிரபுவின் மகன்

• போலியாகப் புகழ்பவள் தந்தையின் கண் இழப்பதற்கு காரணமானவன்.

கிளஸ்ரரின் பரத்தை மகன். சொத்துக்காய் தன் தமையனை கொல்ல முயற்சி செய்து நாட்டை விட்டு ஒளியப் பண்ணுகிறான். தன் நண்பர்களோடு (ரீகன், கானரில், காரின்வால்) இணைந்து லியரையும், கிளஸ்ராவையும் அழிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றான் பின் அழிந்து போகிறான் (எட்காரிடம் சண்டை போட்டு எட்காரால் கொல்லப்படுகின்றான் )

 காடில்யா

•லியரின் மூன்றாவது மகள். உண்மையை உரைத்த போதும் ஆரம்பத்தில் லியரால் வெறுக்கப்பட்டவள்.

•லியர் பால் அன்பு கொண்டவள்.

• போலியாகப் பேசத் தெரியாதவள்

•லியரை நேரெதிரே புகழாதவள்.

லியரின் இளைய மகள், உண்மையானவள், தந்தையில் மிக்க பாசம் கொண்டவள் வெளியே தன் அன்பை வெளிக்காட்டாதவள். புகழத்தெரியாதவள், போலியாகப் பேசத்தெரியாதவள் இதன் காரணமாக தந்தையின் வெறுப்பைச் சம்பாதித்தவள். பிரிட்டன் விட்டு பிரான்ஸ் சென்று பிரான்சு இளவரசனை மணம் முடித்தவள். இறுதியில் தந்தையைக் காண வந்து தந்தையிடம் இறந்து போகிறாள்.

 எட்கார்

•குளொசெஸ்டர் பிரபுவின் மகன்.

•நேர்மையானவன், தந்தையின் பால் விருப்புக் கொண்டவர்

•எட்மண்ட் இன் சகோதரன் ஆனால் எட்மண்டால் விரோதிக்கப்பட்டவன்

கிளஸ்ரரின் மூத்த மகன். தந்தையில் பாசம் கொண்டவன். எட்மண்டின் துரோகத்திற்கு பலியாகி தலைமறைவாக வாழ்ந்து இறுதியில் தந்தைக்கு உதவி செய்தவன். எட்மண்ட் துரோகம் கண்டு எட்மண்டை கொல்கிறான்

கென்ற் பிரபு

லியரின் அளவு கடந்த பற்றுக்கொண்டவர். லியர் இவரை நாடு கடத்த முனைந்த போதும் மாறுவேடத்தில் அவருக்காக இறுதி வரை வாழ்ந்தவர். நல்ல மனிதர்

 

கோமாளி

பொதுவாக மற்றவர்கள் சொல்லாததை கோமாளி சொல்வான்

• இது அவனுடைய சிறப்புரிமை

உண்மையை பேசுபவன், கோமாளித்தனமாக இருந்த போதும் அனைத்தும் உண்மையே.

குறிப்பாக இத்தகைய முதன்மைப்பாத்திரங்களின் அடியாக இந்நாடகத்தினூடாக ஆற்றப்படும் சமூக பண்பாட்டு பின்புலங்கள் பற்றி அறியக்கூடியதாக உள்ளது. இங்கு கூறப்பட்ட பாத்திரங்கள் நம்பத்தகுந்த வகையில் மனிதப்பண்புடைய பாத்திரங்கள் அப்பாத்திரங்களிற்குரிய தனித்தனிக் குணாம்சங்கள் வெவ்வேறு பாத்திரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆயினும் பாத்திர குணாம்சங்கள் மாற்றமுறாது இருப்பதையும் காண முடிகின்றது.

லியரும், கிளஸ்டரும் தங்கள் அதிகாரத்திலிருந்த போது கண்டு கொள்ளாத விடயங்களை கண் கெட்ட பிறகு சித்தப்பிரமை பிடித்த பிறகும் கண்டு கொள்கிறார். இத்தகையதொரு போக்கை நாம் ஈடிப்ஸ் நாடகத்திலும் காண முடியும்.

 

ஈடிப்ஸ்

 -செய்யத் தகுந்த துள் இதுவே சிறந்தது.

என்பதை மறுப்பதை நான் நம்ப மாட்டேன்

வேறு எல்லாமும் புகட்டாதீர் எனக்கு

ஒளியிடைக் கண்களோடு எப்படிப் பிதாவை

புதை குளிக்கப்பால் எதிர்கொள்வேன் நான்

அன்றியும்

கவலையுள் கிடக்கும் எனது தாயை

வெறும் ஓர் மரணத்தால் மட்டும்

ஈடு செய்திட முடியாக கொடும்

பழியை தாய்க்கும் புரிந்த நான்

எப்படிக் கண் கொண்டு காண்பேன் அவளை

என் பிள்ளைகள் எந்த வண்ணம்

ஈன்றெடுக்கப்பட்டனரோ

அந்த வண்ணம் அந்தப் பேற்றைக்

காண இன்னமும் காதலாய் கிடப்பனோ?

அந்த அழகிய காட்சியைக் காண

கண்களை வேண்டி இருப்பேனோ நான்?

தீயில் நாரில் மிக உயர்வான

ஆயினும்

 சோகம் மிகுந்த மகன் நான்...

அதே போன்று கிங்லியர் நாடகத்தில் லியர் கோடில்யாவைப் பார்த்து,

உன் கண்ணீர் ஈரமாயிருக்கிறது ஆம் உண்மை உன்னை வேண்டிக் கொள்கிறேன். அழாதே. நீ நஞ்சு கொடுத்தால் நான் குடித்து விடுவேன். நான் அறிவேன் நீ என்னை நேசிக்க வேண்டியதில்லை. நான் நினைவு கூர்கிறபடி உன் தமக்கையர் எனக்குத் தீங்கு புரிந்தனர். எனக்குத் தீங்கு புரிய உனக்கு தக்க காரணம் உண்டு ஆனால் அவர்களிற்கு காரணம் கிடையாது. நீ என்னை பொறுத்துக்கொள்ள வேண்டும். உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன் . மறந்து என்னை மன்னித்துவிடு. நான் ஒரு கிழட்டு முட்டாள்

இதே போன்று கிளஸ்ரர் பிரபுவும்

ஓர் சக்தி வாய்ந்த தெய்வங்கோளடு இந்த உலகத்தை நான் துறக்கின்றேன் உங்கள் கண் முன் என் மாபெரும் துன்பங்களைப் பொறுமையோடு கழற்றி எறிகின்றேன் நான் இதை நீண்ட காலம் பொறுத்திருந்தாலும் எதிர்ப்பற்ற உங்கள் பேராற்றலை எதிர்த்தாலும், என் எரிந்து போன இயல்பே என்னை எரித்துப் பொசுக்கி விடும். எட்கார் இன்னும் உயிரோடு இருந்தால் அவளை ஆசிர்வதியுங்கள்.

ஐயோ! முட்டாள் தனமே! எட்காருக்குத் தவறிழைத்து விட்டேன். அன்பான தெய்வங்களே! என்னை மன்னித்து எட்காரை வாழ்த்துங்கள்.

இத்தகைய இரு பாத்திரங்களின் சமூக பண்பாட்டுப் பின்னனியை அறிய முடியுமானால் தாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் செயல்கள் தமது அழிவுக்கு காரணம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இத்தகையதொரு அறிவு புலப்படக் காரணம் தமது செயல்களே என்பதாகும். மனிதன்

1. வெளித்தோற்றத்தை கண்டு ஏமாறக்கூடாது.

2. உண்மைநிலையை அறிய வேண்டும்

3. இறைவன் வகுத்த செயலை மனிதன் மீற முடியாது

4. விதியை மனிதனால் வெல்ல முடியும். என்கிற விடயங்கள்

எடுத்துக்காட்டப்படுவதை சேக்ஸ்பியர் தவறவில்லை.

அதே போன்று கானரில் , றீகன், எட்மன்ட், கார்னிவால் போன்ற பாத்திரங்களினூடாக, துரோகம் செய்ய நினைப்பவர்கள், செய்தவர்கள் தாமாகவே அழிந்து கொள்வார்கள் அல்லது அழிக்கப்படுவார்கள் என்பது புலப்படுத்தப்படுகின்றது.

அடுத்து எட்கார், கென்ற், ஆல்பனி போன்ற பாத்திரங்களினூடாக நல்லவற்றை செய்து கொண்டிருப்பவர்களிற்கு அழிவு இல்லை. என்பது புலப்படுத்தப்படுகின்றது.

கோமாளி என்பவர் அறிவுள்ளவன் எப்போதும் உண்மையை உரைப்பவர் என்கிற விடயம் பார்ப்போரை சிந்திக்க வைக்கின்றது.

இத்தகைய மனித அவலங்கள் ஊடாக மனிதன் எவ்வாறு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது புலப்படுத்தப்படுகின்றது. இந்த நாடகத்தில் மனித அவலம் அல்லது மனிதக் குணாம்சம் நம்பிக்கைத்துரோகம் செய்யும் பிள்ளைகளும் நம்பி ஏமாற்றப்படும் பெற்றோரும் பற்றியதாக அமைந்து விடுகின்றது முடிவில்.

வெளித்தோற்றத்தை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது என்பது விளங்கப்படுத்தப்படுகின்றது.

 

கிங்கிலியர் நாடகத்தின் கருக்களும் கருத்துக்களும் :

நாடகம் ஒன்றிற்கு ஒரு கரு அமைவது பல கருத்துக்கள் இருக்கலாம். இந்நாடகத்தில் மூன்று கருக்கள் உள்ளன எனக் கருதுவர்.

 முதலாவது கரு

"பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவுகளே கிங்கிலியர் நாடகத்தின் அடிப்படைக் கருவாக உள்ளது. இக்கரு லியரையும் அவரது பெண் பிள்ளைகளையும் பிரதான சூழ்விலும் (main plot) கிளெசெளர் பிரபுவையும் அவரது ஆன்மாக்களையும் சம்பந்தப்படுத்தியுள்ள உப சூழ்விலும் (Sub Plot) வெளிப்படுகின்றது. பெற்றார் பிள்ளைகள் உறவு மனித அனுபவத்தின் ஒரு பகுதியாக உள்ளதால் கிங்கிலியர் நாடகம் அனைத்து மக்களிற்கும் பொருத்தமான முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது.

 இரண்டாவது கரு

வெளித்தோற்றத்திற்கும் உண்மைக்கும் இடையிலான முரண்பாடு சம்பந்தமானதாகும். லியரும் கிளெசௌடரும் உண்மையில் விசுவாசமும் உண்மைகளும் உள்ள பிள்ளைகளிடத்து நம்பிக்கைத்துவங்களும் நன்றியறிதல்களையும் உள்ளதற்கான வெளித்தோற்றங்களைக் அவர்கள் இருவரும் மெய்யென ஏற்கின்றனர்.

 மூன்றாவது கரு

மனிதனது தலைவிதி எவ்வாறு அவனுக்கு அப்பாற்பட்ட சக்திகளைத் தீர்மானிக்கின்றது என்பதாகும்.

இந்தவகையில் கிங்கிலியர் நாடகத்தில் இம்மூன்று கருக்களும் முக்கியமாவதைக் காணமுடியும். கரு பிரதான பாத்திரங்களுடன் இணைந்ததாக காணப்படுகின்றது. இங்கு இரட்டைக்கதைப்பின்னல் காணப்படுவதன் காரணமாக இரட்டைச் சூழ்வும் உள்ளது. இந்த இரட்டைச் சூழ்வை (Dousle plot) பின்பற்றியதாகவே இந்நாடகக் கருக்கள் அமைந்திருப்பதை நாடக வகியாகத்தினூடாக அறிந்து கொள்ளலாம்.

 

நாடகத்தின் கதைப்பின்னலும் கட்டமைப்பும்

தனியதிகாரம் கொண்ட லியர் மன்னர் தனது இராசச்சியத்தை ஆளுகின்றார். எவரையும் கலக்காது தனது பெண்பிள்ளைகள் மீதும் பிரஜைகள் மீதும் தீர்ப்பு வழங்குகின்றார். தனது ஒவ்வொரு விருப்பத்தையும் தானே நிறைவேற்றிக் கொள்வார். தன்னிடத்து பெண்பிள்ளைகள் அன்பை வெளிப்படுத்த வேண்டுமென அவர் வெளிப்படையாக விரும்புவார். கோடிலியா (அவரது மூன்றாவது மகள் ) அவரைப்பற்றி புழுகாத போது அவளைத் தன் உறவிலிருந்து நீக்குகின்றார். ஆலோசனை கொடுக்க முயன்ற Kent பிரபு நாடு கடத்துகின்றார். இவ்வாறு பிரதான பாத்திரமான லியரின் பாத்திரம் உறுதிப்படுத்தப்படுகிறது. இத்தகைய நிலையில் ஆரம்பித்த பாத்திரம் கோடிலியாவுடன் லியர் மீள இணைவதற்கு மிடையில் நாடகத்தின் முடிவை அண்மித்த கட்டத்தில் லியர் பல அவமானங்களை எதிர் கொள்கின்றார். ஆரம்பத்தில் மெல்லியதாக இருந்த போதிலும் அவை படிப்படியாக பயங்கர சூறாவளியில் அவரை வீசி இறுதியில் சித்தப்பிரமையில் தள்ளி விடுகின்றன. அந்த வீழ்ச்சி அவருக்கு அநியாயமாக ஏற்பட்ட தொன்றல்ல என்ற போதும் கோணேல் , றீகன் ஆகியோரது வெளிப்படை கெடுதிகளே ஆகும். லியரின் உள்ளத்தில் கடுப்பினை ஏற்படுத்தி விடுவதால் அவரிடத்து எமக்கு பரிவு ஏற்படுகின்றது லியர் தனது பிழைகளை அறியத் தொடங்கி அவற்றை நிவர்த்தி செய்ய வலுவற்று நிற்கும் போது அவரிடத்து இரக்கம் ஏற்படுகின்றது. சூறாவளிக்காட்சியில் அவரது அதிகாரங்கள் யாவும் களையப்பட்டு அவர் வெளிச்சக்திகளின் துன்புறத்தல்களுக்கு ஆளாகி அவற்றின் தயவில் தனிமனிதனாய் சிக்கித் தவிப்பது போன்று அவரது உள்ளார்ந்த சித்திரவதைகளையும் தனித்து நின்று தனிமனிதனாக எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

சூறாவளியை அடுத்து வரும் காட்சிகள் லியர் தன்னை மீளொழுங்கு செய்து கொள்ள முயற்சிப்பதைக் காட்டுகின்றன. தனது அதிகாரம் மிகுந்த நிலையில் பயன்கருதாது வழங்கப்படும் பக்திக்கும் பயனை எதிர்பாரத்து பாசாங்காக வழங்கப்படும் பக்திக்குமிடையில் வேறுபாட்டை அவர் அறிய வருகின்றார். ஆனால் கொணெறில், றீகன் ஆகியோர் மூலம் கட்டவிழ்த்து விட்ட தீய சக்திகள் அவர் புதிதாக அறிந்து கொண்ட அறிவின் அடித்தளத்தில் அவரது வாழ்வை மீளக்கட்டியமைக்கத் தடுக்கின்றன.

லியரைப் போன்றே செஸ்றர் பிரபுவும் தன்னை மீளாய்வு செய்ய நிர்ப்பந்திக்கப் படுகின்றார்.

இந்த இரண்டு சூழ்வையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைய விட்டு வளர்த்துச் செல்வது சேக்ஸ்பியரின் நாடகக் கட்டமைப்பாக உள்ளது.

நாடக இறுதியில் கொணெறிலும், றீகனும் ஒருவரை ஒருவர் கொலை செய்கின்றனர். லியரினதும் கோடிலியாவினதும் மரணத்திற்கு எட்மண்ட் கட்டளையிடுகின்றான் . எட்மன்ட் இடத்து கொணெறிலுக்கு இருந்த அன்பு தெரிய வந்ததும் எட்கருக்கு எட்மண்ட்டுக்கும் இடையில் சண்டைக்கு வழிவகுத்தது. எட்மண்ட் மரணமடைகின்றாள்.

 மோதுகை

உண்மைக்கும் போலிக்குமிடையிலான போராட்டமே இங்கு பிரதான மோதுகையாகிறது அதாவது லியருக்கும் பெண்பிள்ளைகற்கும் (கொணெறில் , றீகன்) செஸ்ரர் பிரபுவிற்கும் எட்மண்டுக்கும் இடையில் ஏற்படும் முரண்பாடுகள்.

 சொல்லாடல்

சேக்ஸ்பியரின் மொழி கவித்துவும் மிக்கது. எல்லா நாடகங்களிலும் சொல்லாடல்கள் ஆழமான கவித்துவம் கொண்டவை. அடிப்படைக்கருவி வெற்றுக் கவிதை (Blank Verse) ஆகும். அது சாதாரண பேச்சின் நெகிழ்சியையும் அதே வேளையில் அப்பேச்சை உயர்நிலைப்படுத்தவும் செம்மைப்படுத்தவும் உதவியது. இதேவேளை உருவக மொழி நடையையும் பயன்படுத்தியுள்ளார்.

உதாரணம் : -

லியர் :- "உன் தொந்தி முட்ட முழங்கு! அக்கினியை உமிழ் மழையை பொழி மழைக்காற்று, இடி அக்னி இவை என் பிள்ளைகளல்ல, பஞ்ச பூதங்களே இரக்கமின்மையால் நான் உங்களை வருத்தேன். நான் உமக்கொரு போதும் இராச்சியத்தை அளிக்கவில்லை. பிள்ளைகளென்றழைக்கவில்லை நீர் எனக்கு பிரதி கடன்படவில்லை.

அவ்வாறாயின் உமது பயங்கர மனக்கசப்பை விழவிடுங்கள். இதோ உங்கள் அடிமையாய் நிற்கின்றேன். வறிய வலிமையற்ற பலவிதமான வெறுக்கப்படுகின்ற ஒரு வயோதிபனாக நிற்கிறேன்.

உண்மையில் சேக்ஸ்பியரின் மொழி நடிகனிடத்து விசேட எதிர்பார்ப்புகளை எதிர்பார்த்து நிற்கும்.

 

காண்பியங்கள்

வாசிப்பு நிலையில் பெருங்காட்சிப்பண்பே காண்பியமாக விரிவடையும். சேகஸ்பியரின் அரங்கை முதன்மைப்படுத்திக் கொண்டு வாசிப்பதில் ஈடுபடவேண்டும். எலிசபெத்கால அரங்கு பற்றிய எமது அறிவைக் கொண்டு பார்க்குமிடத்து சேக்ஸ்பியரின் மேடைப் பொருட்கள் வேடஉடைகள் நடிகர்களது அசைவுகள் ஆகியவற்றைக் கொண்டே மேடை பெருங்காட்சியை மனக்கண்களில் கண்டிருக்க முடியும்.

காட்சிகள் முன் மேடை உள்மேடை, மேல்மேடை என தொடர்ந்து வருவதை காணமுடிகிறது. வெறுமைாயாக இருந்த மேடை ஊர்வலங்கள் எதிர்த்து நிற்கும் பாடகன் . சேவகர்கள் என பலவற்றால் உயிரூட்டப்பட்டது.

நடிகரின் மேடைச் செயல்களும் காண்பியமாகும்.

 

நாடக இறுதியில்

•கிளெசெஸ்டர் கண் பிதுங்கி காணப்படுகின்றார்.

•கென்ற் பிரபு சிறைப்பிடிக்கப்பட்டு கட்டையில் பிணைக்கப்பட்டுள்ளார்

• எட்கரும் எட்மண்டும் சண்டையிடுகின்றனர்.

• லியர் சாகிறார்

 

வேட உடைகளும் பிரதான காண்பியமாகும்.

உதாரணமாக லியர் முதலில் அரச அங்கி அணிந்து காட்சி தருகிறார். பின்னர் பிரபுவின் உடை அணிகிறார். சித்தபிரமை வந்த பின்னர் கிழிந்த உடையில் தோன்றுகிறார். கோடில்யாவுடன் இணைந்த பின் தனது அந்தஸ்துக்குரிய உடையில் தோன்றுகிறார்.

சேக்ஸ்பியரின் பெரும்பாலான நாடகங்கள் அனைத்தும் குறிப்பாக அவலச்சுவை நாடகங்கள் கற்பித மோடியிலேயே அமைந்து காணப்படுகின்றது.

கட்டுரைகள்

 சபா. ஜெயராசா அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்....

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click