"குழந்தை ம . சண்முகலிங்கம் எழுதிய *வையத்துள்தெய்வம் * A.V.M குகராஜாவினால் மேடைக்கெனச் சுருக்கப்பட்ட திரைப்படப் பிரதியானசொக்கனின் *நல்லை நகர் நாவலர்* நாடகத்தை நெறியாள்கை செய்து இயக்கிய அரிய சந்தர்பத்தினையும் பெற்றிருந்தார் . கலையரசு சொர்ணலிங்கத்தின் நெறியாள்கையிலே உருவான P.S இராமையாவின் தேரோட்டி மகன் எனும் நாடகத்திலே அர்ச்சுனன் சார்த்தகேசி ஆகிய பாத்திரங்ககளையேற்று , நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார் ."
பல்துறை ஆளுமையுடைய சிவக்கொழுந்து திருநாவுக்கரசு அவர்கள் (அரசு) தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை நல்லூரில் உள்ள சாதனா பாடசாலையிலும் ,திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்திலும் பின்னர் சென்யோன்ஸ் கல்லூரியிலும் கற்றுத்தேறியதன் பின்னர் சிற்பத்துறையில் பயிற்சியும் தேர்ச்சியும் பெறுவதற்காக இந்தியாவிற்கச் சென்றார் . அவ்வாறு அங்கு சென்றவர் தற்செயலாக இந்திய இராணுவ சேவையில் இணையும் வாய்ப்பினையும் பெற்று , தொடர்ந்து நான்கு வருடங்கள் அச்சேவையில் நீடித்திருந்தார் .
1947 ஆம் ஆண்டில் இலங்கைக்கு திரும்பிய திருநாவுக்கரசு அவர்கள் மலையகத்தில் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் திணைக்கள உதவி மேற்பார்வையாளராகவும் , பின்பு பிஸ்கால் உத்தியோகத்தவராகவும் கடமையாற்றினார் . இதற்குப் பின்னர் தனது சொந்தக் கிராமமான நல்லூருக்கு திரும்பி ,அங்கு புகைப்படக்கலையை கலைத்துவ நோக்கில் கற்றுத் தேறினார் . இதன் பின்னர் நாடகக்கலையில் கொண்டிருந்த அதீத ஈடுபாடு காரணமாக அத்துறையோடு தன்னை முழுமையாக இணைத்த வண்ணம் , முதலில் *சீன்ஸ்*சை மாற்றிமாற்றி இழுத்துவிடும் அரங்க உதவியாளராக கலைப்பணியை ஆற்றத் தொடங்கினார் . இதன் பின்னர் நாளோட்டத்தில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து , அதன் பின்னர் நாடகங்களை நெறியாள்கை செய்தும் , அவற்றை எழுதியும் உருவாக்கியும் Play writer ஆகத் தொழிற்பட்ட பின்னணியில் நாடகங்களை நெறியாள்கை செய்யவும் ஆரம்பித்திருந்தார் . இவர் தனது 50ஆண்டு கால கலைப்பணியை பூர்த்திசெய்துள்ளார் .
நாடகவுலகில் முடிசூடா மன்னன் என் வர்ணிக்கப்பட்ட கலையரசு சொர்ணலிங்கம் அவர்களோடு இணைந்திருந்து , அக்கலைஞரூடாகவே நாடகத்தை நெறியாள்கை செய்யும் முறைமை பற்றி நன்கு கற்று தேறியிருந்தார் . நல்லூரில் , அவர் நாடகத்துறை சார்ந்த தன் நண்பர்களுடன் இணைந்து வண்ணை கலைவாணர் நாடக மன்றத்தினை உருவாக்கி கானல் வரி, வீரமைந்தன் , வீரத்தாய் ,அன்னையின் ஆணை, தமிழன் கதை ,திப்பு சுல்தான் போன்ற நாடகங்களை அம்மன்றத்தினூடே பல்வேறு இடங்களில் மேடையேற்றியும் , நடித்தும் ,நெறியாள்கை செய்தும் , ஒப்பனை - அலங்காரம் செய்தும் ஒரு பிரமாண்டமான நாடகக் கலையுலகின் தோற்றப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் தடம்பதிக்கச் செய்திருந்தார் .
கவிஞரும் எழுத்தாளருமான அமரர் சொக்கனுடன் இணைந்து பாடசாலை நாடகங்கள் பலவற்றை நெறியாள்கை செய்தும் , மேடையேற்றியும் புகழ் பெற்றார் . சொக்கனின் தெய்வப்பாவை ,கவரி வீசிய காவலன் ,கூப்பிய கரங்கள் ,ஞானக்கவிஞன் ஆகிய நாடகங்களை
யாழ்இந்துக்கல்லூரியிலும்,பரமேஸ்வராக் கல்லூரியிலும் நெறியாள்கை செய்து , மேடையேற்றியிருந்தார் . மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் வீரசிவாஜி ,ஷைலொக் ,ஒதெல்லோ போன்ற நாடகங்களை நெறியாள்கை செய்து மேடையேற்றியிருந்தார் .
குழந்தை ம . சண்முகலிங்கம் எழுதிய *வையத்துள்தெய்வம் * A.V.M குகராஜாவினால் மேடைக்கெனச் சுருக்கப்பட்ட திரைப்படப் பிரதியானசொக்கனின் *நல்லை நகர் நாவலர்* நாடகத்தை நெறியாள்கை செய்து இயக்கிய அரிய சந்தர்பத்தினையும் பெற்றிருந்தார் . கலையரசு சொர்ணலிங்கத்தின் நெறியாள்கையிலே உருவான P.S இராமையாவின் தேரோட்டி மகன் எனும் நாடகத்திலே அர்ச்சுனன் சார்த்தகேசி ஆகிய பாத்திரங்ககளையேற்று , நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார் . வட இலங்கை நாடகமன்றத்தின் தயாரிப்பான வசன நாடகமான பூதத்தம்பி ,இளங்கோவின் துறவு,யாழிசையும் ஊழ்வினையும் ஆகிய நாடகங்களில் தனக்கேயுரித்தான பாணியில் வேடமேற்று நடித்துள்ளார் . மாதனைக் கலாமன்றத்தின் தயாரிப்புக்களான மயான காண்டம் ,சத்தியவான் சாவித்திரி ஆகிய இசை நாடகங்கள் ,மற்றும் வேல் ஆனந்தனின் சீதா பரிணயம் என்ற நாட்டிய நாடகம் ஆகியவற்றில் இவரது ஒப்பனைக் கலையூடாகவும்,வழிகாட்டலினூடாகவும் மேடையேற்றப்பட்டன. இவருடைய ஒப்பனைக் கலையின் தத்ரூபமான வெளிப்பாடுகளை A.C. தாசீசியஸ் , மெளனகுரு , சிதம்பரநாதன் ,குழந்தை மா சண்முகலிங்கம் ஆகியோரின் குறிப்பிட்ட நாடக வெளிப்பாடுகளினூடாகக் காணமுடிந்தது . இவை யாவற்றுக்கும் மேலாக சலனப்படத்துறையில் கடமையின் எல்லை என்ற படைப்பின் உதவி நெறியாளராகவும் , டாக்ஸி டிரைவர் , குத்துவிளக்கு ஆகியனவற்றில் நடிகராகவும் நடித்துள்ளார் .
இவரது சிற்பக்கலை கைவண்ணத்தை வடமாரட்சிய் லிலுள்ள கந்தமுருகேசனர் மற்றும் சதாவதனி கதிரவேற்பிள்ளை ஆகியோரது பிரதிமைகள் இன்றும் வெளிப்படுத்துகின்றன.
யாழ்ப்பாண நாடக அரங்ககல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .
கலா புவன் - லண்டன்
1983 களில் யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் நாடக அரங்க கல்லூரி தயாரித்து மேடை ஏற்றிய சங்காரம் நாடகக் காட்சிகள் சில
உடை ஒப்பனை காலம் சென்ற அரசையா
படங்கள் பேராசிரியர் சி.மௌனகுரு