Tsu 6செ. இளங்கோ

2004 டிசெம்பர் 26. ஆழியின் அலைக்கரங்கள் எல்லை கடந்து வந்து குடிமனைகளை வளைத்துச் சுருட்டியெடுத்துச் சென்ற நாள். எவரும் எண்ணிப் பார்த்திராத ஒரு கணப்பொழுதில், பொல்லாப் பேரலைகள் சப்பித்துப்பிய சக்கைகளாய் திக்கெட்டும் சிதறிப் போயினர் சனங்கள், உயிரோடும் உயிரற்றும். நினைக்க உயிர்க்குலை நடுங்கும், மெய் பதறும், வாயடைத்துப் போகும்.

 

அழுகை குரல்வைைளயில் உறைந்து போக, விழிகள் நிலைக்குத்தியிருக்க, பயமும் அதிர்ச்சியும் உடலைத் தூக்கிப்போட சருகுகளென வெறுந்தரையில் கிடந்தவர்களைத் தான் மறுநாள் கண்டோம். அலைக்கரங்களின் விரல்களுக்கிடையில் எதேச்சையாய்த் தப்பி நழுவி விழுந்த சனங்கள் அவர்கள்.

முந்தைய நாள் வரை அதே அலைகளின் மடியில் சீவியம் நடத்தியவர்கள்; அலை மீதேறிச் சமுத்திரத்தை உழுதவர்கள். அந்த வாழ்க்கை அவர்களை வலிமைப்படுத்தியிருந்தது. நித்தம் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த சமுத்திர வாழ்க்கை பயத்தை அகற்றியிருந்தது. இந்து சமுத்திரம் அவர்களின் தாய்வீடாயிருந்தது. தாய்வீட்டுச் சீர், தனம் வாழ்வை வளப்படுத்தியது. எல்லாம் ஒருநாளில் மாறிப்போனது.

அன்றைக்கு நான் யாழ்ப்பாணத்திலிருந்தேன். முல்லைத்தீவில் இருந்து எனது அரங்க நண்பர்கள் அனுப்பிய தகவலில் இரத்தம் உறைந்திருந்தது. தப்பிப்பிழைத்தோர் தங்க வைக்கப்பெற்றுள்ள இடங்களுக்குச் சென்று நிலையறியுமாறு அவர்களுக்குத் தகவல் அனுப்பிவிட்டு மறுநாள் முல்லைத்தீவிற்குப் புறப்பட்டேன்.

27ஆம் திகதி எம் அரங்காடிகள் முல்லைத்தீவில் களத்தில் இறங்கினர். சூழலையும் சனங்களின் நிலையையும் அவதானிப்பதே அவர்களின் முதற்பணி. இதுவொரு புதிய நிலைமை. அதனைக் கற்றுக்கொண்டுதான் அடுத்த காலடியை எடுத்து வைக்க வேண்டும். இந்தக் கள அவதானிப்பில், நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று ஆழ்ந்த துக்கத்திலும் பயத்திலும் உறைந்து போயிருந்த வளர்ந்தவர்கள், ஏக்கம் ததும்பும் விழிகளுடன் தனியனாக அங்குமிங்கம் திரிந்து கொண்டிருந்த சிறுவர்கள், அவற்றிற்கு இடையே சனங்களின் உணவு, மருத்துவம், ஆடைகள், தங்குமிடம் மற்றும் பதிவுகள் என்று அலைந்து கொண்டிருந்த தொண்டு நிறுவனத்தார் எனப் பலரும் கவனத்திற்கு வந்தனர்.

எமக்கு ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அந்த நிலைமையில் தொண்டர்கள் ஏற்கெனவே செய்துவந்த பணியில் நாமும் இணைந்து கொள்ளவேண்டியது தேவையாக இல்லை. அதில் பலர் இறங்கியிருந்தனர். ஆனால் சனங்களின் மனதுடன் பேசுவதற்கு எவருமிருக்கவில்லை . இறுகிய இதயங்களை நெகிழ்த்துவதும் ஆழ்ந்த துக்கம் வடிந்து செல்ல வழிசெய்வதும் பயத்தின் உறைவிலிருந்து வெளிவரச் செய்வதும் அவசரமும் அவசியமுமான பணிகளாகத் தெரிந்தது. கடும் பயம், நீடித்த துக்கம், அதிர்ச்சி போன்றவை குணப்படுத்தப்படாது போனால் உளநோயாக மாற்றமடையும் என்று உளவளத் துணையாளர்கள் எச்சரித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் உளவளத்துணை பற்றிக் கற்றிருக்கவில்லை. ஆனால் அரங்கைக் கற்றிருந்தோம். அரங்கு மனங்களுடன் பேசும் கலைவடிவம் என்பதும் அரங்கைத் தளைநீக்க சாதனமாகப் பயன்படுத்த முடியும் என்பதும் எமக்குத் தெரியும். உளவடுக்களைப் போக்கும் உள்ளுறைச் சக்தியை அரங்கு கொண்டிருப்பதைக் கடந்தகால அரங்கச் செயற்பாடுகள் வழியாக நாங்கள் கண்டுணர்ந்துள்ளோம். கலாநிதி க. சிதம்பரநாதன் அதனை ஒரு பயில்முறையாக மாற்றியிருந்தார். தமது அரங்க செயற்பாட்டுக் குழுவிற்குள் அதனைச் செயற்படுத்தியும் வந்துள்ளார். அவருடைய வழிப்படுத்தலில் அரங்கச் செயற்பாடுகள் வழியாக ஆற்றுப்படுத்தலைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்கினோம்.

1995 ஒக்டோபர் 30ஆம் நாள் நிகழ்ந்த யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து, தென்மராட்சியில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் மத்தியில் செய்து பார்த்த, ஆற்றுப்படுத்தலுக்கான அரங்கச் செயற்பாடுகள் பற்றிய பட்டறிவின் துணைக்கொண்டு, முல்லைத்தீவில் உள ஆற்றுப்படுத்தலுக்கான அரங்கைக் கட்டியெழுப்ப எதிர்பார்த்தேன்.

எதிர்பாராத திடீர் இடப்பெயர்வைச் சந்தித்து, திரும்பிச் சொந்த ஊருக்குப் போவோமா என்ற ஏக்கத்துடன் தென்மராட்சியில் தற்காலிக முகாம்களில் தங்கியிருந்த மக்களை நாடக அரங்கக் கல்லூரியின் அரங்கக் கலைஞர்கள் சிலர் சந்தித்திருந்தோம். ஏற்கெனவே கலாநிதி க. சிதம்பரநாதனின் வழிப்படுத்தலில் முகாம் அரங்கை மேற்கொண்ட அனுபவம் எமக்கு இருந்தது. முகாம்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான விழிப்பூட்டல் அரங்காக அது இருந்தது. ஆனால், இப்போதோ நாமும் இடம்பெயர்ந்த நிலையில் இருந்தோம். அந்த இடப்பெயர்வு எமக்கும் அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது. ஆற்றுகைக்கு ஊடாக எம்மை நாமே ஆற்றுப்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருந்தது. யா/ கோயிலாக்கண்டி அத.க பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த இடம்பெயர்ந்தோர் முகாமை இந்த ஆற்றுகைக்கான பரிசோதனைக் களமாகத் தெரிந்தெடுத்திருந்தோம். முதலில் கள நிலவரத்தை அவதானிப்பதும் அதற்கேற்பச் செயற்பாடுகளைக் கட்டியெடுப்புவதுமே எமது திட்டமாக இருந்தது.

ஒரு மாலை நேரம். முகாம் சூழல் இனம்புரியாத அமைதியில் மூழ்கிக் கிடந்தது. கட்டிடங்களுக்கு வெளியே சிறுவர்கள் சிலர் இருந்தனர். பெரும்பாலான வளர்ந்தவர்கள் வகுப்பறைகளுக்குள் படுத்தோ குந்தியோ இருந்தனர். வெகுசிலரே வெளியில் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கவனத்தை அதிகம் உறுத்தாத வண்ணம் அந்த இடத்தைச் சுற்றிப்பார்த்து உள்ள நிலையைக் கவனப்படுத்தினோம். கதைக்க முடிந்த சிலரின் கதைகளைக் கேட்டோம்.

இடம்பெயர்ந்த அதிர்ச்சி வளர்ந்தோரை உறைய வைத்திருந்தது. தாங்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து, விட்டுவிட்டு வந்திருந்த வீடு, வளவு, தோட்டந்துரவுகள், கால்நடைகள் மற்றும் இன்னோரன்னவை பற்றிய ஏக்கம் அவர்களது கண்களில் தெரிந்தது. பெரும்பாலும் வேறு போக்கிடமற்றவர்களும் அடித்தட்டு மக்களுமே இதுபோன்ற முகாம்களுக்கு வருவர். எனவே அவர்கள் கையில் எடுத்து வருவதற்கும் அதிகமேதும் இராது. முகாம்களில் கூட்டாகச் சமைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலைகளும் கிடையாது. அதிலும் ஒரு குழுவே ஈடுபட்டிருக்கும். கட்டிடத்தினுள் சன நெருக்கடியால் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதனால் ஒரேயிடத்திலேயே தொடர்ந்திருக்கும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கும். அந்த நேரங்களில் அவர்கள் திரும்பத் திரும்பத் தங்களது இழப்புக்கள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். இது அவர்களை ஆழ்ந்த துக்கத்துக்குள் இழுத்துக் கொண்டு போனது. தங்களது மனதுக்குள்ளேயே அவர்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார்கள். புறத்தே நிகழ்பவை எதுவும் அவர்களது கவனத்தைக் கவரவில்லை என்பது எமக்குப் புரிந்தது. எனவே அவர்களது உளப்பயணத்தை ஊடறுத்துப் புறச்சூழல் மீது கவனத்தைத் திருப்பத் தாக்கமான எதையாவது செய்ய வேண்டும் என்பது எமக்குப் புரிந்தது.

 சிறுவர்கள் விளையாட்டை மறந்திருந்தனர். தமது பெற்றோரின் அன்பை அரவணைப்பை பாதுகாப்பை இழந்திருந்தனர். பெற்றோர் தத்தமது கவலைகளுக்குள் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். அவர்களால் தமது பிள்ளைகளைக் கவனிக்க முடியவில்லை. இதனால் சிறுவர்கள் விட்டேத்தியாக அலைந்து கொண்டிருந்தனர். தவிரவும், அவர்கள் தமது விளையாட்டுத் தோழர்களை, விளையாட்டுப் பொருள்களை, தமக்கு மிகவும் நெருக்கமான சுற்றயலை இடப்பெயர்வினால் இழந்திருந்தனர். அவர்களுக்கு ஏற்படக்கூடிய உளத்தாக்கம் நீண்ட காலத்துக்கு அவர்களது நடத்தையைப் பாதிக்கக்கூடியது என்றும் முகாம் நிலைமை அவர்களை இயல்பான நடத்தைகளில் இருந்து இது பிறழ்வான நடத்தைகளை நோக்கி அவர்களை இட்டுச்செல்லக்கூடும் என்றும் உளவளத் துணையாளரான திரு. அருணகிரிநாதன் உடனான கலந்துரையாடல் மூலம் தெரிந்து கொண்டிருந்தோம்.

நாம் அவதானித்த மற்றும் உளவளத் துணையாளருடன் கலந்துரையாடிய விடயங்களின் அடிப்படையில் அரங்கச் செயற்பாடுகளைக் கட்டியெழுப்ப முற்பட்டோம். சிறுவர்களை மையப்படுத்தி அரங்காட்டத்தைத் திட்டமிட்டோம். “இழப்புக்கள் பொதுவானவை, கூட்டாக எதிர்கொள்வதன் மூலம் அவற்றைக் கடந்து செல்ல முடியும், சிறுவர்களுக்குப் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் மிகமிக அவசியம்” என்கிற எண்ணங்களை மனங்களில் ஆழமாகப் பதிப்பதன் மூலம் அவர்களை இயல்பான வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்துவது எமது அரங்கச் செயற்பாடுகளின் நோக்கமாகக் கொள்ளப்பட்டது.

அதன்படி, இரண்டாம் நாள் அங்கிருந்த சிறுவர்களுடன் விளையாடத் தொடங்கினோம். முதலில் சிறுவர்கள் அறிந்து வைத்துள்ள விளையாட்டுக்களில் தொடங்கிப் புதிய விளையாட்டுக்களை நோக்கி நகர்ந்தோம். படிப்படியாக விளையாட்டு அதிகமான சிறுவர்களை ஈர்த்தது. அவர்கள் இயல்பாகவே நிலைமைகளுக்குத் தக்கதாகத் தங்களை மாற்றக்கூடியவர்கள். எனவே விளையாட்டு அவர்களை ஈர்த்ததில் வியப்பில்லை. பெரும்பாலும் அவை மகிழ்வூட்டத் தக்கதும் உடலைத் தளர்த்தக் கூடியதும் உயிர்ப்பூட்டக் கூடியதுமான அரங்க விளையாட்டுக்களாக இருந்தன. அவற்றுள் சில பாரம்பரியக் கிராமிய விளையாட்டுக்களாகும். ஆடும் வீடும், பசுவும் புலியும், குலை குலையாய் முந்திரிக்காய் என்றவாறாக விளையாட்டுக்கள் வளர்ந்து சென்றன. மெல்ல மெல்லச் சிறுவர்கள் தமக்கே இயல்பான ஆரவாரத்துடன் விளையாட்டில் ஐக்கியமாயினர். சிறுவர்களின் உற்சாகமும் ஆரவாரமும் கட்டிடத்திற்குள் படுத்துக்கிடந்த வளர்ந்தோரை அசைத்தன. அவர்கள் மெதுவாக எழுந்து குந்தியிருந்து விளையாட்டைப் பார்க்கத் தொடங்கினர். இது எமக்குப் புதிய சிந்தனையைக் கிளர்த்தியது. விளையாட்டு சிறுவர்களை மாத்திரமன்றிப் பெரியோரது கவனத்தையும் கவரத்தக்கது மாத்திரமன்றி அவர்களை உறைநிலையில் இருந்து அசைக்கவும் கூடியது என்பதே அது, அடுத்தடுத்த நாள்களில் இது மேலும் வளர்ந்து சென்றது.

 மூன்றாம் நாள் பெரியோரின் புன்னகையும் சிறுவர்களின் ஆரவாரமும் எம்மை வரவேற்றன. பெரியோரின் இறுக்கம் தளர்ந்து அவர்களுடைய முகங்களில் சிரிப்பைக் கண்டது மகிழ்ச்சியைத் தந்தது. நாம் சரியான பாதையில் தான் பயணிக்கிறோம் என்பது உறுதிப்பட்டது. அன்று நாங்கள் விளையாட்டைத் தொடக்கிய போது, பெரியவர்கள் தாம் குந்தியிருந்த இடங்களை விட்டு விளையாட்டிடம் நோக்கி நகர்ந்து வந்தனர். சிறுவர்களைச் சுற்றி நின்றனர். சிலர் சிறுவர்களை உற்சாகப்படுத்தவும் செய்தனர். அன்று விளையாட்டுக்களுடன் கதை சொல்வதும், கதைகளை நிகழ்த்துவதும் நடந்தது. அன்றைய அரங்கச் செயற்பாடுகளின் நிறைவில் வளர்ந்தோருடன் கதைக்க முடிந்தது. அரங்கச் செயற்பாடுகளால் அவர்களுடைய மனதில் ஏற்பட்ட நிறைவைக் கண்டுகொள்ள முடிந்தது. தமது பிள்ளைகளின் குதூகலத்தால் மகிழ்ந்தவர்களாக அவர்கள் இருந்தனர். எமது செயற்பாடுகளால் தமது கவலைகளை மறந்திருக்க முடிந்தமை பற்றிக் குறிப்பட்டனர். அரங்கினால் அவர்களுடைய மன இறுக்கங்களைத் தளர்த்த முடிந்துள்ளமை நடைமுறை அனுபவங்களால் மெய்ப்பிக்கப்பட்டது. இனி அவர்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த வேண்டியது அவசியமாகும். அது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளச் செய்வதாகும்.

 மறுநாள், நாம் பெரியவர்களிடம் இருந்தே தொடங்கினோம். அவர்களது கதைகளைக் கேட்டோம். அவர்களுடைய மனதில் இருந்த ஆதங்கங்கங்களைக் காதுகொடுத்துக் கேட்டல் என்பதே இங்கு முக்கியமானது. தமது பிரச்சினைகளை மற்றவர்கள் பொறுமையாகக் கேட்கிறார்கள் என்ற எண்ணமே அவர்களை வலுவூட்டிவிடக் கூடியது. அவர்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வு அவர்களிடமே உள்ளது. இதற்கு எங்களுக்குத் தெரிந்த ஆலோசனைகளை முன்வைப்பது அதிகப்பிரசங்கித்தனமானது. அவர்களே தீர்வுகளைக் கண்டடையுமாறு தயார்ப்படுத்தி விடுவதே இங்கு அவசியமானது. அரங்க அனுபவம் எமக்குக் கற்றுத் தந்த உண்மை அதுதான். அன்று சிறுவர்களுடன் விளையாடத் தொடங்கிய போது பெரியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அன்றைய தினம் விளையாட்டைக் குறைத்துப் பாடல்களைப் பாடினோம். சிறுவர்கள் சேர்ந்து பாடியாட, வளர்ந்தவர்கள் கைகளைத் தட்டினார்கள். இந்தக் கைதட்டல் அவர்களை உறைநிலையில் இருந்து வேகமாகத் தளர்த்தக் கூடியது. பாத்திரப் படிமம் ஒன்றை அன்றைக்குக் களமிறக்கிப் பார்க்கும் எண்ணம் கொண்டிருந்தோம். ஆட்டம் களைகட்டிக் கொண்டிருந்த பொழுதில்

 உளநிலைத் தாக்கத்தால் பாதிப்புற்றவரைப் போன்ற ஒருவர் உள்ளே புகுந்தார். அழுதார், அரற்றினார். கூடியிருந்தோரிடத்தில் திடீர் அமைதிநிலை தோன்றியது. மீண்டும் அவர்கள் இறுக்க நிலைக்குப் போய்விடுவார்களோ என்ற அச்சமும் எமக்குச் சிறிது இருந்தது. அதனால் அந்தப் பாத்திரப் படிமத்துடன் நாம் மெல்ல உரையாடலைத் தொடக்கினோம். தான் யுத்தத்தால் இடம்பெயர்ந்தமை பற்றியும் தான் இழந்தவைகள் பற்றியும் அவர் கூறத்தொடங்கினார். எமது அவதானமெல்லாம் சுற்றியிருந்த இடம்பெயர்ந்த மக்கள் எப்படி எதிர்வினையாற்றப் போகிறார்கள் என்பதில் தான் குவிந்திருந்தது. நாம் ஆச்சரியப்படும் விதத்தில் அவர்களிற் சிலர் அவருக்கருகில் வந்து ஆறுதல் கூறத் தொடங்கினார்கள். தாமும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருப்பதாகவும் ஒரு நாள் சொந்த ஊருக்குத் திரும்பிப் போவோம் என்ற நம்பிக்கை தமக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் எடுத்துரைத்தனர். அதனால் அவர் நம்பிக்கையுடன் அவர்களை நோக்கினார். மக்கள் அவரை அரவணைத்த விதம் நம்பிக்கையளிப்பதாக இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த நிலை தோன்றிவிட்டது. 'இழப்புக்கள் பொதுவானவை' என்கிற எண்ணத்தை உருவாக்குவதே அது.

அதன் பிறகு, இந்த அரங்க அனுபவத்தைத் தென்மராட்சியின் பல்வேறு இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் நிலைமைக்கு ஏற்ப விரித்துச் சென்றோம். 'அவலநீக்க ஆற்றுப்படை அரங்கு' இப்படித்தான் தொடங்கியது. ஆனால், அப்போது அது அந்தப் பெயரைப் பெற்றிருக்கவில்லை. அது ஆற்றுப்படை அரங்கிற்கான முழுமையைப் பெற ஆழிப் பேரிடர் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

 இந்து சமுத்திரப் பேரலைகள் ஓங்கியறைந்ததால் மு/ வித்தியானந்தாக் கல்லூரி திரும்பிய பக்கமெல்லாம் உணர்வுகளற்றுச் சடங்களாகிப் போன மனிதர்களால் நிரம்பியிருந்தது. பேரலை இன்னும் அவர்களின் இதயத்தில் மோதிக் கொண்டிருந்தமை வெறிச்சோடிய கண்களில் புலப்பட்டது. அழுகை நெஞ்சில் உறைந்து போயிருந்தது. உண்ணவும் உடுக்கவும் திராணியற்று சூனியத்தை வெறித்தபடி கிடந்த அவர்களுக்குப் பக்கத்தில் போய் மெதுவாய் அமர்ந்தோம். தனித்தும் இருவராகவும் எம்மவர் அவர்களுடன் இருந்தனர். பக்கத்தில் எவரோ வந்தமர்கிற அருட்டுணர்வும் இல்லாத உள்மன யாத்திரையில் சிலர் இருந்தனர். அவர்களின் கரம் பற்றியும் தோள்களை அரவணைத்தும் விழிகளால் ஆதரவளித்தும் அவர்கள் சொல்வதைக் கேட்க முனைந்தோம். பேச விரும்பாதவர்களை நெருக்காது தொடுகையால் ஆறுதலளிக்க முற்பட்டோம். நாங்கள் தொட்டவுடனேயே சிலர் வெடித்து அழத்தொடங்கினர். அவர்கள் அழுது தீர்க்கும் வரை பொறுத்திருந்தோம். வேறு சிலர் தங்கள் துயர்சுமந்த கதையைக் கூறத்தொடங்கி, பின் அது அரட்டலாகி அழுகையாக மாறியது. இன்னும் சிலர் தமது குமுறலைக் கொட்டித் தீர்த்தனர். எந்த நிலைமையிலும் அவர்கள் கூறுவதைக் கேட்பதும் அவர்கள் அழமுற்படும் போது அதற்கு இடமளித்து இதமளிப்பதும் தொடுகையால் உதவியளிப்பதும் மாத்திரமே எமது செயற்பாடாக இருக்க வேண்டும் என்று எமது அரங்கச் செயலாளிகளுக்குத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. அன்றைய செயற்பாட்டின் நிறைவில் அது பற்றி நாங்கள் கலந்துரையாடினோம். அரங்கச் செயலாளிகள் மக்களுடைய துயரங்களைத் தாம் சுமந்து வந்திருந்தனர். அதிலிருந்து அவர்களுக்கு ஆறுதலளிக்க இந்தக் கலந்துரையாடல் மிகமிக அவசியமாக இருந்தது. தவிரவும், அவர்கள் கொண்டுவந்த கதைகளை எழுத்து வடிவில் ஆவணப்படுத்தவும் முனைந்தோம்.

முதல்நாள் அவதானிப்பிலேயே எனக்குத் தெரிந்து போயிற்று, ஆழிப்பேரலைப் பேரிடர் கொண்டு வந்த நிலைமைகள் யாழ்ப்பாண இடப்பெயர்வின் போதான நிலைமைகளை விடப் பலவிதங்களில் வேறுபட்டது என்று.

1. யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது மக்கள் பாரிய உயிரிழப்புக்களைச் சந்தித்திருக்கவில்லை. ஆனால் ஆழிப்பேரலை கொத்துக் கொத்தாகச் சனங்களைக்காவுகொண்டிருந்தது. அதனால் ஏற்பட்டிருந்த அதிர்ச்சியும் உள உறைவும் பாரதூரமானவை.

2. இடப்பெயர்வு உளத்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும் எந்த நிலைமையிலும் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகின்ற உள்மன விருப்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஆழிப் பேரிடர் கடல் மீது கடும் பயத்தைத் தோற்றுவித்திருந்தது.

3. இடப்பெயர்வு விளைவித்த சமூகத் தாக்கத்தை விட, சுனாமி ஏற்படுத்திய சமூகத் தாக்கம்

நீண்ட காலப் பாதிப்பைக் கொண்டுவரக் கூடியது. உதாரணமாகப் பெற்றோரை இழந்த பிள்ளைகள் அதிலும் பெண் பிள்ளைகள் சந்திக்கக் கூடிய வாழ்வியல் நெருக்கடிகள்

அச்சுறுத்துவனவாய் இருந்தன. 4. பேரிடரால் கணவனை இழந்த மனைவியோ மனைவியை இழந்த கணவனோ மறுமணம்

செய்து கொண்டால் அவர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கக் கூடிய வாழ்வியல் நெருக்கடிகள் உருவாகக் கூடிய சூழல் புலப்பட்டது. 5. ஆழிப் பேரிடரினால் ஏற்பட்டுள்ள உளமுறிவு சமூகத்தின் கூட்டு மனநிலையில் தெறிப்பை

உருவாக்கக் கூடிய நிலைமை எதிர்பார்க்கப்பட்டது. இப்போது எமக்கான சவால் மிகப் பெரியதாக மாறியது. எங்களது முன்னைய உள ஆற்றுப்படுத்தற் செயற்பாடுகளை அடியொற்றி புதிய நிலைமைகளையும் உள்வாங்கிக் கொண்டு நோக்கத்தைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ள முனைந்தோம். அதன்படி அரங்கச் செயற்றிட்டத்தை வகுத்துக் கொள்ளத் தீர்மானித்தோம். 1. ஆழிப்பேரலை அனர்த்தத்தால் விளைந்த இழப்புக்கள் எல்லோருக்கும் பொதுவானது என்கிற

எண்ணத்தை ஏற்படுத்துதல் 2. இறுகிப்போயிருந்த இதயங்களை நெகிழ்த்தி அவர்களை அழச் செய்தல். அழுகை ஒரு மிகப் பெரிய வடிகால் என்பதை எமது பண்பாட்டினடியாகப் புரிந்து கொண்டிருந்தோம்.

3. கடல் மீதான பயத்தைப் போக்கி மீண்டும் கடலில் இறங்குவதற்கான மனநிலையை

உருவாக்குதல்.

4. சிறுவர்களுக்கு மகிழ்வளிப்பிற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தலும் அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பை வழங்குதலும்.

 

1995 நிலவரத்தைப் போலவே இங்கும் சிறுவர்களே வளர்ந்தோரின் பூட்டிய மனக் கதவுகளைத் திறப்பதற்குரிய திறவுகோல் என்று கருதினோம். எனவே அவர்களது இயல்பூக்கமான விளையாட்டு இறுக்கமான நிலையைத் தளர்த்த உதவக்கூடும். என்றாலும் அனர்த்தம் நிகழ்ந்து மூன்றே நாள் தான் ஆகியிருந்த பொழுதில், அவலம் சுவைத்த மனநிலை விரவிக் கிடந்ததொரு சூழலில் விளையாட்டும் அதற்கு ஊடாக மேற்கிளம்பக் கூடிய ஆரவாரமும் மனக்கசப்பை உருவாக்குமோ என்ற பயமும் எழுந்தது. எனவே, அந்த மக்கள் மத்தியில் வலிந்து விளையாட்டைத் தொடக்க முடியாது என்பது எமக்குப் புரிந்தது. ஆனால் உறைநிலையில் இருந்து அவர்களை மீட்க அது தேவையாகவும் இருந்தது. ஆதலால், அங்கிருந்த சிறுவர்கள் தாங்களாகவே விளையாட்டைத் தொடக்கும் தருணத்திற்காகக் காத்திருக்கத் தொடங்கினோம்.

 நாங்கள் இரு அணிகளானோம். ஒரு அணி வளர்ந்தோரைத் தேடிச்சென்று அவர்களுடன் தொடர்பாட முற்பட்டது. இன்னொரு அணி சிறுவர்களைச் சுற்றத் தொடங்கியது. இதில் முக்கியமானதொரு விடயம் உள்ளது. அதாவது, இந்த அரங்க அணி கட்டிளமைப் பருவத்தோரையும் ஆசிரியர்கள் சிலரையும் உள்ளடக்கியிருந்தது தான். இந்த ஆற்றுப்படுத்தலில் ஆறுதலளிக்கும் தொடுகையும் அரவணைப்பும் முக்கிய பங்கை வகித்தன. எனவே பெண்களை ஆற்றுப்படுத்துவதற்குப் பெண் ஆற்றுகையாளர்கள் அவசியம் என்பதை நாங்கள் உணர்ந்திரு வலயக் கல்விப் பணிமனையின் அனுசரணையுடன் விருப்பமுள்ள ஆசிரியர்கள் சிலரைச் சிறிய பயிற்சியுடன் இணைத்துக் கொள்ள நேர்ந்தது. இந்த அணியை நிதானமாகவும் கவனமாகவும் வழிப்படுத்த வேண்டியிருந்தது. பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் பழக்கத்தை அவர்களுக்குள் கொண்டுவர வேண்டியிருந்தது. பொதுவாகவே ஆசிரியர்கள் பிள்ளைகளைக் கதைக்க விடாது தாங்களே கதைத்துக் கொண்டிருக்கும் பழக்கமுடையவர்கள். அந்தப் பழக்கத்தை மூட்டைகட்டி வைத்து விட்டு இரு காதுகளாலும் மனதாலும் கேட்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளவது அவ்வளவு இலேசானதல்ல. அதேபோன்றே கட்டிளமைப் பருவத்தோர் பகிடியும் சிரிப்பும் ஆரவாரமுமாக வலம் வருபவர்கள். அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு, அமைதியாகவும் சாந்தமாகவும் பேசவும் நடந்து கொள்ளவும் வேண்டியிருந்தது. ஆனால், அரங்கப் பயிற்சிக்கு ஊடாக வந்த இளைஞர்கள் என்பதால்

அவர்களிடத்தில் இது இயல்பாகவே வந்தது. இந்த அணி பொறுப்புடன் நடந்து கொள்ளும் விதத்தில் தான் இந்தச் செயற்பாட்டின் வெற்றி தங்கியுள்ளது.

 நாங்கள் காத்திருந்த தருணம் வந்துவிட்டது. மாபிள் அடிப்பது போன்று கற்களை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் நம்மவர் சிலர் சேர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு கட்டத்தில் விளையாட்டைத் தமது கரங்களுக்குக் கொண்டு வந்தார்கள். அந்த சிறுவர்கள் கூடத் தொடங்கினர். அவர்களையும் சேர்த்துக் கொண்டு விளையாடக் கூடிய விளையாட்டுக்கு மாறவேண்டியிருந்தது. அந்த இடத்தில் சிறியதொரு ஆரவாரப் புயல் மையம் கொள்ள ஆரம்பித்தது. பெருங்காய மணத்தைப் போலவே சிறுவர்களின் விளையாட்டு ஆரவாரத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அது கட்டுப்படுத்தக் கட்டுப்படுத்தக் கட்டுடைத்துப் பாயும் தன்மையுடையது. ஆனால், ஆரவாரத்திற்குரிய காலம் இன்னும் கனிந்து வரவில்லை. ஆதலால் ஒரேநேரத்தில் வேறுவேறு இடங்களில் எம்மவர் விளையாட்டைத் தொடக்கினர். சிறுவர்கள் ஒரேயிடத்தில் குவிவதற்குப் பதிலாகப் பரந்து செல்லத் தொடங்கினர்.

 சமநேரத்தில் நாங்கள் பாடசாலையின் வகுப்பறைக் கட்டிடங்களினுள்ளும் ஆளோடியிடங்களிலும் மைதானத்திலும் மரங்களின் கீழும் கிடந்த சனங்களுடன் கதைக்கத் தொடங்கியிருந்தோம். மனதைக் கொட்டியழவும் தமது குமுறல்களை வார்த்தைகளாக்கவும் நாங்கள் தொடர்ந்து அவர்களைத் தூண்டிக் கொண்டிருந்தோம். கனிவான பார்வை, மென்மையான சில சொற்கள், ஆறுதலளிக்கும் தொடுகை, அவர்கள் சொல்வதை உண்மையாகவே காது கொடுத்துக் கேட்கிறோம் என்கிற நம்பிக்கை, நம்பத் தகுந்த உறவைக் கட்டியெழுப்புதல் என்பனவே அந்தத் தூண்டல்கள்.

 ஒரு பொழுதில், வெளியில் நிகழ்ந்த விளையாட்டு ஆரவாரம் உள்ளேயிருந்தவர்களின் காதுகளை எட்டத் தொடங்கியிருந்தது. நாங்கள் அவர்களுடைய முகக்குறிப்பைப் பார்த்தபடி இருந்தோம். அந்த ஆரவாரம் வலுவடைய வலுவடைய அதன் அதிர்வலைகள் உள்ளேயிருந்தவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பத் தொடங்கியதைக் கண்டோம். படுக்கையில் மூடிய கண்களைத் திறந்தோர் சிலர், எழுந்து குந்திருந்தோர் சிலர், எழுந்து சென்று எட்டிப்பார்க்கத் தொடங்கியோர் சிலர். “அதுகள் பாவங்கள், தாய் தகப்பனைப் பறிகுடுத்திட்டு நிக்கிதுகள்”, “ஏங்கிப்போய் திரிஞ்சதுகள், கொஞ்சம் சந்தோசமா இருக்கட்டும்” என்று சிறுவர்களுக்காய் இரங்கியோராய்ச் சிலர். இவற்றிடையே எதிர்பாராதது ஒன்றும் நடந்தது. “என்ர பிள்ளை இருந்திருந்தால் அதுகும் விளையாடியிருக்குமே” என்று சிலர் அழுது அதிச்சியூட்டினர். விளையாட்டு இப்படியொரு விளைவையும் கொண்டுவரக்கூடும் என்று நாம் எதிர்பார்த்திருக்காத போதும், அவர்கள் தம் மன இறுக்கம் தளர்ந்து அழுவதற்கு அது வடிகாலாகியது என்பது ஆறுதலளிக்கும் விடயமாகியது.

 விளையாட்டு சாதகமான நிலையை உருவாக்கியிருந்தது. நாம் பயந்ததற்கு மாறாக, சனங்கள் தங்களது மன ஆறுலுக்கான ஒன்றாக அதனைப் பார்த்தனர். எனவே இப்போது விளையாட்டை மறைவான இடத்தில் இருந்து சனங்கள் நிறைந்து கிடந்த நாற்சார் மண்டபத்திற்கு மத்தியில் இருந்த வெளிக்குக் கொண்டுவந்தோம். 'சங்கு வெத்திலை சருகு வெத்திலை' விளையாட்டு களைகட்டத் தொடங்கியது. அது பாடலரங்கை நோக்கி நகர்ந்தது. பிறகு ஆடலாகியது. சிறுவர்கள் கைதட்டலுடன் பாடவும் அதற்கேற்ப உடலசைவுகளைச் செய்யவும் முற்பட்டனர். பெரியவர்கள் அவர்களைச் சுற்றித் திரளத் தொடங்கினர். சிலர் அங்கிருந்த அரைச்சுவரில் ஏறியிருந்து பார்த்தனர். சிறுவர்களுக்கு மகிவளிக்கக் கூடியதும் நகையுணர்வைத் தரக்கூடியதுமான சிறிய கதைகளை நிகழ்த்துவதை நோக்கி அந்த அரங்கை வளர்த்தோம். ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஆழிப்பேரலைக்குப் பின் முதற் தடவையாக வளர்ந்தோரின் முகங்களில் சிரிப்பையும் மலர்ச்சியையும் கண்டோம். இந்த அரங்கை மேம்படுத்த இப்போது மேள தாளங்களை இணைக்கத் தொடங்கினோம். அதன் தாளலயத்தில் துயரத்தின் சாயல் தென்படாத வண்ணம் பார்த்துக் கொண்டோம். வேடமுகமணிந்த கரிய உருவம் ஒன்று அவர்கள் மத்தியில் பிரவேசித்தது. ஆரம்பத்தில் அது சிறுவர்களைச் சிறிது அச்சப்படுத்தினாலும் அவ்வுருவம் அவர்களைச் சவாலுக்கு அழைத்த விதத்தால் தூண்டப்பட்டு, அதனுடன் மோத முற்பட்டனர். அந்த உருவம் யார்? என்ன? என்பது இங்கு முக்கியமானதல்ல. அவர்களை அச்சுறுத்துவது எதுவானாலும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது? என்பதே முதன்மையானது. அன்று நிலவி வந்த யுத்த சூழல் சிறுவர்களிடத்தில் வன்முறைக் குணத்தை விதைத்திருந்தது. அன்று அந்தக் குணம் வெளியே எட்டிப் பார்த்தது. அந்த உருவத்தை அவர்கள் ஒருகை பார்த்து விட்டார்கள். அவர்களிடம் இருந்து பாத்திரமேற்ற நடிகனைப் பாதுகாப்பது பெரும் பிரயத்தனமாகியது. அது போலவே விலங்குகளாகப் பாவனை செய்தவர்களின் வால்களைப் பிடித்துத் தொங்கி அவற்றைப் பிடுங்கி விட்டார்கள். இது இன்னொரு படிப்பினையைத் தந்தது. யுத்தம் மாத்திரமன்றிச் சுனாமியும் பிள்ளைகளிடத்தில் மன அழுத்தத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அன்பு, ஆதரவற்ற மனநிலையும் தொடர் இழப்புக்களும் பிள்ளைகளிடத்தில் விரக்தி நிலையை உருவாக்கிவிடக் கூடியவை. இது சரிவரக் கையாளப்படாது விட்டால் ஒரு வன்முறைச் சமூகத்தை அது உருவாக்கி விடும் என்பதே அந்தப் படிப்பினையாகும். காலம், அந்தச் சிந்தனை சரியானது என்பதை இன்று உணர்த்தியிருக்கிறது.

 இப்போது ஆற்றுப்படுத்தல் அரங்கிற்கான ஒரு பருமட்டான சட்டகத்தை எங்களால் உருவாக்க முடிந்திருந்தது.

1. துயர்சுமந்த கதைகளைக் காது கொடுத்து அக்கறையுடன் கேட்டல்.

2. சிறுவர்களுடன் அரங்க விளையாட்டுக்களை ஆரம்பித்து அதனைப் பெரியவர்களை நோக்கி நகர்த்திச் செல்லல்

3.பாடல்களும் கைதட்டல்களும் ஆறுதலான அசைவுகளும்

4. சிறுவர்களுக்குத் தக்கதான கதைகளை அவர்களையும் பங்குபற்ற வைத்து நிகழ்த்துதல்.

5. ஆழிப்பேரலை அனர்த்தத்துடன் தொடர்புபடுத்தக் கூடிய காட்சிப் படிமங்களுடன் சிறுவர்களையும் வளர்ந்தோரையும் ஊடாட விடுதல்.

வித்தியானந்தாக் கல்லூரியை விட்டு எமது அரங்க அணி மு/ வற்றாப்பளை ம.வி, மு/ தண்ணீரூற்று அ.த.க பாடசாலை, மு/ கைவேலி கணேசா வித்தியாலயம் என்று நகர்ந்த போது குறைந்த நேரத்தில் இந்த அரங்கைச் செய்வதைச் சாத்தியப்படுத்தும் பொறிமுறையொன்றை உருவாக்கிக் கொண்டோம்.

 சமநேரத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பிரதேசத்தில் அரங்க செயற்பாட்டுக் குழுவினராலும் யாழ் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் மாணவர்களாலும் ஆற்றுப்படுத்தல் அரங்கு முன்னெடுக்கப்பட்டது. அதன் சாரத்தை மனங்கொண்டு பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் இதற்கு 'அவலநீக்க ஆற்றுப்படை அரங்கு' எனப் பெயரிட்டார்.

தொடர்ந்து வந்த ஓராண்டு அவலநீக்க ஆற்றுப்படை அரங்கிற்குரியதாக இருந்தது. பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் தற்காலிக குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டனர். ஆழிப் பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர். இயல்பு வாழ்க்கை நோக்கித் திரும்பும் பாதையில் இருப்பிடம், உணவு, குடிநீர், கழிவகற்றல், கற்றல் மனநிலைக்குத் திரும்புதல், சித்தியின் கொடுமைக்கு ஆளாதல், சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பல பிரச்சினைகள் குறுக்கிட்டன. அவலநீக்க ஆற்றுப்படை அரங்கு இப்போது அவை பற்றியும் பேசத் தொடங்கியிருந்தது.

பாடசாலை, தற்காலிக தங்ககங்கள் என்கிற இருதளங்களில் இந்த அரங்கைக் கொண்டு செல்ல வேண்டி தேவை ஏற்பட்டது. யுனிசெவ், GIZ, சிறுவர் பாதுகாப்பு நிதியம் ஆகிய சர்வதேச அரச சார்பற்ற நிறவனங்களின் நிதி அனுசரணையுடன் முல்லைத்தீவிலும் வடமராட்சி கிழக்கிலும் மேற்குறிப்பிட்ட இருதளங்களிலும் இந்த அரங்கு வளர்ந்து சென்றது. 2007ஆம் ஆண்டு வரை அவலநீக்க ஆற்றுப்படை அரங்கு உயிர்ப்புடன் இருந்தது.

133306594 303634604386625 691190042874444492 nசெ. இளங்கோ

அரங்கவியலார்

(24-12-2020)

 

கட்டுரைகள்

 சபா. ஜெயராசா அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்....

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click