குழந்தை ம.சண்முகலிங்கம்                                                                                                                                                                                                                                                                                                                          Kereka 1மேற்குலகச் சிந்தனையின் தொட்டில் எனக் கிரேக்கம் கருதப் படுகிறது. கிரேக்கத்தின் அதென்ஸ் என்ற சிறிய நகர அரசில் அறிவியல் வீரியமும் ஆன்மீக ஞானமும் ஊற்றெடுத்தன. அது நவீன மேற்குலகின் சிந்தனையின் ஆரம்பமாக அமைந்தது. மெய்யறிவும் நியாயமும் அழகுக்கவர்ச்சியும் கிரேக்க சிந்தனையின் அடிநாதமாக அமைந்தன.

இந்த வகையில் கிரேக்கர் புதிய உலகினைப் பிறப்பித்தனர். மகத்தான இலக்கியங்களும் கலைகளும், மனித மனத்தின் மாபெரும் அறிவின் வெளிப்பாடுகள் என்பதைக் கிரேக்கமும் உறுதி செய்தது. கவிதை, காவியம், கலைகள், மெய்யியல், அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் கிரேக்கம் உச்சங்களைத் தொட்டுக் கலங்கரை விளக்கமாக நின்றது. அவலச்சுவை நாடக மேடையின் நான்கு ஆசான்களில் மூவர் கிரேக்கர் மற்றவர் ஷேக்ஸ்பியர், மகிழ்நெறி நாடக மேதைகள் இருவரில் ஒருவர் கிரேக்கர். மற்றவர் ஷேக்ஸ்பியர். இவ்வாறு முதலாவது மேற்குலகத்தவர் எனக் கிரேக்கர் கருதப்படுகின்றனர், மேற்குலகின் உணர்வை, நவீன உணர்வைக் கண்டு பிடித்தவர்கள் கிரேக்கர். எனவே புராதன கிரேக்கம் எனக் கூறப்பட்ட போதிலும் கிரேக்கரது இடம், நவீன உலகிலேயே உள்ளது. இவர்கள் தான் மேலைத்தேயப் புலத்தின் முதலாவது புத்திஜீவிகள்.

காரண காரியம் என்பவை கொண்டு மேற்றள நியாயத்தைக் கண்டு கொள்வதை அவர்கள் ஏற்றுக் கொண்ட போதிலும் உள்ளூனோர் வால் உணர்ந்தறியும் ஆன்மீக மெய்யறிவுக்கும் அவர்கள் முதன்மை கொடுத்தனர், விண்டிட முடியாத ஆன்மீக அனுபவங்களைத் தமது அவலச்சுவை நாடகங்கள் மூலம் விண்டிட முனைந்தனர். புறக்கண்களாலும் பௌதிக உலகின் நியாயங்களாலும் நிறுவ முடியாதவற்றைத் தமது அறிவைக் கொண்டு கண்டு கொண்டனர். இந்த வகையில் கீழைத்தேய சிந்தனை மரபையும் அவர்களில் காண முடிகிறது.

வாழ்வு என்பது எவ்வளவு கசப்பானது என்பதை உணர்ந்த வேளையில், அது எவ்வளவு இனிமையானது என்பதையும் கண்டனர். இதனால் தான் ஆனந்தமும் அருந்துயரும், களி மகிழ்வும் அவலமும் கிரேக்கர் தம் இலக்கியத்தில் தனித் தனியே, ஆயினும் அருகருகே நின்றன. அவை ஒன்றுடன் ஒன்று முரண்படுவதில்லை. சோர்வும் நரைமனமும் உடையவரால் மகிழவும் முடியாது, வருந்தவும் முடியாது எனக் கண்டனர். கிரேக்கர் துன்பங் கண்டு துண்ணெனத் துளங்கிச் சோர்ந்தவரல்லர். வாழ்வின் இனிமை கண்டு உடலின தேவையறிந்து ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தி மகிழ்ந்தவர்கள்; மனித உடலின் அழகை நயந்து சிற்பங்கள் வடித்தவர்கள். விளையாட்டு வீரர்களைக் கொண்டாடி மகிழ்ந்தவர்கள். ஆயினும் அதேவேளையில் வாழ்வு என்பது ''ஒரு நிழலின் கனவு'' எனக்கண்டு கொள்ளவும் தவறாதவர்கள். இருப்பினும் மிக இருண்ட கணங்களிலும் அவர்கள் வாழ்வைச் சுவைக்கத் தவறவில்லை. அவலத்தைச் சுவைத்தனர். " அவலச்சுவை" பிறந்தது. வாழ்வெனும் சோதிப்பிளம்பு வான் முட்ட உயர்ந்து உலகளந்து நின்று சுவாலிப்பதை கிரேக்கத்தின் கவிதைகள் யாவும் - அவலச்சுவைக் கவிதைகள் கூடக்காட்டி நிற்கும். உலகம் அழகியதோர் இடம் எனக் கண்டதால்தான் அவர்களால் மகிழ்நெறி நாடகங்களைப் புனைய முடிந்தது.

ஏனைய புராதன நாகரிகங்களில் மக்களது சிந்தனையில் பூசகர்களும் ராஜகுருக்கள்மாரும் செல்வாக்குச் செலுத்தி நின்றது போல, கிரேக்க நாகரிகத்தில் நடை பெறவில்லை . கிரேக்கர் சட்டத்துக்கே கட்டுப் பட்டனர். தாமே சுயமாகச் சிந்தித்து முடிவுகளுக்கு வந்தனர்; அனைத்தையும் ஆய்வு செய்து முடிவுக்கு வந்தனர். ''உன்னை நீ அறிவாய் " என்பதும் "எதுவும் அளவுக்கு அதிகமாக வேண்டாம்' என்பதும் கிரேக்க ஆலயத்தில் பொறிக்கப்பட்டிருந்த மகுட வாக்கியங்களாகும். அவர்கள் அறிவைக் காதலித்தனர். உள்ளுணர்வைப் பூசித்தனர். உடலையும் உள்ளத்தையும் நேசித்தனர்.

உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையிலான முடிவற்ற போராட்டம் கிரேக்கர் தம் கலையில் ஒரு முடிவைக் கண்டது - சிறப்பாகச் சிற்பத்திலும் குறிப்பாக அவலச் சுவை மகிழ்நெறி நாடகங்களிலும். இதனால் இவர்களை ஆன்மீக பொருள் முதல்வாதிகள் எனக் கருதமுடியும். கிரேக்க கலை அறிவியல் சார்ந்த கலையாக அமைந்தது. அதாவது தெளிவாகச் சிந்திக்கின்ற மனிதனின் கலையாக இருந்தது. எனவே அக் கலையில் எளிமை காணப்பட்டது.

''உண்மையான மகிழ்நெறி என்பது, ஒரு தேசிய இனத்தின் மடமைகளையும், குறைபாடுகளையும் பேசுகின்ற சித்திரம் " என்பார் வோல்டயர். இது கிரேக்கத்தின் பழைய மகிழ்நெறியையும் நன்கு விளக்கி நிற்கிறது. அதன்சின் வாழ்வு முழுவதும் சாதாரண மக்களின் அக்கறைகள் யாவும் அவர்களால் பேசப்பட்டன.

கிரேக்கத்தின் விகட அரங்கம், பொங்கும் வீரியத்தின் வளம் கொழிக்கும் சக்தியை வெளியேற்றும் ஒரு மார்க்கமாக இருந்தது. அது கையாண்ட கதைப் பொருட்களும், முறைமைகளும் வரம்பின்றி இருந்தன. விழுமிய விஷயங்களைக் கூறும் அவலச்சுவையும், முட்டாள்தனங்களைக் காட்டும் மகிழ்நெறியும் அருகருகே நின்று வளர்ந்தன. ஒன்று மறைய மற்றையதும் மறைந்தது. நாடகத்தின் விதிகளை நாடகத்தின் போசகர்களே நிர்ணயிக்கின்றனர் என்ற கூற்று கிரேக்கத்துக்கும் பொருந்தி நின்றது. உலகினைத் தெளிவாகவும் அதே வேளையில் அழகாகவும் தரிசித்தனர் கிரேக்கர். அயராத அரும்பாடு இல்லாது தெளிவமைதியும், வீறமைதியும் கொண்ட நிலையில் நின்று அவர்கள் தமது அவலச்சுவைகளைப் படைத்தனர். இதனால் அழகே உண்மை , உண்மையே அழகு என்னும் எண்ணம் எம்மிடையே ஏற்படுமாறு செய்கின்றனர். விளக்கமுடியாத ஒன்றை அவர்தம் கவிதையின் வல்லமை எதிர்கொள்கின்றது. சுதந்திர உணர்வோடு இருந்த கிரேக்கர் மனித வாழ்வு பற்றி ஆழமாகச் சிந்தித்தனர். அவ்வாறு சிந்தித்தவிடத்து அனைத்திலும் அநீதி உறைந்திருப்பதை உணர்ந்தனர். மாற்றமுடியாப் பிழை ஒன்று உலகில் இருக்கிறது என்பதைக் கண்ட புலவன் மனித வாழ்வில் உண்மையாகவே இருக்கின்ற அழகைத் தரிசித்தான் . ஆராய்வுணர்வு கவிதையுணர்வைச் சந்தித்த போது அவலச்சுவை பிறந்தது.

அவலச்சுவை கவிஞர்களுக்கே உரியது; அவர்களால் மட்டுமே ஞாயிற்றின் ஒளி படர்ந்த மலை முகடுகளில் நடந்து வாழ்வின் பொருந்தா இசையிடை இருந்து தெளிவானதோர் ஒலி நரம்பை மீட்டமுடியும். கிரேக்க அவலச்சுவை நாடகாசிரியர் அதனைச் செய்தனர். அவலச்சுவை என்பது கவிதையின் இரசவாதத்தால், துயரம் என்பது இறும்பூதுநிலைக்குப் பண்பு மாற்றம் செய்யப்படுவது அன்றி வேறு எதுவும் இல்லை. அவலச்சுவை தரும் மகிழ்வின் மர்மத்தை விபரிப்பது கடினம். கொடுமை, இரத்த வெறி என்பவற்றோடு அதற்கு எந்தவித உறவுமில்லை. துயரத்தின் ஆழம் என்போம்; ஆனால் அவலச்சுவையின் உச்சம் என்போம்.

அவலச் சுவையை பரிவும், பயமும் என்றார் அரிஸ்ரோட்டில். பரிவு, பயம் என்ற உணர்வு நிலையினூடே , தேங்கிக் கிடக்கும் மனவெழுச்சி உணர்வு வெளியேற்றப்பட்டு உள்ளம் துாய்மைப்படும் என்பார். இதனை இணக்கம், சமரசம் என்றார் ஹெகல். அதாவது வாழ்வின் தற்காலிகமான இசைகேடு , நிரந்தர இசைவு நிலைக்கு மாற்றப்படுதல் எனப் பொருள் கொள்ளலாம். மரணத்தின் முன்னிலையில் வாழும் மன உறுதியைத் தருவது எனவும் கொள்ளலாம். இந்த உறுதி அவலச்சுவையில் மீள வலியுறுத்தப்படுவதன் மூலம் வற்றாத உறுதியாக மாறுகிறது.

 

எனவே பரிவு, பயம், இணக்கம், இறும்பூது - இவையே “அவல மகிழ்வைத் தரும் மூலகங்களாகும். ஆகவே அவலச்சுவை என்பது துன்பத்தின் இசைகேட்டுக்கு அப்பாலானதாகவும், மேலானதாகவும் உள்ளது எனக் கொள்ளமுடியும்.

மேலைப்புல இலக்கிய வரலாறு இருமுறை அவலச்சவையின் உன்னத காலத்தைக் கண்டது.

1. பெருகிலிசின் அதன்ஸ் நாடு

2. எலிசபெத்தின் இங்கிலாந்து

இரண்டுமே பொற்காலங்கள். அவை தோல்வியின் இருளின் காலமல்ல. இறுமாப்பின் எக்காளத்தின் காலம். வெற்றியும் வீரப் பெருமிதமும்தான் இரு நாடுகளிலும் அவலச்சுவையைப் பிறப்பித்தது. கடல் அவையின் பொங்கு துறை மீது மிதக்கும் போது இரண்டு மன நிலை எழும்,

1. ஆனந்தப் பரவசம்

2. ஏக்கத் தவிப்பு

இரண்டாவது மனநிலையில் அவலச்சுவை பிறக்காது. ஆனந்தத் திளைப்பில் வாழ்வின் அவலங்களைத் தேடும் போதுதான் அவலச் சுவை பிறக்கும். மனித வாழ்வின் முக்கியத்துவத்தையும், உயர் சிறப்பையும் அவலச்சுவை நழுவவிடாது. வாழ்வின் அடிப்படைச் சிறப்பு எங்கு இருக்கிறதோ அங்குதான் அவலச்சுவை பிறக்கிறது. மனிதனிடம் துயருறும் வல்லமை உண்டு. அப்பண்பு தான் அவனை ஊர்க்குருவியை விட வல்லமையும், பயனும் உள்ளவனாக்குகிறது. வேதனையில் கிடக்கும் ஒரு ஆன்மாவின் அந்தஸ்தை விட மேலான ஒன்றில்லை. “இங்கு நானும், கவலைகளும் வீற்றிருக்கிறோம். இங்கு தான் எனது சிம்மாசனம் உள்ளது. வந்து அதற்குத் தலைவணங்குமாறு மன்னர்களை அழையுங்கள். இந்தவாறு, பெருமிதத்தோடும் பெருமையோடும் துயருறக்கூடிய ஒரு ஆன்மாவின் பாடுகள் தான் அவலச்சுவை. "நெஞ்சுறுதி கொண்ட குருதி வீனே சிந்தப்பட்டது என, என்றுமே நான் கேட்காதிருப்பேனாக? அது தலைமுறை தலைமுறையாக வீறாந்த சவால் ஒன்றினை விடுத்து நிற்கிறது” என்றார் சேர் வோல்டர் ஸ்கொட். (Sir Walter Scott)

 

கட்டுரைகள்

 சபா. ஜெயராசா அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்....

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click