Skærmbillede 759தை.தனராஜ்

 மனிதன் ஒரு சமூகப்பிராணி, சமூகத்தில் வெவ்வேறுபட்ட நடத்தைக் கோலங் களைக் கொண்ட மனிதர்கள் உள்ளனர். பாடசாலையில் அல்லது பல்கலைக் கழகத்தில் கல்வியை முடித்துக் கொண்டு யதார்த்த உலகில் காலடி எடுத்து வைக்கும் மாணவன் முற்றி லும் வேறுபட்ட வித்தியாசமானதொரு உலகத்தையே காண்கிறான். பாட சாலையும் பல்கலைகழகமும் சிரிப்பும் மகிழ்ச்சியும் உல்லாசமும் நட்பும் நிறைந்த உலகம்.

போட்டியும் , பொறாமையும் வஞ்சினையும், கழுத் தறுப்பும் பகைமையும் அந்த உலகத் தில் பரிச்சயப்பட்ட மாணவன் யதார்த்த உலகில் காலடி எடுத்த வைக்கும்போது புதிய சூழ்நிலைகளுக்கும் அறைகூவல் களுக்கும் வெற்றிகரமாக முகம் கொடுக்க ஆயத்தப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதனை செய்ய வேண்டிய பொறுப்பும் பணியும் ஆசிரியர்களுக் குரியவைகளாகும்.

விடய ஆய்வு

கேசவன் எனது சக மாணவன். ஆரம்பவகுப்புகளிலிருந்து உயர்தரம் வரை நாம் ஒன்றாகவே படித்தோம். கேசவன் மிகவும் வித்தியாசமான - மானவன். நாங்கள் அவனை "சுப்பர் மூளைக்காரன்” என்றுதான் கூப்பிடுவோம். அவனும் அதைப்பற்றி கூச்சப்படுவதில்லை . நாங்கள் அவனை அப்படிக் கூப்பிடும்போது பெருமைப்படுகிறானோ என்று கூட நான் சில சந்தர்ப்பங்களில் நினைத்ததுண்டு.

கணித பாடத்தில் சூத்திரங்களை நாங்கள் விளங்கிக் கொள்வதற்கு முன்னரே அவன் ஆசிரியருடன் அச்சூத்திரங்கள் பற்றி விவாதிக்கத் தொடங்கிவிடுவான். இலக்கியம் படிக்கும்போது அவன் சேக்ஸ்பியரையும் கம்பனையும் ஒப்பிட்டுக் காட்டுவான். தேசப்படத்தில் அவனுக்கும் தெரியாத நகரமோ, ஏரியோ,ஆறோ கிடையாது. எல்லாப் பாடங்களிலும் முதற்பரிசு அவனுக்குத்தான். எங்களுக்கெல்லாம் அவன்மீது கொஞ்சம் பொறாமை. இருந்தாலும் அவன் எங்களது வகுப்பில் இருப்பது எமக்கு பெருமையாக இருந்தது.

ஆனால் கேசவனால் பிறருடன் ஒத்துப்போவது மட்டும் கொஞ்சம் சிரமமாக இருந்தது. விளையாட்டு மைதானத்தில் சின்ன விடயத்துக்கும் கோபித்துக்கொண்டு இடைநடுவில் வெளியேறி விடுவான். பெண் பிள்ளைகளின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.

உயர்தர வகுப்புக்குப் பின்னர் நாங்கள் வெவ்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று விட்டோம். கால ஓட்டத்தில் நான் கேசவனை மறந்துவிட்டேன். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருமுறை தொழில் நிமித்தமாக எனது பாடசாலை அமைந்திருந்த ஊருக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.

எல்லாமே மாறிப் போயிருந்தன. புதிய முகங்கள், புதிய கட்டிடங்கள் பழைய சப்பாத்துக்கடை மாத்திரம் அப்படியே இருந்தது. அதில் நுழைந்து நோட்டம் விட்டபோது ”கவுண்டரில் அமர்ந்திருந்தவரின் முகம் மிகவும் பரிச்சயமாக இருந்தது. அடையாளம் தெரிந்தபோது அதிர்ந்து போய் விட்டேன். கேசவன் இவன் இங்கு என்ன செய்கிறான்? அவன் வெளிநாட்டு பல்கலைக்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராகவோ அல்லது நாசா விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானியாகவோ பணிபுரிந்து கொண்டிருப்பான் என நான் எண்ணியிருந்தேன்.

அவனுக்கு என்ன நடந்தது? பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு ஒன்றுமில்லை என வீட்டுக்கு வந்துவிட்டானாம். பல்கலைக்கழகம் முட்டாள்கள் நிறைந்த இடம் என்று வாய்க்கு வந்தவாறு திட்டினான். அவனது முகம் விகாரமாகி இருந்தது. கடைசிவரை என் முகத்தைப் பார்த்து அவன் கதைக்கவில்லை. என்னைப் பற்றியோ எமது பழைய நண்பர்களைப்பற்றியோ அவன் எதுவுமே கேட்கவில்லை. தேநீர் அருந்துவதற்கு அழைத்த போதும் மறுத்துவிட்டான். ”சென்று வருகிறேன்” எனக்கூறிப் புறப்பட்டபோது எவ்வித சலனமுமின்றி தலையாட்டினான்.

கனத்த மனத்துடன் வெளியேறியபோது அவனது அதீத திறமைகள், பரிசு பெற்ற காட்சிகள் அலை அலையாக நினைவுக்கு வந்தன. சப்பாத்துக் கடையில் வேலை செய்வதில் எவ்வித தரக்குறைவும் இல்லைத்தான் .... ஆனால் கேசவனின் அதீத திறமைகள் .... அபரிமிதமான நினைவாற்றல்...?

* (Robert A. Baron Psychology, Prentice- Hall, 2003)

இந்த விடய ஆய்விலிருந்து நாம் எதனைக் கற்றுக் கொள்ள முடிகிறது? வாழ்க்கையில் வெற்றியடைவதற்கோ அல்லது உயர்நிலை அடைவதற்கோ ஒருவரது உயர்நிலை நுண்ணறிவு மாத்திரம் போதுமானதல்ல என்பதை நாம் கேசவனது கதையிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. கேசவனது சக மாணவர்கள் கேசவன் வாழ்க்கையில் மிகவும் உயர்நிலை அடைவான் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை ஏன்?.

மனிதன் ஒரு சமூகப்பிராணி, சமூகத்தில் வெவ்வேறுபட்ட நடத்தைக் கோலங்களைக் கொண்ட மனிதர்கள் உள்ளனர். பாடசாலையில் அல்லது பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்துக் கொண்டு யதார்த்த உலகில் காலடி எடுத்து வைக்கும் மாணவன் முற்றிலும் வேறுபட்ட வித்தியாசமானதொரு உலகத்தையே காண்கிறான். பாடசாலையும் பல்கலைகழகமும் சிரிப்பும் மகிழ்ச்சியும் உல்லாசமும் நட்பும் நிறைந்த உலகம், போட்டியும், பொறாமையும் வஞ்சினையும், கழுத்தறுப்பும் பகைமையும் அந்த உலகத்தில் பரிச். சயப்பட்ட மாணவன் யதார்த்த உலகில் காலடி எடுத்த வைக்கும்போது புதிய சூழ்நிலைகளுக்கும் அறைகூவல்களுக்கும் வெற்றிகரமாக முகம் கொடுக்க ஆயத்தப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதனை செய்ய வேண்டிய பொறுப்பும் பணியும் ஆசிரியர்களுக்குரியவைகளாகும். இதனைக் செவ்வனே செய்வதற்கு மனவெழுச்சிசார் நுண்ண றிவு (Emotional Intelligence) பற்றிய அறிவும் விளக்கமும் ஆசிரியர்களுக்கு அவசியமானது.

மனவெழுச்சிசார் நுண்ணறிவு என்றால் என்ன?

மனவெழுச்சிசார் நுண்ணறிவு என்பது மனித வாழ்வின் மனவெழுச்சிப் பரிமாணத்துடன் தொடர்புடைய ஆற்றல்களின் அல்லது பண்புக் கூறுகளின் தொகுதி எனலாம். தனது சொந்த மனவெழுச்சியினையும் பிறரது மனவெழுச்சிகளையும் அடையாளம் கண்டு முகாமை செய்தல், இலக்குகளை அடைவதற்கான சுயதூண்டல், ஆளிடைத் தொடர்புகளை வெற்றிகரமாகக் கையாளுதல் போன்றவை மனவெழுச்சிசார் நுண்ணறிவுடன் தொடர்புடைய விடயங்களாகும்.

அறிகைசாரா நுண்ணறிவு {NonCognitive) பற்றி உளவியலாளர் 1920 களிலேயே கூறியுள்ளனர். ஆரம்ப கால உளவியலாளரான தோண்டைக் சமூக நுண்ண றிவு (Social intelligence) பற்றி குறிப்பிட்டுள்ளார். எனினும் இத்தகைய நுண்ணறிவு பற்றிய ஆர்வம் 1980 களுக்குப்பின்னரே முனைப்புப் பெற்றது. 1983 இல் ஹோவார்ட் கார்ட்ன ர் (Howard Gardner) பன்முக நுண்ண றிவு (Multiple- intelligence) பற்றிய தனது கோட்பாட்டினை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மனவெழுச்சிசார் நுண்ணறிவு என்னும் பதம் 1990 இல் சலோவி மற்றும் மேயரி (P.Salovey and J.Mayer) னால் முதன் முதலில் வெளியிடப்பட்டது. எனினும் இவ்வெண்ணக்கரு டெனியல் கோல்மன் (Daniel goleman) அவர்களது Emotional' Intelligence (1995), Working with Emotional Intelligence. (1998) ஆகிய இரு நூல்களின் பிரசுரத்துக்குப் பின்னர் பிரபல்யம் அடைந்தது. மனவெழுச்சிசார் நுண்ணறிவு பற்றி கோல்மன் என்ன கூறுகிறார் எனப் பார்க்கலாம், கோல்மனின் கருத்துப்படி மனவெழுச்சிசார் நுண்ணறிவு என்பது ஐந்து பகுதிகள் கொண்டது.

1. தனது சொந்த மனவெழுச்சிகளைத் தெரிந்து கொள்ளுதல்

மனவெழுச்சிகள் என்பவை பொதுவாக வலுமிக்க எதிர்வினைகளாகும். சிலர் மாத்திரமே தமது மனவெழுச்சிகள் பற்றிய பிரக்ஞை கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் தமது மனவெழுச்சிகள் பற்றிய விளக்கத்தைக் கொண்டிருப்பதில்லை. தமது மனவெழுச்சிகள் பற்றி அறிந்து கொள்ள முடியாதவர் - களினால் தீர்மானங்கள் மேற்கொள்ள முடிவதில்லை. அத்துடன் அவர்களால் தமது சொந்த மனவெழுச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்தவும் முடிவதில்லை . இதன் காரணமாக அவர்களது ஆளிடைத் தொடர்புகளில் சிக்கல்கள் தோன்றுகின்றன. தமது உணர்வு நிலைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளாமையினால் ஆட்களுடனான தமது எதிர்வினைகளின் தாக்கங்களையும் அவர்களால் புரிந்து கொள்ள

முடிவதில்லை . வகுப்பறைகளில் மாணவர்கள் கற்றொழுங்கை சீர்குவைக்கும்போது அல்லது ஆசிரியர் கூறும் பணிகளைச் செய்து வராதபோது ஆசிரியர் தனது கட்டுப்பாட்டை இழக்கும் சந்தர்ப்பத்தை நாம் அவதானித்திருக். கிறோம். மாணவர்கள் ஆசிரியர் - களால் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. ஆசிரியர் தான் மிதமிஞ்சிய ஆத்திரத்துக்கு உட்பட்டுள்ளதை உணர்ந்திருந்தால் இந்நிலைமைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

கொழும்பில் சில இடங்களில் உள்ள விளம்பரப்பலகைகளில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. "ஆத்திரம் ஏற்படும் போது பிள்ளைகளை அடிக்காதீர்கள். ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்கள் " இது வேடிக்கையானதாக தோன்றினாலும் தனது மனவெழுச்சியை அடையாளம் காணவும் அதனை முகாமை செய்யவும் இத்தகைய உத்தி உதவக் கூடும்.

2. தனது சொந்த மனவெழுச்சிகளை முகாமை செய்தல்

குழந்தைகள் சிறு விடயங்களுக்கெல்லாம் கூட அழுது அடம் பிடிப்பதை நாம் காண்கிறோம். தமது மனவெழுச்சிகளை அடக்கி ஆளும் திறன்கள் குழந்தைகளிடம் இருப்பதில்லை. அதனை நாம் பெரிதுபடுத்துவதுமில்லை. 'குழந்தைதானே' என விட்டு விடுகிறோம். ஆனால் வளர்ந்தோர் அடக்க வேண்டிய உணர்ச்சிகளை வெளிக்காட்டும்போது நாம் "சிறு பிள்ளை போல நடந்து கொள்கிறார்" என விமர்சிக்கிறோம். எனவே எமது மனவெழுச்சிகள் முகாமை செய்யப்பட வேண்டும். அவ்வாறு முகாமை செய்யப்படாவிட்டால் அவர்களது சமூக உறவுகளில் சிக்கல்கள் ஏற்படும், அவர்கள் மற்றவர்களால் நிராகரிக்கப்படுவார்கள். ஒரு தொழிலை பெற்றுக் கொள்ளுதல், அதனை தக்கவைத்துக் கொள்ளுதல், பதவி உயர்வுகளைப் பெறுதல் போன்றவைகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடலாம். பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அழைப்புகள் கிடைக்காமல் போய்விடலாம்.

3. சுய ஊக்கல்

இலக்குகளை அடைவதற்கு சுய ஊக்கல் மிகவும் அவசியமானது.

"ஒரு விடயத்தில் வெற்றி பெற இரண்டு வீத ஆர்வம் போதுமானது; ஆனால் 98 வீதம் வியர்வை சிந்துதல் அவசியமானது" என புகழ்பெற்ற விஞ்ஞானி தோமஸ் எடிசன் குறிப்பிட்டுள்ளார். சுய ஊக்கம் உள்ளவர்களே தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல்மீண்டும் மீண்டும் முயன்று வெற்றி பெறுகிறார்கள். எனவே சுய ஊக்கல் என்பது மனவெழுச்சி சார் நுண்ணறிவின் மிகவும் முக்கியமான அம்சமாகும். நான் ஆரம்ப வகுப்புகளில் கற்ற காலங்களில் பாடப்புத்தகத்தில் றொபர்ட் புறூஸ் என்னும் அரசனது கதை இருந்தது, அவன் அறுமுறை பகை அரசனோடு சண்டையிட்டு தோல்வியடைந்து காட்டில் ஒரு குடிசையில் சோர்ந்து கிடந்தபோது ஒரு சிலந்தியானது எத்தனை முறை தவறி விழுந்தாலும் திரும்பவும் திரும்பவும் முயன்று தனது வலைப் பின்னுவதைப் பார்த்தான். இதனால் சுய ஊக்கல் பெற்ற அவன் ஏழாவது முறை முழு ஊக்கத்துடன் சண்டையிட்டு தனது அரசுரிமையைக் கைப்பற்றினான். இக்கதை என்னில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய காரணத்தினால் நான் அதனை ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரும் நினைவில் வைத்திருக்கிறேன்,

நமது காலத்தில் விக்டர் ஹெட்டிகொட, ஏ.வை.எஸ், ஞானம் போன்ற தொழிலதிபர்களும் சனத் ஜயசூரிய. சுசந்திகா போன்ற விளையாட்டு வீரர்களும் ஆர்.பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் தமது துறைகளில் மிக உன்னத நிலையை அடைய ஏனைய காரணிகளை விட சுய ஊக்கியே அவர்களுக்கு ஊக்கியாக தொழிற்பட்டிருக்கலாம்.

4. பிறரது மனவெழுச்சிகளை அடையாம் காணலும் அவர்கள் மீது செல்வாக்கு செலுத்துதலும்.

குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒருவர் என்ன வகை - யான மனவெழுச்சிகளுக்கு ஆட்பட்டுள்ளார் என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற விதத்தில் அவருடனான தனது உறவு நிலையை பொருத்தமாக்கிக் கொள்ளல் மனவெழுச்சிசார் நுண்ணறிவின் முக்கிய பரிமாண மாகும் என கோல்மன் குறிப்பிடுகிறார். நடைமுறையில் இது முக்கியமானதொரு திறனாகும். பிறரது உணர்வுநிலையைச் "சரியாக" புரிந்து கொள்ளக் கூடியவர்களே அவர்களைக் கொண்டு தமது இலக்குகளை அடையக் கூடியவர்களாக அல்லது தமது தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியவர்களாக உள்ளனர். மாணவர்களின் உணர்வுநிலையைப் புரிந்து கொள்ளாமல் ஆசிரியரால் தனது இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது. தாயின் அல்லது தந்தையின் உணர்வு நிலையைப் புரிந்து கொண்டு தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பிள்ளைகளை நாம் பார்த்திருக்கிறோம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயற்படுதல் மனவெழுச்சிசார் நுண்ணறிவுத் திறனாகும்.

 அதேபோல் தாம் விரும்பும் மனவெழுச்சிகளை பிறர் மீது உருவாக்கும் வல்லமையும் மனவெழுச்சிசார் நுண்ணறிவு சார்ந்ததாகும். வெற்றிகரமான அரசியல்வாதிகள் பலர் இத்தகைய திறன் படைத்தவர்களாக உள்ளனர். இத்தகைய நுண்ணறிவுத்திறனுக்குச் சிறந்த உதாரணத்தை நாம் தலைசிறந்த நாடகாசிரியரான சேக்ஸ்பியரின் 'ஜுலியஸ் சீசர்' நாடகத்தில் காணலாம், ஜுலியஸ் சீசரை தான் கொலை செய்ததை புரூட்டஸ் மக்கள் முன்னிலையில் நியாயப்படுத்தி அவர்களைத் தன்பக்கம் ஈர்த்துக் கொள்கிறான், மக்களின் அதீத மனவெழுச்சி நிலையை சீசரின் உண்மை நண்பரான மார்க் அந்தனி தனது நுண்ணறிவுத் திறத்தால் புரூட்டஸ்க்கு எதிராக மாற்றிவிடுகிறான். மனவெழுச்சிசார் நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒருவரால் "தான் விரும்பும் உணர்வுநிலை"க்கு பிறரை ஆட்படுத்த முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

5. உறவு நிலைகளைக் கையாளுதல்

பிறருடன் எமக்குள்ள உறவுநிலைகளை எமக்குச் சாதகமாகவும் உடன்பாடாகவும் கையாளுதலும் மனவெழுச்சி சார் நுண்ணறிவின் ஓர் அம்சமாகும். சகலருடனும் நட் புப் பாராட்டி சமூகத்தில் நிறைய நண்பர்களைப் பெற்று வெற்றிகரமாக வாழ்பவர்களைப் பார்த்திருக்கிறோம். அதேநேரத்தில் எல்லோருடனும் "சண்டைபிடித்துக்" கொண்டு எப்போதும் ஒதுங்கியிருக்கும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர். பாடசாலைகளிலும் வகுப்பறைகளிலும் இந்த நிலை காணப்படுகிறது. நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கேசவன் சிறந்த மூளைசாலியாக இருந்தபோதும் வாழ்க்கையில் வெற்றியடையாமைக்கு பிறருடனான தனது உறவுநிலைகளைக் கவனமாகக் கையாளமுடியாமையே பிரதான காரணமாகும். ஒருவருக்கொருவர் மனவெழுச்சி சார் நுண்ணறிவில் காணப்படும் வேறுபாடுகளே இந் நிலைமைகளுக்குக் காரணம் என கோல்மன் குறிப்பிடுகிறார்.

பாடங்களில் உயர்புள்ளிகள் பெறுவதற்கு இத்தகைய நுண்ணறிவு அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள இந்த நுண்ணறிவுத் திறன் மிகவும் முக்கியமானதாகும். பிறரது அபிப்பிராயங்களுக்கு மதிப்பளித்தல், தன்னிச். சையாக முடிவுகளை எடுக்காதிருத்தல், குழுவில் ஓர் உறுப்பினராக (Team player) செயற்படுதல், பிறரது மனம் புண்படாது தனது கருத்துக்களை எடுத்துணர்தல், பிரச்சினைத் தீர்வில் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்தல் போன்ற சீரிய சமூகத்திறன்களைக் கொண்டிருக்கும் ஒருவர் பிறருடனான தனது ஆளிடைத் தொடர்புகளைக் கையாளும் திறன் கொண்டவராக இருப்பார்.

முடிவுரை

அண்மைக்காலமாக மனவெழுச்சிசார் நுண்ணறிவு பற்றிய ஆய்வுகள் முக்கியம் பெற்றுள்ளன. எனினும் நுண்ணறிவு பற்றிய உறுதியான விஞ்ஞானபூர்வமான சான்றுகள் முன் வைக்கப்பட்டுள்ளது போல கோல்மனின் மனவெழுச்சி சார் நுண்ணறிவு பற்றிய கருத்துநிலைகளுக்கு உறுதியான ஆய்வு ஆதாரங்கள் இன்னும் தீர்க்கமாக முன்வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது, ஆனால் இதற்காக மனவெழுச்சிசார் நுண்ணறிவு என ஒன்றில்லை எனக் கூறிவிட முடியாது. ஓர் ஆள் தனது வாழ்வில் அடையும் வெற்றிக்கு அவரது நுண்ணறிவின் வகிபங்கு 20% மட்டுமே என கூறப்படுகிறது. அப்படியானால் மிகுதி 80% க்கு மனவெழுச்சி சார் நுண்ணறிவு அடிப்படையாக இருக்குமா?

இவ்வினாவுக்குத் தெளிவான விடையை உளவியலாளர்கள் தருவதற்கு இன்னும் காலம் எடுக்கலாம். ஆனால் நுண்ணறிவு பற்றிய அண்மைக்கால ஆய்வுகள் அனைத்தும் நுண்ணறிவின் பன்முகத்தன்மையைச் சுட்டிநிற்கின்றன. சமூக நுண்ணறிவு, ஆளிடை நுண்ணறிவு, பன்முக நுண்ணறிவு போன்ற எண்ணக்கருக்கள் நுண்ணறிவு பல்வேறு கூறுகளைக் கொண்டிருப்பதை நிறுவுவதோடு இவை இன்று முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. ஆசிரியர் தனது வகுப்பறைச் செயன்முறைகளை

மேலும் விளைதிறன் கொண்டதாக மாற்றிக் கொள்வதற்கு இக் கருத்துக்கள் பற்றிய அறிவும் விளக்கும் பெரிதும் துணையாக இருக்கும். மனவெழுச்சி சார் நுண்ணறிவு பற்றிய நிறைய விடயங்களை www. eiconsortiwm.org (The Consortium for Research on Emotional Intelligence in Organizations) 6760 ROND இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

 

 

 

 

 

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click