50303804 2295152000759360 1676800071816970240 nசண்முகலிங்கம் தேவமுகுந்தன்

நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு ஈவு என்று உளவியிலினால் குறிப்பிடுகின்றனர். நுண்அறிவு ஈவு என்பது ஒருவரின் வயதிற்கேற்ப உளம் சிறப்பாக மூளை எவ்வாறு செயற்படுகின்றது என்பது பற்றிய நுட்பம் 7 திறன் ஆகும்.

1912ம் ஆண்டு ஜேர்மானிய உளவியலாளரான வில்லியம் ஸ்டெர்ன் என்பவரால் பயன்படுத்தப்பட்டது. Intelligence Quotientஎன்ற சொற்பதத்தின் சுருக்கமே IQ ஆகும்.
நுண் அறிவு என்பதற்காக முதலில் வரைவிலக்கணத்தை முன் வைத்தவர்Binet and Simon  (1905) நியாயப்படுத்தவும், கருத்து கொள்ளவும் காரணம் காணும் ஆற்றலே நுண் மதி என்றார். (To sudye well, To Compare Hand Well, To Reason Well)

Theman(1916) என்னும் உளவியலாளர் "அருவ நிலைப்பட்ட சிந்தனையை விளங்கும் ஆற்றல் அல்லது கருத்து நிலைப்பட்ட சிந்தனை காவிச் செல்லல் "என்றார்.

நுண்மதி சோதனைகளின் தந்தை அல்பிரட்பீனே  Mathematical - Logical Intelligence என்பவர் புரிந்து கொள்ளல் புதுமை புனைதல், தொடங்கிய செயலைத் தொடர்ந்து முடித்தல் மற்றும் தனது நடத்தையில் உள்ள குறைபாடுகளை உணர்தல் போன்ற கூறுகள் நுண்ணறிவுகளில் அடங்கியுள்ளது என்கிறார்.
சராசரியாக நுண் அறிவு என்பது 70 - 130 வரை ஆகும். இதில் 90 - 110 மதிப்பெண்கள் பெற்றவர்கள் சராசரி நுண் அறிவு கொண்டவர்கள் என்றும் 70 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றவர்கள் விஷேட தேவை உள்ளவர் இச் சோதனை கல்வி நிலையங்களில் மாணவர்களின் நுண்ணறிவு மட்டத்தினை அறிந்து கொள்ளவும், தொழிற்சாலைகளில் பணியாளர்களின் நுண் அறிவு மட்டத்தினை அறியவும் பொதுப்பரீட்சைகளிலும் இச் சோதனை பயன்படுகிறது. வேலைகளுக்கு மக்களை அமர்த்தும் போது இச் சோதனை பயன்படுத்தப்படுகின்றது. மாறி வருகின்ற சமூக, பொருளாதார, அரசியல், கல்வி மாற்றங்களில் பல நுண்மதியின் தேவைப்பாடு அதிகரித்து வருகின்றமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நுண்மதிக் கோட்பாடுகள் வுhநழசநைள Theories Of Intelligence

 Francis Galton

 Spearman’s Two Theory

 Group Factor Theory

 Guilford’s Multifactorial Theory Of Intelligence

 Jean Piager’s (1920-1980) Cognitive Development Theory

 Howard Gardner Multiple Intelligence Theory

 Daniel Golman – Emotional Intelligence Theory போன்ற கோட்பாடுகளாகும்.


பின்வரும் நுண்மதி சோதனைகள் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

 Binet - Simon Intelligence Test

 Wechsler Intelligence Test

 Culture Fair Intelligence Test

Multiple Intelligence பன்முக நுண்மதிக் கோட்பாடு

1985ம் ஆண்டு அமெரிக்க உளவியல் பேராசிரியரான Howard Gardner இக் கோட்பாட்டை முன்மொழிந்தார். இவர்தான் மிகச்சரியாக நுண்மதி என்பதற்கான வரைவிலக்கணத்தை முன்வைத்தவர். நுண்மதி என்பது சிக்கல் ஒன்றினை தீர்ப்பதற்கான கொள்ளளவினை கொண்டிருத்தல் அல்லது பல கலாச்சார தன்மையில் ஒரு உற்பத்தியினை பல்வேறு வகையான நுண்மதிகள் உண்டு. மேலும் இக் கோட்பாடு மனித மூளை ழுச மனம் முழுமையான ஒரு பொருள் அல்ல ஆனால் அதனால் பல்வேறு வகையான, சுதந்திரமான தொகுதிகளை கொண்டுள்ளது.

Gardner 08 வகையான நுண்மதிகளை குறிப்பிடுகின்றார்.

 Linguistic Intelligence - - சொல்ஃமொழியியல் சார்ந்த நுண்மதி
 Musical - Rhythmic Intelligence- இசை சார்ந்த நுண்மதி
 Mathematical - Logical Intelligence - தர்க்க கணிதம் சார்ந்த நுண்மதி
 Spatial - Intelligence - இடைவெளி or இடைவெளி சார்ந்த நுண்மதி
 Bodily - Kinesthetic Intelligence  - உடல் இயக்கம் சார்ந்த நுண்மதி
 Interpersonal Intelligence  - ஆளிடை நுண்மதி
 Intra Persional - ஆளகம் சார்ந்த நுண்மதி
 Naturaltstic Intelligence- இயற்கை சார்ந்த நுண்மதி

 

Linguistic Intelligence - சொல்ஃமொழியியல் சார்ந்த நுண்மதி.

எழுதுதல், வாசித்தல், பேசுதல் போன்ற ஆற்றல்களைக் கொண்டிருப்பார்கள், சொற்களுடன் பேசுவதன் மூலம், எழுதுவதன் மூலம் கற்றல்களை வெளிக் கொணரும் தன்மை. பொதுவாக மக்கள் உயர் தரமான வாய் மொழி சார்ந்த நுண்மதி சொற்கள் மூலமூம், மொழி மூலம் இவர்களது கற்றல்களைக் கண்டு கொள்ளலாம். இந்த வகையான நுண்மதி திறன் கொண்டவர்கள் வாசிப்பதில், எழுதுவதில், கதை சொல்வதில் மனனம் செய்வதில், தமது ஆற்றலை வெளிக் காட்டுவார்கள். இவர்களின் கற்கும் மனப்பாங்கு விரும்பும் விதமும் இதே மாதிரியாகவே இருக்கும் அதாவது வாசித்தல், குறிப்பெடுத்தல், விரிவுரையை கவனித்தல், மற்றும் கலந்துரையாடல், விவாதம் என்றவாறாக இவர்களது கற்றல் அமையும்.
இவர்கள் ஒரு விடயத்தை விளக்கம் செய்வதிலும் கற்பிப்பதிலும், பேச்சாற்றலிலும் திறன் கொண்டவர்களாக விளங்குவார். இவர்களிடம் அன்னிய மொழிகளை கற்பதிலும் இலகு தன்மையும், உயர்ந்த சொற்களை ஞாபகம் வைத்திருக்கும் ஆற்றலும் புரிந்து கொள்வதிலும் கட்டமைப்புக்களை தொடரியலாக விளங்கும் திறனையும் கொண்டிருப்பார்.
வகுப்பறையில் இப்படியான மாணவர்களை ஆசிரியர் அடையாளம் காணும் உளவியல் அறிவும் ஆசிரியர் சார் அறிவும் அவசியம் தேவைப்படுகின்றது. எனவே அவர்களை அவர்களது ஆற்றலுக்கும் திறனுக்கும் ஏற்ற வகையில் மாணவர்களை வழிப்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும். எனவே இவர்களை பின்வரும் தொழிலை நோக்கி ஆசிரியர் வழிப்படுத்த வேண்டும். எழுத்தாளர், சட்டத்தரணி, பத்திரிகையாளர், கவிஞர், ஆசிரியர் போன்றவை ஆகும்.


வகுப்பறை பிரயோகம்

மாணவர்களின் மொழியில் ஆற்றலைஃதிறனை விரிவுரை, பெரிய சிறியளவிலான கலந்துரையாடல் எழுத்து வேலைகள், புத்தக வேலைகள், சொல்விளையாட்டு, விவாதம் போன்றவற்றின் ஊடாக மேம்படுத்த முடியும். மாணவர்களிடம் ஆக்க சிந்தனை ரீதியான எழுத்து வேலைகள் உதாரணமாக கவிதை, கட்டுரை, நாடகம், எழுதுதல் போன்றவற்றினை ஊக்குவித்தல் வகுப்பு மாணவர் மத்தியிலே விவாதப் போட்டிகளை ஏற்பாடு செய்யலாம். மேலும் முறையான கதையாடல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம் நகைச்சுவை துணுக்குகள் மற்றும் அரட்டை அரங்கம் போன்றவற்றினை வகுப்பறை மட்டத்திலே ஏற்பாடு செய்ய வேண்டும். “வாசிப்பதனால் மனிதன் பூரணமடைகின்றான்.”


Musical Rhythmic Intelligence - இசை சார்ந்த நுண் அறிவு.

இசையால் வசமாகா இதயம் எது ஏது என்ற வார்த்தை இசையின் முக்கியத்துவத்தை நாம் உணர காரணமாகின்றோம். இசை அறிவு என்பது ஒரு நுண்ணிய அறிவு அதுவும் நுண்மதி ஆகும். இசை கச்சேரிகளை தயார் செய்வதிலும் அதன் வரவேற்பு உண்டு. ராகம், தாளம், சத்தம், சுருதி என்ற அடிப்படையான விடயங்களை கலைக்கு தப்பாமல் பாடும் ஆற்றலே இசை சார்ந்த நுண்மதி ஆகும். இசைஞானி இளையராஜா அவரின் இசை அறிவு யாராலும் கற்பனை பண்ண முடியாது. அவர்களது இசை ஒழுங்கமைப்பு ஆற்றலையும் யாராலும் விளக்கவும் முடியாது. இசை சார்ந்த அறிவுள்ள ஒருவரால் நல்ல சுருதி மிகத் துல்லியமான சுருதி, அவர்களால் பாட முடியும், இசைக் கருவியை வாசிக்கவும் முடியும். இசையின் வெவ்வேறு மூலகங்களை சேர்த்து இசை அருவியாக வெளியிடும் ஆற்றல் கொண்டவராக காணப்படுவார். கீதம், சுருதி, தொனி, கதி, மெல்லிசை போன்ற விடயங்கள் மிகவும் உணர்ச்சிகரமான விடயங்களாக அமையும். இவை மொழி கற்றலும் இங்கே சம்பந்தப்படுகிறது.

இலகுவாக இசை சார்ந்த நுண்மதி கொண்டவர்கள் கருவிகளை இசைக்க கற்றுக் கொள்வார், பாடகர்களாக மாறுவார்கள், இசையமைப்பாளர்களாகவும், பாடல்களை உருவாக்குபவர்களாகவும் காணப்படுவார். ஆசிரியர் மாணவர்களை இனம் கண்டு வழிப்படுத்த வேண்டும். வகுப்பறை கற்பித்தலின் போது கருவிகளை சுருதி, பாடலை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களின் ஈடுபாட்டினை அதிகரிக்க முடியும். சில மாணவர்கள் மேசையில் தட்டி நன்றாக பாடுவதை தடுக்கக் கூடாது, அவர்களுக்கான உள மகிழ்ச்சிக்கான களமாக அமைவதனால் அவர்களை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்.
இசைக்கருவி என்றால் கட்டாயம் கிற்றார், ஹார்மோனியம், வயலின் மட்டுமல்ல அதற்கு பதிலாக சிரட்டை, சில்வர் தட்டு, ஒரு தாளம், தகரப்பேணி போன்றனவும் இசைக்கருவிகளே மாணவர்கள் இவற்றினை பாவித்து நன்று பயிற்றப்பட்டிருப்பார். இயற்கை என்பது ஒரு வரப்பிரசாதம் இயற்கை ஒலிகளை சில மாணவர்களால் மீண்டும் தங்களின் குரல் மூலம் படைக்க முடியும். எண்ணக்கருக்களை கற்றலாக மாற்றுவதற்கு இவ்வாறானவற்றை பிரயோகிக்க முடியும் அவற்றில் இருந்து மாணவர்களில் ஒருவரை பாடல்வரிகளை தயாரிக்க வழிப்படுத்தி அவற்றில் இருந்து இசையமைக்கச் சொல்லி வழிப்படுத்தலாம். இவ்வாறான செயற்பாடுகள் இலைமறை காய்மறையாக இருக்கும் மாணவர்களின் திறன் வெளிக் கொணரப்படும். அற்புதமான களமாக வகுப்பறை அமையும்.


Mathematical - Logical Intelligence - கணித தர்க்க சார்ந்த நுண்மதி

“கேந்திர கணிதம் தெரியாதவன் வகுப்பறைக்கு நுழையாது இருப்பானாக”
கணித தர்க்க சார்ந்த நுண்மதி எண்கணிதத்திலும் தற்க நியாயத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறான நுண்மதி கொண்டவர்கள் தர்க்க, அருவ நிலைப்பட்ட or கருத்து நிலைப்பட்ட காரணம் காணல் போன்றவற்றில் ஆற்றல் உள்ளவர்களாக காணப்படுவர்.
இவர்களால் கணிதம், ஊhநளள விளையாட்டு கணினிக் கல்வி அத்தோடு தர்க்க எண் சார்ந்த செயற்பாடுகளில் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கான தொழில்களாக கணிதவியலாளர், பொறியியலாளர், தத்துவியலாளராக மிளிர்வதற்கான தகுதி கொண்டவர்கள்.
மாணவர்களை ஆசிரியர் விமர்சன நோக்கோடு சிந்தித்தல், சிக்கலை சரளமாக தீர்த்துக் கொள்ளும் ஆற்றல், புதிர்களை விடுவித்தல் போன்றவற்றில் ஊக்குவிப்பதன் மூலம் மாணவர்களின் நுண்மதியிலான விருத்தி செய்ய முடியும், அரம்ப பிரிவு மாணவர்களுக்கு கணித விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தல் பிரச்சினை தீர்த்தலுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கல் எண்கணித செயற்பாடுகளில் சந்தர்ப்பம் அளித்தல், புரிந்து கொள்ளும் செயற்பாடுகளை அதிகரித்தல் தர்க்க விளையாட்டுக்களை ஊக்கப்படுத்தல் புதிய தகவல்களை ஒழுங்கமைத்தல் போன்ற விடயங்களில் ஆர்வம் உள்ளவர்களாக காணப்படுவர்.

Bodily - Kinesthetic Intelligence – உடல் இயக்கம் சார்ந்த நுண்மதி

“ஆடலுடன் பாடலைக் கேட்பதிலேதான் சுகம் சுகம்”

உடல் இயக்கம் சார்ந்த நுண்மதி உள்ளவர்கள் விளையாட்டில், நடனத்தில் மிகவும் வல்லமையாளர்களாக காணப்படுவர். ஏன் அன்றாட வாழ்வில் கூட இவர்களது உடல் இயக்கத்திறன் வெளிப்படும். ஒருவரது உடல் இயக்கம் அவரது உடல் நகர்வையும், பொருள்களை திறமையாக கையாளவும் முடியும். “ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது”
உடலியக்க கற்றல் பற்றி கருத்து தெரிவித்த கர்ட்னர். இவற்றிலும் நேர உணர்வு, தெளிவான இலக்கு நோக்கிய உடல் இயக்க உணர்வு மற்றவர்களை பயிற்றுவிப்பதன் மூலம் அவர்கள் பயிற்றுவிப்பாளர்களாக மாறுதல்.


கற்றல் பிரயோகம்

உடலியக்க நுண்மதி உள்ளவர்கள் உடல் இயக்கம் சம்பந்தமான விடயங்களில் கற்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதில் இவர்களை அந்த துறையில் வளர்ப்பதே சரியான வழிகாட்டலாகும். கூடுதலாக விளையாட்டிலும் நடனத்திலும் நாடகத்திலும் பயன்படுத்தமுடியும். இவர்களிடம் வாய் மூலமான கற்றலை வலியுறுத்துவதை தவிர்த்து உடல் வழியான கற்றலையே ஊக்குவிக்க வேண்டும். உடல் மொழியில் கெட்டியாக விளங்குவார். உடல் ஊடாக உணர்வுகளையும் மனவெழுச்சிகளையும் இலகுவாக வெளிப்படுத்துவார். எனவே அவர்களால் வாழ்க்கையில் உள்ள நிலையை அடைய வேண்டுமாயி;ன் நடனத்திலும், நாடகத்திலும், விளையாட்டிலும், சத்திரசிகிச்சையிலும், உடல் கட்டுருவாக்கத்திலும் பயன்படுத்தலாம்.
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் போது உடலை ஒரு சிற்பமாக பயன்படுத்த முடியும் ஓவியமாக பயன்படுத்த முடியும். உடைமை, பாகம்மேற்று நடித்தல், வேடம் தாங்காமல் உடல் பயிற்சியளித்தல் அணிநடை பாகம் புனைதல், நாடகம் போடுதல் போலச்; செய்தல், புதிதளித்தல், நடன வடிவங்களை உருவாக்கல் போன்றவற்றின் ஊடக கற்பிக்க முடிவும் இந்த கற்றல்களை மாணவர்களிடம் வெளிப்பட வசதி அளிக்கலாம்.

 

Visual - Spatial Intelligence -காட்சி வெளி சார்ந்த நுண்மதி


"படம் பார் பாடம் படி"

 காட்சி வெளி சார்;ந்த நுண்மதி உள்ளவர்களின் இயல்புகள் பின்வருமாறு அமையும். பொருள்களை இடம்சார்ந்து வழங்கமைப்பார். மனக் கண்ணினால் காட்சியை காணும் ஆற்றல் வெளி சார்ந்த மதிப்பீடுகள் மேற்கொள்வார். இத்தகை திறன் உள்ள மாணவர்களை கலைஞராக வடிவமைப்பாளராக, கட்டட நிர்மாணியாக போன்ற தொழில்களுக்கு இவர்களை வழிப்படுத்த வேண்டும்.
இந்த வகையான திறன் கொண்ட மாணவர்களிற்கு கற்றல் கற்பித்தலை பின்வரும் வகையில் மேற்கொள்ளலாம்.


- எண்ணக்கரு வரைபடம்  (Mind Mapping)
- காட்சிப்படுத்தல் அல்லது வாய் சொல்லிலான கற்பனை
- கலை வெளியீடுகளாக சித்திரமாக, ஓவியமாக வெளிப்படும்.
- கற்பனையை உருவாக்குபவர்கள்.
- காட்சியின் பிரதிபலிப்புக்களாக படத் தொகுப்புக்களை உருவாக்குபவர்.
கற்பவர்களும் இத்தகைய முறைகளை பின்பற்றி கற்பதன் மூலம் இலகுவாக கற்க முடியும்.

Inter Personal Intelligence - ஆளிடை தொடர்பு நுண்மதி

ஆளிடை தொடர்பு நுண்மதி கொண்டவர்கள் சமூக குறிகாட்டிகளை விளங்கிக் கொள்வதிலும் சமூக வெளியீடுகளை எதிர்வுறுவதிலும் வல்லவராக விளங்குவார். இவர்களின் இயல்புகள் பின்வருமாறு அமையும்.
 - மற்றவர்களுடன் நேர்மனப்பாங்கு அடிப்படையில் மட்டுமே தொடர்பு கொள்வார்.
- இவர்கள் புறமுகிகளாக காணப்படுவார். மற்றவர்களுடன் உணர்வு ரீதியாக, மனநிலை அடிப்படையில், புலன் சார்ந்த அடிப்படையில், சுபாவ அடிப்படையில், வாங்கியாக ஊக்கமுள்ள பாத்திரமாக ழச குணாதியங்கள் கொண்டவர்களாகக் காணப்படுவார்.
மற்றவர்களிடம் கூட்டுறவுடன் செயற்படுவார். தன்னை ஈடுபடுத்தி கொள்வார்.
தெளிவான தொடர்பாடலை கொண்டிருப்பார் மற்றவர்களிற்கு ஒத்த உணர்வு காட்டுவார். அவர் ஒரு தலைவராக காணப்பட்டாலும் அவர் அப்படித்தான் இருப்பார். விவாதம் செய்வதிலும், கலந்துரையாடலிலும் ஆர்வம் கொண்டவராக காணப்படுவார்.
இவர்களுக்கு பொருத்தமான தொழில்களாக அரசியல்வாதி, முகாமையாளர், ஆசிரியர், சமூக சேவகர் போன்றவற்றை குறிப்பிடலாம்.


கற்றல் கற்பித்தல் பிரயோகம்

- கூட்டு முறையிலான கற்பித்தல், கற்றல் திறன்
- அதிகமான குழு வேலைகளை சந்தர்ப்பங்களை வழங்கல்.
- ஆளிடை தொடர்பாடலை மேற்கொள்ளல்.
- ஆளுக்காள் ஒத்த உணர்வுடன் செயற்படல்.
போன்றவற்றின் ஊடாக வினைதிறனான கற்றலை மேற்கொள்ளலாம்.

 

Intra Persional Intelligence - ஆளக தொடர்பு

- இவர்களால் மற்றவர்களின் நடத்தையை புரிந்து கொள்ளவும், எதிர்வு கூறவும் முடியும்.-

- மற்றவர்களின் சுயத்தையும் தன்னுடைய அகத்தையும் புரிந்து கொள்வார்.

- அகத்தாய்விலும், சுய வெளிப்படுத்தல்களையும் செய்யும் கொள்ளளவினை கொண்டிருப்பார்.

- உள் உணர்வு உள்ளவராகவும், அகமுகிகளாகவும் காணப்படுவார்.
- தன்னுடைய உணர்வுகளை புரிந்து கொள்வதிலும் ஊக்கத்திலும் திறன் உள்ளவராகவும் காணப்படுவார்.

- தன்னுடைய சுயத்தை பற்றிய ஆழமான புரிதலை கொண்டிருப்பதனால் அவர் தன்னுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து கொள்வார். இவர்களால் தத்துவவியலாளர்களாகவும்,,உளவியலாளர்களாகவும், சட்டத்தரணியாகவும் வர முடியும்.

- கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பிரயோகம், தியானப் பயிற்சி, தன்னுடைய சுய வெளிப்பாட்டுக்கான அனுமதி, நினைவாற்றலை கொண்டிருப்பார்,  நனவு நிலைப் பயிற்சியை மேற்கொள்ளல் போன்றவற்றின் ஊடாக கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளலாம்.சுயகற்றலைப் பெரிதும் விரும்புவார்.

 

Naturalistic Intelligence - இயற்கை சார்ந்த நுண்மதி
   

பல்வேறு உயிரினங்களின் வகைகளை அறிந்து கொள்ளல், இயற்கையின் நியதிகளை அங்கிகரிப்பவர்களாக இயற்கையை வகைப்படுத்துபவராக இயற்கையை ஒட்டி வாழ்க்கை செய்பவராக காணப்படுவார். இவர்கள் பெரும்பாலும் உயிரியலாளர்களாக, இயற்கை வாதிகளாக காணப்படுவார். இவர்களின் சிந்தனை இயற்கையை ஒட்டியதாக அமையும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வுடன் செயற்படுவார்.
தாவரங்களையும், உயிரினங்களோடு நட்பு கொண்டிருப்பவராக காணப்படுவார்.
இயற்கையை உற்றுக் கவனிப்பர், அதில் இரசனை கொள்வார். அதனை ஒட்டியே வாழ்க்கை தொடருவார்.

இவர்கள் இயற்கை பற்றி நிகழ்வுகளை, அனுபவங்களை, தகவல்களை, ஆய்வகம் போல மனதிலே வைத்திருப்பார்கள். இவர்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பாக சுற்றுலா வழிகாட்டி மிருககாட்சிசாலையில் பராமரிப்பாளர், முகாமை செய்தல், சுழலியலாளராக, உளவியலாளராக போன்ற வேலைகள் பொருத்தமாக காணப்படும்.
வகுப்பறையில் இவ்வாறான மாணவர்களை இயற்கை சார்ந்த வகையிலே கற்பிக்க முடியும். இவர்களால் உற்றுக் கவனிக்க முடியும். வகுப்பறை கவனத்தை கொடுப்பதன் மூலம் கற்றலில் உயர் திறனை அடைவார்கள்.

Howard Gardenerin எண்வகை நுண்மதி தற்காலத்தில் மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகின்றன, குறிப்பாக அதிகரித்து வரும் மாணவர் பல்வகைமை காரணமாக எல்லா மாணவர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டிய தேவையை ஏற்படுத்தாமல் அவர்களது திறன்கள், கற்றல்கள், திருப்பங்கள் போன்றவற்றினை விளங்கிக் கொண்டு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் உளவியல் விருத்தி செய்யப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் தங்கள் மணங்களை விதிகளினால் கட்டுப்படாது சுதந்திரமான சிந்தனையை ஊக்கிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் ஒப்பில்லா மணிகள் என்று நினைக்க வேண்டும், அவர்கள் ஒரு புத்தகம் அவர்களிடம் கற்பதற்கு ஏராளம் உண்டு என்ற மனப்பாங்கை விருத்தி செய்ய வேண்டும். எப்பொழுதும் ஆசிரியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றல் என்பது வாழ்நாள் நீடித்த கல்வி, அது தரமான கல்வியாக அமைய வேண்டும்.

முடிவுரை

நுண்மதி என்பது பற்றி பல்வேறு வகையான கருத்துக்கள் காணப்பட்ட போதும்
நுண்மதியில் செல்வாக்கு செலுத்தும் பிரதான காரணிகள் சூழல், பரம்பரையாகும்.
பரம்பரைதான் என்று சிலரும் , சூழல்தான் காரணம்,  என்று சிலரும்  வாதிடுவோர்கள் உள்ளனர்.
பரம்பரைக் காரணிகளை வலியுறுத்துவோர் பரம்பரையில் சில ஆராய்ச்சிகள் செய்துள்ளனர்.
அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளில் 50மூ வீதம் நுண்மதியில் பரம்பரைக் காரணிகள்
செல்வாக்கு செலுத்துவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளை பரம்பரை அலகுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வொன்றில்
பரம்பரையின் சில அலகுகள் நுண்மதியுடன் தொடர்புபடுகின்றது. இந்த ஆய்வின்படி எந்த
அலகு நுண்மதியுடன் உறுதியாகக் கூறிவிடமுடியாது. ஆனால் பெருமளவான பரம்பரை
அலகின் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவிதத்தில் சிறிய அளவிலான பங்களிப்பினை
வழங்குகின்றது. இந்த ஆய்வு ஆங்கிலத்தில் (Genome - wide association studies) என்று
அழைப்பர்.

சூழல்காரணிகளும் நுண்மதியில் பெரும் பங்கு வகிக்கின்றது. அதாவது பிள்ளை
வாழும் சூழல், பிள்ளையின் நுண்மதி விருத ;திக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும்
செல்வாக்கு செலுத்துகின்றது. சுற்றுச்சூழல், பொற்றோரியம், கல்வி, கிடைக்கும் கற்றல்
வளங்கள், வாய்ப்புக்கள், பிள்ளை வளரும்  போது கிடைக்கும் ஊட்டச்சத்து போன்ற சூழல்
காரணிகள் பெருமளவில் பிள்ளையின் நுண்மதியில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

இங்கு பரம்பரையா, சூழலா என்ற விவாதம் பொருத்தமற ;றது. விகித அளவில்
இத்தனை வீதம் பரம்பரை, எதனை வீதம் சூழல் என்று அறுதி உறுதியாக கூறிவிடமுடியாது.
உதாரணமாக பெற்றோரின் நுண்மதியினை ஒத்த அளவு பிள்ளைக்குக் கிடைக்குமாயின்
அங்கே பெற்றோரிலிருந ;து பிள்ளைக்குக் கடத்தபபடுகின்றது என்பது அர்த்தம் , அதேவேளை
இதே நிலைமை சூழலிருந்து பிள்ளைக்குக் கிடைக்குமாயின் அது சூழல் காரணியின்
செல்வாக்கு அதிகம். ஓன்றை மட்டும் தெளிவாகக் கூறிவிடமுடியும்

நுண்மதியைத தீர்மானிப்பதில் இரண்டு காரணிகளும் பெரும் பங்கு வகிக்கின்றது.
எனவே பிள்ளையின் ஆரம்பப் பருவத்தின் போது பொருத்தமான வீட்டுச்சூழல்,
சுற்றாடல், அயல் முன்பள்ளிச்சூழல் என்பவற ;றையும் விருத ;தி இடம்பெறுவதற்கான
கருவிகளையும் , உருவாக்கி கொடுக்கும் போது பிள்ளையின் நுண்மதி மட்டம் அதிகரிக்கும்
ஆரம்பப் பள்ளிகளில் பிள்ளையின் ஓய்வுநேரச் செயற்பாட்டினை பிரயோசனமாக செலவழிக்க
கல்விசார்ந்த களங்களை ஆசிரியரும் அதிபரும் உருவாக்கும் போது நுண்மதி விருத்தி
அதிகரிக்கும். நுண்மதியினை பயிற்சியின் மூலம் விருத்தி செய்ய முடியும் என்பதனையும்
பல ஆய்வாளர் முடிவுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள் தங்கள் மணங்களை விதிகளினால் கட்டுப்படாது சுதந்திரமான
சிந்தனையை ஊக்கிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் ஒப்பில்லா மணிகள் என்று
நினைக்க வேண்டும்அவர்கள் ஒரு புத்தகம்அவர்களிடம் கற்பதற்கு ஏராளம் உண்டு என்ற
மனப்பாங்கை விருத்தி செய்ய வேண்டும். எப்பொழுதும் ஆசிரியர்கள் கற ;றுக் கொள்ள
வேண்டும்  கற்றல் என்பது வாழ்நாள் நீடித்த கல்வி, அது தரமான கல்வியாக அமைய
வேண்டும் .

உசாத்துணை நூல்கள்

- சின்னத்தம்பி.க மற்றும் சுவர்ணராஜ்.க

- அறிகைத் தொழிற்பாடும் ஆசிரியரும், சேமமடு பதிப்பகம். 2011

- Educational Benefits of Applying Multiple Intelligent theory - www.website.

- Safeek.N Currerd trend in study of Intelligence and its application - www.website.

- How to use Multiple Intelligence in Class room website

-பல்திறன் கொள்கை Website.

கட்டுரைகள்

 சபா. ஜெயராசா அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்....

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

கிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி  "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

வாழ்க்கைமுறை

Kaviraj BSc Hons in Nursing டெங்கு காய்ச்சல் இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயாகும். நோய்க்காரணிஆர்போ வைரஸ்களால் தொற்றுக்குள்ளான ஈடிஸ் உணவு வகைகளால் காணப்படும் நோயாகும்...

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

திரு. ச. அல்பேட் றீகன்BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL). “உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click