Skærmbillede 1414சண்முகலிங்கம் தேவமுகுந்தன்

இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட இலக்குகளை அடைவதற்காக கலை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு செயன்முறை இந்த செயல்முறையானது கல்வியலாளர்கள் பாடசாலை சமுதாயத்தினரும் ஒன்றினைந்த முயற்சியாலேயே முன்னெடுக்கப்படுகின்றது. 

கலைத்திட்டத்தின்,  கலைத்திட்ட அமுலாக்கல் அமுல் ஆக்கத்தில் அதிபர் ஆசிரியர்கள் பல்துறை வல்லுநர்கள் பாடத் துறை வல்லுநர்கள் கல்வியலாளர்கள் கல்வித்துறை நிர்வாகிகள் பெற்றோர்கள் என்பவர்கள் பங்குதாரர்களாக திகழ்கின்றனர் அந்த வகையில் அதிபர் ஆசிரியர் கல்வித் திணைக்கள கல்வித் திணைக்களம் ஆகியோரின் வகிபாகங்களை பின்வருமாறு நோக்கும்போது கலைத்திட்டத்தினை அமுல் ஆக்குவதில் ஆசிரியர்கள் போன்றே அதிபர்களுக்கும் பெரும்பங்கு இருக்கின்றது.  அதிபர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழேயே கலை திட்டமானது பாடசாலைகளில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கலைத்திட்ட அமுலாக்கத்தில் அதிபரின் வகிபங்கு

 பாடசாலை அதிபரின்றி மாற்றங்கள் நிகழாது
(Grand dulletal 1983)

 பல ஆராய்ச்சிகள் அதிபரின் செயல் பூர்வமான மாற்றத்தின் இயங்கி நிலையுடைய சக்தி மாற்றம் என்பது வெற்றிக்கு மிகவும் விரும்பப் பட வேண்டியது
(Full- 1982 and Leith wood Montgomery 1982)

 ஏறத்தாள ஒவ்வொருவரினுல்லும் அடையாளம் காணும் மாற்றத்தை கொண்டு வருவதில் முதன்மையானவரின் முக்கியத்துவமாக அதிபர் விளங்குகின்றார்.
(Clark etal 1984)

 பாடசாலை அதிபர் அறிவார்ந்தவர் என்ற வகையில் இலக்கு பற்றிய பார்வை தேவை முன்னேற்றம் பிரச்சினை என்பவற்றை புரிந்துகொண்டு ஆக்கத்திறன் புதுமையை திறன் பாவித்து இவற்றினை நடைமுறை படுத்துவார்.

 இவற்றினை அனுபவ வாயிலாக கண்டு கொள்ள வழிபடுத்துபவர்.

 பயிற்சியை வழங்குவதன் மூலம் அவர்கள் தானாகவே மாறுகின்றார்கள் எனவே ஆசிரியருக்கான உதவி வழங்கப்படுகின்றது.

 ஆராய்ச்சிகளின் படி அதிபர்கள் மாற்றத்தின் முகவராக இருப்பதற்கு சில வகையான உதவியை
சாந்திருப்பதாகவே சுட்டிக்காட்டப்படுகின்றது.

 பாடசாலையின் இரண்டாவது மாற்றத்தின் முகவர்களாக உதவி அதிபர் சிரேஷ்ட ஆசிரியர் விளங்குவர்,  அதிபருக்கு உதவுவார்கள்.

 அதிபர்கள் நேரான அல்லது உடன்பாடான பாடசாலைச் சூழல் உருவாக்கும் விடயத்தில் பின்வருவனவற்றை கை கொள்வதில் மாற்றத்தின் செயல்முறையாக

 Initial and follow up in-service consultative assistant during implemental 
நிபுணத்துவ ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தலின் போது விழங்குவார்.

  User planning time
நேரத்தை திட்டமிடலின் போது செலவழிப்பார்

 User interaction and problem solving
இடைவினை புரிதல் மற்றும் பிரச்சினை தீர்த்தல் செயல்முறையில் செயற்படுவார்

 மாற்றத்தின் பொறுப்பாளராக விளங்குவார்

 அங்கீகாரமும் பரிசுகளும் பாவனையாளரின் முயற்சிக்கு கொடுப்பார்.

 தற்துணிவு எடுப்பதற்கான மனப்பாங்கு பிழைகளை சரி செய்வதில் படிப்படியான நடைமுறைகளை கைக்கொள்வார்.

 தேவையற்ற விடயங்களிலிருந்து தனது பயனர்களைப் பாதுகாத்தல்.

 மாற்றத்தின் பயனாளர்களை பொறுப்பாக்குதல்.

 பயனாளர்களின் முயற்சியை அங்கீகரிப்பது அல்லது வெகுமதி அளிப்பது

 பாடசாலையின் தலைவர் என்றவகையில் அவர் மாற்றத்தின் அமுலாக்கத்தில் முக்கியமானவர்.

 பாடசாலை ஒரு நிறுவனம் என்ற வகையில் பள்ளிக்குள் மதிப்புகள் மற்றும் விதிமுறைகள் தொழில்முறை  மேம்பாடு என்பவற்றை பேணுவதற்கு அதிபர் ஆசிரியர்களின் செயற்பாடு முக்கியம்

 நடைமுறை படுத்தலே ஒரு கற்றல் ஆகும்

 தனிநபரின் செல்வாக்கும் ஆளுமையும் அமலாக்கப்படும் இடமாக செயல்படும் இடமாக பாடசாலை அமைந்துள்ளது

 மாற்றத்தின் சக்தி வாய்ந்த இடமாக பாடசாலை விளங்குகின்றது

 

கலைத்திட்ட அமுலாக்கத்தில் ஆசிரியரின் வகிபாகம்

 கல்வியலாளர்களின் பங்கேற்பின் மூலம் கட்டியெழுப்பப்படும் கலைத்திட்டத்தை வகுப்பறையில் அமுலாக்கல் நிலைக்கு கொண்டு வரும் பொறுப்பு ஆசிரியர்களையே சார்ந்தது. இவ்வடிப்படையில் பாடத்திட்டமும் பாட வழிகாட்டலும் வழங்கப்பட்டு மாதிரி அமர்வுகள் மூலம் அறிவுறுத்தப்பட்டாலும் பாட உள்ளடக்க விடயங்களையும் அதை தொகுத்து நிறைவேற்றும் பொறுப்பும் வகுப்பறையில் செயற்படும் ஆசிரியர்களிடம் தங்கியுள்ளது.

 ஆசிரியர்களுடைய வகிபாகமானது கலைத்திட்டத்திற்கும் நடைமுறைக்குமுள்ள இடைவெளிகளைக் கண்டறியவும்,  மாற்றத்தினை ஏற்படுத்தவும் ஒரு மையமாககக் காணப்படுகின்றது. ஆசிரியர்களின் விருப்பம்ரூபவ் பங்களிப்பு மற்றம் ஒத்துழைப்பின்றி கலைத்திட்ட அமுலாக்கம் சாத்தியமானதன்று.

 கலைத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலுக்கு ஆசிரியர்களின் பங்களிப்பிற்கான தேவை காணப்படுகின்றது (Handler, 2010). Fullan (1991) என்பவர் தமது ஆய்வில் கலைத்திட்ட அபிவிருத்தியில் நடுநாயகமாகத் திகழும் ஆசிரியர்களின் பங்களிப்பானது கலைத்திட்ட அமுலாக்கத்தினை வினைத்திறனாக மேற்கொள்ள உதவுகின்றது எனக்
குறிப்பிடுகின்றார்.

இவற்றினை நோக்கும் பொழுது கலைத்திட்ட அமுலாக்கப் படிமுறையின் வெற்றிக்கு
ஆசிரியர் அச்சாணியாகக் காணப்படுவது புலனாகின்றது.

ஆசிரியர்களின் வகிபாகங்கள் குறித்து நோக்கும் பொழுது அவர்களின் பிரதான வகிபாகங்களாக.

 பாட வல்லுநர் (கலைத்திட்டத்தின் இலக்குகளுக்கு அமைவாக பாடத்தினைத் திட்டமிடல்.)

 ஆசிரியரானவர் மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பொறுப்புகளைக் கொண்டிருப்பதனால் திட்டமிடப்பட்ட கலைத்திட்டத்தின் சட்டகங்களுக்குள் பாடத்திட்டமிடலை மேற்கொள்ளுகின்றனர் (Carl, 2009).

 வகுப்பறையில் மாணவர்களின் தேவைக்கேற்றவாறு கலைத்திட்டத்தின் உள்ளடக்கங்களை சீரமைப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது. ஆசிரியர்கள் கலைத்திட்ட வடிவமைப்பாளர்களுடன் இணைந்து கூட்டாகவும் வினைத்திறனாகவும் பணியாற்றுவதன் மூலம் பாடப்புத்தகங்கள்,  உள்ளடக்கங்கள் போன்றவற்றினை ஒழுங்கமைக்க முடியும் (Alsubaie,2016).

 கலைத்திட்டம் என்பது எவை கற்பிக்கப்பட வேண்டும்,  என்ன ஒழுங்குரூபவ் எவ்வாறான கற்பித்தல் முறைகள் மற்றும் யாருக்கு என்றவாறாகக் கட்டமைக்கப்பட்டது(Ornstein & Hunkins, 2004). செயற்பாட்டு ரீதியில் நோக்கம் பொழுது,  ஆசிரியர்களே கலைத்திட்டத்தினை குறித்த சட்டகத்தினுள் கொண்டு வருவதற்காக தொழில் ரீதியில் தயார்ப்படுத்தப்படுபவர்கள். பாட உள்ளடக்கம், அவர்களது சொந்த அனுபவங்கள் மற்றும் பிரதேச ரீதியான தரப்படுத்தல் என்பவை கலைத்திட்டத்தினை சட்டகத்தினுள் நடைமுறைப்படுத்த ஆசிரியர்களின் ஈடுபாட்டினை அதிகரிக்கஉதவுகின்றது.

 வகுப்பறை முகாமையாளர் (கலைத்திட்டத்தினை முறையாக வகுப்பறையில் நடைமுறைப்படுத்தல்)

வகுப்பாசிரியரானவர் பாடத்திட்டமிடலில் தகுந்த பொருத்தமான உள்ளடக்கம்,  ஒவ்வொரு எண்ணக்கருக்களுக்கான நேர முகாமைத்துவம் மற்றும் ஒவ்வொரு திறனுக்குமான அறிவுறுத்தல் ஆகியவற்றினைத் தீர்மானிப்பவராக விளங்குகின்றார்(Choate, 1987).

 மேலும் ஆசிரியரானவர் தனதும்ரூபவ் மாணவர்களதும் நோக்கம்ரூபவ் செயற்பாடுரூபவ் உணர்வுகள் தொடர்பில் கண்காணிப்பிலும், அவதானிப்பிலும், தகவல் சேகரிப்பதிலும் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது. ஆசிரியரானவர் கலைத்திட்ட அமுலாக்கத்திற்காக வகுப்பறைச் செயற்பாடுகளை பொதுவாக மேற்கொண்டாலும், அது ஒரு சிக்கலான அமுலாக்க
வகிபாகத்தினைக் கொண்டுள்ளது. ஏனெனில் கலைத்திட்டமானது உலகளாவிய ரீதியில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தினைக் கொண்டு திட்டமிடப்படுகின்றது. ஆசிரியர் மட்டுமே வகுப்பறை மட்டத்தில் கலைத்திட்டத்தின் இலக்குகளை முன்னெடுப்பதை உறுதி செய்பவராக இருக்கின்றார் (Olivia, 1992).

வகுப்பறையில் ஆசிரியர் கலைத்திட்ட அமுலாக்கத்திற்காக மேற்கொள்ளும் செயற்பாடுகளாவன


 தனது செயற்பாடுகள்,  உரை ஆகியவற்றிற்கான நேர முகாமைத்துவத்தினையும்,  ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் பாடத்தினைக் கற்பித்தலுடன் திட்டமிட வேண்டும்.

  பல்கலாசாரத்தைக் கொண்ட வகுப்பறையில் அதற்கேற்ப பொருத்தமான விதத்தில் பாட உள்ளடக்கங்களையும்,  உதாரணங்களையும் வழங்க வேண்டும்.

  மாணவர்களது ஆக்கபூர்வமான சிந்தனையைத் தூண்டும் விதத்தில் வினாக்களை வினவுதல்.

   நேர்மறையான கற்றல் சூழலையும்,  மாணவருடைய ஒழுக்க செயற்பாடுகளையும் பேணுதல்.

  பௌதீக வளங்களையும்,  கற்பித்தல் சாதனங்களையும்,  பொருட்களையும் சரியான முறையில் பேண வேண்டும்.


மேற்கூறிய செயற்பாடுகள் மூலம் கலைத்திட்டத்தினை அமுலாக்குபவராக முக்கியமான ஒரு செல்வாக்குடையவராக ஆசிரியர் திகழ்கின்றார். அவர்களது அணுகுமுறை, பெற்றுக் கொண்ட பயிற்சியின் தரம், கலைத்திட்ட அமுலாக்கத்திற்கான தயார் நிலை ஆகியனவும் கலைத்திட்ட அமுலாக்கத்தினை தீர்மானிப்பவையாக விளங்குகின்றன (Malebye, 1999).


கலைத்திட்ட அமுலாக்கத்தில் கல்வித் திணைக்களத்தின் வகிபாகம்

உலகிலுள்ள அனைத்து அரசாங்கங்களும் தங்களது தேசியத்திற்கு ஏற்றவாறான இலக்குகளையும் நோக்கங்களையும் கொண்டுள்ளது. அவையே கலைத்திட்டத்தினை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இவ்வாறு அபிவருத்தி செய்யப்பட்ட கலைத்திட்டத்தினை முறையாக பாடசாலைகளில் அமுலாக்கம் செய்வதில் கல்வித்திணைக்களமும் முக்கிய வகிபங்கினைக் கொண்டுள்ளது.

 கல்வித்திணைக்களமானது கலைத்திட்டத்தினை அமுலாக்குவதில் பாடசாலைகளில் நேரடியாக கட்டுப்பாட்டனைக் கொண்டிருப்பதில்லை (Wilcox,2000). வெளிவாரியான பங்குதாரர்களாகவும் வகைகூறலுக்கான கருவியாகவும் காணப்படுகின்றது.


கல்வித்திணைக்களத்தின் வகிபாகங்களாவன:

வளப்பங்கீட்டாளர் (கலைத்திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வளங்களை பாடசாலைகளுக்கு
வழங்குதல);.

 பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றை முறையாக பங்கீடு செய்தல்.
 ஆசிரியர் நியமனம், இடமாற்றம்
 விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள்
 கணனி ஆய்வுகூட உபகரணங்கள்
 புத்தகங்கள்
 விளையாட்டு உபகரணங்கள்

மேற்பார்வையாளர் (பாடசாலைகளில் கலைத்திட்ட அமுலாக்க செயற்பாட்டினை மதிப்பிட்டு, 
பகுப்பாய்வு செய்து பொருத்தமான இடங்களில் பரிந்துரைகளை வழங்குதல் (Mohammed,2012).)

 ஆசிரிய ஆலோசகர் ஊடகஆசிரியர்களை மதிப்பீடு செய்து ஆலோசனை வழங்கல்.
 பாடசாலை வளங்களை வினைத்திறனான முறையில் பயன்படுத்த நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கல்.
 பாடசாலை நிர்வாகக் குழுக்களிற்கு அனுமதியளிப்பதுடன் அவற்றில் உறுப்புரிமை பெற்று
அவற்றின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
பயிற்சியாளர் (கலைத்திட்டத்தினை முறையாக அமுல்படுத்தவதற்கு ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கல் )
 சேவையிலுள்ள ஆசிரியர்கள் தமது அறிவைப் புதுப்பித்துக் கொள்ளவும்ரூபவ் திறன்களை விருத்தி செய்து கொள்ளவும், தமது தொழில் வாண்மையை மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகின்ற குறுங்கால சேவைக்கால  ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களினை வழங்குதல். ஒரு நாள் தொடக்கம் இரண்டு கிழமை வரையில் ஆசிரிய ஆலோசகர்களாலும் வலயக் கல்விப் பணிமனையின் பாடத்திற்குரிய பணிப்பாளர்களாலும் நடாத்தப்படுகின்றன (Gunawardane,2011).


திட்ட ஆலோசகர்(திட்டங்களுக்கு அனுமதி அளித்தலும் மேற்பார்வை செய்தலும்)


 பாடசாலையின் வருடாந்த செயற்பாட்டு திட்டம், ஐந்தாண்டுத் திட்டம்ரூபவ் வரவு செலவுத் திட்டம்,  நேரசூசி, வருடாந்த நிகழ்ச்சி நிரல் போன்றவற்றினை மேற்பார்வையிட்டு அவற்றிற்கு அனுமதியளித்தல். திட்டமிடல் பற்றிய வழிகாட்டல் மற்றும் சுற்றுநிருபங்களினை பாடசாலைகளுக்குப் பகிர்ந்தளித்தல். வருட ஆரம்பத்தில் முன்வைக்கப்படும் திட்டங்கள் திட்டமிடல் பிரிவு அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

 மாதாந்தம் நடைபெறும் அதிபர் கூட்டத்தில் தொடராக பாடசாலைத் திட்டம் மேற்பார்வைக்கு
உள்வாங்கப்படுவதுடன் ஒவ்வொரு காலாண்டு முடிவின் போதும் விசேட கூட்டங்களை நடத்தி திட்டங்களின் முன்னேற்றம் பற்றிக் கலந்துரையாடல்.

 5ம் தர புலமைப் பரீட்சை,  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு கல்வி வளர்ச்சியினை ஒப்பீட்டு ஆய்வு அவற்றினை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களை மேற்கொள்ளல்.
தரவு முகாமைத்துவம் (வலயத்தின் அனைத்து தரவுதளங்களையும் திரட்டி ஒழுங்குபடுத்தல்)

 தகவல்களைத் திரட்டி கோவைகளிலும் கணனிகளிலும் பேணுதலும் அவற்றினை இற்றைப்படுத்துதலும்.

 பாடசாலைகளின் வளர்ச்சியினை அடிப்டையாகக் கொண்டு தரமேம்படுத்தல் திட்டங்களை மேற்கொள்ளல். (பாடசாலைகளைத் தரமுயர்த்தல்ரூபவ் புதிய பாடசாலைகளை உருவாக்குதல்). பாடசாலைகளின் வளர்ச்சியின் பொருட்டு பிற நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுதலும் செயற்பாடுகளை அமுல்படுத்தலும். இணைப்பாடவிதானச் செயற்பாட்டாளர் (இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிற்கான போட்டிகளை நடாத்துதல்)

 வலய மட்டத்தில் இடம்பெறும் பாடரீதியான போட்டிகள்ரூபவ் விளையாட்டுப் போட்டிகள்

உசாத்துணைகள்

பாடசாலைத் திட்டமிடல் பற்றிய வழிகாட்டிக் கைநூல்ரூபவ் கல்வி அமைச்சு.

பாடசாலைக் கல்விப் பண்புத் தரத்தினை உறுதி செய்வதற்கான மதிப்பீட்டுச் செயன்முறைகள்ரூபவ் கல்வி அமைச்சு.
Alsubaie, M.A.(2016). Curriculum Development: Teacher Involvement in Curriculum
Development. Journal of Education and Practice, 7(9),106-107.
Carl, A. (2009). Teacher empowerment through curriculum development theory into practice.
Juta&Company Ltd.
Choate, J.S.(1987). Assessing and programming basic curriculum skills. Boston, Allyn and Bacon.
Fullan, M. (1991). The meaning of educational change. New York: Teacher College Press.
Gunawardhane, R. (2011). A study on the effectiveness of short-term in-service teacher training
in the teaching-learning process. The National Education Commission of Sri Lanka.
Handler, B. (2010). Teacher as curriculum leader: A consideration of the appropriateness of that
role assignment to classroom-based practitioners. International Journal of Teacher Leadership.
Volume 3. ISSN: 1934-9726.
Malebye, L.M. (1999). Teacher involvement in curriculum development, Mini dissertation
submitted in partial fulfillment of the requirement for the degree Magister Educations in
curriculum studies, Faculty of Education and nursing, University of Afrikaans University.
Mohammed, B.I. (2015). The role of educational inspectors in curriculum implementation in
public secondary schools: a case of bauchi state, nigeria a research project submitted in partial
fulfillment of the degree of master of education of kenyatta university.
Olivia,P.F (1992). Developing the curriculum, 4th edition, New York, Hamper Collins Publishers.
Ornstein & Hunkins (2004). Curriculum:Foundation, principles, and issues. 4th edition, Boston,
Allyn and Bacon.
Wilcox, B. (2000). Making School Inspection Visits More Effective: The English Experience.
Paris UNESCO.

X

Right Click

No right click